திரு கருணாநிதியின் மகனான திரு ஸ்டாலின் அவர்கள் துணைமுதல்வராக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்தப்பதவிக்குத் தகுதியும், திறமையும் இருக்கிறதா என்பதை தி மு கழகம் மூத்த தலைவர்கள்தான் ஆய்ந்து விவாதிக்க முடியும். இதிலிருந்து தி மு க சார்பில் அடுத்த முதல்வர் இவர்தான் என்று தெளிவாகத் தோன்றுகிறது.
மேலே காங்கிரஸில் நேரு குடும்பம் காலங்காலமாக ஆள்கிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என்று போய்க்கொண்டே இருக்கிறது. அதுபோதாதென்று அதேபோல் தமிழ்நாட்டில் குடியாட்சியில் இருந்து மன்னராட்சிக்கு நாம் மாறுவதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது.
மேலே நடப்பதற்கும் இங்கு தமிழ்நாட்டில் நடப்பதற்கும் ஒரே வித்தியாசம். அங்கே ஆரியர்கள்! இங்கே திராவிடர்கள்! வாழ்க மலரும் “மன்னராட்சி” என்று வாயளவில் வாழ்த்திவிட்டுப் போவோம்! வேற என்ன செய்ய முடியும்?
4 comments:
காசுமீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இதே கதைதான்...
ஓமர் அப்துல்லா - மகன்
பரூக் அப்துல்லா - அப்பா
சச்சின் பைலட் - மருமகன்
அன்புள்ள திரு. வருண்
மக்களாட்சியா , மன்னராட்சியா என்பது ஒரு உலகச் சிக்கல்.
http://kavise.blogspot.com/2009/05/23-2009-8.html
பத்திரிக்கைச் செய்தி ஒன்றையும், பதிவில் இணைத்துள்ளேன். வாரிசு அரசியலைக் காணுங்களேன்.
ஏதோ திமுக / இந்திய சிக்கல் போல் குறிப்பிடுவது சரியாகப் படவில்லை
இது குறித்தும் பதிவுள்ளது. இயன்றால் படியுங்கள்.
நட்புடன்
.கவி.
***பழமைபேசி said...
காசுமீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இதே கதைதான்...
ஓமர் அப்துல்லா - மகன்
பரூக் அப்துல்லா - அப்பா
சச்சின் பைலட் - மருமகன்***
வாங்க பழமைபேசி! :-)
நெறைய உதாரணங்கள் இருக்கு போல, போங்க!
உங்கள் வருகைக்கு நன்றி :)
***.கவி. said...
அன்புள்ள திரு. வருண்
மக்களாட்சியா , மன்னராட்சியா என்பது ஒரு உலகச் சிக்கல்.
http://kavise.blogspot.com/2009/05/23-2009-8.html
பத்திரிக்கைச் செய்தி ஒன்றையும், பதிவில் இணைத்துள்ளேன். வாரிசு அரசியலைக் காணுங்களேன்.
ஏதோ திமுக / இந்திய சிக்கல் போல் குறிப்பிடுவது சரியாகப் படவில்லை
இது குறித்தும் பதிவுள்ளது. இயன்றால் படியுங்கள்.
நட்புடன்
.கவி.***
நன்றி கவி. நான் உங்க தளத்திற்கு போனால் ஏதோ பிரச்சினை வருகிறது. எக்ஸ்ப்ளோரெர் அதாகவே க்ளோஸ் ஆகிவிடுகிறது :(
ஆனால் உங்கள் கருத்தை கட்டாயம் வாசித்து என் கருத்தை சொல்லுகிறேன் :)
Post a Comment