நீங்க இணைய தளத்துல போயி உங்க கருத்தை "உண்மையா", ஆமா "ஆனஸ்ட்டா" பின்னூட்டத்திலே சொல்றீகளா? என்ன நீங்களும் குறையில்லாத மனிதர் இல்லையா? யாருங்க இந்த ஒலகத்துல குறையில்லாத வெங்காயம்? அதாவது நீங்க ஒருவர் பதிவில் உள்ள குறைகளை, தெரிந்தவர், தெரியாதவர், பெரியவர், சிறியவர் என்றெல்லாம் பார்க்காமல், கருத்து வேற்றுமையால் எதிர் கருத்தை அங்க போயி பின்னூட்டத்துல சொல்றீங்க! அவ்வளவுதானா? அதைத்தான் சொல்றேன். அந்தப் பதிவரின் பின்புலத்தைப் பொறுத்து நீங்க உங்களுக்கு, ஒரு அல்லது பல எதிரிகளை உருவாக்குறீங்க.
நீங்க தனி நபரா? நீங்க ஏங்க "ஆனஸ்ட்டா" ஒருத்தன் தப்பை, குறையை எல்லாம் உலகறியப்போயி பெரிய யோக்கியசிகாமணி மாதிரி சொல்லிக்கிட்டு? பேசாமல், த ம #7 னு ஓட்டைப்போட்டு விட்டு நல்ல பதிவுனு சொல்லிடுங்க. என்ன இப்போ? ஒரு சில வரியை எடுத்துக்காட்டி "ரசித்தேன்"னு உண்மையோ பொய்யோ சொல்லுங்க! உங்க நண்பர்கள் பெருகுவாங்க! உங்க மொக்கைப்பதிவுக்கும் 4 அல்லது அஞ்சு மதிப்பெண்கள் கிடைக்கும். அதெல்லாம் முடியாதா?
இந்த உலகமே திருட்டுப்பயலுக நெறைந்த உலகம். என்ன இப்படி சொல்றியா? எவன் எவனோட கூட்டுக்களவானினு இந்த "உலகில்" கண்டு பிடிக்கனும்னா நீங்க வேலையை ராஜினாமா பண்ணிட்டு முழுநேர இணையதள ஆராச்சில இறங்க வேண்டியதுதான்- இந்த வீணாப்போனவனுகளை தோண்டிக்கிட்டு. நீங்க இதுக்கு தயாரா? இல்லையா?
நீங்க பின்னூட்டதிலே சொன்னது உண்மையா இருந்தாலும், நீங்க அடுத்து ஒரு பொதுநலப்பதிவு எழுதினாலும், உங்கட்ட அடி வாங்கியவர்கள் எந்த அனானிகளோடையும் கூட்டு சேருவார்கள் ! யாரு? அதான் உங்களால் எதிர் விமர்சனம் செய்யப்பட்ட பதிவை எழுதிய பதிவர்கள். பழிக்குப்பழி! அம்புட்டுத்தான்!
என்ன பண்ணுவாங்கனா, கரெக்ட்டா உங்க பதிவுக்கு முதல் வேலையாக வந்து, உங்களை, நீங்க செய்த அதே விமர்சன்ம்போல. ஒரு பொய்யை ஜோடிச்சு உண்மை போலவே எதையாவது சொல்லி உங்களை பழி வாங்குவாங்க. இப்படி நீங்க பதிவுலகில் ஏகப்பட்ட எதிரியை உருவாக்கலாம்! உருவாக்கிட்டீங்களா? இது எல்லாருக்கும் நடக்கிறதுதான். ஆனால்..
தெரிஞ்சுக்கோங்க, பல சமயங்களில், உங்க பின்னூட்டக்கருத்து ஒரு கருத்து ஒரு குழுமத்தையே தூண்டி விடுதுங்க.
நீங்க என்ன குறையில்லாமலா பதிவு போடுவீங்க? உங்க பதிவில், எழுத்துப் பிழை, கருத்துப்பிழை எல்லா எழவும் இருக்கத்தான செய்யும்? அதை இதுவரை கண்டுக்காமல் போனவங்க எல்லாம் இப்போ குழுமமாக ஒண்ணுகூடி வந்து, "உங்களுக்கு நல்லது செய்வதுபோல" பொறுப்பா எதாவது பின்னூட்டமிடுவாங்க!
****
சொல்லுங்க, சார்! உங்க இன்றைய நிலைமை என்ன??
