Wednesday, September 12, 2012

செக்ஸ் கலக்காத கதை- பகுதி 1

"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால்" னு சோமுவிடம் எந்த மடையன் சொன்னான்னு தெரியவில்லை! அதையெல்லாம்  நம்பி கண்டதையும் மனைவி வித்யாவிடம் இருட்டில்  உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான் சோமு!

வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா  முடிஞ்சது. அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ் எதுவும் இல்லாம விவாகரத்தானது.

இருவருக்கும் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு வித்யா பின்னாலேயே ஓடிட்டான்.  எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது.

****

அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக இழந்திருந்த சுதந்திரம்  கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது- டைவோர்ஸ்க்கு அப்புறம். சினிமா, பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை இப்போதெல்லாம் அர்த்தமாக செலவழித்துக் கொண்டு இருந்தான், சோமு.

போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல அவளைப் பார்த்தான்.   எக்ஸ் வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அந்த்க் காமினியைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு  "ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள்  நுழைந்து விட்டான்.

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு  புரிந்தது அவனுக்கு.


*****

சோமு-வித்யா தம்பதிகளுக்குள் காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், கருத்து வேறுபாடு வந்தது. அடுத்து  ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போடும்போது,  சோமுவுடைய வரம்புமீறல் மற்றும்  எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை  எளிதில், குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று  நம்பி  அவளிடம் படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள் திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.

"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது  சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?" என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.

அவளோ  "நானும் பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்!" என்றாள் அழுகையுடன்.

"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு"

"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா,  அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்?!"

"ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லாமல், தீர்த்துக்காமல்,  யாருட்டடி சொல்றது?"

"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு! நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க காமப் பித்தையெல்லாம் கேட்டு, அதற்கு தீர்வு சொல்ல?"

"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"

" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக் கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!" னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப் பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா  ஜெண்டில் மேனாக்கும்"

"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா சமச்சுப் போடவா?"

"இனிமேல் யாருட்டனாலும் போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை முழுகியாச்சே?"னு அவ  எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை! ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!

 தனிமரமானான் சோமு!

****

அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம் கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது  காமினிக்கும் அவள் கணவன் ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு பேருக்கும் குழந்தையும் கெடையாது!

ஈவனிங்  பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி"ல  மறுபடியும் காமினியைப் பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப் பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள்  இவனை  "ஸ்டாக்" பண்ணுவதுபோலக்கூட  ஒரு பிரமை.

"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு" என்றாள் காசுவலாக.

"ஐ அம் ஃபைன், காமினி"

"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.

 அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள் போட்டிருந்த பர்ஃப்யூம் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.

"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"

"ரியல்லி?"

"ஏங்க, வித்யா  உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.

"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும். நான் யாரையும் கால் பண்ணலை.  ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.

"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"

"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக் தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள் அழுத்தமாக.

"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"

"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா  ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.

ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.

"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.

"உங்க ஃபோன்  # கொடுங்களேன்?" என்றாள் காமினி.

"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

*************
அன்று இரவு  டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலரியது.

"ஹல்லோ! நாந்தான் காமினி"

"சொல்லுங்க "

"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்"

"என்னங்க?"

"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா?'

"என்னனு?"

"நீங்க ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"

" "

"படுக்கை அறையில்"

" "

"இல்ல, அதுமாரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

- தொடரும்

 (அடுத்த எப்பிசோடில் முடிந்துவிடும்)

6 comments:

Unknown said...

intresting, i am waiting for second part.

வருண் said...

***Unknown said...

intresting, i am waiting for second part.***

Me too! LOL

Unknown said...

அவ் அவ் அவ்

வருண் said...

***Unknown said...

அவ் அவ் அவ்

13 September 2012 7:46 AM***

இதென்னங்க வம்பாப் போச்சு!

நேக்கு என்ன தெரியும், அடுத்து அவா என்ன செய்யப்போறானு?

எல்லாம் பகவானுக்குத்தான் தெரியும்! :-)))

Unknown said...

வருண பகவனுக்கா

வருண் said...

வருண பகவானுக்கு மழை எப்போ வரும்னுதான் தெரியுமாம்!

எதையோ எழுதி ஒரு வழியா முடிச்சாச்சி, அன்-நோன்! ஆனால் வயது வந்தவர்களுக்கு மட்டும்தான் இனிமேல்! :)))