Thursday, January 1, 2009

ரஜினியின் பாபாஜியின் சிறுநீரகங்கள்!

யாரோ ஒரு பாபாஜீ என்கிற சித்தர், 2000 ஆண்டுகள் வாழ்கிறார் என்கிறார்கள். அதை நம்ம ரசினி நம்புகிறார். சரி, இதை அவர் பர்சனல் மேட்டர்னு விடமுடியாதுதான்.

காரணம்? இது சமீபத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக இருக்கிறது.

இங்கே பாபாஜி 2000 ஆண்டு வாழ்வதுல் உள்ள முக்கியமாக பிரச்சினை ஒன்று சொல்ல வேண்டும்! மனித உடம்பில் உள்ள முக்கிய உறுப்புக்கள் (இதயம், ஈரல், நுரையீரல், மேலும் செக்ஸ் ஹார்மோன்ஸ்,) போன்றவை ஒருவருக்கு வயதாக ஆக, கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்துகொண்டுதான் போகின்றன. மேலும் வயதாக ஆக, ஒரு வருக்கு எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே போவது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

இதில், சிறு நீரகம் என்பது சந்தேகமே இல்லாமல் வருடத்திற்கு வருடம் பழுதடைந்து கொண்டுதான் போகிறது என்பது அறிவியலில் நிரூபித்த உண்மை.

Unlike any other vital organs, one's Kidney function goes down as one gets older and older no matter how healthy the person is!

அதாவது ஒருவர் 200 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் பிறக்கும்போது இருந்த அவருடன் வந்த 2 சிறுநீரகத்தை வைத்து வாழவேமுடியாது. அவைகள் 200 வருடங்களில் முற்றிலும் பழுதடைந்துவிடும் என்பது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. 200 ஆண்டுகளுக்குள் சிறுநீரகம் பழுதடைந்தால் 2000 ஆண்டுகள் அதே சிறுநீரகத்தை வைத்து வாழ்வது என்பது JUST IMPOSSIBLE!

15 comments:

ரவி said...

பாபாஜி தண்ணியே குடிக்கல...இப்ப என்ன சொல்வீங்க ?

வருண் said...

Happy New Year!

-------------------

***நான் : செந்தழல் ரவி said...
பாபாஜி தண்ணியே குடிக்கல...இப்ப என்ன சொல்வீங்க ?

1 January, 2009 9:55 AM***

LOL

வண்ணான் said...

அறிவியலால் நிருபிக்க முடியாதது எவ்வளவோ உண்டு இந்த பிரபஞ்சத்தில..!!!

வருண் said...

***வெடிகுண்டு முருகேசன் said...
அறிவியலால் நிருபிக்க முடியாதது எவ்வளவோ உண்டு இந்த பிரபஞ்சத்தில..!!!

2 January, 2009 12:38 AM***

இல்லனு சொல்லலங்க!

அதற்காக நிரூபித்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்ன?

வால்பையன் said...

பாபா ஒருவேளை ரஜினியின் மனதில் வாழலாம்,

கடவுளும் அப்படியே, மனதில் உருவகப்படுத்தும் கற்பனை தானே!

வருண் said...

***வால்பையன் said...
பாபா ஒருவேளை ரஜினியின் மனதில் வாழலாம்,

கடவுளும் அப்படியே, மனதில் உருவகப்படுத்தும் கற்பனை தானே!

2 January, 2009 9:08 AM***

உங்களோடு 100 விழுக்காடுகள் ஒத்துக்கொள்கிறேன்! மனதில் கற்பனையில் நிச்சயம் வாழலாம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாபா படம் ,பப்படமாகப் போகுது என்று தெரியாமல், அவர் ஒரு 2000 வருட பீலா விட்டார். அதை நீங்கள் இவ்வளவு நாளும் மறக்காமல் இருந்து,குதறுவது..
ரூ...ரூ... மச்

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பாபா படம் ,பப்படமாகப் போகுது என்று தெரியாமல், அவர் ஒரு 2000 வருட பீலா விட்டார். அதை நீங்கள் இவ்வளவு நாளும் மறக்காமல் இருந்து,குதறுவது..
ரூ...ரூ... மச்

2 January, 2009 10:41 AM ***

அவர் உண்மையிலேயே அப்படி நம்புறார்னுதான் நான் நினைக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்! யோகன் பாரிஸ்(Johan-Paris) ! :-)

Anonymous said...

