Wednesday, April 30, 2014

வா ம வின் வேலைக்குப் போற பொம்பளையா? விமர்சிப்பது எப்படி?

வா மணிகண்டனின் வேலைக்குப் போற பொம்பளையா? கதை படிச்சு இருப்பீங்க. படிக்கலைனா விடுங்க!  இந்தக் கதையைப் பற்றி பலர் பின்னூட்டங்களில் விமர்சிச்சு இருக்காங்க! இதற்கு ஒரு விமர்சனம் எழுதணும்னா எப்படி எழுதலாம்!

* த ம 1- இது ஒரு வகை

 * நல்லா எழுதி இருக்கீங்க!- மேலோட்டமாக சொல்வது- இது ஒரு வகை!

* நாளுக்கு நாள் ஜொளிக்கிறீங்க! தொடர்ந்து எழுதுங்கள்!- உண்மையான வார்த்தைகளா? இல்லை பொய் உண்மை வேடம் போடுதா?

* இன்னொரு கிரீடம்!- வெல் விஷரிடம் இருந்து வருவதுண்டு.  இல்லைனா ஒரு மாதிரியான வயித்தெரிச்சல் பேர்வழியாக்கூட இருக்கலாம்.

* என்னதான் உருகினாலும், நீங்க ஒரு ஆணியவாதிபோலதான், உங்க எழுத்து இருக்கு!- எழுத்தாளனை ஒழிக்கவே எழுதும் பின்னூட்டம் இது! Sounds like me? :)

* Are you not empathetic? I dont see that in your writing! Sounds like me? :)

* What will you do if you have a child like that? Will you stay home? Or your wife will? Can you wisely deal with such a situation? May be not! Sounds like me? :)

இப்படிப் பலவிதமாக பாராட்டலாம், திட்டலாம், வயித்தெரிச்சலைக் காட்டலாம், கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் இதுபோல் கடுமையாக எழுதும் பின்னூட்டங்கள் அவரைத் தாண்டி வருவது சந்தேகம்தான்!

************************

வேறெப்படி விமர்சிக்கலாம்?

இவர் தலைப்பு பொதுவாக "இப்படித்தான்" இருக்கும். இது கதையா இல்லை கட்டுரையா இல்லை உண்மையில் நடந்ததா? என்பது தெளிவுபடுத்தப் படாது.
 கதைனு சொல்லவும் முடியாது, கட்டுரைனும் சொல்ல முடியாது! ஒருவேளை "உண்மையும் கற்பனையும்" கலந்த கலவையா? எது எத்தனை விழுக்காடுகள்?

 சில சமயம் பிறர் அனுபவத்தை தன் அனுபவம்போல் ஊதி எழுதுறாரா? அப்படித்தான் இருக்கவேண்டும்! இல்லை ஒரு சாதாரண, கேள்விப்பட்ட விசயத்தை, செய்தியை, தன்  அனுபவம்போல் எழுதுகிறாரா?   இவர் எழுத்தில் உள்ள "ஹீரோ" இவர்தானா? இல்லை "ஹீரோ" ஒரு கற்பனை பாத்திரமா? இதுபோல் கேள்விகள் பலவற்றை எப்போவுமே இவர் எழுத்தைப் படித்துவிட்டு முன் வைக்கலாம். இவர் எழுதும் எல்லாக் கதை (கட்டுரை)களிலுமே இவர் "இப்படித்தான்" எழுதுவார் . இவர் கதைகள் பலவற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும் நான் "இப்படித்தான்" என்பது என்னவென்று.

இவர் எழுதும் ஹீரோக்கள், ஹீரோயின்கள் எல்லாரும்  கற்பனையா? இல்லை அனுபவத்தில் இவர் சந்தித்தவர்களா? இவர் எழுதுவது கதையா? இல்லை  உண்மைக்கதையா? இல்லை அனுபவக் கட்டுரையா? என்று யோசித்தால் குழப்பமே மிஞ்சும்...ஒருவேளை இப்படியெல்லாம் குழப்ப வைக்கும் திறன்தான் இவரின் தனித்திறமையோ?

இப்படியானா இல்ல அப்படின்பார். அப்படியானா இல்ல இப்படின்பார்!

வா.மணிகண்டன் said...

அன்புள்ள வருண்,

கடிதத்தையும், புனைகதையையும் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகம் என்றுதான் நம்புகிறேன்.

புனைகதை என்பது ஒரு சித்திரத்தை உருவாக்குவது. வாசகனுக்குள் ஒரு சலனத்தை உருவாக்குவதுதான் அதன் அடிப்படையான வேலை என்று நினைக்கிறேன்.

புனைகதை புரட்சி பேசத்தேவையில்லை என்பதால்
அதில் வரும் நாயகன் வீரனாகவும், முதுகெலும்புள்ளவனாகவும் வர வேண்டும் என்பது ‘ஹீரோயிசக்’ கதைகளுக்கும், மிகை யதார்த்தக் கதைகளுக்கும் பொருந்தலாம்.

நான் அந்தக் கதையில் பதிவு செய்ய விரும்பியது யதார்த்தமான ஒரு ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவனின் மனநிலையை.

நன்றி.

வா.மணிகண்டன்


சரி, இந்தக்கதையில் என்ன சொல்லியிருக்கார்?

21 நூற்றாண்டில் ஒரு பெண் ஆண்களைவிட நிர்வாகத்திறமை உள்ளவளாக, படித்தவளாக இருக்கிறாள். வேகமாக முன்னேறி இருக்கிறாள்.

பெப்ஸி கோலாவுடைய சி இ ஒ கூட ஒரு பெண்மணிதான். அதுவும் இந்தியர்தான். எதுக்கு இது இந்தமாதிரித் தலைப்பு?? 

அவளுக்குத் திடீர் என வாழ்க்கையில் விழுகிறது ஒரு "பெரிய அடி"! "

ஏன்? Why me???அதெல்லாம் முன் ஜென்மத்தில்" செய்த பாவம்! "இல்லை இறைவன் சோதிக்கிறான்" யாரை? மணிகண்டனையா? இல்லைனா அந்த ஹீரோயினையா? இருவரையும்தான். இறைவனை யாரு சோதிக்கிறது? நாத்திகர்களா?

அவளுக்குப்  பிறந்த குழந்தைக்கு ஏதோ வைட்டமின் குறைவு என்பது "ஜோடிக்கப்பட்ட பொய்". பொதுவாக வைட்டமின் குறைவெல்லாம் எளிதாக சரிப்படுத்திவிடலாம். இக்குழந்தையின் பிரச்சினை எதோ புரதச் சத்து குறைவு என்றுதான் நான் சொல்லுவேன். ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு சில தேவையான ப்ரோட்டீன்கள் இருக்காது, இல்லைனா அதிகமாக இருக்கும். ப்ரோட்டீன் டிஸ்ஆர்டெர் என்பது பெரிய பிரச்சினை. அதாவது நமக்குத் தேவையான ஒரு சில ப்ரோட்டீங்கள் தயாரிக்கும் ஜீன்கள் நம் உடம்பில் இல்லாமல் போவது ஒரு பெரிய ஜெனட்டிக்கல் குறைபாடு. இது மாதிரி ஜெனட்டிக் டிஸ் ஆர்டருடன் மிகவும் குறைபாடுள்ள  குழந்தைகள் பல  இப்போது பிறக்கின்றன. சாதாரண உணவு என்பதே மருந்து சாப்பிடுவதுபோல் ஆகிவிடும். அந்தக்குழந்தைக்குப் பார்த்துப் பார்த்து நிறுத்துத்தான் கொடுக்க வேண்டும் எந்த வேளை உணவும். பெற்றோரின் அட்டன்ஷன் 12 மணி நேரம் தேவைப்படும் குழந்தைகள் இவைகள். இச்சூழ்நிலையில் வேறு வழியில்லை! வேலையை விடுகிறாள். அதுதான் அவளுக்கு சரி என்று தோன்றுகிறது. குழந்தையிடம் நேரத்தை செலவழிக்கச் செல்லுகிறாள். அவ்ளோதான்.

ஆனால் வாழ்நாள் பூராம் இப்படியே இருந்துவிடுவாளா? என்பது தொடர்கதைக்கான கேள்வி. கொஞ்ச நாளில் அல்லது விரைவிலேயே வீட்டிலிருக்க முடியாமல், அவள் குழந்தையை ஒரு பொறுப்பான ஆளிடம் ஒப்படைத்துவிட்டு  மறுபடியும் வேலைக்கும் போகலாம். அதுபோல் குறைகள் நிறைந்த குழதைகளை பெற்ற பெண்களை நீங்கள் உங்களைச் சுத்தியே பார்க்கலாம். கூர்ந்து கவனித்தால்மட்டுமே!

இதில் நாம் கற்றது என்ன?

வாழ்க்கை யாருக்கு வேணா இதுபோல் திடீர்னு தலைகீழாக மாறலாம். அதனால? அதனால் நிதானமாக இருங்கள்!

போதுமா விமர்சனம்? :)

5 comments:

Anonymous said...

அவரது பல பதிவுகள் கற்பனை கலந்தவைகள் என்பதை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்,. கற்பனை கலந்து எழுதும் போது சிறுகதை பாங்கில் எழுதி விட்டால் பிரச்சனை இல்லை, ஆனால் உண்மை அனுபவம் போல எழுதினால் சிக்கலே. இது அவரது எழுத்து திறனை பலவீனமாக்கும் என்பதை அவர் உணர வேண்டும்.

நாடோடி said...

லேபிள் கொடுக்காமல் எழுதுவது அவருக்கு வசதியாக இருக்கிறது. பெரிய எழுத்தாளர் அல்லவா? எவருக்கு பதில் சொல்ல வேண்டும்?.. நானும் பார்த்திருக்கிறேன் பின்னூட்டத்தில் கேட்டால் அது புனைவு என்றும் நிஜம் இல்லையென்றும் அடித்துவிட்டு விடுகிறார்.

பெங்களுரில் ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்பது கடைந்தெடுத்த பொய். அதுவும் ஒரு குடும்பத்திற்கு முப்பதாயிரம்?... அந்த பதிவில் உள்ள‌ பெண்ணை பற்றி கீழே ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பதை பார்த்தால் இவர் எழுதியிருப்பதற்கு முரணாக உள்ளது. எல்லாம் அவருக்கே வெளிச்சம்....

http://www.nisaptham.com/2014/04/blog-post_17.html

வருண் said...

****இக்பால் செல்வன் said...

அவரது பல பதிவுகள் கற்பனை கலந்தவைகள் என்பதை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்,. கற்பனை கலந்து எழுதும் போது சிறுகதை பாங்கில் எழுதி விட்டால் பிரச்சனை இல்லை, ஆனால் உண்மை அனுபவம் போல எழுதினால் சிக்கலே. இது அவரது எழுத்து திறனை பலவீனமாக்கும் என்பதை அவர் உணர வேண்டும்.***

கதையில் பொய் எழுதலாம். ஆனால் கட்டுரை அல்லது அனுபவத்தில் பொய் கலக்கக்கூடாது. இவரு கதைமாதிரி கட்டுரை எழுதுவதால் பொய் கலந்துதான் எழுதுகிறார். இதுதான் இவருடைய ஸ்டைல்னு போக வேண்டியதுதான்.

வருண் said...

***நாடோடி said...

லேபிள் கொடுக்காமல் எழுதுவது அவருக்கு வசதியாக இருக்கிறது. பெரிய எழுத்தாளர் அல்லவா? எவருக்கு பதில் சொல்ல வேண்டும்?.. நானும் பார்த்திருக்கிறேன் பின்னூட்டத்தில் கேட்டால் அது புனைவு என்றும் நிஜம் இல்லையென்றும் அடித்துவிட்டு விடுகிறார்.

பெங்களுரில் ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்பது கடைந்தெடுத்த பொய். அதுவும் ஒரு குடும்பத்திற்கு முப்பதாயிரம்?... அந்த பதிவில் உள்ள‌ பெண்ணை பற்றி கீழே ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பதை பார்த்தால் இவர் எழுதியிருப்பதற்கு முரணாக உள்ளது. எல்லாம் அவருக்கே வெளிச்சம்....

http://www.nisaptham.com/2014/04/blog-post_17.html***

எவ்ளோ பெரிய எழுத்தாளனாயிருந்தாலும் "பொய்" இஷ்டத்துக்கு கலந்தால் எனக்கு ஆகாது. நீங்களும் ரொம்ப கவனிச்சுப் பார்த்து எரிச்சலடைந்து இருக்கீங்க போல.

உங்களுடைய உண்மையான ஆதங்கத்தைக் கூட "பொறாமை"னு சொல்லுமளவுக்கு முட்டாள்கள் நிறைந்த உலகம் இது! :)

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்