என்னது? ரொம்ப எதிரிய உருவாகிட்டீங்களா? உண்மையை, மனசுல தோன்றியதை எல்லாம் பெரிய இவன்மாரி பின்னூட்டதுல சொல்லி? இப்போ நான் என்ன பண்ணுறதா?
* 1) பேசாமல் பின்னூட்டப் பெட்டியை மூடி வச்சுட்டா?
நல்ல அறிவுரைதான் ஆனால்..எதுக்கு அப்படி செய்யனும்? பிடிக்கலை..
* 2) மூடி வச்சுட்டு மாடெரேட் பண்ணுறேன்னு பழிவாங்க வர்றவனையெல்லாம் கப்பு சுப்புனு ஒழிச்சுட்டா?
ஆமா, அடுத்தமுறை உங்க பதிவில் பின்னூட்டமிட மாட்டாங்க! ஆனால்...எதுக்கு அப்படி செய்யனும்? இதுவும் பிடிக்கலை..
* 3) இதுக்கெல்லாம் பயந்தா வாழவே முடியாது! செய்றதை செஞ்சுக்கோ! எனக்கு சரியா தோணுச்சுனா உன் பின்னூட்டம் தெரியும். இல்லைனா அகற்றிவிடுவேன்னு திறந்து வைக்க போறீங்களா?
இந்த 3) வது ஐடியா ரொம்ப நல்லாயிருக்கே! அதைத்தான் நானும் செய்வேன்!
என்ன? நீங்க அகற்றினால், உங்களைப்பத்தி, மேலும் நீங்க அகற்றிய பின்னூட்டம், மேலும் நீங்க காரசார விவாதத்தில் போட்ட பின்னூட்டத்தை யெல்லாம் இஷ்டத்துக்கு ஜோடிச்சு, ஏதாவது கதை கட்டி, ஒரு பதிவு போடப்போறாங்களா?
இது நல்ல ஐடியாவாத் தெரியலையே. உங்களை ரொம்ப பாப்புளர் ஆக்கிப்புடுவாக போலயிருக்கே! :) எனக்கு உங்க மேலே பொறாமையா இருக்குங்க! :)
34 comments:
வணக்கம் பிரதர்! இப்பதிவை நீங்கள் எழுதியதற்கான காரணம் சரியாகத் தெரியாவிடினும், எங்கள் சார்பில் ஒரு உறுதியான கருத்தைச் சொல்லி வைக்கிறேன்!
“ நாம் உங்களை எதிரியாக இப்ப மட்டுமல்ல, எப்போதுமே கருதப் போவதில்லை”
நன்றி
ம யோ மணி; சத்தியமா தவறா புரிஞ்சுக்கிட்டீங்க. :(
சிரகுகள் தளத்தில் எனக்கு எல்லா சுதந்திரமும் கெடைச்சது. என் கருத்து மதிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை :)))
இந்தப் பதிவில், நான் உங்களையோ, அல்லது மருதனையோ எதுவுமே சொல்லவில்லை. நான் அவ்ளோ பெரிய முட்டாள் இல்லைச், சார். :)
இது வேற கதை, என் ப்ளாக் மேலே சத்தியம்! நம்புங்க.
உங்க வருகைக்கு நன்றிங்க :)
இந்தப் பதிவில், நான் உங்களையோ, அல்லது மருதனையோ எதுவுமே சொல்லவில்லை. நான் அவ்ளோ பெரிய முட்டாள் இல்லைச், சார். :)
இது வேற கதை, என் ப்ளாக் மேலே சத்தியம்! நம்புங்க.
உங்க வருகைக்கு நன்றிங்க :) /////
அப்படியானால் எமக்கும் மிக்க மகிழ்ச்சி பிரதர்! பதிவுலகில் எமது விவாதங்கள் கடந்த இரு தினங்களில் தீவிரமாக நடந்தேறியமையால், பலரும், இது எமக்காக எழுதப்ப்பட்ட பதிவெனறு கருதக் கூடும்! அதனால் தான் அப்படிப் பின்னூட்டம் இட்டேன்!
உங்களின் தெளிவூட்டலுக்கு மிக்க நன்றி பிரதர்!
***அப்படியானால் எமக்கும் மிக்க மகிழ்ச்சி பிரதர்! பதிவுலகில் எமது விவாதங்கள் கடந்த இரு தினங்களில் தீவிரமாக நடந்தேறியமையால், பலரும், இது எமக்காக எழுதப்ப்பட்ட பதிவெனறு கருதக் கூடும்! அதனால் தான் அப்படிப் பின்னூட்டம் இட்டேன்!
