Friday, February 8, 2013

என்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்!

"ஆமா நீ எங்கே இங்கே வந்த, நித்யா?" ஒரே குழப்பத்துடனும் சந்தோஷத்துடணும்.

" இப்போத்தான் இங்கே வந்தேன். வந்ததும் உங்களைத் தேடி வந்துட்டேன், டார்லிங்"

"எனக்கு ஒண்ணுமே புரியலை. எப்படி இது? இன்னும் அதே இளமையாவே.. நீ முதன் முதலா அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க? இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும்..?"

"நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க?"

"இது கனவா, நித்யா?'

"இல்லையே? என்னை கிள்ளிப்பாருங்க!"

"சரி, இங்கே எதுக்கு வந்த?"

"எதுக்குனா? நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுத்தேன் இல்லை? அதை நிறை வேற்றத்தான் தேடி வந்தேன்."

"என்ன அது?"

"அதான். ஒரு நாள் என்னை உங்களுக்கு முழுசா தருவேன்னு சொன்னேன் இல்ல, டார்லிங்?"

"அதெல்லாம் எதுக்கு இப்போ? அதெல்லாம் காதலில், காம வேகத்திலே சொன்னது நித்யா. அதெல்லாம் அப்புறம் நான் மறந்துட்டேன்."

"நான் மறக்கவில்லை."

"இப்போ என்ன சொல்ல வர்ர? நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா? நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ "எக்ஸ்ட்ரா ஃபன்"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே? அதை இன்னொரு முறை சொல்லத்தான?"

"நான் எதுவுமே சொல்லல. நீங்கதான் எல்லாமே சொல்றீங்க!"

"நீ அப்படித்தான் நெனச்ச! எத்தனை தடவை இதை சொல்லியிருக்க தெரியுமா?"

"நான் இப்போ உங்களோட சண்டை போட வரலை"

"ஆமா  நீ உண்மையானவள். நான் அயோக்கியன்! உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க? அதுக்குத்தானே, நித்யா?'

"நான் அதுக்காக எல்லாம் வரலை!"

"அப்போ?'

"எனக்கு இப்போ எந்த கமிட்மெண்ட்ஸும் இல்லை. உங்களுக்கும்தான். இப்போவாவது.."

"இப்போவாவது?'

"உங்களுக்கு நாம் பேசியதெல்லாம் ஞாபகம் இல்லையா?"

"மறந்தால்த்தானே? எது?  நீ எழுதிய லவ் லெட்டரா?"

"எந்த லெட்டெர்?'

"அதான் "ப்ளீஸ் கன்சிடர் திஸ் டார்லிங்"  லெட்டர்."

"இ-மெயில்ல அனுப்பியதா?'

"ஆமா, ஏதோ காதல் வேகத்தில்,, காம ஏக்கத்தில்.. இன்னும் இருக்கு. நான் வேணா அதை தேடி எடுக்கவா? ஒரு நிமிடம்  இரு!"

"இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன்,  இண்டெர்னெட் எல்லாம் கெடையாது டார்லிங்"

"ஏன்?'

"எனக்கென்ன தெரியும்? அப்படியே இருந்தாலும் உங்க அக்கவுண்ட் யூசர் நேம் பாஸ்வேர்ட்லாம் ஞாபகம் இருக்கா?'

"ஏய், ஆமா..எல்லாமே மறந்துடுச்சு."

"எனக்கும்தான். ஆனால் உங்களை மட்டும் ஞாபகம் இருக்கு.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..அப்படியே.. நம்ம பேசியதெல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கு. "

"எனக்கும் அந்த லெட்டர்ல நீ சொன்னதெல்லாம்கூட நல்லா ஞாபகம் இருக்கு, நித்யா?'

"நான் எதையும் மறக்கவில்லை! மறுக்கவும் இல்லை! அதெல்லாம் என் மனதில் இருந்து வந்தவை. எனக்கு மறக்காது"

"என்னடி சொல்ற இப்போ?"

"இப்படி என்னை "டி" போட்டு நீங்க கூப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, டார்லிங்? எனக்கு அழுகை வருது.."

"ஏன்னு தெரிய்லை. இப்போ உன்னை அப்படி கூப்பிடுறது ஏனோ தப்பா தோணலை"

"எனக்கும்தான். எதுவுமே தப்பு இல்லை! நான் உங்க காதலி டார்லிங். உங்களுக்கு மட்டும்தான் நான்!"

