Wednesday, May 13, 2009
காங்கிரஸ், ஜெ யுடன் கூட்டமைத்து ஆட்சி அமைத்தால் ?
இப்போதிருக்கும் நிலையை பார்த்தால், அ தி மு க கூட்டணிக்கு குறைந்தது 20 + எம் பி கள் கிடைக்கும் என்றே தோனுது. மேலும் காங்கிரஸும் படுதோல்வியடையாமல் ஓரளவுக்கு வெற்றிடையும் போல் இருக்கிறது.
காங்கிரஸ், அ தி மு க வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது! ராமதாஸ், வை கோ, ஜெயலலிதா, மற்றும் காங்கிரஸ் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்தால், நம் ஈழத்தமிழ் மக்கள் ஆதரவாளர்கள் நிலைப்பாடு என்ன?
முதல்வர் கருணாநிதியை பழி வாங்கியாச்சு! சரி, அதற்கப்புறம் என்ன?
அப்படி வருகிற சூழலில்,
* ஜெயலலிதா, சோனியாவை கண்வின்ஸ் பண்ணி, இந்திய அமைதிப்படையை அனுப்பி தனி ஈழம் அமைத்துக்கொடுப்பாரா ?
* இல்லை, சோனியாவை புறக்கணித்து இதை ஜெ சாதிப்பாரா ?
* இல்லைனா ஜெ யே பிரதமராகி எல்லாவற்றையும் சாதிப்பாரா?
* இன்னொரு விஷயம்! அது என்ன பரிதாபம்னா சிதம்பரம் கட்டாயம் வெற்றி பெறுவார் போல இருக்கிறது!
Labels:
அரசியல்,
சமூகம்,
தேர்தல் 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment