Thursday, April 3, 2014

புத்தரை வாங்கிய இந்துமதம் அல்லா ஜீசஸையும் வாங்கிடலாமே?

பெரியவர் தமிழ் இளங்கோ ஒரு பின்னூட்டத்தில் தன்னுடைய இந்துமதப் பெருமையை அடக்கமாகவும் பெருமையாகவும் இப்படிச் சொல்லியுள்ளார்.

நாத்திகமதம் எனப்படும் புத்தமததையே உள்வாங்கிக் கொண்டு புத்தரையும் ஒரு அவதாரமாக்கிய பெருமை இந்து மதத்திற்கு உண்டு.
இதிலே என்ன பெருமை இருக்குனு எனக்குத் தெரியலை. ஒரு சின்ன கம்பெணி நல்லா முன்ன்னேறியதென்றால் அதை விலை கொடுத்து வாங்கி அந்த கம்பெணியை ஒண்ணுமில்லாமல் செய்யும் ஒரு பணபலம் படைத்த இன்னொரு திமிங்கலம் கம்பெணி செய்வதுபோல் ஒரு  செயல் இது!

புத்தரின் சிந்தனைகள் அனைத்தும் இந்துமதத்தில் உள்ள குறைகளப் பார்த்தே தலை தூக்கின. அது இந்துமதம்போல அல்லாமல், சீனா, ஜப்பான் என்று பல நாடுகளில் போற்றப்பட்டன. புத்தரின் தனிப்பட்ட சிந்தனைகளை புத்தருக்கு கொடுக்காமல் அவரை இந்துவாக அவர் அனுமதியில்லாமல் மாற்றியது தவறு என்றுகூட நான்தான் சொல்லணுமா? இந்து மதம் தன் சொத்து என்று நினைத்துக் கொண்டு திரியும் பார்ப்பனர்கள் எவருமே புத்தரின் சிந்தைனைகளை புகழ்வதில்லையே? அதெல்லாம் தெரியாதா இவருக்கு?

அப்படியே அல்லா, ஜீசஸ், மோசஸ், பெரியார் எல்லாரையும் இந்து அவதார புருஷராக ஆக்கிப்புட்டீங்கனா, அட் லீஸ்ட் சிலர் இந்து மதப்பெருமை பேசுவதுபோல் ஒவ்வொருவரும் தன் மதப்பெருமை பேசி, மற்றவர் மதத்தை இறக்கி பக்தர்கள் உங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு நாறாமலாவது ஒற்றுமையாக இருப்பீங்க. என்ன பண்ணுறது? புத்தரை வாங்கியதுபோல் "அல்லா" "ஜீசஸை" "மோசஸை" இந்து மத கிருஷ்ணர் அவதாரமாக ஆக்கி எல்லோரையும் இந்துவாக ஆக்க முடியாது பாருங்க! :)

பெரியவருக்குப்  பொறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போன இடத்தில், சில அதிகப்பிரசங்கி ஆத்திகர்களின் வாய்திமிருடன் வந்த பின்னூட்டங்கள் சம்மந்தமாக அவருடன் விவாதிக்கும்போது பெரியவரின்  "நேர்மை" என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

என்னதான் அவர்,  நாத்திகன் எல்லாம் போலி, ஒரு வயதில் பகவான் காலடியில் வந்து விழுந்துடுவானுகனு சொல்லாமல் சொன்னாலும், "நல்லா இருக்கட்டும்"னு  அவர் பதிவை  கண்டுக்காமல் விட்டாச்சு.

இருந்தாலும் இந்த இந்து மதப் பெருமை என்னை இப்படிப் பேச வச்சிருச்சு! :)

19 comments:

Bagawanjee KA said...

மனிதனை மனிதனாக்கக் கூடிய நல்ல கொள்கைகளை கொண்ட புத்த மதத்தை பாரதத்தில் வளர விடாமல் தடுத்த புண்ணியவான்களைக் கொண்டது ஹிந்து மதம் !விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன புத்தரை சிலையாக்கி மக்களை சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள் !புத்த மதம் நம் நாட்டில் பரவி இருந்தால் மூடத்தனங்கள் மறைந்து நாடு முன்னேறி இருக்கும் !

Anonymous said...

