Sunday, May 10, 2009
கமலஹாஷனின் தசாவதாரம் ஹிந்தியில் படுதோல்வி!
கமலஹாசனின் தசாவதாரம் தமிழில் ஒரு ப்ளாக் பஸ்டர்! ஆனால் இந்தியில் வெளியான அதனுடைய “டப்” படு தோல்வி அடைந்துள்ளது.
கடைசியாக கமலஹாஷன் ஹிந்தியில் வெற்றியடைந்தது, சாச்சி 420 (அவ்வை ஷண்முகி ஹிந்தி வேர்ஷன்). அதன் பிறகு வந்த ஹே ராம், அஃபே (ஆளவந்தான்), மும்பை எக்ஸ்ப்ரெஸ், மற்றும் தசாவதாரம் எல்லாமே தோல்வியைத் தழுவியுள்ளன.
இந்த தசாவதாரம் படத்தை டப் பண்ணி வெளியிடாமலே இருந்து இருக்கலாம்! இந்தி மக்கள் ரசனை என்றுமே வேறுபட்டது.
சங்கர் முதல்வனை ஹிந்தியில் ரி-மேக் செய்து தோல்வியடைந்தார். நல்ல வேளை எந்திரனை ஹிந்தியில் எடுக்கவில்லை.
அதேபோல் தமிழில் வெற்றியடைந்த சிவாஜி யை ஹிந்தியில் டப் செய்துவிடாமலே விட்டுவிட்டார்கள். டப் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். விளைவுகள் நல்லா தெரிந்ததாலோ என்னவோ அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார்கள் போலும்!
Labels:
திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment