Tuesday, February 9, 2010

அஜீத்துக்கு ரஜினிமட்டும் கைதட்டி பாராட்டு!!

அஜீத்தின் சமீபத்திய மேடைப்பேச்சுக்கு காரணம்? சிகரெட் விசயத்தை பெரிதுபடுத்திய அன்புமணி மேல் உள்ள எரிச்சலா? அப்படித்தான் இருக்கனும். அவரவர் படத்திற்கு பிரச்சினை வரும்போது அவரவர் உணர்ச்சிவசப்படுறாங்க!

அதே சமயத்தில் அதற்கு ரஜினியின் கைதட்டுக்கு காரணம்? சிகரெட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் ரஜினியும்கூட என்று சொல்லலாமா? அதெல்லாம் இல்லையா? அஜீத்தின் பேச்சு ஓரளவுக்கு அர்த்தமுள்ள கோபம்தான். அவர் சிகரெட் குடிப்பேன்னு சொன்னதை நான் சொல்லவில்லை! நடிகன், ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்கள் என்பதே அவர்கள் சிகரெட் குடிக்ககூடாது என்று சொல்வதற்கு காரணம். அதே சமயத்தில் நடிகன்னா நடிப்புத் தொழிலைப் பார்த்துட்டு போயிக்கிட்டே இருக்கனும்னு சிலர் விமர்சனம் பண்றாங்க. அதே நடிகன் தமிழர் பிரச்சினையில் வந்து கலந்துக்கலைனா நடக்கிறதே வேற என்பதுபோல் ஒரு சில சூழ்நிலைகளும் உருவாக்கப்படுகிறது.

நடிகன், ஒரு ரோல் மாடல் என்றால், மக்கள் நன்மைக்காக பல பிரச்சினைகளிலும் போராட்டாங்களிலும் கலந்துக்கனும்னு நினைத்தால், அவர்கள் அரசியல் பிரவேசம் தவிர்க்க முடியாத ஒண்ணு என்பதுபோலதான் சொல்லியுள்ளார் அஜீத். அதில் எதுவும் தப்பில்லைனுதான் தோனுது.

நடிகர்களை இவர்கள் இஷ்டபடி இப்படித்தான் வாழனும்னு சொல்ல எவருக்கும் அருகதை இல்லை என்பதே அஜீத்துடைய பேச்சு. என்னைக்கேட்டால் அஜீத்துக்கு ரஜினி மட்டுமல்ல, எல்லா நடிகர்களும் கைதட்டி இருக்கனும். ஆனால் ஏன் மற்ற நடிகர்கள் ஒருவரும் கைதட்டலைனு தெரியலை! நம்ம கைதட்டி அஜீத் பெரியாளாகிவிடுவார்னு அரசியலா? இல்லைனா வேற எதுவும் புரியாத அரசியல்லானு தெரியலை!

8 comments:

குடுகுடுப்பை said...

ரஜினியைத்தவிர அனைவரும் கைதட்டி இருக்கலாம். அரசியல் பூச்சாண்டி காட்டாமல் இருப்பவர்கள் கைதட்டலாம். அஜீத்தின் பேச்சுக்கு நானும் கைதட்டிக்கிறேன்.

வருண் said...

*** குடுகுடுப்பை said...

ரஜினியைத்தவிர அனைவரும் கைதட்டி இருக்கலாம். அரசியல் பூச்சாண்டி காட்டாமல் இருப்பவர்கள் கைதட்டலாம். அஜீத்தின் பேச்சுக்கு நானும் கைதட்டிக்கிறேன்.

9 February 2010 9:59 AM***

கைதட்டாத நடிகர்கள் எல்லாம் அரசியல் பூச்சாண்டி இல்லையா?! இல்லை கோழைகளா? இல்லை தான் நடிகன் அதனால தனக்கு தகுதி இல்லைனு நினைக்கிறவங்களா???

தங்கள் ஆழமான கருத்துக்கு நன்றிங்க, குடுகுடுப்பை :)

குடுகுடுப்பை said...

சிறு தவறு அரசியல் பூச்சாண்டி காட்டாதவர்கள் அனைவரும் கை தட்டி இருக்கலாம்.


மற்றபடி இங்கே வந்து ஆழமான கருத்து சொன்னது தவறுதான்.

வருண் said...

என்னை கேட்டாலும், இல்லை, நீங்க கேக்கலைனாலும் சொல்றேன், அஜீத், ரஜினி, குடுகுடுப்பை, வருண் யாருமேலேயும் தப்பில்லைங்க!

இதெல்லாம் just freedom of expression of what they think னு நெனைக்கிறேன்! :)))

சுடர்வண்ணன் said...

இவங்கள யாரும் அரசியலுக்கு வர வேண்டாம்னு சொல்லல... மக்களுக்காக மக்கள் பிரச்சினைகளில் உண்மையாக போராடினால், இவர்களாகவே எல்லா போரட்டத்துக்கும் முதல் ஆளா வருவாங்க ....இவர்கள் எல்லாம் நாற்காலி படிக்க இல்ல அரசியலுக்கு வரனுக(மற்ற அரசியல் வாதிகள் மக்களுக்க உழைகிறங்கனு சொல்லவே இல்ல !!!!!)...வெற்றிலை பாக்கு வெச்சி அழைக்கணும் இவங்கள...அப்படியே வந்தாலும் கருப்பு கண்ணாடி போட்டு வந்து மேடைல கை அட்டிடு போயடுவனுங்க ...நம்ம ஆளும் கிழே இருந்து கைதட்டிட்டு போய்டுவன்...

வருண் said...

***சுடர்வண்ணன் said...

இவங்கள யாரும் அரசியலுக்கு வர வேண்டாம்னு சொல்லல... மக்களுக்காக மக்கள் பிரச்சினைகளில் உண்மையாக போராடினால், இவர்களாகவே எல்லா போரட்டத்துக்கும் முதல் ஆளா வருவாங்க ....இவர்கள் எல்லாம் நாற்காலி படிக்க இல்ல அரசியலுக்கு வரனுக(மற்ற அரசியல் வாதிகள் மக்களுக்க உழைகிறங்கனு சொல்லவே இல்ல !!!!!)...வெற்றிலை பாக்கு வெச்சி அழைக்கணும் இவங்கள...அப்படியே வந்தாலும் கருப்பு கண்ணாடி போட்டு வந்து மேடைல கை அட்டிடு போயடுவனுங்க ...நம்ம ஆளும் கிழே இருந்து கைதட்டிட்டு போய்டுவன்...***

தங்கள் கருத்துக்கு நன்றி, சுடர்வண்ணன்!

சுரேஷ்குமார் said...

அஜித்தின் பேச்சில் உண்மைஇருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் எதை எங்கே பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அங்கே நடந்தது கலைஞருகாண பாராட்டுவிழா. அதில் தேவை இல்லாமல் இவருடைய சொந்த கருத்தை சொல்லி அங்கே ஒரு இருக்கத்தை உருவாக்கி விழாவை தடம் புரள வைத்த பெருமை அஜீத்தை சேரும்.

வருண் said...

***சுரேஷ்குமார் said...
அஜித்தின் பேச்சில் உண்மைஇருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் எதை எங்கே பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அங்கே நடந்தது கலைஞருகாண பாராட்டுவிழா. அதில் தேவை இல்லாமல் இவருடைய சொந்த கருத்தை சொல்லி அங்கே ஒரு இருக்கத்தை உருவாக்கி விழாவை தடம் புரள வைத்த பெருமை அஜீத்தை சேரும்.****

பகிர்தலுக்கு நன்றி, சுரேஷ்குமார்! :)