Wednesday, September 5, 2012

அம்மா, அப்பா என்னும் அரக்கர்கள்!

அப்பா, அம்மா என்பவர்கள் பிள்ளைங்களுக்கு நல்லதுக்குத்தான் செய்றோம்னு அடாவடியா நடந்துக்கிறது எல்லாம் அநியாயம். சமீபத்தில் ஒரு விவாதம் விஜய் டி வி ல பார்க்க நேர்ந்தது. வேறென்ன நம்ம கோபிநாத்தோட நீயா நானாதான்.

ஒரு சில அப்பாமார்கள் எல்லாம் பெரிய ஹிட்லர்க மாதிரி பொது இடத்திலேயே நடந்துக்கிறாங்க!! அவங்க பேசுற தினுஷைப் பார்க்கவே ரொம்ப பயம்மா இருந்துச்சு! தங்கள் பிள்ளைங்க, ஹார்மோன்கள் சுரந்து குழப்படி செய்யும் அறியாத வயதில் இருக்கதால அவங்க ரூம் கதவை அடச்சா குத்தம், பசங்களோட பேசினால் குத்தம், முகநூல் வச்சுக்கிட்டா குத்தம்னு ஒரே சட்ட திட்டங்கள்தான்.

நான் கவனிச்சவரைக்கும் பசங்க யாரும் தங்கள் கருத்தை, அப்பா அம்மா திட்டுவாங்கனு, உலகம் என்ன நினைக்குமோனு  பயந்துகொண்டு சரியாக சொன்ன மாதிரி தெரியவில்லை.

ப்ரைவசி எதுக்குனா? இதெல்லாம் தெரியாதா? நான் ஒரு இன்ஸ்ட்ருமெண்ட் பயன்படுத்தும்போதுகூட, எனக்கு அடுத்து பயன்படுத்துபவர், 5 நிமிடங்கள் முன்பே வந்து, அருகில் அமர்வது சுத்தமாகப் பிடிக்காது! நான் தப்பு எதுவும் செய்யலை, என் வேலையை என் நேரத்தில், நான் திட்டமிட்டபடி செய்றேன். அடுத்தவர் அருகில் என்னை வேடிக்கை பார்த்தால் என்னால காண்ச்செண்ட்ரேட் செய்ய இயலாது. இதுக்கே எனக்கு "ப்ரைவசி" தேவைப்படுது. ஒரு சில சமயம் நான் சொல்லிடுவேன், "ப்ளீஸ், போயிட்டு 5 நிமிடம் சென்று வா. அப்போத்தான் உன் நேரம் ஆரம்பிக்குது"னு.

நம்ம பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

ப்ரைவசினா, செக்ஸ் (உடலுறவு) வச்சுக்கிறதுக்கும், மாஸ்டர்பேட் (சுய இன்பம்) செய்துக்கிறதுக்கும், திருட்டுத்தனம் செய்ய மட்டும்தான் தேவைனு இல்லை. பல நேரங்களில் சிந்திக்கக்கூட, ஒரு வேலையை ஒழுங்கா செய்யக்கூட "ப்ரைவசி" தேவைப்படுது. படிக்கவும்தான். ஒருசில அம்மா அப்பா மார்களுக்கு இவ்ளோ வயதாகியும் கொஞ்சம்கூட கூறே இல்லை! என்னவோ இவங்க பக்கத்தில் இருந்தால் தன் பிள்ளைகளை கட்டுப்படுத்திவிடலாம்னு நினைக்கிற முட்டாள்களா இருக்காங்க.

ஒரு  மனசை யாருமே கட்டுப்படுத்த முடியாதுங்க! இது தெரியாதா இவர்களுக்கு?

கற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது 
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

-கண்ணதாசன்

இதெல்லாம்  புரியாதா இந்த ஹிட்லர்களுக்கு? புரிஞ்சுக்கோங்கப்பா!

13 comments:

வருண் said...

யாரோ ஒரு அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ பயங்கர கோவம் வந்து, மைனஸ் மதிப்பெண் போட்டிருக்காங்க! :)))

பழமைபேசி said...

காக்கா கருமை; அப்ப கருமையா இருக்குறதெல்லாம் காக்கான்னு சொன்னா நாங்க யானைக்கு எங்க போவம்? குயிலுக்கு எங்க போவம்??

