Monday, May 18, 2009

காதலுடன் 15

ஒரு 15 நிமிடம் கழித்து உள்ளே வந்தாள் சந்தியா. ரமேஷ் சோஃபாவிலே உட்கார்ந்து, டி வி யில் அமெரிக்கன் ஃபுட் பால் பார்த்துக்கொண்டு இருந்தான். உள்ளே நுழைந்த சந்தியா, நேராக கிச்சன் போனாள். 15 நிமிடத்தில் இருவருக்கும் காஃபி போட்டுக்கொண்டு வந்தாள். காஃபியை சோஃபாவுக்கு அருகில் இருந்த காஃபி டேபிலில் வைத்துவிட்டு, அவன் அருகில் அமர்ந்தாள். அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் சென்று.

"அந்தம்மா கார் ஸ்டார்ட் ஆச்சா?" என்றான் ரமேஷ்.

"ம்ம்"

'உனக்கு ஸ்போர்ட்ஸ் சேனல் பிடிக்காதுல்ல?. சேனல் மாத்தவா?"

"நான் உங்க மடியில் படுத்துக்கவா ரமேஷ்?"

"ஏண்டா? சரி படுத்துக்கோ"

அவன் சோஃபாவின் ஓரத்தில் நகர்ந்து அமர்ந்தான். சந்தியா, ரமேஷ் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள். அவளை குனிந்து பார்த்த ரமேஷ், எவ்வளவு அழகா இருக்காள்? என்று நினைத்தான். சந்தியாவிற்கு பெரிய கண்கள், அழகான பெரிய உதடுகள். அவள் மீதிருந்து ஏதோ மணம் வந்தது. குனிந்து அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான், ரமேஷ்.

"ரமேஷ்! I never have been kissed by anyone until today"

"Neither did I misbeahave like this with anyone before" என்று அவள் காதுமடல்களை வருடினான்.

"It feels so good lying down in your lap, Ramesh"

"நீ ரொம்ப அழகா இருக்க சந்தியா"

"உங்களுக்கு கவிதை எழுத்தெரியுமா, ரமேஷ்?'

"எனக்கு எதையுமே ரசிக்க மட்டும்தான் தெரியும். கவிதையா? சாண்ஸே இல்லை!"

"ரசிப்பதுடன், நான் மயங்கிறார்போல கிஸ் பண்ணவும் உங்களுக்கு தெரியுது, ரமேஷ்"

"I missed you a lot and it made me to "react" like this, I suppose"

"I was very busy in india and worried, stressed but still I thought about you. You dont have Kavya's #? YOu could have talked to her about me'

"எனக்கு காவியாவை அவ்வளவு தெரியாது. It is OK. You made it up now"

"உங்களுக்கு என்ன பயம்?"

"என்ன?!"

"என்னிடம் என்ன பயம்?"

"உனக்கு என்னை சரியா தெரியாது. I believe you need to know my -ve points very well"

"I know what I need to know for now. எதுவும் கிரிமினல் குற்றம் எதுவும் பண்ணியவர்போல தெரியலையே? That is good enough for me" அவள் சிரித்தாள்.

"May be I will make you upset once I come into your life. You cant put up with me?"

"We will see"

"இப்போ என்ன வேணும் உனக்கு?"

"என்ன வேணுமானாலும் என்னிடம் இருந்து எடுத்துக்கலாம்!"

"American football ரூல்ஸ்ல தெரியுமா, உனக்கு?"

"அமெரிக்கன் ஃபுட் பாலா? அதான் பார்த்துக்கொண்டு இருக்கீங்களா?'

"இது லைவ் இல்லை, சும்மா பழைய கேம் தான் போடுறாங்க. சொல்லித்தரவா?"

"என்ன?"

"ஃபுட் பால்"

"நம்ம ஊர் soccer மாதிரித்தானே? 11 ப்ளேயர் விளையாடுறாங்க!"

"இது ரொம்ப வேற மாதிரி"

"சொல்லுங்க"

"இப்போ ஒரு டீம், டிஃபெண்ஸ் ஆடுறவங்க, இந்த பால் இருக்குல்ல அதை 30 யார்ட் ல இருந்து "கிக் ஆஃப்" பண்ணுவாங்க"

"அப்படினா?'

"அந்தப்பக்கம் கிக் பண்ணி விடுவாங்க"

"அந்த அஃபெண்ஸ் ஆடுற ப்ளேயர்கள் அதை எடுத்துக்கொண்டு இந்தப்பக்கம் ஓடி வருவாங்க"

"Two different teams for offense and defense? So, 22 pLayers in each team?"

"That is correct"

"That does not sound like soccer then"

"Yes, this is different"

"சொல்லுங்க"

"offense team இந்த எண்ட் வரை கொண்டு வந்துட்டா (100 yards) "டச் டவுன்" னு சொல்லுவாங்க"

"அப்படினா?"

"6 பாயிண்ட், அவங்களுக்கு கிடைக்கும்"

"அப்புறம்?"

"அதோட, அப்புறம் 2 யார்ட்ல இருந்து இந்த கோல் போஸ்ட்க்கு இடையில் கிக் பண்ணி ஒரு கோல் போட்டுட்டா அதுக்கு ஒரு extra பாயிண்ட் கிடைக்கும். ஸோ 6 ப்ளஸ் 1 . மொத்தம் 7 பாயிண்ட் ஸ்கோர் பண்ணலாம்"

'அவ்வளவு தானா?'

"இன்னும் நெறையா இருக்கு!"

"சொல்லுங்க! கொஞ்சம் இருங்க"

"என்ன?"

"உங்களுக்காக இதெல்லாம் கேக்கிறேன் இல்லையா?"

"ஆமா?"

"ஒரு கிஸ் கொடுங்க!"

அவள் கன்னத்தில் இன்னொரு முத்தம் கொடுத்தான். அவள் செல் பேசி அலறியது. அவள் ஃபோனை எடுக்கவில்லை.

"சரி சொல்லுங்க"

-தொடரும்

No comments: