Sunday, January 4, 2009

அமெரிக்க பொருளாதாரமும் குறையும் பெட்ரோல் விலையும்!

அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது உலகமறிந்தது. 65 வயதில் வேலையில் இருந்து ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணியவர்கள் எல்லாம், தான் வைத்திருந்த சேமிப்பில் 40% பணத்தை இழந்து தவிக்கிறார்கள் இன்று. இதில் பலர், 65 வயதுக்கப்புறமும் தொடர்ந்து வேலை செய்வதாக முடிவுக்கு வந்து விட்டார்கள். இது போல் ஒரு சூழ்நிலை உருவாகும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

உலகமே இதையறிந்து அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் கைகொட்டி சிரிக்கிறது. அமெரிக்கா வீழ்வதால் பலருக்கும் மகிழ்ச்சி என்பதை கண்கூடாகப்பார்க்கலாம்.

ஆனால் இந்த அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் உலகப்பொருளாதாரமே பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. எந்திரன் படம் ஐங்கரனிடம் இருந்து சன் பிக்ச்சர்ஸ் க்கு கை மாறியதுகூட அதனால்தான்.

மேலும் நிறைய இந்தியர்கள் (மென்பொருள் சம்மந்தப்பட்ட வேலையில் உள்ளவர்கள்) வேலை இழந்து உள்ளார்கள், இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதனால் இது சந்தோஷப்படும் விசயமா என்று தெரியவில்லை.

இந்த ஒரு பொருளாதார வீழ்ச்சி சூழலில் அமெரிக்காவில் இன்னொரு அதிசயம்! அது என்னவென்றால், பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருக்கும்போது,

* மிகக்குறைவாக இருக்கிறது பெட்ரோல் விலை (gasoline) $1.40 / gallon இன்று!!!

* கடந்த 5 வருடத்தில் இவ்வளவு குறைவாக இருந்ததில்லை. 6 மாதங்கள் முன்னால் $ 4.5 / gallon இருந்தது.

இதைப்பற்றி, பொருளாதாரம வீழ்ச்சியில் இருக்கும்போது ஏன் பெட்ரோல்விலை குறைகிறது? என்று கேட்டால், பெட்ரோலுக்கு டிமாண்ட் இல்லாததால் இப்படி என்கிறார்கள். இந்தியா, சீனா, மற்றும் ஐரோப்பாவிலும் பெட்ரோல் விலை குறைந்து உள்ளதா என்று தெரியவில்லை.

26 comments:

ஆளவந்தான் said...

//
* மிகக்குறைவாக இருக்கிறது பெட்ரோல் விலை (gasoline) $1.40 / gallon இன்று!!!
//
தண்ணீரை விட குறைவான விலை

பெட்ரோல் வர்த்தகம் டாலரில் இருப்பதால், அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் விலை குறைவே. ஆனால் இந்தியா விலையை குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

குடுகுடுப்பை said...

எந்திரன் படம் கைமாறின விசயம் தெரிஞ்ச நீங்க பெட் ரோல் விலை தெரியலன்னு சொல்றீங்க எங்கியோ இடிக்குது.

வருண் said...

****ஆளவந்தான் said...
//
* மிகக்குறைவாக இருக்கிறது பெட்ரோல் விலை (gasoline) $1.40 / gallon இன்று!!!
//
தண்ணீரை விட குறைவான விலை

4 January, 2009 6:23 PM ***

ஓரளவுக்கு நீங்க சொல்றது உண்மைதான், ஆள்! :)

வருண் said...

***பெட்ரோல் வர்த்தகம் டாலரில் இருப்பதால், அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் விலை குறைவே. ஆனால் இந்தியா விலையை குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.***

ஏன், இந்தியா கொஞ்சம்கூட குறைக்கவில்லை? :(

ஆளவந்தான் said...

ரூ5. குறைத்ததாக கேள்விபட்டேன்.. அது என்னவோ யானை பசிக்கு சோளப்பொறி கதை தான்.

குறைக்காலம். தேர்தலுக்கு இன்னும் ஒரு நான்கு மாதங்கள் இருப்பதால், கண்டிப்பாக குறைப்பார்கள் என்பது என் ஆருடம்.

வருண் said...

***குடுகுடுப்பை said...
எந்திரன் படம் கைமாறின விசயம் தெரிஞ்ச நீங்க பெட் ரோல் விலை தெரியலன்னு சொல்றீங்க எங்கியோ இடிக்குது.

4 January, 2009 6:27 PM ***

வாங்க குடுகுடுப்பை! நம்ம ஊரிலும் குறைந்துவிட்டதா?

டெக்சாஸ் ல ஒரு 1 gallon என்ன விலை?