இப்பெல்லாம் யாரும் விறகடுப்பு பாவிக்கிறதே இல்லை. எல்லாமே எரிவாயு அடுப்புதான். அப்படி இருக்க, எல்லா அப்பா அம்மாவும் அரக்கி அரக்கி விறகு வெட்டிக் கொண்டாறதும் இல்லை.

Jayadev Das said...

டீனேஜ் என்பது ஒரு சிக்கலான பருவம், கண்டுக்காம விட்டா குட்டிச் சுவராவது நிச்சயம், ரொம்பவும் போட்டு இருக்கவும் கூடாது. வருண், நீங்களாவது அரக்கனாவாம பாத்துக்கோங்க. :))

\\யாரோ ஒரு அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ பயங்கர கோவம் வந்து, மைனஸ் மதிப்பெண் போட்டிருக்காங்க!\\ எதுல போட்டிருக்காங்க? உங்கள் தமிழ் மனம் ஓட்டுப் பட்டை நான் பார்க்கிரப்போவேல்லாம் செத்துப் போய் கிடக்குது, இன்ட்லியும் வேலை பண்ண மாட்டேங்குது, எங்கதான் அந்த புண்ணியவான் மைனஸ் ஓட்டு போட்டாரோ தெரியலையே ?!

ராஜ நடராஜன் said...

பழமை!நான் பாட்டுக்கு ஓரத்துல குந்திகிக்கிறேன்னுதானே சொன்னேன்.என்னை ஏன் ரிங்குக்குள்ள தள்ளி விடப் பார்த்தீங்க?

உங்க தளபதி வேற கும்மாங்குத்தா குத்துறார்:)

ராஜ நடராஜன் said...

அங்கே எத்தனை சேனல்கள் இருக்குது?ரெண்டு பேரும் அது பற்றியெல்லாம் வாயே திறக்குறதுல்ல.விஜய்கிட்ட வந்து குத்தம் சொல்லிகிட்டு:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த அரக்கர்களுக்குக் பிறந்தவர்கள்?

வருண் said...

***பழமைபேசி said...

காக்கா கருமை; அப்ப கருமையா இருக்குறதெல்லாம் காக்கான்னு சொன்னா நாங்க யானைக்கு எங்க போவம்? குயிலுக்கு எங்க போவம்??***

நில்லுங்க, பெரியவரே. கருமையா இருக்கதெல்லாம் காக்கானு சொல்லவே இல்லை! சரியா? :))

*** இப்பெல்லாம் யாரும் விறகடுப்பு பாவிக்கிறதே இல்லை. எல்லாமே எரிவாயு அடுப்புதான். அப்படி இருக்க, எல்லா அப்பா அம்மாவும் அரக்கி அரக்கி விறகு வெட்டிக் கொண்டாறதும் இல்லை.

5 September 2012 3:02 PM***

கேள்வி: கிராமத்திலேகூட இப்போ யாரும் விறகு அடுப்பு வச்சிருக்கதில்லையா? ஒரு 25%-10% விழுக்காடு மக்கள்?

கோயில்ல பொங்க வைக்கிறவா? கல்யாண வீட்டில் சமையல் செய்றவா? இவாள்லாம்கூட?!!!

ஒருவகையில் மரம் வெட்டலைனா, பசுமைப் புரட்சிக்கு உதவும். எந்த கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும். :)))

வருண் said...

***Jayadev Das said...

டீனேஜ் என்பது ஒரு சிக்கலான பருவம், கண்டுக்காம விட்டா குட்டிச் சுவராவது நிச்சயம், ரொம்பவும் போட்டு இருக்கவும் கூடாது. வருண், நீங்களாவது அரக்கனாவாம பாத்துக்கோங்க. :)) ***

என் பதிவில் எல்லாமே முதல் அறிவுரை எனக்குத்தான் ஜெய்வேல். அதை அழகா கோடிட்டு காட்டியதுக்கு நன்றி.

எனக்குத்தெரிய ஒரு தோழி சொன்னாரு. இவரோட அண்ணா (மூத்தவர்) ரொம்ப ஸ்மார்ட் தான். ஆனால் தோழி அவரைவிட ஸ்மார்ட். தோழி மின்னுவதால் தோழியின் அண்ணன், அப்பாவால் பலவிதமான சின்ன சின்ன இன்னல்களுக்கு ஆளானார்னு சொல்ல்வாங்க தோழி.

