Monday, January 28, 2013

சீமானும், விஸ்வரூபமும், கருத்துச் சுதந்திரமும்!

சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காதபடி நாம் தமிழர் கச்சியைச் சேர்ந்த சீமான் கமலுடைய கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்காமல் இஸ்லாமியர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து  அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதாவது விஸ்வரூபத்தைப் போலவே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை என்கிற படமும் சென்ஸார் போர்டையே கடந்து வராமல் தடை செய்யப்பட்டது. அதனால, கருத்துச் சுதந்திரம் என கத்துபவர்களே  இது ஒண்ணும் புதிய விடயம் அல்லனு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.   கமலஹாசனும் இஸ்லாமிய சகோதரர்களும் உட்கார்ந்து கலந்து பேசி இதை சரி செய்யணும்னு சொல்லியிருக்காரு, இந்தத் தமிழர். இது  பல கமல் விசிறிகளுக்கும் எரிச்சலைக் கிளப்பியுள்ளது. இருந்தாலும் இதைப்பத்தி விமர்சிக்க கமல் விசிறிகள் யாரும் தயாராக இல்லை. இஸ்லாமியர்களை விமர்சிப்பதிலேயே இவர்கள் காலம் தள்ளுகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் இதைப் பத்தி வாயைத் திறந்துபேசிய போதும், கமல் தரப்பும், இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து பேசி படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்று சொல்லி தப்பித்துக் கொண்டார். இதை யாரும் கமலுக்கு இவர் சப்போர்ட் செய்ததாக எடுத்துக்கவில்லை என்பதே உண்மை!

 ரஜினிகாந்த் வாயைத் திறந்தவுடன்தான், அதுவரை பொத்திக்கொண்டு இருந்த  பாரதிராஜா, பார்திபன், அஜீத், அமீர் போன்றவர்கள் இதைப்பற்றி கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.ஆனால் நம்ம புரச்சித் தமிழன் ச்த்யராஜ் எல்லாம் இன்னும் பொத்திக்கிட்டுதான் இருக்காரு!

இது போதாதுனு நம்ம மருத்துவர் ராமதாஸ் வேற கமலுக்கு முழு ஆதரவாக கருத்துச் சொல்லியிருக்கிறார். இதே ராமதாஸ்தான் பாபா ரிலீஸ் ஆகும்போது கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர், ஏறி மிதித்தவர் னு நினைவில் கொள்க!

இதில், இன்னொரு முக்கியமான அரசியல் என்னனா முதல்வர் ஜெயாவின் நிலைப்பாடு!

அதாவது இஸ்லாமியர்கள் அதிருப்தியை மனதில் கொண்டு, வரப்போகும் கலவரத்தைத் தடுக்க இந்தப்படத்தை 15 நாட்கள் தடை செய்ததாக சொல்லப்பட்டாலும், திரைமறைவில் நடந்த பல பிரச்சினைகள நாம் கவனிக்க வேண்டும்.

* ஜெயா டி வி க்கு விற்கப்பட்ட சாட்டலைட் ரைட்ஸ் ல மாற்றம் நடந்து இருக்கிறது. அதாவது இப்போது விஸ்வரூபம் சாட்டலைட் ரைட்ஸை  விஜய் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டி ட்டி எச் ரிலீஸ் பிரச்சினையாலும், சன் டி வி டி ட்டி எச் ரிலீஸ்ல ஒரு அங்கம் வகித்ததாலும் ஏற்பட்ட விளைவு இது என்கிறார்கள்.

* சமீபத்தில் கமல் ஹாசன், அமைச்சர் பா சிதம்பரம் நம் பிரதமராகி நமக்கு பெருமை சேர்க்கணும் என்று சாதாரணமாகச் சொன்னது முதல்வர் ஜெயாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.  சீமானின் இஸ்லாமியர் ஆதரவு நிலைப்பாட்டுக்கும், கமலின் இந்த "காமெண்ட்"தான் காரணம் என்றும் நாம் ஒரு "தியரி" வெளியிடலாம்!

எல்லாம் சரி, பதிவுலகில் கருத்துச்சுதந்திரம் என்று வாய்கிழிய பேசும் பலர், இஸ்லாமியர்களையே கையைக் காட்டிவிட்டு உள்ளே நடந்துள்ள பல குழப்பங்களுக்கு காரணமான மம்மியிடம் மட்டும் பம்முவது ஏன்?