//***வெடிகுண்டு முருகேசன் said...
அறிவியலால் நிருபிக்க முடியாதது எவ்வளவோ உண்டு இந்த பிரபஞ்சத்தில..!!!

2 January, 2009 12:38 AM***

இல்லனு சொல்லலங்க!

அதற்காக நிரூபித்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்ன?

//
what is 'proved to be a fact' can be refuted in the future as something which is not a fact. this has happened many times in the past. the harmonal treatment which was 'proved safe' in the past was disproved later. Even Earth was 'proved to be the center of our planetary system till Gallelio proved it otherwise!

you are trying to measure some thing with what we know as facts. the problem is, there are many things we do not know and what we consider 'facts' are facts only till some one proves it otherwise!

--Anvarsha

வருண் said...

***you are trying to measure some thing with what we know as facts. the problem is, there are many things we do not know and what we consider 'facts' are facts only till some one proves it otherwise!

--Anvarsha"****

Well, Well, well, we are talking in general here.

The point here is Human cant live 2000 years with the kidneys they were born with.

That is a fact!

----------
Happy New Year! :)

Anonymous said...

இல்லனு சொல்லலங்க!

அதற்காக நிரூபித்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்ன?
//


நிருபித்த உண்மைகளும் மாறும்..!!

வருண் said...

***நிருபித்த உண்மைகளும் மாறும்..!!***


இப்போ உலகம் உருண்டை என்று சொன்னது உலகம் சதுரம்னு மாறுமா?

அப்படியே "உலகம்" மாறினாலும், அன்று மாறிய பிறகு இந்த மாற்றைத்தை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறேன்.

ஆனால் இன்று உலகம் உருண்டைதானே?

இல்லையா?

இது நாளைக்கு மாறும் என்பதால் இதை "உருண்டை இல்லை" னு சொல்லனுமா என்ன?

Anonymous said...

Konjam puthisaliyana aalu nu ninachan :)

வருண் said...

***Anonymous said...
Konjam puthisaliyana aalu nu ninachan :)***

இப்போ அது யார் தப்புனு சொல்றீங்க?

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை"னு சொல்லுவாங்க!

அப்போ நடந்துவிட்டல் தெய்வம் இல்லைனு அர்த்தம் ஆயிடும்.:):)

இந்த "லோகத்திலே" நீங்க ஒருவர்தான் புத்திசாலி! LOL!

. said...

இந்த பதிவும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் எல்.கே.ஜி. பாஸ் பண்ணியதும் பி.ஹை.டி.... மாணவரைப் பார்த்து பல் இளித்த கதையே.

சரி உடனே நான் பாபாஜியையோ அவரது 2000 வருட வாழ்வையோ புரிந்து விடவோ, ஒத்துக் கொள்ளவோ அல்லது மறுக்கவோ இல்லை.

இது பற்றி, எனக்கு தெரியாது. அது தான் என் நிலை.

1. அவரை ஸ்தூல வடிவம் என்கிறார்கள், அதாவது உடல் இல்லாத ஒரு நிலை.
2. தாங்கள் சொல்லும் மருத்துவம் சார்ந்த ஒரு அறிவியல் மட்டுமே எல்லாம் தெரிந்த ஏழுமலை அல்ல


ஒரு செய்தியை கேட்டதும் எல்லாம் தெரிந்தது போல் பிதற்றுவது சிறுபிள்ளைத்தனமே.