உங்களின் தெளிவூட்டலுக்கு மிக்க நன்றி பிரதர்! ***
புரிதலுக்கு நன்றிங்க, சகோதரர் ம யோ மணி! :)
சகோதரர்: ம யோ மணி உங்களுக்கு உதாரனத்துடன் காட்டுறேன்..அப்போத்தான் நம்புவீங்க!
--------------
இக்பால் செல்வன் said...
வருண் பதிவில் நானிட்ட கருத்துக்களை எல்லாம் நீக்கிவிட்டார் ! வருணுக்கு எதோ ஒரு மன நோயின் அறிகுறி தென்படுகின்றது ! அவர் நல்ல டாக்டராகப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் நல்லது !
இல்லை என்றால் The man on the Ledge போல ஆகிவிடுவாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது !!!
12:09 AM, September 04, 2012
---------------
இந்தாளுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? கருத்து வேறுபாடு! அவ்ளோதான்.
என்னை மெண்டலாவே ஆக்கிட்டான் பாருங்க, இந்தப் பெரிய மனுஷன்! :)))
***இக்பால் செல்வன் said...
வருண் பதிவில் நானிட்ட கருத்துக்களை எல்லாம் நீக்கிவிட்டார் ! ***
இது பச்சை பொய்!
நான், உங்களுக்கும் (இ எச்க்கும்) எனக்கு 100% கருத்துவேறுபாடு இருக்கு. இதோட உங்க கருத்ஹ்டை நிறுத்திக்கோங்க னு சொன்னதுக்கப்புறமும், மறுபடியும் மறுபடியும் கருத்து சொல்றேன்னு இழுவா இழுத்ததால், அவைகள் நீக்கப்பட்டன என்பதை என் முந்திய பதிவில் (பின்னூட்டத்தில்) பார்க்கலாம்! :)
உங்களுக்கு என்ன பிரச்சனை !!! சென்ற பதிவில் நானாகவா வந்து கருத்திட்டேன். நீங்க தான் என் பெயரை இழுத்தீர்கள்.. அதன் பின் நான் கருத்திட்டேன். அதனை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். நீங்கள் தான் வவ்வால் பதிவில் கருத்திடும் படி பரிந்துரைத்தீர்கள் ... !!! அதனையே யாம் செய்தோம் !!!
கருத்துப் பெட்டியை என் பதிவில் திறந்தே வைத்துள்ளேன் .. அவற்றில் வசை மொழி / ஸ்பாமை தவிர வேறு எதனையும் நீக்குவதில்லை .. ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் !!!
தினமும் என்னை வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள் போல !!!
மெய்யாலுமே சொல்கின்றேன் .. நல்ல டாக்டராகப் பார்ப்பது உங்களுக்கு ரொம்ப நல்லது !!!
அல்லது எங்கேயாவது டூர் போய்ட்டு வாங்க, கொஞ்சம் மனஸ் ரிலாக்ஸ் ஆகும் ..
ரிலாக்ஸ் ப்ளீஸ் என தலைப்பை வைத்துள்ளீர்கள். அதன்படி நடப்பது போலத் தெரியவில்லை !
***இக்பால் செல்வன் said...
உங்களுக்கு என்ன பிரச்சனை !!! சென்ற பதிவில் நானாகவா வந்து கருத்திட்டேன். நீங்க தான் என் பெயரை இழுத்தீர்கள்.. அதன் பின் நான் கருத்திட்டேன். ***
இ செ:
நீங்க, இங்கேயே என்னை "மெண்டல்"னு திட்டுவது வேற.
எனக்கு பிடிக்காதவர்கள் தளத்தில் போயி, ஏதோ நீர் பெரிய மனமருத்துவர் என்பதுபோல் சொல்லியிருக்கீங்க.
How could you DO THAT???!!!
உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை?
கருத்து வேறுபாடு! நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கலை. நீங்க சொன்னது எனக்குப் பிடிக்கலை.
அதுக்காக நீங்க என்ன செஞ்சு இருக்கீங்க???
இதைத்தான் இந்தப் பதிவில் சொன்னேன்.
ம யோ மணீக்கு தெளிவு படுத்த இதை இங்கே கொண்டுவர வேண்டியதாயிற்று
***ரிலாக்ஸ் ப்ளீஸ் என தலைப்பை வைத்துள்ளீர்கள். அதன்படி நடப்பது போலத் தெரியவில்லை ! ***
இக்பால் செல்வன் னு நீங்க பேரு வச்சிருக்க மாதிரிதான் இது.