இதே நிலையை திமுக ஆட்சி உருவாக்கியிருந்தால் இப்போ மூடிக்கிட்டு இருக்கிற அரசியல் மேதாவிகள் எல்லாம், இஸ்லாமியர்களை விட்டுவிட்டு கருணாநிதியை இஷ்டத்துக்கு விமர்சிச்சு பதிவுபோட்டுக்கொண்டு இருப்பார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்லணுமா??

18 comments:

மருதநாயகம் said...

எல்லாம் சரி, பதிவுலகில் கருத்துச்சுதந்திரம் என்று வாய்கிழிய பேசும் பலர், இஸ்லாமியர்களையே கையைக் காட்டிவிட்டு உள்ளே நடந்துள்ள பல குழப்பங்களுக்கு காரணமான மம்மியிடம் மட்டும் பம்முவது ஏன்?

இதே நிலையை திமுக ஆட்சி உருவாக்கியிருந்தால் இப்போ மூடிக்கிட்டு இருக்கிற அரசியல் மேதாவிகள் எல்லாம், இஸ்லாமியர்களை விட்டுவிட்டு கருணாநிதியை இஷ்டத்துக்கு விமர்சிச்சு பதிவுபோட்டுக்கொண்டு இருப்பார்கள் என்பதி நான் உங்களுக்கு சொல்லணுமா??
//

இந்த விஷயத்தில் எல்லா மேதாவியும் மூடிக்கிட்டு இருப்பாங்க

வருண் said...

வாங்க மருதநாயகம்! :)

என்னங்க நம்ம உண்மைத்தமிழன் மு க ஆட்சியில் டாஸ்மாக் வியாபாரம் அதிகமாக நடந்தபோது, மு க என்னவோ எல்லா நல்ல தமிழ்குடிமகனையும் கூட்டிப்போயி வாயில தண்ணியை ஊத்திவிட்டதுபோல பதிவு போட்டாரு.

இன்னைக்கு ஜெய் ஆட்சியில் டாஸ்மாக் வியாபாரம் அமோகமாக நடக்குது!! இதே ஆளு இப்போ இதைப் பத்தி மூச்ந்சுவிடக் காணோம்!

சினிமா விமர்சனம் எழுதிக்கிட்டு திரிகிறாரு மனுஷன்!

மருதநாயகம் said...

நம் இணைய தள புரட்சியாளர்கள் எப்பவுமே இப்படி தாங்க. கமலுக்கே இந்த கதி என்றால் நம் கருத்து சுதந்திர காவலர்களுக்கு செவுளிலேயே விழும் என்று தெரியாமலா இருப்பார்கள். விஸ்வரூபம் பார்க்க வண்டி கட்டி அடுத்த மாநிலத்துக்கு போவாங்க ஆதிபகவனுக்கு பிரச்சினை வந்தால் அவரவர் பொழப்ப பார்க்க போயிடுவாங்க. எல்லோரும் இரட்டை வேடம் போடும் வேடதாரிகள்

இனியா said...

kandippaa.. every Tom, Dick and harry would have cricized kalaignar...

சார்வாகன் said...

வருண் மச்சான்,
பதிவுடன் 100% உடன்படுகிறேன்.தமிழக அரசின் நிலைப்பாடு விசுவரூபத்தில் நிச்சயம் பிடிக்கவில்லை. படம் பார்த்த முஸ்லிம் த்லைகள் தனிப்பட்ட விதத்தில் நீதிமன்றம் அணுகி த்டை வாங்கி இருந்தால் நிலை இவ்வள்வு சிக்கப் ஆகி இருக்காது!!.

அரசு த்டை செய்யாமல் பாதுகாப்பு அளித்து இருந்தால் இந்நேரம் பிரச்சினை மறந்து போய் இருக்கும். கேராளாவில் 30% முஸ்லீம் அவங்க அமைதியா இல்லையா!!. சும்மா கொஞ்சப் பேசு சிலம்ப, நீங்க சொன்ன மாதிரி சொந்தப் பிரச்சினையில் கோபத்தில் கமலை சிக்க வைத்து விட்டார்கள்!!

டிஸ்கி நான் அம்மா ஆதரவாளன் அல்ல!!அய்யா எதிர்ப்பாளனும் அல்ல! இது இல்லை அது அவ்வளவுதான்!!

நன்றி!!

சுவனப் பிரியன் said...