பவுத்தம், சமணம், ஆசீவகம், லோகயாதம் உட்பட பகுத்தறிவு மிக்க மதங்களை அழித்தும், திரித்தும், ஊடுறுவி நாசப்படுத்தியும் இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியவர்கள் இந்து மத சனாதானிகள்.. !

ஒருவேளை உலகம் முழுவதும் கிறித்தவம் அழிந்து போகுமானால், நிச்சயம் இயேசும் கூட அவதாரமாக இந்து மதத்தில் உள்வாங்கப்படலாம். ஏற்கனவே இவ்வாறான முயற்சிகளை ஆரிய இயக்கங்கள் மேற்கொண்டன. ஆரிய சமாஜம், இறை ஞான சங்கம், ஜெர்மானிய அறிஞர்கள் இத்தகைய வேளைகளில் ஈடுபட்டனர் என்பதை அறியலாம்.

Ethicalist E said...

அல்லாஹ் வை இந்துக்கள் அவதாரமாகக வேண்டியதில்லை .

ஏற்கனவே இஸ்லாமியர்கள் முகம்மதுவை கல்கி அவதாரம் என்று உரிமை கொண்டாட தொடங்கி விட்டார்கள். (கல்கி அவதாரம் தான் முகம்மது என்று ) அது மட்டுமல்ல வேதத்தில் அல்லாஹ் பற்றி இருக்கின்றது என்று வேறு கூறிக்கொண்டு இருக்கின்றார்கள் .

எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம்
கல்கி அவதாரம் தான் முகம்மது என்று ஏற்றுகொண்டால் கிருஷ்ண அவதாரத்தையும் ராம அவதாரத்தையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் . அதுதான் தர்க்கரீதியானது . ஆனால் ஏற்றுகொள்கின்றார்களா என்று தெரியவில்லை ? :)

மற்றையது ஒரு தடவை மார்க்கமான மார்க்க அறிஞர் முகம்மது ஒரு பிராமணர் என்று கூறியிருந்தார் அதையும் மீண்டும் நினைவூட்டுகின்றேன்

Ethicalist E said...

" !புத்த மதம் நம் நாட்டில் பரவி இருந்தால் மூடத்தனங்கள் மறைந்து நாடு முன்னேறி இருக்கும் !"
Bagawanjee KA நீங்க கமெடி போஸ்ட் போடுவீங்க . ஆனா இந்த மாதிரி காமெடி பண்ணுவீங்க என்று நான் நினைக்கல . பௌத்தம் எத்தனை நாட்டில் பின்பற்றுறாங்க . ஆனால் அதில் எத்தனை நாடு வளர்ந்திருக்கு என்று உங்களுக்கு தெரியுமா ? சும்மா மொக்கை தனமாக அடிச்சு விட கூடாது .

துளசி கோபால் said...

//விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன புத்தரை சிலையாக்கி மக்களை சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள் !//

என்ன வருண், பகவான் ஜி இப்படிச் சொல்லிட்டாரு?

புத்தமதத்தைப் பின்பற்றும் வெளிநாடுகளில் உள்ள புத்தர் கோவில்களில் புத்தரின் பிரமாண்ட சிலைகளும் அவற்றிற்கு ஆராதனைகளும் நடக்குதே!

குலசேகரன் said...

Hindus believe all the mahapurusha who were born in Indian soil are in the line of Hindu Rishis only. Sofaras the differences of religious viewpoints of such Mahapurushas are concerned, differences are a part and parcel of the growth of the Hindu religion. Unlike Middle East religions, Hindu religion is not static; has no single leader and does not follow a single theology. A few points may unite the Hindus but a thousand ones differ between them. Unity in diversity and Diversity in Unity. It grows on and on; and whether such growth is for better or worse, is another matter.

Looked in this way, Mahavir and other the earlier Thirthankars, Gautama Buddha, Guru Nanak and the line of Sikh Gurus up to Gobind Singh, are all Hindu Rishi and as such, part of Hindu religion only.

Con'td...

குலசேகரன் said...

Believe it or not, Rajaji called Periyar an Azhvaar. Because atheism is also accepted within the ambit of this religion.