நீங்க என்ன இஸ்லாமியரானு கேட்டதுக்கு இன்னும் பதில் இல்லை!!!
ஈ வெ ரா பேரு என்ன தெரியுமா?
ராமசாமி!!! :)))
***கருத்துப் பெட்டியை என் பதிவில் திறந்தே வைத்துள்ளேன் .. அவற்றில் வசை மொழி / ஸ்பாமை தவிர வேறு எதனையும் நீக்குவதில்லை .. ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் !!!***
அது உங்க இஷ்டம். தேவையில்லாத கருத்தை அக்ற்றுவதும் என் இஷ்டம்.
அபப்டி செய்தால் நீங்க, "மனநோயாளி" பட்டம் கொடுப்பீங்க?
அப்படித்தானே?
அதனால இப்போ ஒன்னும் இல்லை. இந்தப் பதிவு யாருக்காகனு கேட்டாரு, ம யோ மணி. அதை தெளிவு படுத்தவே உங்க "பெர்ந்தன்மைய" இங்கே காட்டவேண்டியதாகிடுச்சு!
//எனக்கு பிடிக்காதவர்கள் தளத்தில் போயி, ஏதோ நீர் பெரிய மனமருத்துவர் என்பதுபோல் சொல்லியிருக்கீங்க. //
அந்த தளத்தில் போய் கருத்திட சொன்னது நீங்க தானே !!!
இல்லை என்றால் நான் ஏன் அங்கே போய் கருத்துப் போடுறேன் !!!
இப்பவும் சொல்றேன் .. உங்களுக்கு என்னமோ ஆச்சு !!! பார்த்துக்கோங்க அவ்வளவு தான் சொல்வேன் !!!
//அது உங்க இஷ்டம். தேவையில்லாத கருத்தை அக்ற்றுவதும் என் இஷ்டம்.//
அதுக்கு நீங்க மாடரசேன் வச்சுக்கலாமே ! கருத்துப் பெட்டியை ஓப்பன்ல வைத்துவிட்டு நீக்குவது நாகரிகமாக படவில்லை.
இதையே நீங்க இன்னொரு இடத்திலேயே சொல்லி இருக்கீங்க. அப்புறம் நீங்களே அதை செய்றீங்க .. !!!
ஒன்னு மாடரசேன் போடுங்க. இல்லை கருத்தை நீக்கிறதா இருந்தா முழுவதுமாக நீக்கிவிடுங்கள். வெறும் பெயர் மட்டும் தெரியுது. கருத்தைக் காணோம் !
***ஒன்னு மாடரசேன் போடுங்க. இல்லை கருத்தை நீக்கிறதா இருந்தா முழுவதுமாக நீக்கிவிடுங்கள். வெறும் பெயர் மட்டும் தெரியுது. கருத்தைக் காணோம் !***
இ செ: நீங்க சொல்றபடியெல்லாம் நான் கேக்க முடியாது சார். எனக்கு தோணுறதை நான் செய்றேன்.
நீங்க எப்படி "எடக்கு மடக்கு" வை பிந்தொடருறீங்களோ அது போல. அது உங்களுக்கு சரினு தோணுது இல்ல?. எனக்கு தோணவில்லை. அதுக்காக. கண்ட தளத்தையும் பின் தொடருவதால் உங்களை நான் மனநோயாளினு சொல்றதா??
நமக்குள் நெறையா கருத்து வேற்பாடுகள் இருக்கு. உங்களோடு கருத்து வேறுபாடு உள்ளவங்க, நீங்க நினைப்பதை தவறென்று நெனைக்கிறவங்க எல்லாருக்கும் "மனநோயாளி' பட்டம் கொடுக்காதீங்க.
இல்லை, நீங்க சொல்றதுதான் சரி, "வருண் ஒரு மனநோயாளி"னு உண்மையிலேயே நெனச்சா, என்னிடம் இருந்து ஒதுங்கி இருங்க.
எதுக்குப் போயி கோஷ்டி சேர்ந்த்துக்கிட்டு திரிகிறீங்க??
*** இக்பால் செல்வன் said...
வருண் உண்மையில் அமெரிக்காவில் இருக்கின்றாரா என டவுட் ஏனெனில் Bastard என்ற வார்த்தை இங்கு பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.***
நான் சொன்னதுபோல, நான் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருந்தால் உங்களுக்கு மனநோய்னு நான் நெனச்சுக்கலாமா???
