Wednesday, April 9, 2014

ப்ளாக் எழுதி லட்ச லட்சமா சம்பாரிக்க ரகசிய வழி இங்கே!

பொய்த் தகவல் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. சும்மா உங்க ஆசையை கிளப்பி மோசம் செய்வதும் தப்புனு நம்புறவன் நான். மொதல்ல உங்க ஸ்கில்ஸ் என்னனு நீங்க தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு என்ன ரொம்ப நல்லாத் தெரியும்?

தயவு செய்து சாப்பிடத் தெரியும், யோகா தெரியும், ஆன்மீகம் தெரியும்னு சொல்லாதீங்க.

நான் கேட்பது உங்களுக்குள்ள திறமை!

சமைக்கத் தெரியுமா? உழைப்பாளியா நீங்க? என்ன வேலைனாலும் கூச்சப்படாமல் செய்வீங்களா? இல்லை இந்த வேலையெல்லாம் கவுரவ குறைச்சல்னு நெனைப்பீங்களா?

சரி, வள வளனு எழுதாமல் விசயத்துக்கு வர்ரேன்.

மொதல்ல திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கொடுத்திருக்கும் அருமையான பதிவுகளை வாசிச்சு ஒரு ப்ளாக் ஆரம்பிங்க!

ஆரம்பிச்சுட்டீங்களா? சரி, இப்போ இந்த ப்ளாக்ல வாரம் ஒரு முறை, ஒரு அரைமணி நேரம் செலவழிச்சு ஏதாவது மொக்கைப் பதிவு போடுங்க.

சரியா? போட்டாச்சா?

 இப்போத்தான் சம்பாரிக்கிற வழி சொல்லப் போறேன். கவனமாகக் கேளுங்க.

காதைக் கொடுங்க!  இந்த நாசமாப் போன ப்ளாக் எழுதி எல்லாம் நீங்க சம்பாரிக்க முடியாது. அதுக்கு பதிலா வீக்-எண்ட் இல்லை இரவு நேரங்களில் பேசாமல் ஏதாவது பார்ட்-டைம் வேலை பாருங்க!

என்ன வேலை ஹோட்டல்ல வேலை பார்க்கலாம், ஆட்டோ ஓட்டலாம், மளிகைக் கடையில் வேலைபார்க்கலாம், ட்யூஷன் சொல்லிக் கொடுக்கலாம்.

இந்த மாதிரி வேலைகள் நீங்க ப்ளாக் எழுதி வேஸ்ட் பண்ணுகிற நேரத்தில் செய்தீங்கன்னா அட் லீஸ்ட் ஒரு ஆயிரமோ, ரெண்டாயிரமோ வாரம் அதிக வருமானம் வரும்.

மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியதாக (பணத்துக்குத்தான்) ஒரு திருப்தி இருக்கும். அதை விட்டுப்புட்டு ப்ளாக் எழுதி அதில் "விளம்பர இடத்தை" வச்சுக்கிட்டு உக்காந்து இருந்தால் வாரத்துக்கு ஒரு நூறு எரநூறுகூட நீங்க தேத்த முடியாது.

புரிஞ்சுக்கோங்க! :)

6 comments:

Bagawanjee KA said...

#ஹோட்டல்ல வேலை பார்க்கலாம், ஆட்டோ ஓட்டலாம், மளிகைக் கடையில் வேலைபார்க்கலாம், ட்யூஷன் சொல்லிக் கொடுக்கலாம்.#
எல்லோரும் அந்த வேலையை பார்க்கப் போயிட்டா ,நாத்திகம் பேசுகிற ஆடு மாடுகள்ன்னு எழுதுறவங்களுக்கு யார் பதில் சொல்றது ,வருண்?

வருண் said...

வாங்க பகவான்ஜி! :)

என்ன இப்படி சொல்லீட்டீங்க? :))))

வருண் செத்துட்டா உலகமே செத்துடாதுங்க! அவன் செத்தப்புரம் இன்னொரு கருண் வரத்தான் செய்வான் வாய்த்திமிருடன் பேசும் இந்த பகவானின் கைத்தடிகளை அறைவதற்கு!

நான் செத்துட்டா இந்த உலகமே செத்துரும்னு உலகத்துக்காக வாழ்றவா இல்லங்க, நான். :-))))

bandhu said...

ப்ளாக் எழுதி உண்மையிலேயே லக்ஷம் லக்ஷமாக சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் அது பெரும்பாலும் டெக்னிகல் விஷயங்களை எழுதியோ.. ஹப்பிங்டன் போஸ்ட் போல செய்திப் பத்திரிக்கைகளுக்கு மாற்றாகவோ எழுதித் தான். ஆனால், ப்ளாக் எழுதி நிறைய சம்பாதித்தவர்கள் குறித்து இண்டி பிளாக்கர் பெரிய லிஸ்ட் கொடுத்ததாக ஞாபகம்!

வருண் said...

*** ப்ளாக் எழுதி நிறைய சம்பாதித்தவர்கள் குறித்து இண்டி பிளாக்கர் பெரிய லிஸ்ட் கொடுத்ததாக ஞாபகம்!***

Bandhu: True, Blogger Muralidharan also posted a blog-post regarding this. But I don't think Tamil bloggers could make any big sum. :)

Honestly I get annoyed when adds pop-up in a Tamil blog when I get there and, I make sure that that is my last visit there. :)

நாடோடி said...

வருண்,

உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், பிளாக் எழுதுகிறவர்கள் சம்பாதிக்கிறர்கள், எப்படி என்பது தான் பிரச்சனை, தமிழ் பதிவுகள் எழுதுபவர்கள் எழுதுவது எல்லாம் உண்மை என்று நம்பி பணம் கொடுத்து ஏமாந்த வெளிநாட்டு வாழ் தமிழ் வாசகர்கள் அதிகம்... இதை பற்றி சிலர் எழுதிய பதிவுகளை நீங்களும் படித்திருக்க கூடும்..:)

வருண் said...

உண்மைதான், நாடோடி. தமிழ் காமக்கதைகள் தளம் நடத்தி சம்பாரிக்கிறவாளும் இருக்கா. அப்புறம் "பிச்சை" எடுக்கிறது இன்னொரு வகை. இதெல்லாம் "நியாயமான தொழில்" னு நான் நம்பலை. ஆனால் பகவான் அருளோடதான் இப்படி ஈனப் பொழைப்பும் நடத்துறா, சிலர்! :)