Thursday, August 1, 2013

ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?

வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது.

வியாசன்..

* தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார்.

* பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடாது என்கிறார்..

* ராஜ ராஜ சோழன் செய்த சாதனைகளை எல்லாம் சிங்களவர்கள் அழிக்கிறார்கள்! தமிழர்களின் சாதனைகளை எல்லாம் வரலாற்றில் இருந்து அகற்றப்படுகிறது என்கிறார்.

இந்தியாவில், பாபர் மசூதியை அகற்றவில்லையா? அதுபோல்தான்  இதையும் செய்கிறார்கள் என்று விளக்க முயன்றால்.. "நம் தமிழர்கள் அப்படி செய்யவில்லை!" "நினைக்கவில்லை" என்கிறார். இவருக்கு தமிழர் சம்மந்தமில்லாத எந்த ஒரு பிரச்சினையும், பிரச்சினையே இல்லை! நம்ம ஊர் காந்தியெல்லாம் ஒரு மனுஷனே இல்லை! பெரியாரை எல்லாம் எள்ளளவும் இவர் புரிந்துகொண்டதாகவும் தெரியவில்லை! புத்தனை அறவே வெறுப்பவர் இவர்னு நினைக்கிறேன். பொதுவாக மேற்கூறிய  எல்லா விசயங்களிலும் நம்ம ஊர் பார்ப்பனர்கள் நிலைப்பாடும் வியாசன் நிலைப்பாடு போல்தான்! பார்ப்பானுக்கு புத்தனையும், காந்தியையும், பெரியாரையும் பிடிக்காதுனு பார்ப்பனரை கவனித்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்!

இவர் வியாசர்னு பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ பதிவுலகில் தமிழ் பிராமணர்களிடம் அன்பாவும் பரிவாகவும் நடந்துகொள்கிறார். யாரோ ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க இருக்கிறேன், என்கிறார் இந்த அன்பர். இவரை ஏதாவது விவாதங்களில் சாடினால் நான் உங்க "மாப்பிள்ளை"தான்னு அன்புடனும் கோபத்துடனும் சொந்தம் கொண்டாடுகிறார். :)

எனக்கு இவர் சிந்தனைகள் சரியாகப் பிடிபட மாட்டேன் என்கிறது. இவர் மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களிடம் இதேபோல் உணர்ந்து இருக்கிறேன்.

தமிழன் என்கிற அடையாளம் தவிர நாம் இவ்வுலகில் வாழும் ஒரு "நல்ல மனுஷன்" "கெட்டவன்" என்கிற ஒரு பொது அடையாளமும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழன் என்கிற அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு, உலக நடப்பை, நல்லது கெட்டதை பார்க்கவும் செய்யலாம். ஒரு சாதாரண மனிதனாக. உலக விசயங்களை நாம் விவாதிக்கலாம். இதுபோல் விவாதங்கள செய்வது, நல்லவற்றை மற்றவர்களிடம் கண்டறிந்து வியப்பது, போன்றவை வியாசன் மட்டுமல்லாமல் பல ஈழத்தமிழர்களால் முடியவே முடியாதா?! அவர்களால் சுத்திச் சுத்தி தமிழன், தமிழ் என்கிற ஒரு அடையாளத்திலிருந்து வெளிவர முடியாது என்றே எனக்குத் தோனுகிறது!

"தமிழ்" "தமிழன்" என்கிற ஒரு குறுகிய வட்டத்தில் வாழும்  இவர்களிடம் ஏதோ ஒன்று இவர்களிடம் இல்லாதமாரி எனக்கு தோனுது. இவர்கள் பட்ட கஷ்டங்கள், பட்டுக்கொண்டிருக்க கஷ்டங்களால் இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களா? இல்லைனா இயற்கையிலேயே இவர்கள் இப்படித்தானா? என்கிற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.

புத்தர், காந்தி, பெரியார் போன்றவர்களுடைய எண்ணங்களை, சிந்தனைகளை இவர்களால் சுத்தமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் ஏதாவது சொல்லியிருந்தால் மட்டுமே அந்தக் கருத்தை கவனிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். மற்றவர்கள், அது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன சொல்லியிருந்தாலும் அவர்களை, அவர்கள் சொன்ன கருத்துக்களை புறக்கணிக்கிறார்கள்.

உலகம் என்கிற கடலில்  தமிழர்கள் ஒரு சின்னத்துளிதான் என்பது இவர்களுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை! தமிழனல்லாதவன் எவனாக இருந்தாலும், அவனுடைய  நற்சிந்தனைகளை, வரவேற்பது,  பாராட்டுவது போன்ற பெரிய மனது இவர்களிடம் இல்லை என்றும் பல சமயங்களில் எனக்குத் தோன்றுகிறது.

ஒரு வகையில் இது நம் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் குறுகிய சிந்தனை  போலவே இவர்கள் சிந்தனையும் இருப்பதாக எனக்குத் தோனுகிறது. பார்ப்பனர்களுக்கு திராவிடர்கள் வாழ்க்கை முறை பண்பாடுகூட சரியாத் தெரியாதுனு சொல்லலாம். அவர்கள் பிரச்சினை, இந்து மதத்தை காப்பாத்தனும், பார்ப்பானை எவனும் எதுவும் சொல்லிவிடக்கூடாது. அது பத்திரிக்கை வேசித்தனம் செய்யும் சோமாரி ராமசாமியாக இருந்தாலும் சரி, தன்னை உயர்சாதினு பிதற்றும் எந்த அரைவேக்காட்டுப் பார்ப்பானாக இருந்தாலும் சரி! அல்லது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்கராச்சாரியாக இருந்தாலும் சரி! பார்ப்பான் நிலைப்பாடு ஒண்ணே ஒண்ணுதான். நம்மோடைய இருந்து, நம்முடனே வாழ்ந்து தண்ணீரும் எண்ணையும்போல்தான் பார்ப்பனர்கள் என்றுமே  நம்முடன் வாழ்கிறார்கள்.  ஈழத்தமிழர்களும் நம் பார்ப்பனர்களைப் போலவே "தமிழன்" "தமிழ் அடையாளம்" என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் இந்த மிகப் பெரிய உலகில்  வாழ்வதாக எனக்குத் தோன்றுகிறது.

இது உண்மையா? என்னைப்போல் வேறு யாரும் உணர்ந்து இருக்கீங்களா? இல்லை நான் சும்மா பிதற்றுகிறேனா? நாகரீகமான எதிர்வாதம் வரவேற்கப்படுகிறது! நன்றி

26 comments:

ப.கந்தசாமி said...

ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

Rizi said...

அதிகமான ஈழத்தழிழர்களின் மனநிலையை மிகச்சரியாக புரிந்து எழுதியிருக்கிறீர்கள்.. என்னுடைய கருத்தும் அதே!

அவர்களால் "தமிழன்" என்ற சிறிய வட்டத்திலிருந்து தாண்டி வர முடியவில்லை.. அப்படி நினைத்திருந்தால் "தனிநாடு" என்ற கோரிக்கை மூலம் ஆயிரக்கனக்கான அப்பாவிகளின் உயிர்களை இழந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது..

இதை நான் சொல்வதால் என்னையும் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குகிறான என்பார்கள். அவர்களின் மனநிலை அப்படி!

Rizi said...

//இவர்களிடம் ஏதோ ஒன்று இல்லாதமாரி எனக்கு தோனுது.//

சகிப்புத்தன்னை,பிரச்சினைகளை பேசி முடிவெடுக்கும் திறன், விட்டுக்கொடுத்தல் இவைதான் இவர்களிடம் இல்லாதது பிரிவினை மட்டுமே நிறைய இருக்குறது

நான் சரியாத்தான் பேசுறானா?

நன்னயம் said...

@பழனி. கந்தசாமி,

"ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை."

புரிந்து கொள்ள என்ன முயற்சி செய்தீர்கள் , புரிந்து கொண்டு என்ன தான் செய்ய போகின்றீர்கள்

வருண் said...

வாங்க கந்தசாமி சார்!

நீங்களும், ரிஷியும் என்னோட சேர்ந்து தமிழின துராகியாகிட்டீங்க!

