அறிவியல் எனறால் உண்மைகளின் பிறப்பிடம். அறிவியலில் ஆராய்ச்சி செய்றவன் எல்லாம் புனிதத்தொழில் பண்ணுகிறான் என்கிற மிகத்தவறான கண்ணோட்டம் விஞ்ஞானிகளை தூரத்தில் இருந்து பார்க்கும் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானியும் கேவலம் சாதாதரண மனுஷ்ந்தான். பண ஆசை, புகழ் ஆசை, நோபல் பரிசு ஆசை உள்ளவர்கள் பலர் உண்டு. இதுக்காக சில கீழ்தரமான வேலைகள் செய்கிற விஞஞானிகளும் பலர் உண்டு. சிலர் தப்பித்துக்கொள்வதும் உண்டு. ஒரு சிலர் மாட்டிக்கொள்வதும் உண்டு!
* இந்தா ஒரு கதை ஹிந்துல வந்திருக்கு. இவர், இண்டோ- அமெரிக்க "Chandrayaan" ப்ராஜஎக்ட்ல வேலை பார்த்தவராம். பெயர் Dr. Nozette. எஃப் பி ஐ இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கு! என்ன பண்ணினார்னா, ஒரு இஸ்ரேலி கம்பெணியிடம் பெரிய தொகை ( $2,25,000) பேரம் பேசி இருக்காரோ வாங்கினாரோ னு குற்றச்சாட்டு. இப்போ பிடிச்சுட்டாங்க!
http://www.hindu.com/2009/10/21/stories/2009102161571300.htm
* ராமன் ரிசேர்ச் இண்ஸ்ட்டிடூட்டில் முன்பு வேலை பார்த்த ஒரு விஞ்ஞானி, ஒரு ஸ்பெக்ட்ரோ ஃபோட்டோ மீட்டர் வாங்காமலே, வாங்கியதாக கணக்கு காட்டி அந்தப் பணத்தை அடித்துவிட்டார். கடைசியில் அவர் அந்த இண்ஸ்டிடூட்டைவிட்டு மரியாதையாக வெளியேறும் நிலைமை வந்தது. இந்த விசய்ம் ரொம்ப வெளியே வரவில்லை.
* நம்ம சி வி ராமனே, பங்களூரில் ஐ ஐ எஸ் சியில் இருக்கும்போது, ஆராய்ச்சிக்காக வாங்கிய ஒரு சில வைரங்களுக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டினால், அங்கே இருந்து வெளியே வந்து, ராமன் ரிசேர்ச் இண்ஸ்டிடூட் ஆரம்பித்த பழங்கதையும் உண்டு.
* பல வருடங்கள் முன்னால், ஒஹையோ ஸ்டேட் யுனிவேர்ஸிட்டி யில் வேலை பார்த்த ஒரு பெரிய விஞ்ஞானி, "லியோ பக்கட்" என்கிறவர், யு டி ஆஸ்டினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான ஸ்டீவ் மார்ட்டினுடைய ரிசேர்ச் ப்ரப்போஸலில் உள்ள ஐடியாக்களை திருடியதற்காக, சேர்மேனாக இருந்த அவரை அந்த கம்மிட்டியில் இருந்து விலக்கினார்கள்!
* ஹார்வேர்ட் யுனிவேர்சிட்டியில் நோபல் பரிசு வென்ற இ ஜே கோரே யின் பல ஆய்வுக்குறிப்புகளில் ரிப்ரொடியுசபிலிட்டி பிரச்சனை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பல உண்டு!
* நம்ம ராமர் பிள்ளை பெரிய சயண்டிஸ்ட் இல்லை தான்! அவரும் ஹர்பல் பெட்ரோல் தயாரிச்சதா புருடா விட்டார்! இந்த ஆர்ட்டிகிலை "நேச்சர்" ல பிரசுரிச்சு இந்தியர்கள் மானம் போனதும் இன்னும் மறக்க முடியவில்லை!
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!
என்கிற கண்ணதாசன் வரிகளில் உண்மை எப்போதுமே உண்டு!
ஒரு சாதாரண ஜானிட்டராக இருந்து தன் வேலையை அழகா அர்த்தமாக செய்து வாழ்பவர்களும் உண்டு. ஊரும் பேரும் புகழும் பெரிய விஞ்ஞானியாகி, பேருக்காகவும் புகழுக்காகவும் கீழ்த்தரமான வேலைகள் செய்து மாட்டிக்கொள்ளாமல் போனவர்களும் உண்டு!
No comments:
Post a Comment