"எனக்கு ஒண்ணுமே புரியலை, நித்யா."

"நீங்கதான் மறுபிறவி பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்ல? எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை"

"இது என்ன மறு பிறவியா?'

"தெரியலை. உங்களை எனக்குத் தெரியும். நீங்க என் டார்லிங். என்னை புரிந்து கொண்டவர். வேறென்ன தெரியணும் எனக்கு?"

"இப்போ என்ன? நீ சொன்ன உன்  வாக்கை நிறைவேற்றிட்டு போயிடுவியா?"

"தெரியலையே"

"நீ கொடுத்த வாக்கு, எல்லாம் இருக்கட்டும்.. உன் மடியில் ஜஸ்ட் கொஞ்சம் படுத்துக்கவா நித்யா, ப்ளீஸ்?"

"என்ன டார்லிங் இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்குறீங்க.  இங்க வாங்க! ஐ அம் யுவர்ஸ்"

"நித்யா..உண்மையிலேயே உன் மடியில் படுத்து இருக்கேனா?"

"லெட் மி கிஸ் யு, டார்லிங்"



" யு ஸ்மெல் குட்"

"ஒண்ணு தெரியுமா? நீங்க எனக்கு முன்னால வந்து பல ஆண்டுகளாச்சு. நான் ஜஸ்ட் இப்போத்தான் வந்தேன். வந்ததும் உங்களை பார்க்க ஓடி  வந்துட்டேன்."

"ஏன்?"

"Because I loved you with all my heart!"

"So did I"

முற்றும்



************************************************************

"இந்தக் கதை படிச்சியாடி, வித்யா?"

"எதுடி?"

"Because I loved you with all my heart!"

"Yeah"

"கதை புரிஞ்சதா?"

"என்ன ரெண்டு பேரு காதலிக்கிறாங்களாம், ஒண்ணு சேர முடியலையாம். பிரிஞ்சிடுறாங்க போல?"

"அப்புறம்?'

"ரெண்டு பேரும் செத்த பிறகு she goes to him and gives her completely"

"மறு பிறவிலையா?"

"மறு பிறவி இல்லை. ரெண்டு பேரும் இறந்த பிறகுணு நெனைக்கிறேன்."

"எங்கே சந்திக்கிறாங்க?"

"யாருக்குத் தெரியும்? நிறைவேறாத காதல் என்பதாலோ என்னவோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு வரை ஒருவர் சந்திக்கிறாங்களாம். They are in a strange world. There is NOBODY between them now! அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ! They dont have any commitments. They can do whatever they want! She goes to him and gives her as she promised. She kept her promise! இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது!"

"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"!

*****************

6 comments:

சாமுராய் said...

"
"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"! "

Solid! Good one :)

உஷா அன்பரசு said...

//
"இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன், இண்டெர்னெட் எல்லாம் கெடையாது // - அப்பவே தெரிஞ்சிகிட்டேன் இது out of world ன்னு ஆஹா..

Jayadev Das said...

http://jothidasudaroli.blogspot.in/2013/02/blog-post.html

வருண் இந்த போஸ்டுக்கு நீங்க கூட கண்மண்டு போடலியா.....................

வருண் said...

///சாமுராய் said...

"
"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"! "

Solid! Good one :)

8 February 2013 9:21 pm//

வாங்க, சாமுரய்! :)

வருண் said...

***உஷா அன்பரசு said...

//
"இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன், இண்டெர்னெட் எல்லாம் கெடையாது // - அப்பவே தெரிஞ்சிகிட்டேன் இது out of world ன்னு ஆஹா.. ***

வாங்க உஷா அன்பரசு! எல்லாரும் உங்கள மாரி புரிஞ்சுக்க மாட்டாங்க. அதான் கீழே "ஒரு சின்ன விளக்கம்" கொடுத்தேன். :)

இப்படியாவது அந்தக் காதலர்கள் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டுப் போகட்டுமேனு ஒரு நல்லெண்ணத்தில் எழுதியதுங்க. :):)

வருண் said...

*** Jayadev Das said...

http://jothidasudaroli.blogspot.in/2013/02/blog-post.html

வருண் இந்த போஸ்டுக்கு நீங்க கூட கண்மண்டு போடலியா.....***

வாங்க ஜெயவேல்!

தொடுப்புக்கு நன்றி :)

நல்லாத்தான் பதிலளித்து இருக்கார். அவர் வாழட்டும் வளமுடன்! :)