Thursday, September 27, 2012

பின்னூட்டப் பிரச்சினை! UNMAIKALum, உண்மைகளும்!

முருகன் துணை! உ (பிள்ளையார் சுழி) போட்டு ஆரம்பிக்கிறேன்! பதிவுலகக் கண்மணிகளே! நம் பதிவுகளில் "UNMAIKAL" என்கிற ஒரு பதிவரும், இப்போது "உண்மைகள்" என்னும் அவரை பழிவாங்கவே உருவான இன்னொரு பதிவரும் ஒரே அட்டகாசம் செய்றாங்க! இவங்க, பதிவுக்கு சம்மந்தம் இருக்கோ இல்லையோ ஒரே நேரத்தில் பல பின்னூட்டங்களை "ரெடி மேட்" ஆக தயாரித்து வைத்து எல்லாப் பதிவிலும் ஒரே பின்னூட்டங்களைப் போயி கொட்டுறாங்க.

இந்த  UNMAIKAL என்கிற பதிவர் இடும் பின்னூட்டங்களை நான் பொதுவாக பிறதளங்களில் வரும்போது வாசிப்பதில்லை. கடந்து போய்விடுவேன். இதை வெளியிடும் தளத்திற்கும் நான் அறிவுரை எல்லாம் சொல்வதில்லை! அவங்க தளம், அவங்க இஷ்டம். நமக்கென்ன? னு  இவர்களைப் பற்றி விமர்சிக்காமலே போயிடுறது. என் தளத்தில் அதுபோல் பின்னூட்டம் வந்தால் அதை அகற்ற வேண்டுமென்றுதான் எண்ணியிருந்தேன். இந்தத் தொல்லை எதுவும் சமீபத்தில் வரவில்லை!

இப்போ இந்த UNMAIKAL பின்னூட்டங்களை பழிவாங்க வென்றே "உண்மைகள்"னு ஒரு பதிவர் கெளம்பியிருக்காரு. UNMAIKAL பொதுவாக இந்துமதவாதிகள், புலிகள் ஆதரவாளர்கள் போன்றவர்கள் முகத்தில் சேற்றை வாரி எறியவே இந்தப் பின்னூட்டங்களை இடுவார்- அதில் உண்மைகளும் இருக்கலாம்தான். இப்போ இந்த "உண்மைகள்" இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவே இதுபோல் "ரெடிமேட்" பின்னூட்டங்களிடுகிறார்- இதிலும் உண்மைகளும் இருக்கலாம்தான்.  

இதுபோல் பின்னூட்டங்கள் யாருடைய தளத்துக்கும் உதவுதா என்னனு தெரியலை. என் நிலைப்பாட்டை நான் தெளிவா சொல்லிடுறேன். என்னைப் பொறுத்தமட்டில் இது ரெண்டுமே பதிவுலகில் தேவையில்லாத உபத்திரவங்கள்னு தாழ்மையா என் கருத்தை சொல்லிக்கிறேன்!

 இது தவிர, ஒரு சிலர் நம் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டுவிட்டு அவர்களுடைய பதிவுக்கு தொடுப்பும் கொடுப்பார்கள். இவர்கள்  இப்படி செய்வதின் காரணம் இவர்கள் நேரம் செலவு செய்து எழுதிய பதிவை பலர் வாசிக்கவேண்டும் என்கிற எண்ணமே! இதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது பதிவரைப் பொறுத்து. எனக்கு இதுபோல் பின்னூட்டங்கள் வரும்போது அதை அப்படியே விட்டுவிட்டு, முடிந்தால் அவர் தொடுப்புக்கொடுத்த அவர் பதிவுக்குப் போவேன். இல்லையெனறால் "வருகிறேன்" என்பதோட முடிந்துவிடும்.

நன்றி,  வணக்கம்!

17 comments:

கோவி.கண்ணன் said...

