Wednesday, May 20, 2009

சுயநலம் ஒரு வியாதி!

"யார் அது காயத்ரி? இவ்வளவு நேரம் ஃபோன்ல பேசியது?

"மரகதம்தான்"

"என்னவாம் இப்போ?"

"ஈவனிங் வீட்டுக்கு வராங்களாம், லாவண்யாவோட. இன்னும் 45 நிமிடத்தில்!"

"எத்தனை தடவைதான் அவங்க சண்டையை கேட்பது? 108 தடவை இதே கதையைக் கேட்டு காது புளிச்சுப்போச்சு! போர் அடிக்குது காயத்ரி! ஏன் இப்படி வந்து நம்ம உயிரை எடுக்கிறாங்க?

"நான் என்ன பண்ணறது? நானா அவங்களை இப்போ இன்வைட் பண்ணினேன்?. அவங்க வீட்டுக்குப்போனா இதைவிட மோசம். அங்கே போனால் லாவண்யா எதையும் தொடவிட மாட்டாள். உங்க பொண்ணு சுகந்திக்கு மூட் அவுட் தான் ஆகும். பேசாமல் இங்கேயே வந்தால் பரவாயில்லை!'

"சுகந்திக்கு ஹோம் வொர்க்லாம் இருக்குமில்லையா? லாவண்யாவோட 4 மணி நேரம் இருந்தால்னா ஒண்ணும் பண்ண முடியாது. அப்புறம் 12 மணி வரை அவ ஹோம் வொர்க் பண்ணனும்?'

"என்னைய கொஞ்சம் ஃப்ரீயா விடுறீங்களா? நான் ஏதாவது குக் பண்ணனும். ஏதாவது ஸ்னாக்ஸ் ரெடி பண்ணனும்'

"ஏன் வீக் டேஸ்லயும் நம்ம உயிரை வாங்குறாங்க? பாரசைட் மாதிரி அசிங்கமா வாழ்றாங்க!"

"வரவேண்டாம்னு நீங்க சொல்றீங்கனு சொல்லிறவா? இல்லை நீங்களே கால் பண்ணி சொல்றீங்களா?"

"சொல்லிடேன். இப்போ என்ன ஆகப்போது? 1/2 பைசா பிரையோசனம் இல்லாத ஒரு ஃப்ரெண்ஷிப்!"

"இது தெரிந்ததுதானே? 5 வருஷமா இப்படித்தானே ஓட்டிக்கிட்டு இருக்கோம்? நாடுவிட்டு நாடு வந்தால் இப்படித்தான் எல்லாரையும் கட்டி அழனும்"

"சரி, என்ன ஆச்சு அவங்க பிரச்சினை? இப்போ டைவோர்ஸ் ஆயிடுச்சா கண்ணனோட?"

"என்னவோ செப்பரேட்டெட்டாம். அவர்தான் வேற அப்பார்ட்மெண்ட்ல இருக்கார் இல்ல? இன்னும் டைவோர்ஸ் ஆகல. டைவோர்ஸ் ஆனா கண்ணனுக்கு பெனிஃபிட்/ ஹெல்த் இண்சூரண்ச்லாம் கவர் பண்ண முடியாதாம். அதனால் இப்படித்தான் வாழப்போறாங்களாம். வீட்ட விட்டு அவர் ஒழிஞ்சுபோனா சரினு இருக்காங்க மரகதம்"

"அவர் இவங்க உயிரை வாங்குறதுல இருந்து தப்பிச்சு, இவங்க நம்ம உயிரை வாங்கிறாங்க!எந்தவிதமான நாகரீகம், நியாயம், எதுவுமே தெரியலை. யாரைடா போய் கொல்லலாம்னு அலையிறாங்க. அறிவே இருக்காதா என்ன? இல்லை இவங்க மூளையெல்லாம் வேற மாதிரி வேலை செய்யுமா?"

"எனக்கு உண்மையிலேயே தெரியலைங்க. நீங்க செத்தாக்கூட, எனக்கு உதவி செய்வதுபோல, இதைவச்சு அவங்க என்ன ஆதாயம் அடையலாம்னு பார்ப்பாங்கனு தோனுது!'

"தோன்றதென்ன? அதான் உண்மை. அய்யோ லாவண்யா உயிரை வாங்குவாப்பா! என்னால ஒரு நிமிஷம்கூட பேசமுடியாது அவளோட!"

