இப்போ என்ன சொல்றார்னா சிம்புவின் பாடலுக்கு எதிராக பின்னூட்டமிடுறவங்க, சிம்புவின் பாடலை கடுமையாக விமர்சிப்பவர்களைப் பற்றி விமர்சிக்கிறார்.
மொதல்ல, இதே ஆளுதான், சிம்பு சொன்ன வார்த்தை புண்ணாக்குதான்னு வியாக்யாணம் பேசி ஒரு பதிவு எழுதினார்.
இப்போ ரெண்டு நாளு முன்னால் கொட்டிய குப்பையை மறந்துட்டு..சிம்பு சொன்னது "புண்ணாக்கு" இல்லை, அதிலென்ன தப்பு? என்பதுபோல் சிம்புவிற்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு.
அடுத்தடுத்து முரணாக எழுதும் இவர் பதிவிலிருந்து இவர் தரம், மேலும் வேலை வெட்டியில்லாத ஆளு இவரை எல்லாம் கண்டுக்கக்கூடாதுனு இவர் தன்னைப் பற்றித்தெளிவுபடுத்தினாலும். இவரைப் பற்றி வரும் சிந்ந்தனைகள் சில..
இவருக்கு என்ன வயசுனு தெரியலை. பார்த்தால் ஒரு ரிட்டைர்ட் ஆகி, சோஸியல் செக்குரிட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போயி வந்துகொண்டு இருப்பவர்போல தோனுது . சரி இருந்துட்டுப் போகட்டும்.
இவர் தன் பதிவில் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பின்னூட்டம் இது.
சிம்புவை எதிர்த்து போராடிய கலாசாரக் காவலர்களே....இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சிம்பு beep செய்த so and so அப்படிப் படங்கள் அதுக்கும் மேலே இருக்கு! சிம்புவிர்ற்கு எதிராக கூவின பதிவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், நாம் போற்றும் பெண்மை வீடியோவில் வேர்வை சிந்த உழைப்பதை எதிர்த்து ஒரு பதிவாவது தமிழ்மணத்தில் போடுவார்களா?
இதிலிருந்து என்ன தெளிவு படுகிறது என்றால்..இவருக்கு எவனோடையாவது சண்டை போடணும் இப்போ! அதாவது இவரு ஏதாவது குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கொட்டுவாரு. உடனே அவன் அவன் இவரு "டாக்டரு" அமெரிக்காவில வாழ்ந்து கிழி கிழினு கிழிச்சவருனு மதிச்சு, அந்தக் குப்பையை விமர்சிச்சு நம்ம பதிவெழுதணுமாம்! அதான் இவர் எதிர்பார்ப்பு!
சரி எழுதிப்புடுவாம்!!
********************
நம்பள்கி!
நான் கலாச்சாரக் காவலன் எல்லாம் இல்லை. ஆனால் உங்களைவிட தரத்தில் ஒருபடி மேலேனு என்னை நானே நிறுத்திக்கிற ஒரு பொறுக்கிதான். நீங்க அப்போ என்னைவிட மட்டமான ஒரு பொறுக்கினு புரிஞ்சுக்கோங்க!
ஆமா, நான் சிம்பு பாடலுக்கு எதிராத்தான் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கேன். நான் மட்டும் இல்லை, சிம்பு அம்மாகூட "சிம்பு அப்படி பாடி இருக்க மாட்டான்" னுதான் சொல்லுவாரு. ஆக, உங்களுக்கு எதிரா இங்கே நிக்கிறது சிம்பு அம்மாவும்தான்.
ஆமா, உங்களுக்கு என்ன வேணும் இப்போ?
சாருநிவேதிதானு ஒரு தரங்கெட்ட எழுத்தாளர், இதை விமர்சிக்கிறேன்னு இதைப்பத்தி விளாவரியா எழுதி அவன் அரிப்பை தீர்த்துக்கிறான். இப்போ நீங்க உங்க திறமையைக் காட்டுறீங்களாக்கும்..
