Tuesday, April 22, 2014

இரண்டு பலூன் இதயங்களுடன் பவித்ரா!

காதலிக்கும்போது இனிமையாக இருந்த அவனை திருமணம் செய்தபிறகு? அவனும் சாதாரண "ஆம்பளை"தான்னு தோணுச்சு. பவித்ராவுக்குத் திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆறு மற்றும்  நாலு வயசுல  ரெண்டு பசங்க வேற! திருமண வாழ்க்கை இன்று கசந்தது. கணவன் வினோத் மேல் இருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிச்சு இப்போ அன்பு, காதல் எல்லாம் மிச்சம் மீதி எதுவும் இருக்க மாரி தெரியலை.
பவித்ராவின்  வாழ்க்கை ஏதோ எந்திர கணவன் மனைவி வாழ்க்கைபோல் போனது. இருவரும் சேர்ந்து சிரிக்கவோ பேசவோ எதுவுமே இல்லை. ஒரே வெறுமையாக தோன்றியது . இதில் வேடிக்கை என்னவென்றால் அவள் கணவனின் நண்பன்,  சுரேஷ், திருமணமாகுமுன்பு  அவளிடம் அநாகரிகமாகவெல்லாம்   நடந்து கொண்டவன்.   இப்போது அவன் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது, அவன்கூட  தன் கணவனைவிட எத்தனையோ பரவாயில்லை என்று தோன்றியது.

பவித்ராவுக்கு  ஒரே குழப்பம். என்ன இது? இது உண்மையா? இல்லை என் மனப்பிராந்தியா?

He is boring!

பவித்ரா என்றுமே அவளை ஒரு மனநோயாளியாக நினைக்கமாட்டாள். மனநலமருத்துவம் என்பதே ஏமாற்று,   வெறும்  வியாபாரமாகி விட்டது என்று நம்புபவள் அவள். டாக்டராம் டாக்டர்! பாவம் சிறு குழந்தைகளுக்குக் கூட ப்ரோஸாக்கைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் மனநோயாளியாகவும்  ட்ரக் அடிக்டாகவும் ஆக்கிவிடும் முட்டாள் மனநல மருந்த்துவர்கள் நிறைந்த உலகம் இது என்று தன் தோழிகளிடம் வாதிடுவாள்.

ஒரு பதின்ம வயதினர்  "எனக்கு டிப்ரெஷன்!  தற்கொலை செய்யணும் போல இருக்கு" னு   பொய் சொன்னால்கூட  "மருத்துவ கஞ்சாவைக்கூட" எளிதாக மனநல டாக்டர் அனுமதியுடன் பெறலாம், புகைக்கலாம். இன்றைய முன்னேறிய சமுதாயத்தில் நடப்பது இதுதான். இப்படித்தான் இன்றைய மனோதத்துவ டாக்டர்களின் அநாகரிகப் பிழைப்பு நடக்கிறது என்று நம்புபவள்  அவள்.

இப்போதுள்ள பெற்றோருக்கும் குழந்தையைப் பெற்று  வளர்க்கத் தெரியவில்லை. இவர்களுக்கு குழந்தையை வளர்க்க நேரம் இல்லை!  நேரமின்மையால்  யார் தலையிலாவது கட்டிவிட்டு, குழந்தைகளிடம் இருந்து தப்பித்து ஓடி, வேலைக்குப் போயி நாசமாப் போனவர்கள் இவர்கள்.  இங்கு வந்தேறி வாழ்கிற இந்தியர்கள் பொதுவாக இவ்வகைதான். வளர்ந்த மேற்கத்திய மக்கள் எல்லாம் குழந்தை பெத்துக்க யப்படுவாங்களாம்! வேலை, சந்தோஷம் ரெண்டுக்குமே குழந்தைகள் தடையாக நிற்குமென்று புரிந்து அந்தத் தவறை இவர்களில் பலர் செய்வதில்லையாம்.  நம்ம இந்தியர்கள் மட்டும்தான்  இந்த விசயத்தில் என்றுமே  திருந்துவதுபோல் தோனலை. ஒருவேளை இந்தப் புதுப் பணக்காரர்கள்  காலங்காலமாக கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவர்கள் என்பதால் தனியாக குழந்தை வளர்ப்பு  எப்படி என்றே அறியாமலே போய்விட்டார்கள் போலும். குயிலுக்கு தன் குழந்தையை வளர்க்கத் தெரியாதாம். அதனால் திருட்டுத்தனமாக காக்கா தலையில் கட்டிவிட்டு வளர்க்க வைக்குமாம்! நம் நாட்டு நவநாகரிகத் தாய்கள் எல்லாம் "குயில்கள்" தானோ என்னவோ?


கடைசியாக, வினோத்தைப் பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள், பவித்ரா.


நீ ஃபோனையே கட்டி அழு!
தன்னுடைய தோழி ஒருத்தியுடைய டாக்டரை அவளிடமே சொல்லாமல் அனுகி ஒரு அப்பாய்ண்மெண்ட் வாங்கினாள். ஒரு நாள் வேலையிலிருந்து மதியம் போல அப்படியே போய் சந்தித்தாள். ஆமாம், அவள் கணவனுக்குத் தெரியாமல்த்தான்.

 அங்கே போனவள், அந்த கொஞ்ச வயது  லேடி டாக்டரை பேசவே விடவில்லை! "எனக்கு எதுவும் வியாதி எல்லாம் இல்லை, மருந்தோ மருத்துவமோ தனக்குத் தேவையில்லை, நான் சும்மாதான் ஒரு சில சந்தேகங்கள் கேட்க வந்தேன்" என்கிற பெரிய முன்னுரையுடன் ஆரம்பித்தாள். அந்த டாக்டர் கொஞ்ச வயதுதான், இருந்தாலும் இவளை அழகாகப் புரிந்து கொண்டாள்.

"சரி சும்மா சொல்லுங்க! எதைப்பத்திப் பேசணும்?" என்றாள் அவள்.

"இல்லை முக்கியமா என் கணவர் பற்றி.."

போர் அடித்துப் போன தம்பதிகளின் படுக்கை அறை


"உங்க கணவர் பற்றி யாரிடமாவது பேசுவது நல்லது.  நீங்களே அவர் குறைளைப் பார்த்து குற்றம் சொல்லுபவராகவும், ஒரு நீதிபதியாக இருப்பதை விட. ஆமா உங்களுக்கு அரேன்ஞிட் மேரேஜா?"

"இல்லை இல்லை லவ் மேரேஜ்தான்"

"பழைய காதலரும், இன்றைய  பழகிய கணவனும் வேற வேற மாதிரி இருக்காங்களா?"  என்றாள் புன்னகையுடன்

"இல்ல வினோத்  சந்தேகமே இல்லாமல் முந்திமாதிரி இல்லை.."

"உங்க மேலே அன்பா இருக்க மாட்டேன்கிறாரா?"

"அன்பா இல்லைனாலும் பரவாயில்லை., என் அருகில் இருக்கவே பயப்படுகிறார். "

"ஒரே படுக்கையில்தானே தூங்குறீங்க?'

"ஆமா, ஐ மீன் உண்மையான அன்பு இல்லாமல் சும்மா பேருக்கு எல்லாம் செய்வதுபோல எனக்கும் என் குழந்தைகளுக்கும் தேவையானதை எல்லாவற்றையும் செய்கிறார்."

"அப்படினா?. கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா?'

Tell me one reason! நாம் ஏன் சேர்ந்து வாழணும்?


"அவர் வேலையை, அவர் செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்துவிடுவார். அதில் குறை சொல்ல எதுவும் இடம் இல்லை. ஆனால்.."

"ஆனால்?"

"அதில் இன்வால்வ்மெண்ட் இல்லவே இல்லை. ஒரு ஈடுபாடு இல்லை..அவர் செய்ய வேண்டியதை செய்தாலும் அதில்  ஏதோ பெரிய குறை இருக்கமாதிரி தெரியுது"

"இல்ல, உங்களிடம் இதை கேட்டே ஆகணும்.  உங்களுக்குள் செக்ஸுவலா எதுவும் பிரச்சினைகளா?"

"இல்லை, அதில் ஒண்ணுலதான் பிரச்சினையே இல்லை!"

"தட்ஸ் க்ரேட்!'

"தாங்க் யு!"

"இந்தா பாருங்க பவித்ரா!  நம் அனைவருக்குமே இரண்டு மனம் அல்லது இதயங்கள் உண்டு. அவைகள் பலூன்போல, பெரிதாகும், சுருங்கும்!"

"புரியவில்லை?"

"கவனிங்க! ஒன்று இரண்டாவது மனிதரின் குறைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். அதாவது இரண்டாமவர் என்பது, கணவன், காதலன், நண்பர், எஜமானி, அம்மா, அப்பா, மகன், மகள்,  ஏன் நான்கூட அப்படிதான், யாராவேணா இருக்கலாம். இன்னொரு இதயம் அவர்களிடம் உள்ள நிறைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும். உங்க கணவரை காதலிக்கும்போது அவரிடம் இருக்கிற நற்குண்ங்களை மட்டும் கணக்கில் எடுக்கும் இதயம்தான் உங்களுக்கு "ஆக்டிவாக" வேலை செய்தது. அவருடைய குறைகள் எல்லாம் சேமிக்கப்பட்ட இதயம் "இன்னாக்டிவ்"ஆக இருந்தது. இருந்தாலும் அவரிடம் உள்ள குறைகள் எல்லாம் அதில்தான் நீங்க அவைகள் பற்றி அசட்டையாக இருந்தபோதிலும் சேமிக்கப் பட்டது. திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனபிறகு ஆக்டிவான இதயம் இப்போது இன்னாக்டிவாக ரெஸ்ட் எடுக்கிறது. இன்னாக்டிவா இருந்த இதயம் இப்போது ஆக்டிவாகி அவரிடம் உள்ள குறைகளை எல்லாம் பெரிது பெரிதாக் என்லார்ஜ் செய்து படம் போட்டுக் காட்டுது"

"இதென்ன இதயம், பலூன்னு கதை சொல்றீங்க? "

"மனிதர்கள் அனைவருமே குறையும் நிறையும் உள்ளவர்கள்தாம், பவித்ரா. அது யாராயிருந்தாலும் சரி. உங்க கணவரும் அப்படித்தான்."