ஏன் சார், சும்மா உங்க மூளையைப்போட்டு குழப்பிக்கிட்டு!
தளபதிக்கு எதிரிகள் வேண்டாமாம். ஆனால் புதிரிகள் வேணுமாம். அப்படின்னு குகு சொல்றாருன்னும் சொல்லலாம்; சொல்லாமலும் விட்டுடலாம். இராஜ.நடராஜன் ஓரமா ஒக்காந்துக்குறேன்னு சொன்னவரும் இன்னும் அங்கனேயே குக்கீட்டு இருக்காரு. நீதானே என் வசந்தம் பாடல்கள் நல்லா இருக்குன்னு சொன்னாலும் பொல்லாப்பு. நல்லா இல்லைன்னு சொன்னாலும் பொல்லாப்பு. குரலை நீக்கிட்டு இசையை மட்டும் கேட்டா நல்லா வருடிச் செல்லுற மாதர இருக்குன்னு சொன்னாலும் சிரிக்கிறாங்க. சொல்லுவாரு சொன்னாக் கேட்டுக்குறாங்க; நாம சொன்னா சிரிக்கிறாங்க. மரத்துல மேல் வாதுக்கு இருக்குற செல்வாக்கு கீழ்வாதுக்கு இருக்குறது இல்லை.
ப பே: நீங்க எப்படி இப்படி புரியாமல் பேசுறமாரிப் பேசி "சாதிக்க வேண்டியதை" சரியா சாதிச்சுடுறேள்!! :-)))
*** இக்பால் செல்வன் said...
வருண் உண்மையில் அமெரிக்காவில் இருக்கின்றாரா என டவுட் ஏனெனில் Bastard என்ற வார்த்தை இங்கு பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.***
அமெரிக்கா வரைபடத்துல மட்டும்தான் பார்த்து இருப்பாரு போல இந்த மேதாவி.
நான் இங்லிபிஸை வச்சு இவரு குருடன் யானையைத் தடவுவதுபோல இவரு அமெரிக்காவை தடவி செய்கிற அனாலிசிஸ் கேணத்தனமா இருக்கு!!
***இப்பவும் சொல்றேன் .. உங்களுக்கு என்னமோ ஆச்சு !!! பார்த்துக்கோங்க அவ்வளவு தான் சொல்வேன் !!!***
இனிமேல் உம்மை இந்தத் தளத்தில் பின்னூட்டம் போடுறேன், கிழிக்கிறேன்னு பார்த்தேன், உமக்கு மரியாதை இல்லை!
எங்கேயாவது ஓடி போயிடும்!!
ஆனா ஒன்னு தினம் உங்க பதிவு படிச்சா நல்ல பொழுது போகுது. சத்தியமா இது நக்கல் இல்லீங்க. தயவு செஞ்சு திட்டிபுராதீங்க.
வருண்...
:) :) :)
என்ன போட்டு தாக்கிகிட்டு இருக்கீங்க???
சாரி..உங்களின் அற்ப்புதமான முந்தைய பதிவுகளின் பின்னூட்ட்ங்களில் பங்கெடுக்க முடியாமல் போய் விட்டது....
***edhiri pudhiri said...
ஆனா ஒன்னு தினம் உங்க பதிவு படிச்சா நல்ல பொழுது போகுது. சத்தியமா இது நக்கல் இல்லீங்க. தயவு செஞ்சு திட்டிபுராதீங்க.
4 September 2012 6:29 PM ***
ஒரு லூசு ஒரு ஆளு, இக்பாலும் இல்லை செல்வனும் இல்லை! கூட்டம் சேக்க, பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் தலைப்பு கொடுத்துக்கிட்டு இருந்தாரு..
* பதிவர் சந்திப்பு புறக்கணிப்பு- தலைப்பு
ஆனா புறக்கணிப்பும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை.
பச்சை பொய்!
* பதிவர் சந்திப்பு சொதப்பி விட்டது- சொதப்பவும் இல்ல, மண்ணாங்கட்டியும் இல்லை
பச்சை பொய்!
ஏன்யா இப்படி கூறுகெட்டதனமா தலைப்பு கொடுக்கிற?னு பின்னூட்டத்தில் போயி கேட்டால், "காண்டாயிட்டான்"
என்னை இப்படி நம்மள கேள்வி கேக்கிறான்னு இப்போ என்னை மனநோயாளிங்கிறான்! இவனை கேவலமா திட்ட முடியாதா என்ன?