நம்ம எத்திகாலிஸ்ட் மட்டும் தமிழ் பற்றாளராகவும், தமிழர்களுக்காகப் போராடி பலமுறை உயிரை இழந்த "பொணமாகத்தான்" இங்ஏ வந்து இந்த பின்னூட்டமிட்டு இருக்கிறார்!

நன்னயம் said...

"அவர்களால் "தமிழன்" என்ற சிறிய வட்டத்திலிருந்து தாண்டி வர "

அது சரி ரிஷி நீங்க முஸ்லிம்கள் என்ற வட்டத்தில் இருந்து எப்போ வெளியே வர போறீங்க

நன்னயம் said...

வருண் தேவையில்லாம நீங்க ஏன் .........ய் மாதிரி என் மேல் பாயுறீங்க.

நான் கமெண்ட் போட்டது கந்தசாமிக்கு. அவர் பதில் சொல்லட்டும்

நன்னயம் said...

"சகிப்புத்தன்னை,பிரச்சினைகளை பேசி முடிவெடுக்கும் திறன், விட்டுக்கொடுத்தல் இவைதான் இவர்களிடம் இல்லாதது பிரிவினை மட்டுமே நிறைய இருக்குறது"

என்ன சகிப்புத்தன்மை பற்றி முஸ்லிம் நீங்க பேசுறீங்களா ......................

அப்பப்பா இப்பவே கண்ணை கட்டுதே

சாத்தான் வேதம் ஓதக்கூடாது

(இது ரிஷிக்கு மட்டும் தான் இந்த பதில். வருணுக்கு அல்ல. வருண் ரெஸ்ட் எடுக்கலாம் )

வருண் said...

****Ethicalist E said...

வருண் தேவையில்லாம நீங்க ஏன் .........ய் மாதிரி என் மேல் பாயுறீங்க.

நான் கமெண்ட் போட்டது கந்தசாமிக்கு. அவர் பதில் சொல்லட்டும்***

//கோடிட்ட இடத்தை நான் நிறப்பனுமா?? வருண் தேவையில்லாம நீங்க ஏன் "நாய்" மாதிரி என் மேல் பாயுறீங்க.///

சரிதானே? தமிழினப் பொணமே???

---------------

நீங்க சொன்னதையே நானும் சொல்றேன்..உங்க கருத்தை சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே?? ஏன் கந்தசாமி சார் மேலே பாயுறீங்க??

அவருக்கு அவர் குழப்பத்தை வெளியிட உரிமை இருக்குனு ஏன் உங்களுக்குப் புரியலை???

நன்னயம் said...

"சரிதானே? தமிழினப் பொணமே???"

முதலில் நாகரீகத்தை கற்று கொள்ளுங்கள்

நன்னயம் said...

நான் கந்தசாமியிடம் கேட்டது உங்க குழப்பத்தை தீர்க்க என்ன முயற்சி செய்தீர்கள் என்று.
"புரிந்து கொள்ள என்ன முயற்சி செய்தீர்கள் ,"

நன்னயம் said...

தமிழர்களின் பிரச்சினையில் குளிர் காய்வதுக்கு என்றே ஒரு கூட்டம் அலைகின்றது


(இதுவும் வருணுக்கு அல்ல )

நன்னயம் said...

"//கோடிட்ட இடத்தை நான் நிறப்பனுமா?? வருண் தேவையில்லாம நீங்க ஏன் "நாய்" மாதிரி என் மேல் பாயுறீங்க.///

கோடிட்ட இடத்தை எப்படியும் நிரப்பலாம். நான் நினைச்சது பாய் மாதிரி

குலசேகரன் said...

ஈழத்தமிழர்களில் மூவகை மதவழியாக: இந்துக்கள்; கிருத்துவர்கள் மற்றும் இசுலாமியர்கள்.

மூவருக்கும் உள்ள ஒற்றுமைகள்; தமிழ் மீது தமிழ்நாட்டுத்தமிழர்களைவிட நல்ல பற்று; (நான் போட்ட ஆங்கிலப்பின்னூட்டங்களைப் போட மாட்டோம் எனச்சொன்ன ஈழத்தளங்கள் ஏராளம்); தமிழ் பேச்சுவழக்கு (டொகடர்) கிட்டத்தட்ட மலையாள அக்ஸண்ட்.; உணவுப்பழக்கங்கள.