ஜெயா டிவியின் பங்கும் இந்த தடையில் மறைமுகமாக உள்ளதை உண்மையில் யாரும் கவனிக்கவில்லை.

வருண் said...

***மருதநாயகம் said...

நம் இணைய தள புரட்சியாளர்கள் எப்பவுமே இப்படி தாங்க. கமலுக்கே இந்த கதி என்றால் நம் கருத்து சுதந்திர காவலர்களுக்கு செவுளிலேயே விழும் என்று தெரியாமலா இருப்பார்கள். விஸ்வரூபம் பார்க்க வண்டி கட்டி அடுத்த மாநிலத்துக்கு போவாங்க ஆதிபகவனுக்கு பிரச்சினை வந்தால் அவரவர் பொழப்ப பார்க்க போயிடுவாங்க. எல்லோரும் இரட்டை வேடம் போடும் வேடதாரிகள்***

என்னவோ போங்க!

நாள் ஆக ஆக நம்மாளுக (பதிவுலக அரசியல் மேதாவிகள்) சாயம் வெளுக்கத்தான் செய்யுது!

வருண் said...

****இனியா said...

kandippaa.. every Tom, Dick and harry would have cricized kalaignar...****

இவனுக கையாலாகாத தனத்தை நம்ம இப்படிப் பதிவு போட்டு சொல்லிக்காட்டலைனா அது பெரிய "தெய்வகுத்தம்" ஆயிடும்.

ஒண்ணுமே தெரியாத மாரி, நடக்காத மாரி இக்காணுக பாருங்க! :)

Ethicalist E said...

எல்லாம் சரி மனுஷ்ய புத்திரன் மீது நடத்தப்பட்ட கருத்து (சுதந்திரம் என்னும் சொல்லலாம்) தாக்குதல் பற்றி கருத்து ஒன்றும் சொல்லமாட்டீங்களா?
"பாரதிராஜாவை நோக்கி ’’நீ உன் குடுமபத்தை வைத்து விபச்ச்சாரம் செய்கிறாயா என்று கேட்வர், ஸ்ருதி ஹாசனை நோக்கி ’’நீ அப்பனுடன் படுக்க விரும்புகிறாயா?’’ என்று கேட்பவர் என்னை நோக்கி ’’உனக்கு எய்ட்ஸ் இருக்கிறதா?’’ என்று கேட்பவர் இடுப்பிற்குகீழ் செயல்பட முடியாதவன் என்றும் மிருக புத்திரன் என்றும் விமர்சிப்பவர்தான் தொடர்ந்து என்ன விவாத்திற்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்.

மனசாட்சியுள்ள இஸ்லாமிய சகோதரர்களே பி.ஜைனுலாபிதீனுடன் விவாதிக்க வேண்டியது நீங்கள்தான்."


முக்கியமாக வலது, இடது கரம் சுவனபிரியன் என்ன கருத்தை கொண்டிருக்கின்றார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
முக்கியமாக வலது, இடது கரம் சுவனபிரியன் என்ன கருத்தை கொண்டிருக்கின்றார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.முக்கியமாக வலது, இடது கரம் சுவனபிரியன் என்ன கருத்தை கொண்டிருக்கின்றார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

Ethicalist E said...

சில பதிவர்களின் கருத்து
(01) பாரதிராஜாவை திட்டுவதற்கு எதற்கு அவர்கள் வீட்டு பெண்களை பற்றி தரக்குறைவாக பேச வேண்டும்?
(02) பெண்களை திட்டுபவர்கள் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருகிறார்கள் என்பதை மறக்க கூடாது
(03)Abid Suhail - இவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இடும் ஒவ்வொரு பதிவும், நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு சாதாரண இந்துவுக்கும் முற்போக்கு முஸ்லீமுக்கும் தரும் காரணங்கள். (இதை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்)
(04) Seeni Baba Bahurudeen இப்ப என்ன இந்த சினிமா கூத்தடிகளின் குடும்பத்திற்கு ஆதரவாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சனம் செய்வதாக முடிவெடுத்து விட்டிர்களா (இதை போட்டவரும் ஒரு இஸ்லாமியர்)
(05)Mathu Shzaan - அடே லூசு பூனா நீ நீ காமெடியன் தாண்ட வெண்ணை உனக்கு கதைக்க வக்கிள்ளட்டி வீட்டபோடா ..
(06) Ameer Abbas பி.ஜே ஒரு நரகல். அதில் கல்லெறிந்தால் நாறும்.
(7) அப்துல் பாஸித் பாராதிராஜாவிற்க்கு வக்காலத்து வாங்கும் மனுஸ்ய்ய புத்திரரே அவர் பேசியதை இங்கு திரித்து பதிந்து அனுதாபம் தேட முயற்ச்சிக்கவேண்டாம் . பாரதிராஜா தனது கண்டனத்தில் மற்றவர்களைப்போல் கருத்துக்கள் பதிந்திருந்தால் சாதரணமான உதாரனங்களின் மூலம் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும்