1 டாலரா? :) :)

வருண் said...

****குறைக்காலம். தேர்தலுக்கு இன்னும் ஒரு நான்கு மாதங்கள் இருப்பதால், கண்டிப்பாக குறைப்பார்கள் என்பது என் ஆருடம்.
4 January, 2009 6:42 PM ****

ஆள்: குறைந்த விலைக்கு வாங்கினால், விலை குறைத்துத்தானே விற்கனும்?

கொஞ்சமாவது (5 ரூ) கொறச்சு இருக்காங்களே. பரவாயில்லை :)

Brat said...

//இந்தியா, சீனா, மற்றும் ஐரோப்பாவிலும் பெட்ரோல் விலை குறைந்து உள்ளதா என்று தெரியவில்லை//

இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாததற்கு காரணம் பாராளுமன்றத்தேர்தல், இன்னும் இரண்டு மாதத்தில் கண்டிப்பாக குறை(க்கப்படும்)யும்

ஆளவந்தான் said...

//
கொஞ்சமாவது (5 ரூ) கொறச்சு இருக்காங்களே. பரவாயில்லை :)
//

அப்படியெல்லாம் இல்ல.. இது யானை பசிக்கு சோளப்பொறி கதை தான்

6 மாசத்துக்கு முன்னாடி 1பேரல் 147$
அதாவது 1*147*39( அப்போதைய டாலரின் மதிப்பு) = ரூ.5733

இப்போ அதே பேரல் 47.23$ அதாவது
1*47.23*48.5( இப்போதைய டாலரின் மதிப்பு) = 2290

அதாவது 60% குறைவு. இவுக குறைச்சு இருக்கிறது.. கண் துடைப்பு கூட இல்லீங்க.. கண் துடைப்பு மாதிரி.

கயல்விழி said...

ஓபாமா தேர்தலில் வெற்றியடைந்தவுடன் இப்படி பெட்ரோல் விலை 3 மடங்கு குறைந்தது ரொம்ப சந்தேகமாக இருக்கிறது. இதில் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

வருண் said...

***கயல்விழி said...
ஓபாமா தேர்தலில் வெற்றியடைந்தவுடன் இப்படி பெட்ரோல் விலை 3 மடங்கு குறைந்தது ரொம்ப சந்தேகமாக இருக்கிறது. இதில் ஏதாவது தொடர்பு இருக்குமோ?***

கொஞ்சம சம்மந்தம் இருக்கலாம். புஷ்ஷும் அவர் ஃபேமிலியும் ஆயில் பிஸினெஸில் இருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் சுய நலத்திற்காக ஏதாவது செய்து இருக்கலாம் .

வருண் said...

***Brat said...
//இந்தியா, சீனா, மற்றும் ஐரோப்பாவிலும் பெட்ரோல் விலை குறைந்து உள்ளதா என்று தெரியவில்லை//

இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாததற்கு காரணம் பாராளுமன்றத்தேர்தல், இன்னும் இரண்டு மாதத்தில் கண்டிப்பாக குறை(க்கப்படும்)யும்***

அப்படித்தான் இருக்க வேண்டும். பார்க்கலாம்.

உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி, ப்ராட்:)

வருண் said...

****அதாவது 60% குறைவு. இவுக குறைச்சு இருக்கிறது.. கண் துடைப்பு கூட இல்லீங்க.. கண் துடைப்பு மாதிரி.***

ஆள்:

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், யு எஸ் ல சம்மர்ல எப்போவுமே கியாஸ் (பெட் ரோல்) விலை டபுள் ஆகி விண்டரில் குறையும். அதுபோல் இந்தியாவில் நடப்பதில்லை.

இருந்தாலும், இந்த முறை ரொம்ப கண்கூடாக ஆயில் விலை உலகளவில் குறையும் போது, இந்தியாவில் மட்டும் அரசியல்வாதிகள் "ஏமாற்ற" நினைப்பது முட்டாள்தனம்.

ராஜ நடராஜன் said...

எனக்கு உங்க ஊர் காசுக்கு சுமார் 23 செண்ட்ஸ்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது.இது சந்தை மேலே போனாலும் கீழே இறங்கினாலும் இங்கே யாரையும் பாதிப்பதில்லை.நிரந்தர விலை இது.ஆனால் உலகச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கியமான ஒரு காரணம் இடைத்தரகர்களின் சித்து விளையாட்டுக்கள்.அமெரிக்க பொருளாதார சரிவினால் தரகு பேரம் பேசுவதில் இப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசிப்பதும் ஒரு காரணமென நினைக்கிறேன்.

வருண் said...