"17 வயசாயிருச்சு இன்னும் ஒரு டூ-இயர் ஓல்ட் மாதிரித்தான் நடந்துக்கிறா"

"நீ வேற டூ-இயர் ஒல்ட்லாம் இவளைவிட பெரியமனதுடன் நடந்துக்கும்"

"ஒரு ஃப்ரெண்டுகூட கிடையாது அவளுக்கு!உங்க பொண்ணு எத்தனை ஃப்ரெண்ஸ் வச்சிருக்கா?"

"பெரியவர்கள் நம்மளே அவளை டாலெரேட் பண்ண முடியலை. க்ளாஸ்மேட்லாம் எப்படி டாலெரேட் பண்ணமுடியும்? அதுவும் அமெரிக்கன்ஸ்லாம் நீ கரெக்டா இல்லைனா தண்ணி தெளிச்சு விட்டுருவாங்க'

"எனக்கு உண்மையிலேயே புரியலை. அப்படி என்ன பெரிய குறை இருக்கு அவளிடம்? லாவண்யா ஆள் பார்க்க எவ்வளவு நிறமா? எவ்வளவு உயரமா? எத்தனை அழகா இருக்கா?"

"அழகா இருந்து என்ன செய்ய? நியாயம்னா என்னனே தெரியலை! என்ன பேசினாலும் சுயநலம் தலைவிரிச்சு ஆடுது. அமெரிக்கர்களிடமெல்லாம் இது சுத்தமா ஒத்து வராது. நம்ம ஊரில் வேணா பாவம்னு ஒரு சில ஏப்பசாப்பைக அனுசரிச்சு போவாங்க!"

"இது ஒரு மாதிரி வியாதியா என்ன?"

"எது?"

"இப்படி சுயநலமா இருக்கிறது?'

"அப்படித்தான் தோனுது. இதுவும் ஒரு மாதிரியான மனோவியாதிதான். எக்ஸ்ட்ரீம் செல்ஃபிஸ்னெஸ்"

"அவங்க அப்பா அம்மாவால இதை ஏன் சரி செய்ய முடியலை? அதுவும் அவ ஒரு குழந்தையா தனியா பொறந்தவ கிடையாது. அவளுக்கு ப்ரவீன் ஒரு அண்ணா இருக்கான்ல"

"அப்பா, அம்மாவா? அவங்களுக்கும் நியாயம்னா என்னனே தெரியலை. அவங்களும் படு சுயநலம். தனக்குனுதான் யோசிக்கத்தெரியுது. நமக்குனு இல்லை. அவங்க எப்படி சொல்லிக் கொடுப்பாங்க பாவம்! எப்படியோ படிச்சு வந்துவிட்டார்கள்"

"நீங்க எல்லாம் நிறைய விசயத்தில் மோசம்தான். ஆனா, இவங்க மாதிரி சுயநலம் இல்லை உங்களிடம்"

"நான் என்ன மோசம், காயத்ரி?'

"You are sick! You know what I mean?"

"That is not sickness"

"yeah?"

"I am honest with you. I could have lied about all those things, then I cant become intimate with you, you see?'

"நல்லா வக்கனையா பேசுங்க. வரவர உங்களோட வாழவே பயம்மா இருக்கு. அருவருப்பா இருக்கு தெரியுமா?'

"ஆரம்பிச்சுட்டயா? உண்மையிலேயே நம்மதான் டைவோர்ஸ் பண்ணனும். நமக்குள்ள பிரச்சினையெல்லாம் அவங்களுக்குள் இல்லை"

"அதெப்படி உங்களுக்குத் தெரியும்?'

"எல்லாம் ஒரு யூகம்தான். இதை எல்லாம் நம்ம போய் சொல்லி அறுத்து, அழுதுக்கிட்டா இருக்கோம்? யாருக்குத்தான் உலகத்தில் பிரச்சினை இல்லை?"

ஒரு 1/2 மணி நேரத்தில் காலிங் பெல் அடித்தது!

"வாங்க மரகதம்! வா லாவண்யா!"

“ஹலோ சுந்தர்!”

"ஹலோ அங்கிள்! ஹவ் ஆர் யு?" என்றாள் லாவண்யா.

"நான் நல்லா இருக்கேன், லாவண்யா. How is it going?"

"You know uncle, my classmate is being so mean to me?'

"Really? What is the problem, Lavanya?"

"She is saying I am not sharing anything with her. She is always being mean to me"

"Why dont you share?'

"That is my special pen. How can I let her borrow that, uncle?'

"OK. Tell her that it is special"

"All my classmates are mean to me, uncle!"

"O K, Lavanya, I really have to work on in a project. Why dont you go to Suganthi's room and help her do her homework?"

அவள் சுகந்தி ரூமில் நுழைந்தவுடன், தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான், சுந்தர்.

No comments: