Thursday, January 29, 2009

காதலுடன் 8

எதிர்பாராதவிதமாக சந்தியாவை பார்த்தவுடன், "ஹாய் சந்தியா" என்றார் ராஜு சற்றே சமாளித்து.

"இவங்கதான் உங்க..?" என்றாள் சந்தியா ராஜுவின் மனைவியைப்பார்த்து.

"ஷி இஸ் மை வைஃப் சாந்தி!"

"ஹலோ சாந்தி! நான் சந்தியா! உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி" என்றாள் சந்தியா புன்னகையுடன்.

அதன்பிறகு வேற என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்தார், ராஜு.

"சரி நீங்க நிதானமாக ஷாப்பிங் பண்ணுங்க. நான் அவசரமா ஒரு ஐட்டம் மட்டும் வாங்க வந்தேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சாந்தி! பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சந்தியா.

அவள் "செல்ஃப் செக் அவுட்" டில் செக் அவுட் பண்ணிவிட்டு, காரில் ஏறி வேகமாக புறப்பட்டாள். ராஜுவையும் அவர் மனைவியையும் பார்த்ததிலிருந்து அவளுக்கு ஒரு மாதிரியான கில்ட்டி ஃபீலிங்கா இருந்தது. ராஜுவின் மனைவி சாந்தி ராஜுவுக்கு சரியான ஜோடியாக என்று தோன்றியது அவளுக்கு. ராஜூவுடன் உறவை முறித்தபிறகு அவளுடைய அம்மா அப்பாவிற்கெல்லாம் இவள் விதண்டாவாதம் பண்ணுவதாகத்தான் தோன்றியது. அவங்களுக்கு இவள் பேசுவதெல்லாம் விந்தையாக இருந்தது. இவள் என்னதான் எதிர்பார்க்கிறாள்? ஏன் இப்படி இருக்கிறாள்? என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். இவள் உணர்வுகளோ, எதிர்பார்ப்போ எதுவுமே புரியவில்லை. அப்பா அம்மாவிடம் வாரம் ஒருமுறை கால் பண்ணி பேசுவாள் சந்தியா. அவர்கள் இவள் கல்யாணம் எப்போ செய்யப்போறா என்று மறுபடியும் கவலையுடன் ஆரம்பிப்பார்கள். அதைப்பற்றி பேச ஆரம்பித்தாலே சீக்கிரம் கட் பண்ணிவிடுவாள்.

தன் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சந்தியாவின் அப்பா அம்மா. சந்தியாவைப் பொறுத்தவரையில் அது உண்மை இல்லை. கல்யாணம் வெறும் ஆரம்பம்தான். முடிவு இல்லை! அவளுக்கு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இளம் இந்தியர்களைப் பற்றி நல்லாவே தெரியும். இந்த அரைவேக்காடுகளுக்கு என்ன வேணும்னே புரியவில்லை அவளுக்கு.

போன வாரம் அவள் ஃபார்மர் க்ளாஸ்மேட் ராம் கூப்பிட்டான். அவன் இந்தியா போறானாம். அவனுக்கு இந்தியாவில் அரேஞ்சிட் மேரேஜ் நடக்கப்போகுதாம். இவளுக்குத் தெரிய கரோலைன் என்கிற அமெரிக்கன் கேர்ள், அவர்கள் க்ளாச்மேட் ஒருத்தியோடு அவன் நேற்றுவரை சுத்திக்கொண்டு இருந்தான். கரோலைன் ரொம்ப நல்ல பொண்ணு, வெகுளி. இவனுக்காக இந்தியன் குக்கிங் எல்லாம் கரோலைன் கற்றுக்கொண்டாள். ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தார்கள், ஒரே படுக்கையில் படுத்து எழுந்தார்கள். இப்போ அவளை கழட்டி விட்டு விட்டு அரேஞ்சிட் மேரேஜ் பண்ணுறானாம்.

அப்போ அவளோட ஏன் சுத்தினனு கேட்டால், "ஜஸ்ட் ஃபார் செக்ஸ்" என்று கேவலமா ஒரு பதில் சொல்லுகிறான், ராம். அவனிடம் சந்தியா ஒண்ணும் சொல்லவில்லை! ஆனால் She really got mad. "What a dirty bastard he is!" என்று மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். அவன் கல்யாணத்திற்கு மட்டுமல்ல, செத்தால்கூட அங்கே போவதில்லை என்று முடிவு செய்துவிட்டாள் சந்தியா. இதுபோல் எந்தவித மாரல்ஸோ, கட்டுப்பாடோ இல்லாமல் மிருகம் மாதிரி வாழ்ந்துகொண்டிருக்கிறது இன்றைய படித்த இந்திய இளைஞர் சமுதாயம் என்பது அவளுக்கு நல்லாவே தெரியும்.

அவளுக்கு ரமேஷ் நினைவு வந்தது. ரமேஷிடம் குறைகள் இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால் இவளை அட் லீஸ்ட் புரிந்துகொண்டார். எத்த்னைபேர் நம் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்கிறார்கள்? ரமேஷ் பற்றி யோசிக்கும்போது லக்ஷ்மி நினைவு வந்தது. அதற்குள் வீடும் வந்ததும், காரை பார்க் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்ட் உள்ளே வந்தாள். ரமேஷ் கொண்டு வந்திருந்த கிஃப்ட்டை எடுத்து "கிஃப்ட் ராப்" பை பிரித்தாள். அதில் ஒரு டி வி டி இருந்தது, அதனுடன் ஒரு சின்ன கார்டும் இருந்தது.

அது ஒரு ஹோம்-மேட் டி வி டி. அதனுள் ஒரு நோட் இருந்தது.

அதில், "ஏய்! இது ஒரு மாதிரியான டி வி டி. ஒரு மாதிரியான படம் பிடிக்கும்னா பாரு. அப்புறம் பார்த்துவிட்டு என்னைத் திட்டாதே!" என்று எழுதி இருந்தான் ரமேஷ்!

என்ன கொழுப்பு இவருக்கு என்று சிரித்துக்கொண்டாள். அவள் க்யூரியாசிட்டி அவளை கொன்றது. இருந்தாலும் அதை பார்க்க தைரியம் இல்லை. அதை தனியாக வைத்துவிட்டு, அதோட இருந்த கார்டை பிரித்துப்பார்த்தாள்.

சந்தியா!
உன்னை தோழியாக அடைந்த பாக்கியசாலி நான்!
-ரமேஷ்

உடனே ரமேஷை செல் ஃபோன்ல கூப்பிட்டாள்.

"ஹாய் சந்தியா!" என்றான்.

"என்ன உங்க கலீக்குடன் டிஸ்கஷன் முடிந்ததா, ரமேஷ்?"

"ஒரு வழியா முடிந்தது"

"ஏன் ஒரே அடியா சலிச்சுக்கிறீங்க.பாவம்?'

"நல்லவேளை நீ என் கோ-வொர்க்கரா இல்லை"

"ஏன்?"

"கோ-வொர்க்கர்னா... சரி விடு! என்ன விசயம், சந்தியா?"

"உங்க கார்ட் மற்றும் அதில் உள்ள காமெண்ட் நல்லா "க்யூட்டா" இருந்துச்சு!, தேங்க்ஸ்"

"அப்புறம்?"

"ராஜுவையும் அவர் மனைவி சாந்தியையும் டார்கெட்ல பார்த்தேன். ஹலோ சொல்லிவிட்டு வந்துட்டேன்"

"எங்கிருந்தாலும் வாழ்க நு வாழ்த்திட்டயா?"

"ஆமா"

"அப்புறம்?"

"அப்புறம் ஒண்ணுமில்லை.. ஆமா அதென்ன "ஒரு மாதிரி"னா?

"ஹா ஹா ஹா" அவன் சத்தமாக சிரித்தான்.

"என்னை கொலைகாரியாக்கிடாதீங்க ரமேஷ்!"

"உன் கைகளில் சாக கொடுத்து வச்சிருக்கனும், சந்தியா!"

"உங்களுக்கு பயங்கர கொழுப்பு தெரியுமா?"

"நீ என்ன சின்னப்பொண்ணா? அடல்ட் தானே?"

"இல்லை டீனேஜர்"

-தொடரும்

10 comments:

மணிகண்டன் said...

********
நீ என்ன சின்னப்பொண்ணா? அடல்ட் தானே?"

"இல்லை டீனேஜர்"
********
கலக்கல்.

*******
ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தார்கள், ஒரே படுக்கையில் படுத்து எழுந்தார்கள்.
*******

தமிழ் சினிமால லிப் டு லிப் கிச் போது பூ காட்டுவாங்களே ! அது தான் ஞாபகம் வருது.

மணிகண்டன் said...

உங்கள தவிர, இந்த தொடர நான் ஒருத்தன் மட்டும் தான் படிக்கறேன் நினைக்கறேன் !

வருண் said...

***தமிழ் சினிமால லிப் டு லிப் கிச் போது பூ காட்டுவாங்களே ! அது தான் ஞாபகம் வருது.

30 January, 2009 1:08 PM***

வாங்க மணிகண்டன்!

அது அந்தக்காலத்து தமிழ் சினிமா! :)

இப்போலாம் தமிழ்ப் படம் ரொம்ப மோசமா இருக்கு மணிகண்டன். தமிழ் எழுத்தாளர்கள் அதைவிட மோசம். தமிழ் இளைய சமுதாய ரசனை யெல்லாம் "காம ரசனை" ஆயிடுச்சு.

நீங்க சொல்ற "பூ" காட்றதெல்லாம் அந்தக்காலம்னு நெனைக்கிறேன்!

வருண் said...

***மணிகண்டன் said...
உங்கள தவிர, இந்த தொடர நான் ஒருத்தன் மட்டும் தான் படிக்கறேன் நினைக்கறேன் !

30 January, 2009 1:10 PM ***

நம்ம மட்டும் தனியா இல்லை. ஒரு சில ஃப்ரெண்ட்ஸ் படிக்கிறாங்க!

ஏதாவது காமெண்ட் செய்து எதுக்கு பாவம் வருணை கஷ்டப்படுத்தனு பெரியமனது பண்ணி விட்டுட்டு போயிடுறாங்கனு நினைக்கிறேன்! :-)

மணிகண்டன் said...

*** ஒரே படுக்கையில் படுத்து எழுந்தார்கள்.
***

இல்லைங்க. நீங்க அவங்க ரெண்டு பேருக்கும் இருந்த உறவை எழுதின விதத்துக்கு கூறப்பட்ட சிறு கிண்டல்... அவ்வளவு தான் !

வருண் said...

****சிறு கிண்டல்... ****


ஆங்கிலத்தில் "ஸ்லீப்பிங் டுகெதெர்" னு சொல்வதை தமிழில் எழுதிட்டேன் போல, மணிகண்டன்! :-) :) :)

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க :-)

ஸ்ரீதர்கண்ணன் said...

***மணிகண்டன் said...
உங்கள தவிர, இந்த தொடர நான் ஒருத்தன் மட்டும் தான் படிக்கறேன் நினைக்கறேன் !

30 January, 2009 1:10 PM ***

நம்ம மட்டும் தனியா இல்லை. ஒரு சில ஃப்ரெண்ட்ஸ் படிக்கிறாங்க!

ஏதாவது காமெண்ட் செய்து எதுக்கு பாவம் வருணை கஷ்டப்படுத்தனு பெரியமனது பண்ணி விட்டுட்டு போயிடுறாங்கனு நினைக்கிறேன்! :-)


நானும் ஆட்டத்துல இருக்கேன் மணிகண்டன், வருண் சொல்ற மாதிரி எதாவது சொல்லி கஷ்டபடுத்த வேண்டாம் அப்படின்னு ........... :)

வருண் said...

வாங்க ஸ்ரிதர்கண்ணன்!

அச்சச்சோ! உங்களுக்கு நான் மணிகண்டனுடன் பேசியது கேட்டுருச்சா!!! LOL!

நித்தி .. said...

மணிகண்டன் said...
உங்கள தவிர, இந்த தொடர நான் ஒருத்தன் மட்டும் தான் படிக்கறேன் நினைக்கறேன் !

30 January, 2009 1:10 PM ***

நம்ம மட்டும் தனியா இல்லை. ஒரு சில ஃப்ரெண்ட்ஸ் படிக்கிறாங்க!

ஏதாவது காமெண்ட் செய்து எதுக்கு பாவம் வருணை கஷ்டப்படுத்தனு பெரியமனது பண்ணி விட்டுட்டு போயிடுறாங்கனு நினைக்கிறேன்! :-)

nanum irukaen varun ji...
romba iyalba iruku unga eluthu..
iyalba irukarathu niraiya per ethuka mudiyatha onna irukanala than..
yarum padikara mathiri kamikalayo enna vo....!!!

வருண் said...

****நித்தி .. said...

nanum irukaen varun ji...
romba iyalba iruku unga eluthu..
iyalba irukarathu niraiya per ethuka mudiyatha onna irukanala than..
yarum padikara mathiri kamikalayo enna vo....!!!****

வாங்க நித்தி! :)

ஒரு சிலர் கதையின் ஃப்ளோவை அவங்க காமெண்ட் பாதிச்சிரு மோனு ஃப்ரியா விட்டுடுறாங்கனு நெனக்கிறேன், நித்தி.

Writing something like this certainly helps me killing my time in a worthy manner! :-)

Thanks for reading folks!