வாங்க நடராஜன்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

***ராஜ நடராஜன் said...
எனக்கு உங்க ஊர் காசுக்கு சுமார் 23 செண்ட்ஸ்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது.*****

அப்படியா?

**இது சந்தை மேலே போனாலும் கீழே இறங்கினாலும் இங்கே யாரையும் பாதிப்பதில்லை.நிரந்தர விலை இது.***

நிரந்தரவிலையா? அரசாங்கம் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க போல :) அவர்கள் சொந்த எண்ணையாக இருக்கும் இல்லையா?

***ஆனால் உலகச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கியமான ஒரு காரணம் இடைத்தரகர்களின் சித்து விளையாட்டுக்கள்.அமெரிக்க பொருளாதார சரிவினால் தரகு பேரம் பேசுவதில் இப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசிப்பதும் ஒரு காரணமென நினைக்கிறேன்.***

உண்மைதான்! இதில் அமெரிக்காவே நிறைய பாலிடிக்ஸ் செய்யும்னுதான் நினைக்கிறேன், நடராஜன்!

வருண் said...

Happy New Year,Brat! :)

அது சரி(18185106603874041862) said...

//
இந்த ஒரு பொருளாதார வீழ்ச்சி சூழலில் அமெரிக்காவில் இன்னொரு அதிசயம்! அது என்னவென்றால், பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருக்கும்போது,

* மிகக்குறைவாக இருக்கிறது பெட்ரோல் விலை (gasoline) $1.40 / gallon இன்று!!!

//

இதுல என்ன ஆச்சரியம்....எனக்கு ஒண்ணியும் பிரியல போங்க.....பொருளாதாரம் மோசமா போவுதுங்கிறதுனால தான் விலை குறையுது...Demand Vs Supply.... பெட்ரோல் விலைங்கிறது Forward Looking.... அமெரிக்கன் எகனாமி,வேர்ல்ட் எகனாமி ஷ்ரிங்க் ஆகும், டிமாண்ட் கொறையும்...Current Price is not sustainable......அதனால தான் பெட்ரோல் விலை குறையுது...அது தவிர ஸ்டாக் பைல் பில்டப் வேற...நெறைய ஃபண்ட் மேனேஜர்ஸ் கமாடிட்டில இருந்து T-Bills ல இன்வெஸ்ட் பண்றது இன்னொரு காரணம்...

பெட்ரோல் மட்டுமல்ல, Steel, Copper, Aluminium.....இந்த மாதிரி இன்டஸ்ட்ரியல் மெட்டீரியல்ஸும் 50% மேல விலை கொறைஞ்சுருக்கு...

அது சரி(18185106603874041862) said...

//
ஆளவந்தான் said...
//
* மிகக்குறைவாக இருக்கிறது பெட்ரோல் விலை (gasoline) $1.40 / gallon இன்று!!!
//
தண்ணீரை விட குறைவான விலை

4 January, 2009 6:23 PM
//

இல்லீங்களே...இங்க ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு பவுண்ட்...ஆனா ஒரு பைன்ட் பியர் மூன்றரை பவுண்ட்...ஒரு லிட்டர் விஸ்கி வாங்கினா இருவது பவுண்ட் ஆயிடுது....

ஒரு நிமிஷம், நீங்க எந்த தண்ணிய சொல்றீங்க :0))

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
ஓபாமா தேர்தலில் வெற்றியடைந்தவுடன் இப்படி பெட்ரோல் விலை 3 மடங்கு குறைந்தது ரொம்ப சந்தேகமாக இருக்கிறது. இதில் ஏதாவது தொடர்பு இருக்குமோ?
//

ஆஹா....நீங்க அ.தி.மு.க மெம்பரா கயல்??? அப்படியே அம்மா அறிக்கை விடுற மாதிரியே இருக்கே :0))

வருண் said...

***பெட்ரோல் மட்டுமல்ல, Steel, Copper, Aluminium.....இந்த மாதிரி இன்டஸ்ட்ரியல் மெட்டீரியல்ஸும் 50% மேல விலை கொறைஞ்சுருக்கு...***

இல்லைங்க இப்போ ஐஸ்லேண்ட் பேன்க் க்ரப்ட் ஆச்சு இல்லையா?

அப்படி ஆகும்போது அவங்க நாணயத்டின் மதிப்பு ஒண்ணுமில்லாமல் போச்சு.

அதுபோல்தான் பொருளாதாரம் வீழ்ழ்ச்சியடையும்போது உங்க கரண்ஸி வேல்யூ கொறயனும் இல்லையா?

சரி உங்க கணக்குப்படி பார்த்தாலும் ஆனால், தங்கம் மட்டும் விலை அதிகமாகியுள்ளது. அது ஏன்?

