இது ஒரு நகைச்சுவைப் பதிவு! டென்ஷன் எல்லாம் வேணாம்!
* பால் குடிக்கலாமா?
ஊஹூம் கூடாது! காஃபி இல்லைனா டியா போட்டு பாலைக் குடிங்க! அப்போ ப்ரவுனாயிடுது இல்ல?
காஃபிக்கு சீனி போடலாமா? வெல்லம் இல்லைனா கருப்பட்டிதான் போடணும்!
* அப்போ தயிர்? மோர் எல்லாம்?
அதெல்லாம் சாண்ஸே இல்லை!
* சாதம்? வெள்ளைச் சாதம்?!
கூடவே கூடாது! ஒண்ணு பண்ணுங்க, சாம்பார், குழம்பு எதையாவது சாதத்தோட கலந்து கலரை மாத்தி சாப்பிட்டால் ஓ கே!
* சர்க்கரை? வெள்ளை சர்க்கரை, அதான் சீனினு சொல்லுவாங்களே?
அதை மொலாஸெஸ் எல்லாம் பிரிக்காமல் கலந்து சாப்பிட்டால் நல்லது. நீங்க நூறாண்டு வாழலாம்!
* இட்லி, இடியாப்பம், ஆப்பம், வெண்பொங்கல் இதெல்லாம்?
அதான் சொன்னேன் இல்லை, ஏதாவது குழம்பு, அல்லது சாம்பாரை கலந்து, கலரை மாத்தி ஒரு பிடி பிடிங்க!
Anyway, enough BS!
நண்பர் ஜெயதேவ், சர்க்கரையை ரிஃபைன் பண்ணாமல் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதுனு ஏதோ சொல்றாரு..
ஆனால் இப்போலாம் காலரிகள்தான் கணக்கு செய்றாங்க! இதை சாப்பிடக்கூடாது இதை சாப்பிடலாம் என்பதெல்லாம் யாரும் ரொம்ப பெருசு படுத்துவதில்லை!
சப்போஸ் உங்களுக்கு கொலெஸ்டிரால் அதிகமா இருந்தால் எதை குறைப்பீங்க?
ஆயில், மாமிசம் அது இதுனு சொல்லுவீங்க! அப்படித்தானே?
உங்க டோட்டல் கொலெஸ்டிரால் எப்படி கணக்கு பண்ணுவாங்க என்றால், உங்க ரத்தத்தில் இருக்க எல் டி எல் கொலெஸ்டிரால், எச் டி எல் கொலெஸ்டிரால் வி எல் டி எல் கொலெஸ்டிரால் அப்புறம் உங்க ட்ரைக்ளிசரைட் எல்லாத்தையும் போட்டு கூட்டித்தான் தருவாங்க.
அரிசியை எல்லா நேரமும் சாப்பிடுறவங்க உங்க ரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசரைடை குறைத்தாலே கொலஸ்டிராலை குறைத்துவிடலாம்.
அதுக்கு என்ன செய்யணும்?
கார்போஹைட்ரேட் இன் டேக், அதாவது மெயினா அதிகமாக சாதம் சாப்பிடுவதை, பொட்டட்டோ சாப்பிடுவதை குறைக்கணும்! ஆயில், மாமிசம் சாப்பிடுவதை அல்ல! மாமிசம், ஆயிலை எல்லாம் குறைத்துவிட்டு சாதம் அதிகம் சாப்பிடுவது உங்க கொலெஸ்டிராலை கூட்டும்! :)
அதோட ரெகுளராக "வொர்க் அவ்ட்" டும் பண்ணணும்! :)
******************
சரி, நம்ம வெல்லம் (மண்ட வெல்லம்? அச்சு வெல்லம்? ) அப்புறம் கருப்பட்டி எல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கனு போய் தேடிப் பார்த்தால்... நண்பர் ஒருவர் கருப்பட்டி எப்படி தயாரிக்கிறதுனு சிரத்தையுடன் ஒரு குறும்படம் எடுத்துப் போட்டு இருக்காரு.
ராம்நாட் மாவட்டத்தில் சாயல்குடியில் பனைத்தொழில் செய்றவங்க, எப்படி கருப்பட்டி த யாரிக்கிறாங்கணு விவரித்து இருக்காரு.
I thought it was interesting!
Please check out this youtube link!
இந்த குறும்படம் தயாரித்ததின் நோக்கமும் இங்கே கொடுத்துள்ளார்.
Published on Oct 17, 2012
This documentary describes the day-in-life of a person who makes Karuppatti (Palmyra Sugar) from Pathaneer (Palmyra sap).
பதநீரில் இருந்து கருப்பட்டி (பனைவெல்லம்) செய்யும் ஒரு குடும்பத்தின், வாழ்க்கையின் ஒரு நாளைப் படம் பிடித்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.
தனக்குக் கடன் கொடுத்த வியாபாரி அல்லது இடைத்தரகர்களுக்கே நியாயமற்ற விலையில் விற்கவேண்டிய கட்டுப்பாடு. தாங்கள் உண்டாக்கிய பொருளைத் தன்னால் விலை நிர்ணயிக்க முடியாத ஒரு சூழலில், கிட்டத்தட்ட ஒரு அடிமைத்தொழிலாளி போல, அபாயங்களின் விளிம்பிலும், அரைநிர்வாண ஆடையிலும், கொட்டும் மழையிலும், கொழுத்தும் வெய்யிலிலும், அனல் பறக்கும் இராச்சச அடுப்பின் வெப்பத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் நிலையை, ஒரு துளியளவு மாதிரி என ஒரு குடும்பத்தை எடுத்து மக்களுக்குக் காட்டும் முயற்சி... தங்களோடு பிண்ணிப்பிணைந்த இந்தத் தொழிலை விட்டு இவர்களால் வெளி வர முடியுமா? அவர்களின் அடுத்த தலைமுறை இதிலிருந்து வெளிவர வேண்டாமா? இவர்களை மீட்க நாம் என்ன செய்ய முடியும்? இல்லை, இவர்கள் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டுமெனில், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமெனில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும்? சற்றே யோசிப்போம்.
அன்புடன்
ஆறுமுகம் பேச்சிமுத்து
_________________________
அவ்ளோதான்! :)
7 comments:
நம்ம திருப்பதி வெங்கி பக்தர் கௌண்டமணி அய்யா, "கருப்பட்டி சாப்பிட்டால், உடம்புக்கு பயங்கர கெடுதல்" என்றார்.
எவன் சொல்லியிருந்தாலும் நான் கேட்டு இருக்கமாட்டேன்...ஆனால், இவர் பெரிய நடிகர் மட்டுமல்ல பெரிய ஆண்மீகவதியும் கூட. அதனால், கௌண்டமணி பேச்சைக் கேட்டு கருப்பட்டி சாப்பிடுவதை விட்டுவிட்டு, நாட்டு சர்க்கரை சாப்பிட ஆரம்பித்தேன்.
அப்படி நாட்டு சர்க்கரை சாப்பிட ஆரம்பித்தபோது...
நம்ம ராஜ் கிரண் சார், நாட்டு சர்க்கரை உடம்புக்கு மிக மிக மிக நல்லது; ஆனால், நாட்டு சர்க்கரை சாப்பிடுவது குடும்பத்துக்கு அகவே ஆகாது என்றார்.
ராஜ் கிரண் சார் சாதாரண ஆள் இல்லை; அவரும் ஒரு பழுத்த ஆன்மீகவாதி என்பதால் அவரிடம் ஏன் அப்படி என்று கேட்டால், நாட்டு சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் "நாட்டு கட்டைகள்" அதிகாமாக உங்களை தேடிவருவார்கள்" என்றார்.
என்னே அறிவு! இது மாதிரி ஆராய்ச்சி எல்லாம் தமிழ் சினிமா நடிகர்களால் மட்டும் தான் செய்யமுடியும். இதில் இருந்து தெரிவது உலகிலேயே அறிவாளிகள் உலாத்தும் ஒரே இடம் கோடம்பாக்கம் தான்...!
***நாட்டு சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் "நாட்டு கட்டைகள்" அதிகாமாக உங்களை தேடிவருவார்கள்" என்றார்.***
நெஜம்மாவே அவர் அப்படி சொன்னதுபோல சொல்றீங்க? அவர் என்னதான் சொன்னாருங்க? :)
தளபதி, இங்க வாரும்வே... அட்டகாசமான காணொலி... நன்றி சொல்லியே ஆவணும்!!
இந்த கட்டுரை முழுசுமே நான் சொன்னது எதுவும் இல்லை பலவற்றை திரித்து இட்டுகட்டி புனைத்து எழுதியிருக்கீங்க. இதெல்லாம் நியாயமே இல்லை.
பால் சேர்ப்பது குறித்து எனக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் டீ , காபி போட்டால் அதில் வெள்ளம் சேர்ப்பது கடினம் அங்கே பாலை தவிர்க்கலாம் பாலை தனியாக குடிக்கலாம் தயிர், மோர் வெண்ணெய் எதிலும் நமக்கு ஆட்சேபனை இல்லை.
\\சாதம்? வெள்ளைச் சாதம்?!\\ கைக்குத்தல் அரிசி எனப்படும் பிரவுன் அரிசி நல்லது பாலிஷ் செய்தால் பிரச்சினை
\\* இட்லி, இடியாப்பம், ஆப்பம், வெண்பொங்கல் இதெல்லாம்?\\ இதெல்லாம் ஓவரு. நான் இதுகுறித்து ஒன்னும் சொல்லவில்லை.
\\இப்போலாம் காலரிகள்தான் கணக்கு செய்றாங்க! இதை சாப்பிடக்கூடாது இதை சாப்பிடலாம் என்பதெல்லாம் யாரும் ரொம்ப பெருசு படுத்துவதில்லை!\\ இப்படியெல்லாம் கணக்கு பார்த்து சாப்பிட்டிருந்தா நாட்டில் வியாதிகள் குறைய ஆரம்பித்திருக்கணும் ஆனால் உடல் எடை உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி எல்லாம் வரலாறு காணாத அளவில் அதிகரித்துக் கொண்டே போகிறது எங்கே தவறுகிறோம் என்று யோசியுங்கள் படிச்சவன் கணக்குதான் காமிப்பான் solution எதுக்கும் தரமாட்டான் நாமதான் சூதனமா இருக்கணும்.
\\அப்புறம் கருப்பட்டி எல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கனு போய் பார்த்தால், நண்பர் ஒருவர் கருப்பட்டி தயாரிக்கிறது எப்படினு சிரத்தையுடம் படம் எடுத்துப் போட்டு இருக்காரு.
\\\ அவங்களை அரசு ஆதரிச்சு காப்பாற்றனும் மாறாக கொடுமைப் படுத்துறாங்க, என்ன பண்ணுவது?
***பழமைபேசி said...
தளபதி, இங்க வாரும்வே... அட்டகாசமான காணொலி... நன்றி சொல்லியே ஆவணும்!!
13 June 2013 10:08 pm***
மணியண்ணா, உங்ககிட்ட இருந்து இந்தமாதிரி "காம்ப்ளிமெண்ட்" வாங்குறது ரொம்ப கஷ்டமாச்சே! :))
கவனிச்சுப் பார்த்தால், என்னை தூண்டிவிட்டு இதை தேடி எடுக்க வைத்த ஜெயதேவுக்குத்தான் பாதி நன்றி போய்ச் சேரணும்! :)
***Jayadev Das said...
இந்த கட்டுரை முழுசுமே நான் சொன்னது எதுவும் இல்லை பலவற்றை திரித்து இட்டுகட்டி புனைத்து எழுதியிருக்கீங்க. இதெல்லாம் நியாயமே இல்லை.
பால் சேர்ப்பது குறித்து எனக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் டீ , காபி போட்டால் அதில் வெள்ளம் சேர்ப்பது கடினம் அங்கே பாலை தவிர்க்கலாம் பாலை தனியாக குடிக்கலாம் தயிர், மோர் வெண்ணெய் எதிலும் நமக்கு ஆட்சேபனை இல்லை.
\\சாதம்? வெள்ளைச் சாதம்?!\\ கைக்குத்தல் அரிசி எனப்படும் பிரவுன் அரிசி நல்லது பாலிஷ் செய்தால் பிரச்சினை
\\* இட்லி, இடியாப்பம், ஆப்பம், வெண்பொங்கல் இதெல்லாம்?\\ இதெல்லாம் ஓவரு. நான் இதுகுறித்து ஒன்னும் சொல்லவில்லை.
\\இப்போலாம் காலரிகள்தான் கணக்கு செய்றாங்க! இதை சாப்பிடக்கூடாது இதை சாப்பிடலாம் என்பதெல்லாம் யாரும் ரொம்ப பெருசு படுத்துவதில்லை!\\ இப்படியெல்லாம் கணக்கு பார்த்து சாப்பிட்டிருந்தா நாட்டில் வியாதிகள் குறைய ஆரம்பித்திருக்கணும் ஆனால் உடல் எடை உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி எல்லாம் வரலாறு காணாத அளவில் அதிகரித்துக் கொண்டே போகிறது எங்கே தவறுகிறோம் என்று யோசியுங்கள் படிச்சவன் கணக்குதான் காமிப்பான் solution எதுக்கும் தரமாட்டான் நாமதான் சூதனமா இருக்கணும்.
\\அப்புறம் கருப்பட்டி எல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கனு போய் பார்த்தால், நண்பர் ஒருவர் கருப்பட்டி தயாரிக்கிறது எப்படினு சிரத்தையுடம் படம் எடுத்துப் போட்டு இருக்காரு.
\\\ அவங்களை அரசு ஆதரிச்சு காப்பாற்றனும் மாறாக கொடுமைப் படுத்துறாங்க, என்ன பண்ணுவது?***
நான் உங்களுக்கு சொல்ல வர்ரது ஒண்ணே ஒண்ணுதான். கருப்பட்டி/வெல்லம் எல்லாம் எம்புட்டுவேணா சாப்பிடலாம், ஆனால் இந்த ரிஃபிண்ட் சுகரை மட்டும் தள்ளி வைங்க என்பதுபோல் இருக்கு உங்க பதிவு. அந்தக் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. அதை நான் உங்க பதிவுலயே சொல்லீட்டேன்.
மற்றபடி இந்த் கருப்பட்டி தயாரிக்கிற விதத்தை உலகுக்குக் காட்டத்தான் இந்தப் பதிவு. மற்றபடி மேலே உள்ளதெல்லாம் (நீங்க் அதிரித்ததாக குற்றம் சாட்டும்) சும்மா நகைச்சுவைக்காகனு நான் சொல்லிட்டேன். நீங்க புரிந்துகொள்வீங்க. அவ்ளோதான்! :)
Post a Comment