Friday, April 18, 2014

நான் ஏன் ஒரு நாய் வளர்க்கிறேன் தெரியுமா?

“நீங்க பெரிய தப்பு பண்றீங்கப்பா! பணத்தோட மதிப்பு ஒவ்வொரு நாளும் கொறையுது. இந்த நிலத்தை இன்னைக்கு 25 லட்சத்துக்கு விக்கிறதும், ரெண்டு வருசம் சென்று 30 லட்சத்துக்கு விக்கிறதும் ஒண்ணுதான். வித்துத் தொலைங்க!”னு ஃபோன்ல கோபமா கத்தினான், ரவி.

“ஏன்ப்பா ரவி, இப்படி கோபமா பேசுற? அப்பா உனக்கு நல்லதுதானே செய்வேன்?”

“அப்ப வித்துத் தொலைங்க! வித்த அந்தப் பணத்தை எனக்கு அனுப்ப வேணாம்! பேங்க்ல போட்டு வைங்க! திடீர்னு ஏதாவது பெரிய மருத்துவசெலவு உங்களுக்கோ, அம்மாவுக்கோ வரலாம், அப்போ நீங்க அதை எடுத்து செலவழிக்கலாம்னுதான் சொல்லுறேன். இல்லைனா யாருக்கும் உபயோகப்படாம வீணாப் போயிடும்ப்பா!”

“நீ என்னப்பா இந்தியா திரும்பி வரப்போறதே இல்லையா?”

“நான் என்னைப்பத்தி பேசலை. உங்க நன்மைக்குத்தான் விக்கச் சொல்றேன். அமெரிக்கால எல்லாம் அப்படித்தான்ப்பா எல்லோரும் செய்றாங்க! அதனாலதான் 100 வயதுவரை இருக்காங்க!”

“சரி, உன் அம்மாட்ட பேசுறியா?”

“ஆக, இதை விக்க மாட்டீங்க?”

“நல்ல வெலைக்கு வந்தா விக்கிறேன்ப்பா. நல்ல வெலை வரும்னு சொல்றாங்க!”

“எப்போ? நீங்க போய் சேர்ந்தப்புறமா? உங்க பணம் எனக்கெதுக்குப்பா? என்னை நான் பார்த்துக்குவேன். உங்களுக்குத்தான் உங்க பணம் பயன்படனும்! அதான் படிச்சுப்படிச்சு சொல்றேன். கேட்டுத் தொலைங்களேன்”

“அம்மாட்ட பேசுப்பா!”

"எப்படிப்பா இருக்க, ரவி?"

“ஏன்ம்மா வயசானகாலத்திலே ரெண்டு பேரும் உயிரை வாங்குறீங்க? சொல்ற எதையுமே கேக்க மாட்டீங்களா?”

“அந்த வயக்காட்டை அடிமாட்டு வெலைக்கு கேக்கிறானுகப்பா. நீதான் ஒழுங்கா எங்களுக்கு பணம் அனுப்புற இல்ல. அப்புறம் என்னப்பா இப்போ அவசரம்?”

“அடிமாட்டு வெலையெல்லாம் இல்லம்மா. 25 லட்சத்துக்கு கேக்கிறதா என் ·ப்ரெண்டு சொல்றான். விக்க மாட்டீங்க? நான் சொல்றதை எதயுமே கேக்க மாட்டீங்க? ஏன்னா நீங்க பெரியவங்க, இல்ல?”

“ஏன்ப்பா இப்படி கோபமா பேசுற?”

“இந்த மாதிரி அறிவுகெட்ட அம்மா அப்பா இருக்கதாலதான்ம்மா?”

ரவியோட அம்மா அழ ரம்பிச்சுட்டாங்க.

“சரி ஃபோனை வச்சிறவாம்மா?”

“நீங்க எல்லாரும் நல்லாயிருக்கீங்களா?”

“நல்லா உயிரோடதான் இருக்கோம்.”

“ ”

“சரிம்மா, உடம்பை நல்லாப் பார்த்துக்கோங்க. அடுத்த வாரம் கூப்பிடுறேன்.”

“சரிப்பா, ரவி.”

************

“How do I look, dad?”