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
***பெட்ரோல் மட்டுமல்ல, Steel, Copper, Aluminium.....இந்த மாதிரி இன்டஸ்ட்ரியல் மெட்டீரியல்ஸும் 50% மேல விலை கொறைஞ்சுருக்கு...***

இல்லைங்க இப்போ ஐஸ்லேண்ட் பேன்க் க்ரப்ட் ஆச்சு இல்லையா?

அப்படி ஆகும்போது அவங்க நாணயத்டின் மதிப்பு ஒண்ணுமில்லாமல் போச்சு.

அதுபோல்தான் பொருளாதாரம் வீழ்ழ்ச்சியடையும்போது உங்க கரண்ஸி வேல்யூ கொறயனும் இல்லையா?
//

நல்ல கேள்விதானுங்க....ஆனா உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்குதுங்க...

டாலர் மதிப்பு மேல போறதுக்கு காரணம் ரிலேடிவ் சேஃப்டி...பெட்ரோல், கமாடிட்டீஸ், ஸ்டாக் மார்க்கெட்டோட கம்பேர் பண்ணும் போது US T-Bills...ரொம்ப சேஃப்...அதே மாதிரி மத்த கரன்ஸியெல்லாம் கம்பேர் பண்ணும் போது US Dollar safe....உங்க ஷேர் விலையெல்லாம் குறையுதுன்னா என்ன பண்ணுவீங்க?? கிடைக்கிற விலைக்கு வித்துட்டு, பேங்க்ல கேஷா போட்டு வைப்பீங்கள்ல?? அது மாதிரி தான் நிறைய ஃபண்ட் மேனேஜர்ஸ் T-Bills ல போட்டு வைக்கிறாங்க...இருக்கிற வேற கண்ட்ரி கரன்ஸிய டாலரா மாத்திக்கிட்டு இருக்காங்க....பெரிசா ரிடர்ன் வராது...ஆனா போட்ட கேப்பிடலாவது இருக்கும்....எல்லாம் டவுசர காப்பாத்திக்கிற முயற்சி தான்...

//
சரி உங்க கணக்குப்படி பார்த்தாலும் ஆனால், தங்கம் மட்டும் விலை அதிகமாகியுள்ளது. அது ஏன்?
//

காரணம் தங்கம் இன்டஸ்ட்ரியல் மெட்டல் இல்ல... அது எப்பவுமே இன்வெஸ்ட்மென்ட் மெட்டல் தான்....மீதி இருக்கற எந்த இன்வெஸ்ட்மென்டும் சேஃபா இல்ல....அதனால தங்கத்துல இன்வெஸ்ட் பண்றாங்க...திருப்பியும் Demand Vs Supply தான்...இப்படி எல்லாரும் தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண ட்ரை பண்றதுனால தங்கம் விலை ஏறிடுச்சி..

தங்கமணிங்க தான் தங்கம் வாங்குவாங்கன்னு இல்ல...டவுசர் கிழிஞ்சிட்டா நாட்டு தலைவருங்க கூட தங்கம் வாங்குவாங்க :)))

வருண் said...

***காரணம் தங்கம் இன்டஸ்ட்ரியல் மெட்டல் இல்ல... அது எப்பவுமே இன்வெஸ்ட்மென்ட் மெட்டல் தான்....மீதி இருக்கற எந்த இன்வெஸ்ட்மென்டும் சேஃபா இல்ல....அதனால தங்கத்துல இன்வெஸ்ட் பண்றாங்க...திருப்பியும் Demand Vs Supply தான்...இப்படி எல்லாரும் தங்கத்துல இன்வெஸ்ட் பண்ண ட்ரை பண்றதுனால தங்கம் விலை ஏறிடுச்சி..**

தங்கத்தில் இன்வெஸ்ட் பண்ணுவது புத்திசாலித்தனமானு தெரியலைங்க.

ஒரு தொகை க்கு தங்கம் வாங்கி அதன் மதிப்பை 10 சென்று பாருங்க!

அதே தொகைக்கு ஒரு ஃபிக்ஸெட் இண்டெரெஸ்ட் (ஸ்டாக்ல இல்லை) போட்டுப்பாருங்க! நிச்சயம் you will make more money by putting the money in a fixed interest rate!

But people are crazy about gold for some reason :)

The reason may be Gold is Universal currency. But if you are putting your money in some bank in 10KUS$, after 10years it may be 20K$, but the value of money may vary depending upon the dollar value.

வருண் said...

AL and athusari:

I missed out "year" ( I meant 10 years).

Anyway as long as you dont keep the money in iron box as cash, u r not losing much when u get decent interest.

Brat said...

Thanks Varun, wish you too a Happy and Healthy New Year :)