நீங்க வாசிக்கிற போர்ன் ஸ்டோரியெல்லாம் இங்கே சிம்புக்கு எதிரா கருத்துச் சொன்ன எல்லாரும் வாசிச்சாங்கனு எதுவும் "டேட்டா" உங்களிடம் இருக்கா? அதை இங்கே பகிர முடியுமா?
மேலும் பதிவுனு நீங்க எழுதுற குப்பைகளையும் ஒரு பயலுகளும் வாசிக்கிறது இல்லை! அப்படியே வாசிச்சாலும், வாசிச்சுட்டுட்டு "இவனுக்கு மரை கழண்டு போயிடுச்சு!" னுதான் சொல்லிட்டுப் போயிடுறாங்க! அதெல்லாம் உங்க காதுக்கு விழாது!
நீங்க பார்த்து ரசிக்கிற "சன்னி லியோன்" வீடியோவும் ஒரு சிலருக்கு குப்பையாக இருக்கலாம். உங்களைப் போலவே எல்லாரும் சன்னி லியோன் வீடியோ பார்க்கிறாங்கனு எதுவும் உங்களிடம் டேட்டா இருக்கா? அதையும் பகிர முடியுமா?
அப்படிப் பகிர வக்கில்லைனா.. ஊருல உள்ளவன் எல்லாம் உங்களைப் போல வேலை வெட்டியில்லாமல் முழு நேரம் போர்ன் பார்க்கிறவன்னு நினைப்பதை நிறுத்தும்!
உங்க ரசனை ஒரு மாதிரியாத்தான் இருக்கு. இருந்துட்டுப் போகட்டும். அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை.
அதேபோல் மற்றவர்கள் ரசனையை நீங்க புரிந்துகொண்டால் போதும். இல்லை நீயும்/உலகமும் நம்பள்கி மாதிரித்தான், உலகில் உள்ள அனைவரும் நம்பள்கி போல வேலை வெட்டி இல்லாதவன்தான்.. "சன்னி லியோன் விசிறி"தான் னு நீங்க அடித்துச் சொன்னால் உங்களுக்கு புத்தி இல்லைனுதான் ஆகும்.
உங்க கருத்துச் சுதந்திரத்தை மற்றவர் மதிப்பதுபோல் நீங்களும் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிங்க.
உங்களுக்கு சிம்பு மேலும், சன்னி லியோன் மேலும் மரியாதை இருக்கா?
அவங்கல்லாம் உங்க "ரோல் மாடலா?" தப்பே இல்லை!
--------------
பின்னூட்டத்தில் பலர், தனிநபர் தாக்குதல் தவறென்று வன்மையாக கண்டனங்கள் (மஸ்தான் ஒலி மற்றும் சக பயணி )தெரிவித்ததால் இப்பகுதி அகற்றப்பட்டது- டிசம்பர் 20, 2015.
---------------------------
அது உங்க தனிப்பட்ட விசயம். அதைக் கேக்க எனக்கு உரிமை இல்லை. அதை நான் அசிங்கமாக விமர்சிக்கப் போவதும் இல்லை.
அதே சமயத்தில் சிம்புக்கு எதிரா பின்னூட்டமிட்டவனையெல்லாம் விமர்சிச்சா அப்புறம் நானும் இப்படித்தான் விமர்சிப்பேன்.
அப்புறம் உங்களை எதுக்கு தமிழ்மணத்தில் இன்னும் வச்சிருக்காங்கனு தெரியலை. ஒரே குப்பையா, எடுத்த வாந்தியையே இன்னும் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டு இருக்கீங்க. உங்களைத் தமிழ்மணத்திலிருந்து தூக்கினால் நல்லதுனு தோனுது! அதுக்கு ஏதாவது வழி செய்யணும்!
நீங்க மாஞ்சி மாஞ்சி எதிர்பார்த்த பதிவை எழுதியாச்சு. இப்போ திருப்தியா?!