The blogger - Tamil Ilango - may not have thought this way; but he is correct in feeling proud of being part of the religion which is indeed catholic and accomodative; which results in broad mindedness and smooth social living.

Jesus and Mohammad are great Mahapurushas but, having been from another soil with another ethos mostly different from Indian ethos - cannot be said to be in the line of Indian Rishis.

Hopefully, I have explained adequately.

Thanks

குலசேகரன் said...

//என்ன வருண், பகவான் ஜி இப்படிச் சொல்லிட்டாரு?
//

We are here not talking about what happened after Gautama Buddha; rather what he stood for and taught.

Please stick to that script.

வருண் said...

***Bagawanjee KA said...

மனிதனை மனிதனாக்கக் கூடிய நல்ல கொள்கைகளை கொண்ட புத்த மதத்தை பாரதத்தில் வளர விடாமல் தடுத்த புண்ணியவான்களைக் கொண்டது ஹிந்து மதம் !விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன புத்தரை சிலையாக்கி மக்களை சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள் !புத்த மதம் நம் நாட்டில் பரவி இருந்தால் மூடத்தனங்கள் மறைந்து நாடு முன்னேறி இருக்கும் !***

வாங்க பகவான் ஜி! புத்தர் நல்ல சிந்தனாவாதிதான். அதான் அவரைப் பலநாட்டவரும் புரிந்துகொண்டார்கள்.

அப்புறம், சமீபத்தில் உலகம் சுற்றி வந்த நம்ம டீச்சர் உங்க கருத்தில் ஒரு திருத்தம் செய்து இருக்காங்க! அதையும் கவனிங்க! :)

வருண் said...

***இக்பால் செல்வன் said...

பவுத்தம், சமணம், ஆசீவகம், லோகயாதம் உட்பட பகுத்தறிவு மிக்க மதங்களை அழித்தும், திரித்தும், ஊடுறுவி நாசப்படுத்தியும் இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியவர்கள் இந்து மத சனாதானிகள்.. !

ஒருவேளை உலகம் முழுவதும் கிறித்தவம் அழிந்து போகுமானால், நிச்சயம் இயேசும் கூட அவதாரமாக இந்து மதத்தில் உள்வாங்கப்படலாம். ஏற்கனவே இவ்வாறான முயற்சிகளை ஆரிய இயக்கங்கள் மேற்கொண்டன. ஆரிய சமாஜம், இறை ஞான சங்கம், ஜெர்மானிய அறிஞர்கள் இத்தகைய வேளைகளில் ஈடுபட்டனர் என்பதை அறியலாம். ***

ஆனால் ஒண்ணு இக்பால், ஆத்திகர்கள் எல்லாருமே ஒரு மதத்தை தழுவினால், "பகவான்" சந்தோஷப்படுவாரு! இவங்களுக்கெல்லாம் அவர் சந்தோசம் முக்கியம் இல்லைபோல! :(

வருண் said...

***Ethicalist E said...

அல்லாஹ் வை இந்துக்கள் அவதாரமாகக வேண்டியதில்லை .

ஏற்கனவே இஸ்லாமியர்கள் முகம்மதுவை கல்கி அவதாரம் என்று உரிமை கொண்டாட தொடங்கி விட்டார்கள். (கல்கி அவதாரம் தான் முகம்மது என்று ) அது மட்டுமல்ல வேதத்தில் அல்லாஹ் பற்றி இருக்கின்றது என்று வேறு கூறிக்கொண்டு இருக்கின்றார்கள் .

எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம்
கல்கி அவதாரம் தான் முகம்மது என்று ஏற்றுகொண்டால் கிருஷ்ண அவதாரத்தையும் ராம அவதாரத்தையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் . அதுதான் தர்க்கரீதியானது . ஆனால் ஏற்றுகொள்கின்றார்களா என்று தெரியவில்லை ? :)

மற்றையது ஒரு தடவை மார்க்கமான மார்க்க அறிஞர் முகம்மது ஒரு பிராமணர் என்று கூறியிருந்தார் அதையும் மீண்டும் நினைவூட்டுகின்றேன்


Ethicalist E said...

