Thursday, December 16, 2010

நந்தலாலா முழுநீள விமர்சனம்-கின்னஸ்க்கு பரிந்துரை!

ஒரு படத்துக்கு விமர்சனம் எப்படி எழுதனும் என்பதற்கெல்லாம் நான் பெரிய "அத்தாரிட்டி" எல்லாம் கிடையாது. ஆனால் குறைந்த வரிகளில் அழகாக ஒரு படத்தை விமர்சிப்பவர்களே நல்ல விமர்சகர்கள்னு நான் நினைக்கிறேன். திரு சாரு நிவேதிதாவின் எழுத்தில் என்னைக்குமே ஒரு அழகு, நயம் உண்டு. சாரு, மிஷ்கினின் நந்தலாலா திரைப்படம் ஜப்பானியப் படத்தழுவலாக இருப்பதை பெரிது படுத்தாமல் , அந்தப் படத்திற்கு விமர்சனம் வரிந்துகட்டிக்கொண்டு எழுதி புகழோ புகழுனு புகழ்ந்து தள்ளியிருக்கார், மனுஷன்.

ஒரு படத்தை நல்லா விமர்சிக்கனும்னு முடிவு செஞ்சிட்டா நிச்சயம் மேலே தூக்கிவச்சு புகழலாம். சாரு மனதாற தன் இதயத்தில் இருந்து மிஷ்கின் ஒரு சிறந்த கலைஞன், இளையராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார், படம் சிறப்பான ஒண்ணுனு பாராட்டுவது அவருடைய பெரியமனுஷத்தனம்னுதான் சொல்லனும். இந்தக்காலத்தில் திட்டுறது எளிது, புகழ்றதுதான் கஷ்டம். ஆனால் இவ்வளவு அனுபவசாலியான விமர்சகர், இதை ஒரு 50 வரிகளில் சொல்ல முடியாதா? புகழ்ந்து தள்ளனும் என்பதற்காக ஒரு சிறுகதையைவிட நீளமாகவாக விமர்சனம் எழுதுவாங்க?

பொதுவாக தமிழன் மனநிலை என்னனா எதையுமே வளவளனு எழுதி எரிச்சல் தருமளவுக்கு அதிகமாக புகழ்ந்தால் பிடிக்காது. அந்த வகையில் சாருவின் இந்த முழ்நீள நந்தலாலா விமர்சனம் ஒரு நெகட்டிவ் விமர்சனம்தான். நந்தலாலாவையும், மிஷ்கினையும், இளையராஜாவையும் புகழ்ந்தே கவிழ்த்திவிட்டார் நம்ம சாரு!

எனக்குத்தெரிய உயிர்மையில் சாரு நிவேதிதா நந்தலாலாவிற்கு எழுதிய விமர்சனம்தான் உலகத்திலேயே அதிக நீளமான விமர்சனம். நம்ம அண்ணன் உண்மைத்தமிழனை சந்தேகமே இல்லாமல் பீட் பண்ணி விட்டார் சாரு. ஒண்ணு செய்யலாம் உலகத்திலேயே அதிக நீளமான விமர்சனம் இதுதான் என்று இதை கின்னஸ்க்கு பரிந்துரை செய்யலாம்! யாராவது இதை செய்யுங்கப்பூ!

என் கூற்று தவறு, இதைவிட நீளமான விமர்சனம் இருக்குனு சொன்னால் , என் முகத்தில் அறைவதுபோல அதற்கான தொடுப்பு பின்னூட்டத்தில் கொடுங்கப்பூ! நன்றி, வணக்கம்.

9 comments:

Philosophy Prabhakaran said...

Vadai...

Philosophy Prabhakaran said...

உண்மைத்தமிழனின் நீளத்தை மிஞ்சியிருப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை :)

வருண் said...

வாங்க, பிரபாகர்!:)

இதைவிட நீளமான விமர்சனம் எதுவும் இருக்காங்க? :)

வருண் said...

***philosophy prabhakaran said...

உண்மைத்தமிழனின் நீளத்தை மிஞ்சியிருப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை :)
16 December 2010 3:02 PM***

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க? நான் அளந்து பார்த்தேனே! :)

pichaikaaran said...

உ. த வை யாரும் மிஞ்ச முடியாது

subra said...

உன்னுடைய இந்த பதிவு படித்ததனால்
எனக்கு சில நிமிடங்கள் நட்டம் ,ஏன்
இவ்வளவு வயிட்றுஎரிச்சல் .

வருண் said...

***பார்வையாளன் said...

உ. த வை யாரும் மிஞ்ச முடியாது
16 December 2010 4:28 PM ***

எல்லாரும் சாருவின் நந்தலாலாvai விட்டுட்டு உ த அண்ணன் விமர்சனத்தை விமர்சிக்கிறீங்க! :(

வருண் said...

***Blogger subra said...

உன்னுடைய இந்த பதிவு படித்ததனால்
எனக்கு சில நிமிடங்கள் நட்டம்***

சரி நட்டத்தை ஈடு செய்துவிடலாம்னு உங்க பதிவு எதையாவது மேய்ந்துட்டு வரலாம்னு பார்த்தால் உங்க ப்ரஃபைல் இல்லைனு வருது. :( இப்படி என்னை கடன்காரனா ஆக்கீட்டீங்களே!

** ,ஏன்
இவ்வளவு வயிட்றுஎரிச்சல் .

16 December 2010 4:56 PM***

இதை இப்படியும் சொல்லலாமா!! :)

வருண் said...

வாங்க, இரவு வானம் :)