ஒரு ஆறு மாதம்கூட இருக்காது, இந்த கோடங்கி, ஐய்யோ என் தளத்தை, தமிழ்மணம் ஏனோ சேர்க்க மாட்டேன்கிதுனு ஒரே ஒப்பாரி. நான் போயி, கவலைப்படாதீங்க, அதெல்லாம் சேர்த்துக்குவாங்கனு சொன்னேன்.
இப்போ, இவரு பதிவுலக தாதாவாயிட்டாரு டெய்லி ஒரு 4 பதிவு போட்டு.
வந்து எப்படி மாடெரேசன் பண்ணனும்னு இவரு அறிவுரை சொல்லிக்கிட்டு திரிகிறாரு.
எடக்கு மடக்கு வை பின் தொடர்வாங்களாம். என்ன குப்பைத்தளமாயிருந்தாலும் இதுக்கு ஒண்ணுதான். என்ன எழவுக்கு பதிவெழுதுறானுகனு தெரியலை
***சிராஜ் said...
வருண்...
:) :) :)
என்ன போட்டு தாக்கிகிட்டு இருக்கீங்க???
சாரி..உங்களின் அற்ப்புதமான முந்தைய பதிவுகளின் பின்னூட்ட்ங்களில் பங்கெடுக்க முடியாமல் போய் விட்டது....***
என்ன பண்ண சொல்லுறீங்க, அமெரிக்காவை வரை படத்துல பார்த்து தெரிஞ்சிகிட்டவன் எல்லாம், அமெரிக்க இங்கிலிபிஸூ எப்படி இருக்கும்னு, வருண் இங்கிலிபிஸு வேற மாரி இருக்குனு ஒளறிக்கிட்டி திரிகிறான். இவனுகளையெல்லாம் தளத்துக்கு உள்ளவே விடக்கூடாது.
@ வருண் -
//இனிமேல் உம்மை இந்தத் தளத்தில் பின்னூட்டம் போடுறேன், கிழிக்கிறேன்னு பார்த்தேன், உமக்கு மரியாதை இல்லை!
எங்கேயாவது ஓடி போயிடும்!! //
:) உங்க வீட்டுக்கு ஓடி வந்துவிடவா ?
// ஒரு லூசு ஒரு ஆளு, இக்பாலும் இல்லை செல்வனும் இல்லை! கூட்டம் சேக்க, பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் தலைப்பு கொடுத்துக்கிட்டு இருந்தாரு.. //
சம்பந்தமே இல்லாமல நீங்கள் உளறும் போது, தலைப்புக் கொடுத்தால் உங்களுக்கு ஏன் வயிறு எரிகின்றது ...
//ஒரு ஆறு மாதம்கூட இருக்காது, இந்த கோடங்கி, ஐய்யோ என் தளத்தை, தமிழ்மணம் ஏனோ சேர்க்க மாட்டேன்கிதுனு ஒரே ஒப்பாரி. நான் போயி, கவலைப்படாதீங்க, அதெல்லாம் சேர்த்துக்குவாங்கனு சொன்னேன். //
உங்க ஆறுதல் வார்த்தைக்கு நன்றிகள் ! பேங்க் அக்கவுண்ட் தாங்க மணிப் போட்டு விடுகின்றேன் .. !!!
// வந்து எப்படி மாடெரேசன் பண்ணனும்னு இவரு அறிவுரை சொல்லிக்கிட்டு திரிகிறாரு. //
இதையே நீங்க மற்றவர் தளத்தில் சொல்லும் போது மட்டும் இனிக்கும், இப்ப கசக்குதா ப்ரோ !
//எடக்கு மடக்கு வை பின் தொடர்வாங்களாம். என்ன குப்பைத்தளமாயிருந்தாலும் இதுக்கு ஒண்ணுதான். என்ன எழவுக்கு பதிவெழுதுறானுகனு தெரியலை //
எடக்கு மடக்குவை பின் தொடர்பவர்கள் ஒரு ஐம்பது பேர் இருப்பாங்க அவங்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர் !!!