“You look beautiful, Swathy! Going out?”

“Yeah, I need to get my nails done. Can I ask you something?"

"Sure."

"Why do you always fight with grandpa and grandma? Yelling at them ALWAYS?”

“Bcos they dont listen anything I say, just like you!”

“You are very rude to them, dad. I am sorry but you dont know how to talk politely!”

“Yeah right. But I know how to make money to support you and them!”

“I will certainly make more money than you do now! I get straight "A" s”

“Good for you! My problem is nobody listens to me”

“I dont listen because you don’t understand anything, dad!”

“Yeah, right. How old are you? A teenager judging me!”

“You don’t let me date. All my classmates date, dad!”

“You are too young to go on a date, Swathy. That is why.”

“My classmates are all younger than me. They are all allowed to date.”

“They are Americans!”

“So am I.”

“But, REMEMBER! unfortunately you are born to stupid Indian parents!”

“That is correct!”

“What if you get pregnant when you go out with a boy and get carried away?”

“You don’t understand, what dating means, dad. And you never dated anybody. Right?  You did do a stupid arranged marriage!”

“Let me ask you this! Are you going to marry the guy you would date now?”

“Of course not!”

“Why cant you wait till you find a dependable guy?”

“How long? OK fine. You think I don’t know about birth control?”

“I don’t want to discuss about this, Swathy!”

“Neither do I. Bye! Love you, dad. I have got to go now”

"Bye!"

************************

“So, How was your weekend, Raavi?”

“Don’t ask me, Bob!”

“That bad? Watched any football?”

“The Cowboys suck!”

“Yes, they do! You should become a Giants fan now!”

“Yeah, if I were a Giants fan, and if I had parents and daughter who would listen to me, I would have been happy.”

“Dont you know? Nobody listens to anybody, Raavi. Why do you think I have a dog? He is the only one who listens to me!”

“Let me at least enjoy working. I love Mondays!”

-நிறைவடைகிறது
-----------------

இதுவும் ஒரு மீள்பதிவுதான்.

ஏற்கனவே நெறையா எழுதியாச்சு போல. மீள்பதிவாப் போட்டு ஓட்ட வேண்டியதுதான். :)))

4 comments:

sekar said...

உங்களைப் போல் மெத்தப் படித்தவர்களுக்குத் தான் உங்களுடைய பதிவா? என்னைப் போன்றவர்கள் நீங்கள் சொல்லவரும் கருத்தை எப்படிப் புரிந்து கொள்ளவது.

ஒருவேளை ஆங்கிலத்தில் எழுதினால் தான் மதிப்பு என்று நினைக்கறீர்களா?

என்னைப் போல் சாதாரண நபர்களுக்குப் புரியும்படி தமிழில் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வருண் said...

வாங்க சேகர்! தமிழ் வலைபதிவில் ஆங்கிலத்தில் எழுதினால் உங்களைப் போன்றோரிடம் வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான். :)

இதை தமிழாக்கம் செய்து போட்டால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி/கரிம வேதியல் முழுக்க முழுக்கத் தமிழில் கற்பிப்பதுபோல ஆகிவிடும். அதான்.. :)

sekar said...

எனக்குப் புரியவில்லை என்பதால் அப்படி எழுதினேன். குறைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.

உங்களுடைய பதிவுகளைக் கடந்த இரண்டு நாட்களாகப் படித்து வருகிறேன் .
காரமாக இருந்தாலும் உண்மையின் சாரமாக உள்ளது .

உங்கள் எழுத்து என்னுள் உள்ள எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது.

நன்றி.

வருண் said...

சேகர்: உங்களை நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. என் குறைகளை நாகரிகமாக சுட்டிக்காட்டி இருக்கீங்க. அபப்டி இருக்கும்போது அதை நான் ஒத்துக்கொண்டுதான் ஆகணும். அதைத்தான் செய்து இருக்கிறேன். அதே சம்யத்தில் இதுபோல் "அயல் நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை" தமிழில் மாற்ரி கொடுத்தால் அதில் உள்ள "நேட்டிவிட்டி" போயிடும் என்பதையும் சொன்னேன். Take it easy! (எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்) :)