" !புத்த மதம் நம் நாட்டில் பரவி இருந்தால் மூடத்தனங்கள் மறைந்து நாடு முன்னேறி இருக்கும் !"
Bagawanjee KA நீங்க கமெடி போஸ்ட் போடுவீங்க . ஆனா இந்த மாதிரி காமெடி பண்ணுவீங்க என்று நான் நினைக்கல . பௌத்தம் எத்தனை நாட்டில் பின்பற்றுறாங்க . ஆனால் அதில் எத்தனை நாடு வளர்ந்திருக்கு என்று உங்களுக்கு தெரியுமா ? சும்மா மொக்கை தனமாக அடிச்சு விட கூடாது .//

வாங்க இ இ!! அப்பப்போ "அல்லாவின்" கருணையால்தான் உங்களை இங்கே பார்க்க முடியுது போல! :)

தயவு செய்து உங்க பேரை ஏதாவது தமிழ்ப் பெயரா மாத்துங்க சார். ரொம்பத்தான் கொல்லுறீங்க இப்படி ஒரு பேரை வச்சுக்கிட்டு! :(

வருண் said...

***துளசி கோபால் said...

//விக்கிரக ஆராதனை கூடாது என்று சொன்ன புத்தரை சிலையாக்கி மக்களை சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள் !//

என்ன வருண், பகவான் ஜி இப்படிச் சொல்லிட்டாரு?

புத்தமதத்தைப் பின்பற்றும் வெளிநாடுகளில் உள்ள புத்தர் கோவில்களில் புத்தரின் பிரமாண்ட சிலைகளும் அவற்றிற்கு ஆராதனைகளும் நடக்குதே! ***

வாங்க டீச்சர்!!!! அத்தி பூத்தார்போல உங்க வருகை! :)))

பகவான் ஜி யிடம் உங்க திருத்தத்தை எடுத்துச் சொல்லி இருக்கேன். :)

வருண் said...

****குலசேகரன் said...

//என்ன வருண், பகவான் ஜி இப்படிச் சொல்லிட்டாரு?
//

We are here not talking about what happened after Gautama Buddha; rather what he stood for and taught.

Please stick to that script.***

WE ARE ???????

It was only Bhagawanjee's thought and his opinion, I thought! :)

வருண் said...

*** குலசேகரன் said...

Believe it or not, Rajaji called Periyar an Azhvaar. Because atheism is also accepted within the ambit of this religion.***

You need to remember, Rajaji was a POLITICIAN as well! :)

வருண் said...

****The blogger - Tamil Ilango - may not have thought this way; but he is correct in feeling proud of being part of the religion which is indeed catholic and accomodative; which results in broad mindedness and smooth social living.***

I dont know what he is thinking. Budhdha never would have cared whatever hindus or Tamil Elango do about him! That's why he was/is great!

Anonymous said...

ஆத்திகர்கள் எல்லோரும் ஒரே மதமாகிவிடும் வாய்ப்பு இருக்கு, ஒருவேளை மத நம்பிக்கைகள் குன்றும் போது இவை கூட நடைபெறலாம், பாருங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மதக் கோட்பாடுகள் காலத்துக்கு தக்கவாறு மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டு வந்துள்ளன. இன்று கூட மெல்ல மெல்ல கத்தோலிக்கத் திருச்சபை சில கருத்துக்களை மாற்றத் தொடங்கிவிட்டது.

இந்து மதம் மட்டுமல்ல, கிறித்தவம், பவுத்தம், இஸ்லாம் அனைத்துமே ஒரு வித நெகிழ்வுத் தன்மை கொண்டவையே. அதன் சதவீதங்கள் மட்டுமே மாறுபவை.

வேதங்களில் மாட்டிறைச்சி உண்ணலாம் என்று இருந்தது, யூத மதத்தில் கல்லால் அடித்துக் கொல்லலாம் என இருந்தது. திடிர் என எழுந்த ஞானவாத மற்றும் நாத்திக தத்துவங்களால் இவை மாற்றப்பட்டன. என்பது தான் வரலாறு.

இன்று கூட இந்து மதம் நூறு ஆண்டுக்கு முன்பு இருந்தவைகளில் இருந்து மாறிவருகின்றது.

என்ன அதனதன் அடிப்படை சித்தாத்தங்கள் மட்டும் மாறாமல் இருக்கின்றன. காரணம் யாரை யார் விழுங்கலாம் என்ற போட்டியே.

