ரஜினிகாந்த் போல பெரிய பணக்காரர்கள், கோடி கோடியாக சம்பாரிக்கிறவங்க, அதிகமான வருமான வரி கட்ட ஏன் அழுகிறாங்கனு தெரியவில்லை. இவர்கள் சம்பாரிக்கும் வருமானத்திற்குத்தான் வரி இங்கே என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவும். அமெரிக்காவில் TEA (tax enough already) நு சொல்றவங்க பில்லியனர்களும், மில்லினர்களும்தான். அதே போல் இப்போ இந்தியாவிலும் கோடி கோடியாக சம்பாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்க்கொண்டு நடிகர்கள் விஜய், சூர்யா, சத்யராஜ்னு ஆளாளுக்கு ஒரு 13% வரி அதிகமாக கட்ட அழுகிறார்கள்.
அதாவது பரவாயில்லை, அப்படி அதிகமாக்கினால் கறுப்புபணம் அதிகமாயிடும்னு கேணத்தனமான ஒரு சமாளிப்பு. இது போல் ரஜினி பேசுவது எப்படி இருக்குனா, அதிகமாக எங்களுக்கு வரி போட்டால் நாங்க கறுப்பில் வாங்குவோம்னு சொல்வதாகத்தான் தோணுது.
ஹிந்துவிலிருந்து ஒரு காமெண்ட்!
Film industry people are good in giving lip service only it seems for
the country. Almost all the sectors are paying service tax now. Even for
life saving medicines, we pay tax. Reality being so, entertainment
industry people, not want to be taxed is amusing. True in every walk of
life, all are financially not sound - but they all pay tax. If film
industry people are concerned about disparities in their field, they
should correct themselves like reducing their fees in terms of crores
and so on.
from: GopalanPosted on: Jan 7, 2013 at 17:04 IST
இவர்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு 13% அதிகமாக வருமான வரி கட்டினால் என்னாகும்? இவங்க எல்லாம் தெருவுக்கு வந்திருவாங்களா என்ன? நடிகர் ரஜினிகாந்த் பேசாமல் இதுபோல் போராட்டத்தில் கலக்காமல் ரெஸ்ட் எடுக்கலாம். ஏன் இப்படி?
நம்ம கமலு மட்டும் கலந்துக்கல போல இருக்கு. அவருக்கு விஸ்வரூபப் பிரச்சினையை சரிக்கட்டவே நேரத்தைக் காணோம், இதில் வேற கலந்துக்க எங்கே நேரம் இருக்கப்போது!
ஒருவேளை கமல் மட்டும் இதை வரவேற்கிறாரா? விபரம் சொல்லவும்!