Friday, April 11, 2014

ஒரு வழியாக ரசினிக்கு மேலே போன ஒலகனாயகன்!

தீபிகா படகோன் மற்றும் சோனாக்ஷி சின்ஹா இருவரும் விஸ்வரூபம் ஸ்க்ரிப்ட் பிடிக்காதனால ஒலகனாயகன் படத்தில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுங்கிவிட்டார்கள். என்ன காரணம்னு தெரியல, என்னதான் ரஜினி தன்னை ஒரு ஹிந்துத்தவாபோல அப்பப்போ காட்டிகொண்டாலும், பால் தாக்கரே தந்தைக்கு சமமானவர்னுகூட சொன்னாலும் சரி, பாலிவுட் மக்கள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறையாமல் எப்படியோ பார்த்துக் கொள்கிறார்.

இன்றும் அமிதாப் குடும்பம், மற்றும் சாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் போன்றோர் ரஜினியுடன் நட்பு பாராட்டத் தயங்க மாட்டேன்கிறாங்க. சமீபத்தில் சாருக் மற்றும் அமிதாப் கோச்சடையான் ப்ரமோஷன்ல கலந்து கொண்டார்கள்.
தீபிகா

ராணா நின்ற பிறகும் கோச்சடையான் படத்தில் தீபீகா படகோன் மனமுவந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

அனுஷ்கா


இப்போது இவரை விட வயதில் இளையவர் ஷோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா இருவருமே கே எஸ் ரவிக்குமார்- ரஜினி மறுபடியும் இணையும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒத்துக்கொண்டதாக வதந்திகள் உலவுது.
சோனாக்ஷி ஷினாஇந்தப் படம் எடுக்கப் போகிறார்களா? இல்லைனா இதுபற்றி வருகிற  எல்லா செய்திகளுமேமே வதந்தியா? என்னனு தெரியலை. எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். ஆனால் ஒண்ணு பாலிவுட் நடிக நடிகைகள் எல்லாருமே ரஜினியை ஒரு மரியாதைக்குரிய ஸ்தானத்தில் வைத்திருப்பதுபோலத்தான் தோணுது. இவ்வளவுக்கும் பாலிவுட் இஸ்லாமியா ஆக்டர்களின் கோட்டைனு சொல்லலாம். ரஜினிகாந்த் ஒரு இந்துத்தவா னு கூட மிகைப் படுத்தி சொல்லலாம்.

ஒரு முறை, கமல் ரஜினியைப் பற்றி விமர்சிக்கும்போது, ரஜினியின் "வளைந்து போகும் தன்மை" உண்மையிலேயே பாராட்டத்தக்கதா என்னனு தெரியலை. ஒரு வேளை அப்படி அவர் நடந்துகொள்வது அவருடைய " "cleverness" சா என்னனு தெரியவில்லைனு சொன்னார்.

எது எப்படியோ, நேற்று நடிகர்களில் யாருக்கு எவ்ளோ சொத்து இருக்குனு சும்மா தேடிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். "Celebrity net worth" னு ஏதோ ஒரு தளத்தில் போய் பார்த்தால்...

ரஜினி $ 50 மில்லியன்  "நெட் வொர்த்" என்று போட்டிருந்தது. 

சரி நம்ம ஏழை, சினிமாவிலேயே காசை விட்டுவிட்டு எல்லாத்தையும் துறந்து நிக்கும் அப்பாவி உலக நாயகன் எப்படினு பார்த்தால்..

கமஹாசன் $100 மில்லியன் (யு எஸ் டாலர்கள்) "நெட் வொர்த்"னு போட்டிருந்தது!

ஆக ரஜினியைவிட கமல் இரண்டு மடங்கு பணம் வைத்திருப்பதாக இந்த தளத்தில் சொல்றாங்க. இது உண்மையோ இல்லைனா பொய்யோ, அது ஒரு புறமிருக்கட்டும்.

ரஜினியை விட கமல் இரட்டிப்பு பணபலமுள்ளவர் என்று நம்ம சண்டியர் கரன் ஒரு பதிவு போடலாம்னுதான்.. :-)))

2 comments:

bandhu said...

சும்மா அடிச்சு விட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன். ரஜினி இரண்டு முறை லிஸ்டில் இருக்கிறார்!

வருண் said...

வாங்க bandhu! :)

ரஜினி ரெண்டு முறையா!!! நான் அதை கவனிக்கலையே. :)

சாருக் "நெட் வொர்த்" 600 மில்லியன் யு எஸ் டாலர்னு போட்டு இருக்காங்க! :))))