வேற்றுமைகள்: மதத்தினவழியே.

கிருத்துவர்கள் விலகிக்கொள்ளவில்லை. இசுலாமியர் கொண்டார்கள். விடுதலைப்புலிகளால் இசுலாமியர்கள் தங்களை ஈழப்போராட்டத்திலிருந்து பிரித்துக்கொண்டார்கள். எங்கும் இசுலாமியர்கள் தங்கள் மதத்தைத்தான் முன் வைத்து அனைத்தும் பின் தள்ளி அழித்துக்கொள்வார்கள். எனவே இஃதொன்றும் வியப்பன்று.

இப்போது உங்கள் தலைப்பிலுள்ள கேள்விக்குப் பதில்.

இக்கேள்வி ஈழத்தவருள் இந்துக்களைமட்டுமே குறிக்கும். இவர்களின் மதம் தமிழ்ச்சைவம். இது வைதீக பார்ப்பனருள் ஐயரென்போரால் தமிழருக்குக் கொடுக்கப்பட்டது. சித்தர்களும் நாயன்மார்களும் உருவாக்கியது அவர்களுள் பலர் வெவ்வேறு ஜாதிக்காரர்களாக இருந்தாலும் வடித்தெடுத்து ஈந்ததும் போற்றிப்பாராட்டிக்காப்பாற்றியதும் வைதிக ஐயர்கள்.

இவர்கள் கொடையை வைத்தே ஈழத்துச்சைவம் வந்தது. இம்மதத்தில் ஈழத்த்தவரின் ஈடுபாடு அளப்பறியது; அலாதியானது. அஃதாவது,

தமிழ்நாட்டு மக்களைவிட இவர்கள் சைவ்ப்பற்று நேர்த்தியும் ஆழப்பற்றும் உடையது.

எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியில் சைவசித்தாந்த சபை உண்டு. அதன் நூற்றாண்டு விழா பத்துநாட்களில், ஒரு நாள் சைவ மங்கையருக்கென்று ஒதுக்கப்பட்டது. இவர்கள் அனைவரும்யாழ்ப்பாணத்திலிருந்து வந்தார்கள். ஈழத்துச்சித்தர்கள் நிறைய உண்டு. I juimp to English now.

குலசேகரன் said...

The iyers who went to Yaazh to serve in their temples showed a different character there namely, they were integrated and are liked. For e.g. in the eelam war, the priest's daughter was raped in front of him, and then both were brutally killed. In other words, unlike the tamil brahmins here, the iyers of yaazh became fellow sufferers there. What made you hate Tamil brahmins here are not at found among the Iyers of Yaazh. Their speech and life style is integrated.

The religion is common and loved; the brahmins are one with the masses. Now, you know, there is hardly any reason to segregate the brahmins and flagellate them as you do here, for the eelam non brahmin population. It may also be put in other way i.e there is no reason for the emergence of Periyaar there.

Love me and love my dog. It means in one sense, if you love a person dearly, you will overlook all other defects and even love the defects.

So, love of religion led to love of the creators or executors of the religion.

குலசேகரன் said...

The Yaazh Hindus are comparable to Nattukkoottai chettiyaars. Exactly the same characteristics. Look at Kannadasana's brahmin idolatry. He was unable to fit into the Dravidian politics only because he imbibed fully the religion of the Tamil brahmins. The vaideega variety.

Vyasan reflect the same charactersitics. All that is past should be left unquestioned. If questioned and defects pointed out, he says Tamil culture is in danger !

It is burying your head in the sand !

Yaash Xians dont have this Brahminical fixation. The fixation comes from the religion. As they have a different religion, no question of going near the Brahmins for them.

One simple fact is to be mentioned. It is possible to be a Hindi of vaideega variety w/o adulating the Tamil brahmins if only you delink them from castestic tag. Many siththars have done that. It is possible. But only on personal level. As a group, it is not. So, Vyasan hasnt become an individual and is a part of the crowd.

Over.

வருண் said...