இந்து மதத்தில் இயேசுவும் ஒரு அவதாரம் கஸ்மீரில் வாழ்ந்தவர் எனவும், இஸ்லாமில் முகம்மது தான் கல்வி அவதாரம் எனவும், கிறித்தவர்களில் இந்து மத ஆச்சாரங்களை உள்ளடக்கிய பிரிவும் என மதங்கள் ஒன்றை ஒன்றை உள்வாங்க நினைக்கின்றன.

பேசாமல் அனைவரும் ஒரே மதமாக மாற்றிக் கொள்ளலாம்.

இயேசு, முகம்மது, ராமர், கிருஷ்ணர் எல்லோரும் அவதாரம். அல்லாஹ் தான் ஒரே கடவுள் மற்றவர்கள் இவரின் கையாட்கள் என ஒரு சமயத்தில் கூறிக் கொண்டு ஒன்று சேரும் வாய்ப்பும் உண்டு.

அப்படி அடிச்சிக்காம ஒன்னா இருந்தா சந்தோஷப்படுற முதல் ஆளா இருப்பது நாத்திகர்கள் தான்.

குலசேகரன் said...

//You need to remember, Rajaji was a POLITICIAN as well! :)//

What, instead of Rajaji, the wily politician, if you like, I say the same about Periyaar. Or, any non-politician common Hindu says that he respects Periyaar and includes him in the line of Mahapurushas?

குலசேகரன் said...

The historic fact is that Buddha rose against the ritualistic Brahminical Hinduism. Brahmins hated him because he questioned their practices and theology of varnas etc. Buddha, not only, never cared whether he was treated to be one of the Rishis or not, but also he would have definitely fought against the conspiracy of inclusion in the Hindu religion, which, for him, is to fawn at the feet of Brahmins. Like Periyaar, Gautama was a ferociously self respecting person.

Varun, there was an attempt to include the Jains as Hindus in census operations in the State of Gujarat. The Jains went to Supereme Court against that and won the case. Similarly, the Sikhs. Sikhims repudiates Caste system.

But my point is not that. It is rather, for Hindus no one is a paraya. Everyone is included if he is a great being with great thought system. I don't have tongue in cheek when I say, it is not Tamil Ilango - who is an old conservative and parrots others'views - but you, who seem to be more Hindu as you think daringly, a hall-mark of a good Hindu. Because daring thoughts are most welcome, enjoys full freedom and respect in our religion provided they are noble. As Rig Veda puts it: LET NOBLE THOUGHTS COME TO US FROM EVERY SIDE!

குலசேகரன் said...

இதையும் சேர்த்துக்கொள்ளவும். சித்தர்கள் என்று தமிழர்கள் சொல்வது இப்படிப்பட்ட மனிதர்களையே. அதாவது தம் வழி சென்று இறைவனை வணங்கியோர். பிராமணர்களைச் சீந்தாதோர் அவர்களில் பலர். பிராமணர்கள வெறுத்தோரும் உண்டு. சிவவாக்கியர். இவருடைய சிவபக்தியைப்பார்த்து மகிழ்ந்து. சிவனே 'பக்தி சாரர் நீர்தான்'என அழைக்கப்பட்டவர். இவரின் பாடல்களில் பிராமணீயத்தைத்தாக்கி கடுஞ்சொற்கள் உண்டு. பெரியார் வெளியில் இருந்து தாக்கினார். இவர் உள்ளிருந்து தாக்கினார். இதற்காக இந்துமதம் இவரை மாபெரும் சித்தர் என விக்ரஹ ஆராதனை செய்கிறது. அதைச்செய்வோரும் பிராமண அர்ச்சகர்களே. அவர்களும் இந்துமதக்கொள்கையை ஏற்றாக வேண்டும். அதாவது. எவரும் இந்துக்கடவுளரை அவர்கள் விரும்பிய வண்ணம் வணங்கலாம். ஒரு வழியில்லை. எவ்வழியும் சரியே. தமிழ்நாட்டில் பிறந்திருந்தார், கவுதமர் இன்று சித்தர் வரிசையில் முதலாக வந்திருப்பார்: காலத்தால்.