// என்ன பண்ண சொல்லுறீங்க, அமெரிக்காவை வரை படத்துல பார்த்து தெரிஞ்சிகிட்டவன் எல்லாம், அமெரிக்க இங்கிலிபிஸூ எப்படி இருக்கும்னு, வருண் இங்கிலிபிஸு வேற மாரி இருக்குனு ஒளறிக்கிட்டி திரிகிறான். இவனுகளையெல்லாம் தளத்துக்கு உள்ளவே விடக்கூடாது. //
நீங்க மட்டும் அமெரிக்காவிலேயே பொறந்து வளர்ந்த இங்கிலிபீஸு துரையாச்சே !!! ஹிஹி !!!
உங்களை இலக்கண ஆங்கிலத்தை சில தளங்களில் தான் பார்த்தேன் !
ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியதாக அளந்துவிட்டீர்கள்.. இன்னும் அவைக் குறித்த மேலதிக தகவல்களைக் கேட்டதுக்கு ஒன்னுமேக் காணோம் !!!
கேட்கிறவன் கேணை என்றால் ...... ????
***ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியதாக அளந்துவிட்டீர்கள்.. இன்னும் அவைக் குறித்த மேலதிக தகவல்களைக் கேட்டதுக்கு ஒன்னுமேக் காணோம் !!!***
Do you read any journals, I S?
Just tell me what journals you are familiar with.
***கேட்கிறவன் கேணை என்றால் ...... ????***
நீங்க, கேணையந்தான். இல்லைனு எப்படி சொல்றீங்க? நிரூபிங்க, நீங்க கேணையன் இல்லைனு!!
***எடக்கு மடக்குவை பின் தொடர்பவர்கள் ஒரு ஐம்பது பேர் இருப்பாங்க அவங்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர் !!!***
உங்களுக்கு எந்தவிதமான மாரல்ஸ் இல்லைனு சொல்றேன்.
உமக்கு கொள்கைகளுக்கு ஜால்ரா அடிக்கலைனதும், சக பதிவரை, உம் சுயநலத்துக்காக உலகறிய மனநோயாளினு சொல்ற ஒரு கேவலமான ஆள், நீர்.
ஹாய் வருண், அந்த எடக்கு மடக்கு தளத்துக்கு அடுத்த ஆடு இதோ இங்கனதான் இருக்கேன்னு சொல்லிக்கிட்டு போச்சே, என்ன ஆச்சு? பிரியாணி பண்ணினாங்களா?
\\உங்களை ரொம்ப பாப்புளர் ஆக்கிப்புடுவாக போலயிருக்கே!\\ கடைசியில மேட்டரு இதுதான். ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல், ஆசிட் ஊத்துரதுக்கும் அந்த மூஞ்சிக்கு ஒரு யோக்கியதை இருக்கணும்னு கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்துல சொல்லுவாரு, நம்மை எதிர்த்து பதிவு போடறாங்க, கும்மியடிக்கிறாங்க அப்படினாலே நாம் பிரபலமாயிகிட்டு வரோம்னு அர்த்தம், நல்லது தான். ஹி....... ஹி....... ஹி.......
அன்பின் சகோ வருண்,
பதிவுலகில் எப்படி எப்படி எதிரிகளும் நண்பர்களும் உருவாகிறார்கள் என்று நல்ல பாடம் எடுத்திருக்கிறீர்கள். கொள்கை கிலோ என்ன விலை என்று கேட்கும் மேதாவிகள் தான் பல சமயம் பாடம் எடுக்க ஓடி வந்து ஏடா கூடாமாக பின்னூட்டம் போட்டும் அகமகிழ்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு என்று ஒரு எழவு கொள்கையும் இல்லை. கூடி நின்று கும்மி அடிப்பது மட்டும் தான். இவர்களுடைய வலைத்தளங்களில் பார்த்தீர்கள் என்றால் மாறி மாறி தங்களை புகழ்ந்து கொள்வார்கள்.
மேற்படியார் உங்களை எரிச்சலூட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் எடக்கு மடக்காக பின்னூட்டம் இட்டுக் கொண்டிருக்கிறார். சரியான கோஷ்டியிடம் தான் சென்று அடைக்கலமாகியிருக்கிறார். எனவே இவர்களை எல்லாம் அலட்சியம் செய்து விட்டு போனாலே போதுமானது. இவர்களுக்கு நீங்கள் பதில் கொடுக்காமல் இருந்து விட்டால் இவர்களுக்கு தூக்கம் வராது. எனவே அவர்களின் தூக்கத்தை இரண்டு நாள் கெடுத்து பாருங்களேன். அப்புறம் தானாகவே ஆடி அடங்கி விடுவார்கள்
சகோதரர் வருண்!