***இது வைதீக பார்ப்பனருள் ஐயரென்போரால் தமிழருக்குக் கொடுக்கப்பட்டது.***

என்னங்க்ச் இங்கேயும் பார்ப்பானா!!!

பார்ப்பனர்களின் சாதனைகள் காலங்காலமா தொடருது. இன்னைக்கும் பார்ப்பனர்கள் ஆண்டால்த்தான் திராவிட நாய்களுக்கு ஒரு திருப்தி இருக்கு!

பேசாமல் நானும் உலகத்தைப்போல பார்ப்பானுகளை வணங்கி வழிபடலாம்னு பார்த்தால் எனக்கு அவனுகமேலே "பக்தி" வரமாட்டேங்கிது :(

குலசேகரன் said...

//தமிழர்களின் பிரச்சினையில் குளிர் காய்வதுக்கு என்றே ஒரு கூட்டம் அலைகின்றது


(இதுவும் வருணுக்கு அல்ல )//

அப்படியென்றால் மற்றவருக்கென்றெடுத்து பதில் சொல்லலாம்.

இங்கு பேசப்படுபொருளுக்கும் ஈழப்பிர்ச்சினைக்கும் தொடர்பேயில்லை.

ஈழப்போர் 60 ஆண்டுகளாக. அதன் முன் அது உருவெடுத்திருக்கலாம். அப்போருக்குப்பின் அலலது அதனுடன் ஈழத்தவரின் எண்ணங்கள் வேறுமாதிரியாக உருவெடுத்தன. அதற்கு முன் அவர்கள் எண்ணங்கள் வேறே.

இங்கு வியாசன் வழியாக காட்டப்படும் குணக்கூறுகள் விவாதத்துக்கு எடுத்துப்பேசப்படுகிறது. அவை ஆதிகாலமுதல் ஈழத்தவருடன் உண்டு. தமிழ்ச்சைவம் ஒளிபரப்பியது நாயன்மார்கள் காலம். திருநீலகண்ட நாயனரே ஈழத்தவர் என்றறிகிறோம்.

அன்றிலிருந்து இன்றுவரை 'தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!" என்று வழிபாட்டு வாழ்க்கையக்கொண்டதனால், அவ்வாழ்க்கையைக்கொடுத்தோருக்கு அவர்கள் கடன்பட்டிருக்கிறார்கள் போலும்.

எதிகலிஸ்ட், எப்படி 10ம் நூற்றாண்டையும் இருபத்தொன்றாம் நூற்றாண்டையும் இணைக்கிறீர்கள். Please contribute to the discussion prper.

நன்னயம் said...

@குலசேகரன் ,

மன்னிக்கவும் நான் 10ம் நூற்றாண்டையும் 20ம் நூற்றாண்டையும் இணைக்கவில்லை.
எனது பின்னூட்டம் பேசுபொருளான வியாசனின் பதிவு தொடர்பானது அல்ல.

இங்கு பின்னூட்டம் போட்ட இஸ்லாமியரான ரிஷியின் பின்னூடங்களுக்கு பதிலாக போட்டேன்

Aashiq Ahamed said...

@ குலசேகரன்,

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

//எங்கும் இசுலாமியர்கள் தங்கள் மதத்தைத்தான் முன் வைத்து அனைத்தும் பின் தள்ளி அழித்துக்கொள்வார்கள்//

தங்களின் இந்த கருத்துக்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றேன். பதிவிற்கு சம்பந்தம் இல்லாத சீண்டலாகவே இதனை கருதுகின்றேன்.

முஸ்லிம்கள் தங்களின் மதத்தை முன்னிறுத்தி அழித்துக் கொள்வார்களா? அல்லது வாழ்வார்களா? என்பது குறித்து விவாதிக்க தாங்கள் விரும்பினால் என்னுடைய தளத்திற்கு வரலாம் (http://www.ethirkkural.com). இந்த தளத்தை பதிவிற்கு சம்பந்தமில்லாத விவாத பொருளாக்க வேண்டாம்.

நன்றி..

Anonymous said...