இங்கே வில்லன் யாருனு சொல்லுங்க.
அண்ணாவா? இல்லை அப்பாவா? இல்லை நம்ம தோழியா? :))



*** \\யாரோ ஒரு அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ பயங்கர கோவம் வந்து, மைனஸ் மதிப்பெண் போட்டிருக்காங்க!\\ எதுல போட்டிருக்காங்க? ***

எவ்ளோ கோவம் வந்தால் ஒருவர் - மதிப்பெண் போடுவார். அப்படி போட்டுட்டு அவருக்கு மனதிருப்தி வந்தால் அதை சத்தியமா நான் வரவேற்கிறேன். :) இதில் தப்பெல்லாம் இல்லை, if one can justify his/her conscience that what he she/he did is CORRECT!

***உங்கள் தமிழ் மனம் ஓட்டுப் பட்டை நான் பார்க்கிரப்போவேல்லாம் செத்துப் போய் கிடக்குது, இன்ட்லியும் வேலை பண்ண மாட்டேங்குது, எங்கதான் அந்த புண்ணியவான் மைனஸ் ஓட்டு போட்டாரோ தெரியலையே ?!

5 September 2012 9:58 PM***
ஓட்டெல்லாம் விடுங்க. உங்களைப்போல எதிர் கருத்தை தைரியமாக சொல்லும் பின்னூட்டங்கள் 1000 ஓட்டுக்கு சமம். :)



வருண் said...


***Blogger ராஜ நடராஜன் said...

பழமை!நான் பாட்டுக்கு ஓரத்துல குந்திகிக்கிறேன்னுதானே சொன்னேன்.என்னை ஏன் ரிங்குக்குள்ள தள்ளி விடப் பார்த்தீங்க?

உங்க தளபதி வேற கும்மாங்குத்தா குத்துறார்:)***

வர வர ப பேசியோட கவிதைகூட எனக்குப் புரியுது. பின்னூட்டங்கள் புரியுறது இல்லை. நல்லவேளை உங்களுக்காகவது புரிந்ததே! :)

நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ! :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

அங்கே எத்தனை சேனல்கள் இருக்குது?ரெண்டு பேரும் அது பற்றியெல்லாம் வாயே திறக்குறதுல்ல.விஜய்கிட்ட வந்து குத்தம் சொல்லிகிட்டு:)

6 September 2012 3:13 AM***

சன் பாக்கேஜ், விஜய் பாக்கேஜ், ஜெயா பாக்காஜ், கலைஞர் பாக்கேஜ்னு டிஷ் நெட்வொர்க்ல வருதுங்க. எங்காத்துல எல்லா எழவும் வருது. What a waste of money! :-)))

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த அரக்கர்களுக்குக் பிறந்தவர்கள்?***

நீங்க ரொம்ப கவனமா பேசனும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. அரக்கர்களுக்கும் அப்ப்டித்தான்.

என் வாயைப் புடுங்கி, எதையாவது சொல்ல வச்சு, அவங்க கிட்ட அடிவாங்கி கொடுக்காதீங்க! புரியுதா? :)

ILA (a) இளா said...

இது ரொம்ப டாபிக் , சுருங்கச் சொல்றதைவிட விளக்கமாச் சொல்லனும்ல

வருண் said...

*** ILA(@)இளா said...

இது ரொம்ப டாபிக் , சுருங்கச் சொல்றதைவிட விளக்கமாச் சொல்லனும்ல

6 September 2012 7:17 AM***

வாங்கோ இளா!! :)

அது சரி, உங்ளுக்கு தெரியாதோ என்னவோ, உண்மைத்தமிழன் அண்ணாச்சி "விளக்கமா சொல்ற பாணியை" பேட்டண்ட் பண்ணி வச்சிருக்காராம்.

அவரு பாணில சொல்லி அவருக்கு ராயல்ட்டி கட்ட நம்மட்ட காசு பணம் இல்லை. எல்லாம் இந்த டிஷ் நெட் வொர்க்குக்கே வீண் செல்வாப் போயிடுது. :(

{ இதுக்கு மேலே என்னால சமாளிக்க முடியாது! :-)))) }

உங்க ஒரு வரி பின்னூட்டமும் ரொம்ப சுருங்கியதால ஒரு சில வார்த்தைகளை காணோம்! இருந்தாலும் புரிஞ்சுக்கிட்டேன் பாருங்கோ. நான் சமர்த்து இல்லையா?