இவர்களை அலட்சியம் செய்து விட்டு ஆக்கபூர்வமான கட்டுரைகளை அளியுங்கள். இவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். இல்லை என்றால் 'பதிவுலகமே...நான் விடை பெறட்டுமா?' என்ற ஒரு பதிவை கொடுத்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். முன்பு கூட பார்த்தோமே....:-)
நன்றி நண்பர்களே( திரு. மா யோ மணி, இக்பால் செல்வன், சிராஜ், எதிரி புதிரி, ஜெயவேல், ஷேக் தாவூத், மற்றும் சுவனப்பிரியன்)!
ஆமா, இது போல் பதிவு எழுதாமல் ஆக்கப்பூர்வமான பாதையில்தான் தவழனும். :)
ஆரம்பிச்சதை முடிச்சுடுறேன். பதிவில் சொன்ன கருத்துக்கு ஆதரவாகவே பின்னூட்டங்கள் அமைந்துள்ளன.
எனக்கும், நண்பர் இக்பால் செவனுக்கும் கருத்து வேறுபாடு அவ்வளவே. இதனால், என்னை மனநோயாளியாக்கி விட்டார், மரியாதைக்குரியவர். அதனால என்ன இப்போ? :))))
------------------------
முடிவுரை அடுத்த பின்னூட்டத்தில். :)
நம்ம கதையில் எப்போவுமே ஹீரோவும் வில்லனும் இருக்கனும்.
இந்த கதையில் ஹீரோ பெரியவர், இக்பால் செலவன்
வில்லன்: மனநோயாளி, அறிவியளான் என்று பொய்யும் புரட்டும் சொல்லி பிதற்றும் வருண்! :))
--------
வில்லன், வருண் என்ன சென்ச்சான்னா, நண்பர் இ செ வனை பாதிக்கும் அளவுக்கு சில பின்னூட்டங்கள் எழுதினான். அவன் தளத்தில் மாடெரேசன் செய்யும்போதும், இ செ அவர்களை அவமானப் படுத்தினான்
இதனால் பாதிக்கப்பட்ட இ செ, வருணை மன நோயாளியாக்கி வெற்றியடைந்துள்ளார் (?!)
--------------
தொடருது..
இ செ: குற்றச்சாட்டுகள்
* வருணுக்கு மனநிலை சரியில்லை- கவலைப்படுகிறார்
* வருண் அறிவியளாலன் என்பது பச்சைப் பொய்! அவனுக்கு படிப்பறிவே இல்லை! அவன் உலகத்தர அறிவியல் கட்டுரைகள் எழுதியிருக்கேன் என்பது பிதற்றல்கள் மேலும் பச்சை பொய்கள். வருணுக்கு என் வளர்ச்சிமேல் பொறாமை.
வில்லன் வருண்:
* ஆமா நான் மனநோயாளிதான்
* ஆமா, நான் விஞ்ஞானி, எனக்கு இண்டெர்நேஷனல் ஜேர்னல்களில் கட்டுரைகள் வெளிவந்து இருக்கு என்பது நான் சொன்ன பச்சைப் பொய்! எனக்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ், சல்பர் ஹைட்ரஜன்னா என்னானு தெரியாது.அப்படியிருக்கும்போது மேதை இ செல்வனிடம், நான் எப்படி, ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், லிப்பிட்ஸ், ஃபேட்டி ஆசிட் பத்தியெல்லாம் பேசமுடியும்?
* நான் யாரிடமும் என் ரெசுமே அல்லது பயோடாட்டா கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் நான் சொன்னதெல்லாமே பொய்னு நானே ஒத்துக்கிட்டேன்!
* நான் அமெரிக்காவில் வாழவும் இல்லை. ஆப்பிரிக்க காடுகளில் வாழ்கிறேன்.
------------------
இப்போ என்ன ஆயிடுச்சு, சொல்லுங்க?
வாழ்க நண்பர் இக்பால் செல்வன். ஒழிக அயோக்கியன் வருண்!
நன்றி வணக்கம்! :)))
இனிமேல் வாதம் செய்ய எதுவும் இல்லை. :)))
-------
கடைசியாக..
நண்பர் இ செ இனிமேல் மனநிலை சரியுள்ளவர்களிடம் போய் வாதாடனும். இங்கே மறுபடியும் வந்தால், அவருக்கு மனநிலை சரியில்லை என்று ஆகிவிடும். :))
Post a Comment