Monday, December 27, 2010

எனக்குப்பிடித்த 10 ப்ளஸ் ரஜினி படங்கள்-பகுதி1

தோழர் பாலா இந்த தொடரை எழுதச்சொல்லிக்கேட்டு ரொம்ப நாளாச்சு. எழுதலாம் எழுதலாம்னு காலம் கடந்து போயிடுச்சு. நான் வள வளனு எழுதாமல் எந்த ரஜினி படமெல்லாம் பிடிக்கும்னு சொல்லிடலாம்னு எழுத ஆரம்பிக்கிறேன்.

பொதுவாக சினிமா பற்றி கரைத்துக்குடித்த, உலக சினிமா பத்தி பத்தி பேசும் மேதாவிகளுக்குப் பிடிக்காத படங்கள் எல்லாம் எனக்குப்பிடிக்கும். தரமே இல்லாத இயக்குனர்கள்னு இவர்கள் சொல்லும் இயக்குனர்கள் வாசு, சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர் போன்றவர்கள் இயக்கிய ரஜினி படங்கள் என்னை நெறையவே கவர்ந்ததுண்டு. பிடிக்கிறதை பிடிக்கும்னு சொல்வது என்னுடைய இஷ்டம், என் உரிமை, யார் என்னை கேக்கமுடியும்?

இதெல்லாம் ஒரு படமா? இதுல பிடிக்க என்ன இருக்கு? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்கூறி அதை என்னால் நியாப்படுத்த முடியாது. எனக்கு நீல நிறம்ம் பிடிக்கும்னா, ஏன் னு கேட்டால் என்ன சொல்றது?

* 10. எந்திரன்

150 கோடி செலவழிச்சு எடுத்த பிரமாண்டமான படம். பயங்கரமான ஹைப்! இருந்தும் இந்தப்படம் என்னை ஏமாற்றவில்லை, அதுவே இதன் பிரதான வெற்றி.

பொதுவா பெரிய பட்ஜெட்னு வரும்போது எளிதாக சொதப்பிவிடுவதுதான் வழக்கம். ஆனா நம்ம ஷங்கர் இன்னொரு முறை வெற்றிவாகை சூடிட்டார்! என்னைக்கேடால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பதிலா ஏ ஆர் ரகுமானுக்கு எந்திரன் இசைக்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கனும் .

அப்புறம் நம்ம ஐஸ்..யப்பா! நடிகைகளை ரசிப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காத மேட்டர். நெஜம்மாதாங்க. ஆனா 37 வயசான நம்ம ஐஸை ரசிக்காம இருக்க முடியலை. நம்ம ஐஸை ராவணனில் பார்க்கும்போது ஏதோ வடக்கத்திக்காரி மாதிரி தெரிஞ்சது, ஓவெர் ஆக்ஷன்..சுத்தமாப் பிடிக்கலை. ஆனா எந்திரனில் நம்ம ரஜினியோட பார்க்கும்போது, நம்ம ஊர் மாமி மாதிரி ஐஸும் அழகாயிடுச்சு. ஐசுக்கு குரல் கொடுத்தவங்களுக்குத்தான் க்ரிடிட்ல பாதியைக் கொடுக்கனும்.

ரஜினினு எடுத்துக்கிட்டா எந்திரன்ல சிட்டி 1 தான் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர், அடுத்து நம்ம சனா, பாடல்கள் கேட்கவும் பார்க்கவும், கொஞ்சம் தத்துவம்.

சிட்டி-2 மாதிரி ரஜினியை ஏற்கனவே பார்த்தாச்சு 3 முகம், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ஜான் கேரக்டர்ஸ். ஆனால் சிட்டி-1 கேரக்டர் ஒரு புதிய மனிதன் பூமிக்கு வந்த கதை!

அப்புறம் எந்திரனில் கடைசியில் வரும் க்ராஃபிக்ஸ்லாம் நமக்கு பிடிக்கலைங்க.

* 9. சிவாஜி

ஷங்கர் நிச்சயமா ஒரு ரஜினி ரசிகரா இருந்து இருக்கனும் நான் நம்புறேன். இல்லைனா சிவாஜில உருவாக்கிய ஒரு ரஜினியை அவர் உருவாக்கியிருக்க முடியாது. சிவாஜில பிடிச்சதுனு சொல்லப்போனால் நம்ம மொட்டைபாஸு ரஜினிதான் பெஸ்ட்டு! அப்புறம் விவேக் ரஜினி காமெடி, ஸ்ரேயா ரஜினி ஜோடிப்பொருத்தம், பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும். ரஜினி பொதுவாக டூயட்ல ரொம்ப ஷையாத்தான், ஜெண்டிலாத்தான் நடிப்பார், நம்ம ஷங்கர் என்ன மாயம் பண்ணீனாருனு தெரியலை ரஜினி காதல் சக்கரவர்த்தி மாதிரி கிளப்பிட்டாரு, டூயட் மற்றும் காதல் சீன்களில். பிடிக்காததுனு பார்த்தா அந்த கனல் கண்ணனோட ஒரு ஃபைட், அப்புறம் அந்த கார்ச்சேசிங். சிவாஜி, காலத்தால் அழியாத ஒரு காவியம்தான். படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச ச்க்கண்ட் பெஸ்ட்னு கேட்டால், அந்த முதலிரவு சீன்ல ரஜினி, சிவாஜியா, எம் ஜியாரா, கமலா கடைசியில் சூப்பர் ஸ்டாரா கிளப்புவது.