(8) மதம் மனிதத்தை மட்டுமே போதிக்கும்..புரிந்து கொள்ள தவறுபவர் மிருகமாகிறார்..
(9) Yasir Arafath உண்மையில் கண்டிக்கத்தக்கது. எதிரியிடம் கூட கண்ணியத்தை பேனச் சொன்ன நபிகளின் வார்த்தையை மறந்துவிட்டார்கள். எங்களின் எதிர்பினை நாங்கள் ஏற்கனவே பதிவுசெய்து உள்ளோம்.

(10)Abid Suhail அவன் இனிஷியலை போலவே அவன் தராதரமும். மொகறகட்ட இதுல இவரு மார்க்க அறிஞராம்!
(11)தரம் தாழ்ந்த வகையில் தனிமத விமர்சனம் செய்கிற இவர் எப்படி நல்ல மார்க்க அறிஞராக இருக்க முடியும் திரு. அப்துல்லாஹ்??
(12)ohamed Mubarak . மனிதர்களுடைய அங்க ஹீனங்களை குறித்து விமரிசிப்பது கொடூரமானது. பீஜே தன்னுடைய பேச்சுக்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
(13) மதம் தின்னும் மனிதம் என்பது இதுதான்!!
(14) ஒருவருடைய உடல் குறைபாட்டை ஏளனம் செய்ததற்கு இறைவனை நம்புபவராக இருந்தால் அவர் மன்னிப்பு கோருவது அவசியம்.
(15)

சிராஜ் said...

எங்கள் நேர்மைய நாங்கள் பலமுறை நிரூபித்துவிட்டோம்...

தயவுசெய்து உங்க பக்கமும் கொஞ்சம் காட்டுங்க Ethicalist...

இது தொடர்பான எனது பதிவு

http://vadaibajji.blogspot.in/2013/01/blog-post_28.html

Ethicalist E said...

சிராஜ் உங்கள் பதிவை ஏற்கனவே படித்து விட்டேன். பின்னூட்டம் இட வில்லை. நீங்கள் போட்ட பதிவின் முக்கியத்துவத்தை நாகூர் மீரானின் பின்னூட்டம் கெடுத்துவிடும் போல் உள்ளது.

செந்திலின் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் ஒன்று
"அமீர் நல்ல கலைஞன். பிறப்பால் கிரிஸ்தவனாகிய நான் "ஐ சப்போர்ட் அமீர்"

சிராஜ் நான் போட்ட பின்னூட்டங்களில் நியாயமாக தங்கள் கருத்துகளை தெரிவித்த பல இஸ்லாமிய நண்பர்களின் கருத்துகளையும் பகிர்ந்திருக்கின்றேன்.

Ethicalist E said...

@siraj
நான் எதிர்பார்த்த சுவனபிரியன் சிறந்த பதிலை தந்திருக்கின்றார்.
ஆனால் நாகூர் மீரான் ரொம்ப மோசம்பா

ராஜ நடராஜன் said...

வருண்!அடிக்கோடிட்டதுக்குப் பதிலா தலைப்பு போட்டிருந்தா கொஞ்சம் சுயவிளம்பரமாவது கிடைச்சிருக்கும்:)

ஒருவரை விமர்சிப்பதாலேயே அவர் எதிரியாகிறார் என்றோ ஒருவரை விமர்சிக்காமல் இருப்பதாலேயே அவர் மீதான நல்ல அபிப்பிராயம் என்று அர்த்தமல்ல.

இதோ ஜெயலலிதா மீது கூட விஸ்வரூபம் காரணமாக ஏதாவது சொல்லி விட முடியும்.இன்னும் சில மாதங்கள் கடந்தால் விஸ்வரூபம் பழைய கதையாகி விடும்.

கலைஞரின் கடந்த ஆட்சிக்காலம் அப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் விமர்சனத்துக்குரியது.