ஒண்ணு உண்மை"கள்" இன்னொன்னு அவருக்கு கல்வீசும் உண்மை"கல்"

இவர்கள் பின்னூட்டங்களை நான் வாசிப்பதில்லை.

கோவி.கண்ணனின் காவடி ஆட்டம்,
கோவி.கண்ணனின் பகவத் கீதை என்று நான் பின்னூட்டம் இடும் படங்களில் வெட்டி ஒட்டிப் போடுகிறார், உண்மை"கள்" என்கிற பெரியவர்

வருண் said...

***கோவி.கண்ணன் said...

ஒண்ணு உண்மை"கள்" இன்னொன்னு அவருக்கு கல்வீசும் உண்மை"கல்" ***

வாங்க கோவியாரே!

எல்லாம் "பழிக்குப்பழி"தான் சரியான பாதை என்றுதான் இன்றைய உலகம் ஓடிக்கிட்டு இருக்கு!

அதெல்லாம் தப்புனு அறிவுரை செய்த "காந்தி" "ஜீசஸ்" எல்லாரையும்தான் நம்மாளுக பொறுப்பாப் போட்டுத் தள்ளிட்டானுகளே! :-))))

mubarak kuwait said...

வருண் அண்ணே! நல்ல பதிவு எழுதுறீங்க. பின்னூட்டம் இடுபவர்களை பற்றி கண்டுகாதீங்கன்னே. உங்களுக்கு பிடிக்காத பின்னூட்டங்களை நீக்கிவிடுங்கள். உங்களிடம் வம்பிளுப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கு அவுங்கள கண்டுகாதீங்க, தானா அடங்கிடுவாங்க

வருண் said...

சகோதரர் முபாரக்: கீழே கவனிக்கவம்!
///வருண் said...

உண்மைகள்:

நீங்க இந்த பழிக்குப் பழி அவதாரத்தில் என்னத்தை சாதிக்கப் போறீங்க?

அனேகமாக உங்கள் பின்னூட்டங்கள் அகற்ற்ப்படும். போற இடமெல்லாம் இதையே கொட்டுறீங்க??
26 September 2012 11:37 AM
வருண் said...

உண்மைகள்:

இதே பின்னூட்டங்கள் பல தளங்களில் பதிவு செய்றீங்க. நான் இவைகளை அனுமதிக்க முடியாது. அப்புறம் எனக்கு உண்மைகளும், UNMAIKAL லும் ஒண்ணுதான். "UNMAIKAL" பின்னூட்டங்கள் வந்தாலும் அகற்றப்படும். மன்னிச்சுக்கோங்க!///

இது என்னுடைய கடந்த பதிவில் நடந்தது.. உங்கள் பார்வைக்கு.. இந்தப் பதிவெழுத வேண்டிய காரணமும் இதனால்தான்.

உங்க கருத்துக்கு நன்றி. :)

Rabbani said...

ரெண்டு பேரும் அனோனி கள் தன்னை அடையாளப்படுத்த தயங்குபவர்களின் கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வது??? ஹையோ ஹையோ

suvanappiriyan said...

சகோ வருண்!

எனக்கு ஆரம்பத்திலிருந்தே சகோ உண்மைகள் பதிவு தொடர்பாக பல லிங்குகளை தருகிறார். அது பதிவை மேலும் சிறப்பாக்குகிறது. பல வேலைகளுக்கு நடுவில் நாம் பதிவிடுவதால் இதுபோன்ற உதவிகள் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. இது எனது நிலைபாடே!

வருண் said...

***Rabbani said...

ரெண்டு பேரும் அனோனி கள் தன்னை அடையாளப்படுத்த தயங்குபவர்களின் கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வது??? ஹையோ ஹையோ***

தங்கள் கருத்துக்கு நன்றிங்க. அனானியாக இருப்பதில் தவறல்ல. பதிவுக்கு சம்மந்தமான பின்னூட்டங்களை வழங்கலாம்.

மற்றபடி இது அந்த தள உரிமையாளருக்கும் அவருக்கும் உள்ள பிரச்சினை. நான் என் தளத்தின் நிலைப்பாடை சொன்னேன். :)

வருண் said...

சுவனப் பிரியன் said...

***சகோ வருண்!

எனக்கு ஆரம்பத்திலிருந்தே சகோ உண்மைகள் பதிவு தொடர்பாக பல லிங்குகளை தருகிறார். அது பதிவை மேலும் சிறப்பாக்குகிறது. பல வேலைகளுக்கு நடுவில் நாம் பதிவிடுவதால் இதுபோன்ற உதவிகள் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. இது எனது நிலைபாடே!***

சகோதரர் சுவனப் பிரியன்:

உங்க தளத்தை நீங்க எப்படி நடத்த வேண்டும், எப்படு மட்டுறுத்தனும்னு சொல்லும் தகுதியோ அருகதையோ எனக்கு நிச்சயம் இல்லை. :) அதை நன்கு உணர்ந்தேயுள்ளேன். :) உங்க தளம், உங்க இஷ்டப்படித்தான் நடக்கனும். உங்களுக்கு அதுபோல வரும் பின்னூட்டங்கள் உபயோகமாக இருந்தால் நல்லதுதான்.

உங்க தளம் போக, நான் பிற தளங்களில் இவர்கள் பின்னூட்ட்ங்களை பார்த்து இருக்கேன். பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு 5 + பின்னூட்டங்கள் போல வரிசையாக இருக்கும்.

நேற்று என் தளத்தில் "உண்மைகள்"னு ஒரு பதிவர் பின்னூட்டமிட்டார். நான் அவைகளை அகற்றிவிட்டேன். சில தளங்களில் அவர் பின்னூட்டங்களையும் அகற்றவில்லை! அவர்கள் நிலைப்பாடும் உங்க நிலைப்பாடை ஒத்ததோ என்னவோ!

உங்க கருத்துக்கு நன்றிங்க! :)

குட்டிபிசாசு said...

//UNMAIKAL பொதுவாக இந்துமதவாதிகள், புலிகள் ஆதரவாளர்கள் போன்றவர்கள் முகத்தில் சேற்றை வாரி எறியவே இந்தப் பின்னூட்டங்களை இடுவார்- அதில் உண்மைகளும் இருக்கலாம்தான்.//

//இப்போ இந்த "உண்மைகள்" இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவே இதுபோல் "ரெடிமேட்" பின்னூட்டங்களிடுகிறார்- இதிலும் உண்மைகளும் இருக்கலாம்தான். //

//எனக்கு ஆரம்பத்திலிருந்தே சகோ உண்மைகள் பதிவு தொடர்பாக பல லிங்குகளை தருகிறார். அது பதிவை மேலும் சிறப்பாக்குகிறது. பல வேலைகளுக்கு நடுவில் நாம் பதிவிடுவதால் இதுபோன்ற உதவிகள் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. இது எனது நிலைபாடே!//

ஆஹா! நல்ல நிலைப்பாடு!

அஜீம்பாஷா said...

நீங்க எழுதுங்க வருண், உங்களுக்கு பிடிக்காத பின்னூட்டம் நீக்குவதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது.

ப.கந்தசாமி said...

படித்தேன்.

தணல் said...

. UNMAIKAL பொதுவாக ***இந்துமதவாதிகள்***, புலிகள் ஆதரவாளர்கள் போன்றவர்கள் முகத்தில் ***சேற்றை வாரி எறியவே*** இந்தப் பின்னூட்டங்களை இடுவார்- அதில் உண்மைகளும் இருக்கலாம்தான். இப்போ இந்த "உண்மைகள்" ***இஸ்லாமியர்களை*** ***இழிவுபடுத்தவே*** இதுபோல்

:-) :-) :-)

நீங்க சொன்னா சரியாத்தாங்ண்ணா இருக்கும் :-)

ஒருத்தனை மதவாதி என்றுவிட்டு இன்னொருத்தனை நியாயப்படுத்தி? UNMAIKAL கூட மதவாதி தான்!