* 8. படையப்பா

கே எஸ் ரவிக்குமார் ரஜினியோட வேலை செய்யும்போது மட்டும், எப்படி இவ்ளோ திறமையானவரா மாறிவிடுகிறார்னு தெரியலை. படையப்பால பெரிய ப்ளஸ் என்னனா ஒரு மாதிரியான ஒரிஜினல் ஸ்டோரி.

படத்தில் ரொம்ப பிடிச்சது, கிக்கு ஏறுதே பாடல் மற்றும் அதில் உள்ள தத்துவங்கள். அப்புறம் சிவாஜி- ரஜினி காட்சிகள்.

பிடிக்காதது என்னனா, சுத்தி சுத்தி வந்தீக பாட்டு படமாக்கியவிதம் பிடிக்கலை. படையப்பா நிச்சயம ஒரு சிறப்பான படம்தான்.

young ரஜினியைவிட வயதான தாடிவச்ச ரஜினிதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ரஜினி :)

* 7. பாஷா

பாஷால எனக்கு முதல் பாதிதான் (மாணிக்கம்) சூப்பரா இருந்துச்சு. அப்புறம் மறுபடியும் ஜெயில்ல இருந்து ரகுவரன் வந்த பிறகு மறுபடியும் நல்லாயிருந்துச்சு. பாஷா ரஜினி சுமாராத்தான் பிடிச்சது எனக்கு.

ரொம்பப் பிடிச்ச சீன்னா, அந்த காலேஜ் பிரின்ஸிபல்ட்ட பேசி சீட் வாங்கிற சீன் (ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி), அப்புறம் ஆனந்த் ராஜ்ட்ட அடி வாங்குறது, திருப்பிக் கொடுக்கிறது (உள்ளே போ! ஒரு ஹீரோட்ட என்ன வில்லத்தனம்!), ரெண்டாம் பாதியில், நக்மாவை மணவரையில் பாஷாவப் போயி, அழைத்து வருவது, அதைத்தொடர்ந்து தங்கமகன் பாடல் ஆரம்பம்.

எஸ் பி எம் ரஜினியை வைத்து பலபடங்களில் சாதித்ததை சுரேஷ் கிருஷ்ணா சில படங்களில் சாதித்துவிட்டார்.

பிடிக்காதது.. பாஷால பிடிக்காத சீன்னு எதுவும் பெருசா இல்லை.

மீதி அடுத்த பதிவில்.. இதென்ன வள வள னு போகும்போல இருக்கு :(

8 comments:

குடுகுடுப்பை said...

இன்னிக்கும் என் கணிப்பு தேறிடும்னு தோணுது, ஆனால் இது சினிமா அப்படிங்கிறதுனால இங்கே வராது. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

தர்ஷன் said...

எல்லாமே சூப்பர் வருண்

வருண் said...

***குடுகுடுப்பை said...

இன்னிக்கும் என் கணிப்பு தேறிடும்னு தோணுது, ஆனால் இது சினிமா அப்படிங்கிறதுனால இங்கே வராது. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
27 December 2010 10:49 AM ***

நான் எதுவுமே சொல்லலங்க! உங்க வருகைக்கு நன்றி :)

வருண் said...

***தர்ஷன் said...

எல்லாமே சூப்பர் வருண்

27 December 2010 11:13 AM***

நன்றி, தர்ஷன் :)

பழமைபேசி said...

கு.கு ஒப்புதல் வழங்கியதை முன்னிட்டு, மாபெரும் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யுமாறு, கு.ஜ.மு.க அமைப்பாளர்களை வேண்டுகிறேன்!

வருண் said...

***பழமைபேசி said...

கு.கு ஒப்புதல் வழங்கியதை முன்னிட்டு, மாபெரும் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யுமாறு, கு.ஜ.மு.க அமைப்பாளர்களை வேண்டுகிறேன்!

27 December 2010 11:54 AM***

என்னவோ போங்க மணியண்ணா! :)

ராமலக்ஷ்மி said...

எல்லாம் பார்த்தது. படையப்பாவே பிடித்தது.

இந்தப் பதிவிலேயே சொல்லிக் கொள்கிறேன்:)!

உங்களுக்கும் கயல்விழிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

எல்லாம் பார்த்தது. படையப்பாவே பிடித்தது.

இந்தப் பதிவிலேயே சொல்லிக் கொள்கிறேன்:)!

உங்களுக்கும் கயல்விழிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!!**

நன்றிங்க, ராமலக்ஷ்மி :)

31 December 2010 6:38 AM