மேலும் கலைஞரின் அரசியலோடு ஜெயலலிதாவை ஒப்பிடுவதே மயிலுக்கும் வான்கோழிக்குமான ஒப்பீடு:)

உங்க மொழியில் ஒருத்தரை திட்டி விட்டால் போதும்.எனது பார்வை அதுவல்ல:)

ராஜ நடராஜன் said...

தமிழக்த்தின் மாற்று அரசியலுக்கு சீமானை முன்னிறுத்தலாம் என்ற எண்ணத்தில் ராமதாஸ் மாதிரி தமிழ் டி.என்.ஏ தேடும் போதே அவருக்கான தகுதி கீழே இறங்கி விட்டது.எனவே விஸ்வரூபத்தை விமர்சிப்பதற்கு சீமானுக்கான கருத்துரிமையென்ற அடிப்படையை மட்டும் மதிக்கிறேன்.

குற்றப்பத்திரிகை தடையை சீமான் சரியென்கிறாரா?

Anonymous said...

தமிழர் கச்சி//

அப்படி ஒரு கட்சி இருக்குதா என்ன...

ஜெ//

Noone likes to beat a dead dog...

வருண் said...

***Ethicalist E said...

எல்லாம் சரி மனுஷ்ய புத்திரன் மீது நடத்தப்பட்ட கருத்து (சுதந்திரம் என்னும் சொல்லலாம்) தாக்குதல் பற்றி கருத்து ஒன்றும் சொல்லமாட்டீங்களா?
"பாரதிராஜாவை நோக்கி ’’நீ உன் குடுமபத்தை வைத்து விபச்ச்சாரம் செய்கிறாயா என்று கேட்வர், ஸ்ருதி ஹாசனை நோக்கி ’’நீ அப்பனுடன் படுக்க விரும்புகிறாயா?’’ என்று கேட்பவர் என்னை நோக்கி ’’உனக்கு எய்ட்ஸ் இருக்கிறதா?’’ என்று கேட்பவர் இடுப்பிற்குகீழ் செயல்பட முடியாதவன் என்றும் மிருக புத்திரன் என்றும் விமர்சிப்பவர்தான் தொடர்ந்து என்ன விவாத்திற்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்.

மனசாட்சியுள்ள இஸ்லாமிய சகோதரர்களே பி.ஜைனுலாபிதீனுடன் விவாதிக்க வேண்டியது நீங்கள்தான்."


முக்கியமாக வலது, இடது கரம் சுவனபிரியன் என்ன கருத்தை கொண்டிருக்கின்றார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
முக்கியமாக வலது, இடது கரம் சுவனபிரியன் என்ன கருத்தை கொண்டிருக்கின்றார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.முக்கியமாக வலது, இடது கரம் சுவனபிரியன் என்ன கருத்தை கொண்டிருக்கின்றார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.***

தலைப்பில் உள்ள சீமானின் நிலைப்பாடு பத்தி உங்க விமர்சனம் என்ன?

நீங்க ஏன் பி ஜெ, சுவனப்பிரியன்னு தலைப்புக்கு சம்மந்தமில்லாதவர்கள் மேல் தாவுறீங்க?

சீமான் நிலைப்பாடு பற்றி விமர்சனம் வைங்க!

வருண் said...

****ஒருவரை விமர்சிப்பதாலேயே அவர் எதிரியாகிறார் என்றோ ஒருவரை விமர்சிக்காமல் இருப்பதாலேயே அவர் மீதான நல்ல அபிப்பிராயம் என்று அர்த்தமல்ல. *****

அட அட அட!!! நடராஜன்!! நீங்க அடிக்கடி என்னை மெய்சிலிர்க்க வைக்குறேள்!!!

நீங்க ஜெயலலிதாவை பயந்துகொண்டே மனசுக்குள்ளேயே விமர்சிப்பதும், கருணாநிதியை தைரியமாக சத்தமாக விமர்சிப்பதும் ஊருக்கே தெரியம்!

நீங்க எவ்ளோ காலம்தான் இப்படி உங்களையே ஏமாத்திக்கிட்டு திரிவதாக உத்தேசம்? ஊரே சிரிக்கிது உங்க நடுநிலைமையைப் பார்த்து!!

அதென்ன வியாதி உங்களுக்கு? கம்லஹாசன் படத்திப்பார்க்க 5000 செலவழிச்சு பறந்து போனால் அதென்னவோ கலைச்சேவைங்கிறமாரி நெனச்சுக்கிறேள்?? உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கு!