எல்லா மதவாதிங்க முகத்திலும் கரியைப் பூசுவதே சரி! (தன்னளவில் ஏதோ ஒரு மதத்தை வைத்து மனதை நிறைத்துக் கொண்டு வாழ்பவர்களைச் சொல்லவில்லை, அதை திணித்துக் கொண்டு திரிபவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்)

தணல் said...

I scroll through fast whenever I see this UNMAIKAL! So much of copy paste stuff! Appears as if he has no brain! Acts like some stupid malware which knows only to copy-paste, neither can think nor can form a comment of its own based on what is discussed in the post! May be the word verification concept was discovered to stop such malwares :-)

Unknown said...

வருண் அண்ணே,

நான் ஒரு முஸ்லிம். எவிடென்ஸுக்கு நான் அரபியில‌ கலிமா சொல்றேன்: அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு.


இப்ப எனது உண்மையான அபிப்ராயத்தினைச் சொல்றேன். உண்மைகள் எனும் பதிவர் பகடு எனும் தளத்தில் எழுதிவரும் இப்னு ஷாக்கிர் எனும் சகோதரர். அவர் நித்யானந்தா அவர்களையும், முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் ஒப்பிட்டு பல பின்னூட்டங்களை நிரூபனின் தமிழ்நாற்று தளத்தில் போட்டார்.

அதில் அவர் நபி(ஸல்) அவர்களைப்பற்றிக் கூறியதை சுவனப்பிரியனால் மறுக்கமுடியுமா? சுவனப்பிரியனுக்கு மறுக்கும் தைரியம் இருக்கா?


அண்ணாச்சி, உண்மைகள் எனும் அந்த ஆள் போட்டது எல்லாம் வலிமையான ஹதீஸ்கள் கூறும் உண்மைகள் அண்ணா. உங்களுக்கு இது புரியாது. ஆனால் சுவனப்பிரியன் அண்ணாச்சிக்குப் புரியும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பின்னூட்டம் குறைவாக இருப்பவர்கள் ஏதாவது ஒரு பின்னூட்டம் இருந்த போதும் என்று நினைப்பது இயல்புதானே.அந்தப் பின்னூட்டங்கள் அவர்கள் வருகையை தெரிவிப்பதற்காகவே.

ஆர்.வி. ராஜி said...

நீங்கள் கூறுபவரை பற்றி எனக்கு தெரியாது.

ஆனால் என்றுமே மற்றவர் மனதை புண்படுத்தாத வகையிலும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் இருத்தல் அவசியம்.
அடுத்தவரின் வலைபதிவுகளில் சென்று தேவையல்லாத பின்னுட்டங்கள் இடுவதை தாங்களாகவே தவிர்த்துவிடுவது நல்லது.

இல்லையேல் சம்பந்தப் பட்டவர்கள் அதனை அழித்து.. அவர்களையும் நிராகரித்துவிடவது தான் சிறந்தது.

நாம் எச்சரிக்கையோடு இருக்கத்தான் முடியுமே தவிர அவர்களை நாம் திருத்த முடியும் என்பது சந்தேகமே.

"திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது இதற்கு பொருந்தும்.

ஆர்.வி. ராஜி said...

கோவி.கண்ணன் said...
ஒண்ணு உண்மை"கள்" இன்னொன்னு அவருக்கு கல்வீசும் உண்மை"கல்"
.......................................................................................
ஹ..ஹ..ஹ..ஹ..ஹா. அருமை.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

azeem basha said...
நீங்க எழுதுங்க வருண், உங்களுக்கு பிடிக்காத பின்னூட்டம் நீக்குவதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது
.......................................................................................
உண்மைதான்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>