வியாசனின் கருத்துக்கள் ஒட்டு மொத்த தமிழ் இலங்கையரின் கருத்தாகாது, ஆனால் வடக்குத் தமிழர்களின் பொதுப் புத்தியை அவர் பிரதிபலிக்கவே செய்கின்றார். சைவ, கத்தோலிக்க மதவாதம், தமிழ் மொழி, சாதியம், குறுகிய சகிப்புத்தன்மையற்ற முதலாளித்துவ சிந்தனவாம், இந்திய வெறுப்புணர்வு, போன்றவை வெகு இயல்பாய் காணலாம். விரிவாக விவாதிக்க முயல்கின்றேன்.

வருண் said...

***நிரஞ்சன் தம்பி said...

வியாசனின் கருத்துக்கள் ஒட்டு மொத்த தமிழ் இலங்கையரின் கருத்தாகாது, ஆனால் வடக்குத் தமிழர்களின் பொதுப் புத்தியை அவர் பிரதிபலிக்கவே செய்கின்றார். சைவ, கத்தோலிக்க மதவாதம், தமிழ் மொழி, சாதியம், குறுகிய சகிப்புத்தன்மையற்ற முதலாளித்துவ சிந்தனவாம், இந்திய வெறுப்புணர்வு, போன்றவை வெகு இயல்பாய் காணலாம். விரிவாக விவாதிக்க முயல்கின்றேன்***

நிரஞ்சன் தம்பி: உங்க சரியான புரிதலுக்கு நன்றி! :)

வருண் said...

***Ethicalist E said...

@குலசேகரன் ,

மன்னிக்கவும் நான் 10ம் நூற்றாண்டையும் 20ம் நூற்றாண்டையும் இணைக்கவில்லை.
எனது பின்னூட்டம் பேசுபொருளான வியாசனின் பதிவு தொடர்பானது அல்ல.

இங்கு பின்னூட்டம் போட்ட இஸ்லாமியரான ரிஷியின் பின்னூடங்களுக்கு பதிலாக போட்டேன் ***

ரிஷி ஒரு இஸ்லாமியத் தமிழர் னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது.

When I look at your name, it sounds like you are a British and might be a Christian. I cant figure out your caste.

Why dont you tell about yourself so that everybody will know who you are and what religion you follow and your caste of course! Thanks!

உஷா அன்பரசு said...

முதல் கணினி அனுபவம் தொடர் பதிவை நீங்களும் தொடர என் பதிவில் கேட்டிருந்தேன்.. பார்த்தீர்களா? விரும்பினால் நேரம் கிடைக்கும் போது சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி! ( என்னுடைய கமெண்ட் பாக்ஸ் இத்தனை நாட்களாக எதோ பிரச்சினையால் வேலை செய்யவில்லை அதனால்தான் தாமதம்..! இப்போது சரி செய்து விட்டேன்)

வருண் said...

வாங்க உஷா!

***முதல் கணினி அனுபவம் தொடர் பதிவை நீங்களும் தொடர என் பதிவில் கேட்டிருந்தேன்..***

நான் கவனிக்கவில்லைங்க. மன்னிச்ச்சுக்கோங்க. நல்லவேளை சொன்னீங்க. :)

முதல் கணிணி அனுபவம், முதல் காதல் அனுபவம், காதல் கடிதம் லாம் எழுதணும்னா நெறையா என்னைப்பற்றி உண்மைகளை சொல்ல வேண்டிவரும் என்பதால் அதிலெல்லாம் நுழைவதில்லைங்க :)
என்னை மதித்து அழைத்ததற்கு நன்றிங்க! :)

***என்னுடைய கமெண்ட் பாக்ஸ் இத்தனை நாட்களாக எதோ பிரச்சினையால் வேலை செய்யவில்லை அதனால்தான் தாமதம்..! இப்போது சரி செய்து விட்டேன்.**

Glad you fixed the problem now. :)

Paramasivam said...

Though I am from Tamilnadu, and also non-Brahmin, I concur with most of Vyasan's views (except of course on his hatred towards India and his views on Elam war). I am of the view that the sympathy for Elam Tamils amongst people of Tamil Nadu, was greatly reduced after Rajiv assassination (I shifted from Tamil Nadu recently). Hence your views on Vyasan, is one-sided.
Parian/US