"நீங்கள் எப்படி?"

"நானும் குறையும் நிறையும் உள்ளவள்தான். "

"இப்போ என்ன சொல்றீங்க?"

"எனக்கு ஒரு தோழி உண்டு. அவள் ரெண்டு வருடங்கள் முன்பு திருமணம் செய்தாள். அவள் கணவர் இவளைவிட அதிகம் சம்பாரிப்பவர். கல்யாணம் செய்யும்போதே இருவரும் ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டார்கள். அதாவது இருவரும் அவரவர் சம்பளத்தை தனியே தனித்தனி அக்கவுண்ட்ல வைத்துக் கொள்வது என்பது அது. நல்ல புரிதலுடந்தான் மணந்தார்கள். அவள் கணவனுக்கு இவளை மணக்கும் முன்பே ஒரு வீடு இருந்தது. கல்யாணம் ஆன பிறகு அதை அவளுக்குப் பங்கு கொடுக்காமல் அவர் பெயரிலேயே வைத்துக் கொண்டார். இவளுக்கு அவர் வீட்டில் உரிமை இல்லை ஆனால் அந்த வீட்டில்தான் இருவரும் வாழ்ந்தார்கள். இருவருக்கும் தனி தனிக் கார். குழந்தைகள் இல்லை."

"அப்போ இவள் ரெண்ட் செலுத்துவாளா? வீடு அவருடையது இல்லையா?"

"இல்லை. ரெண்டுக்கு பதிலா இவள் "யுட்டிலிட்டிஸ் பில்" மற்றும் "க்ராஸரி பில்" இதெல்லாம் இவள் பொறுப்பு. எல்லாம் ஒழுங்காத்தான் போயிட்டு இருந்தது. கணவன் நாணயமானவன், பெண்கள் விசயத்தில் அவனை 100% நம்பலாம் அது இதுனு அவனோடை  ப்ளஸ் பாயிண்ட் சேகரித்த பலூனை ஊதுவாள். அவனிடம் உள்ள குறைகள் அடங்கிய பலூனை ரெஸ்ட் எடுக்க விட்டு விட்டாள். நாட்கள் கடந்தன. அவன் ஒரு சாதாரண ஆம்பளையாகத் தெரிய ஆரம்பித்தான். குறைந்கள் நிறைந்த பலூன் பெரியதாக ஆரம்பித்தது. ஒரு 18 மாதங்கள் கடந்ததும் குறைகள் உள்ள பலூன் பெருசாகி, நிறைகள் உள்ள பலூன் சுருங்கிடுச்சு.."

"அப்புறம்?"

"என்ன என்னவெல்லாம் அவனுடைய ப்ளஸ் பாயிண்ட்ஸோ அதையெல்லாம் விட்டுவிட்டு அவனுடைய குறைகள பெருசா என்னிடம் ஊத ஆரம்பிதாள். அவனுடைய ப்ளஸ் பாயிண்ட்ஸ் எல்லாமே சாதாரணமாகி விட்டது. கடைசியில் \3 மாதத்தில் டைவோர்ஸ் பண்ணிவிட்டாள். இப்போ அவளிடம் உள்ளது அவனைப்பற்றிய ஒரே பலூந்தான். அவன் குறைகள் அடங்கியது. அது மட்டும்தான் ஆக்டிவா, பெரிதாக இருக்கு"

"என்ன சொல்ல வர்ரீங்கனு புரியவில்லை?"

"உறவுகள் எல்லாமே இப்படித்தான். There is nothing as perfect couple. Relationships get weakened over time. இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கு கெடையாது. அவர்களுக்குள் குழந்தை எதுவும் கெடையாது. அதனால் டைவோர்ஸால பெருசா பாதிப்பு இல்லாமல்ப் போய்விட்டது."

I dont want to get involved! உன் பிரச்னை உன்னது. என் பிரச்சினை என்னது!
 

"நான் டைவோர்ஸ் பண்ணுவதாக இல்லை!"

"அப்போ குறைகள் உள்ள பலூனை ஊதுவைதை நிறுத்துங்கள்."

"சரி, முயலுகிறேன். "

"அது அவ்வளவு எளிதல்ல! நீங்க உங்க மனதைப் பண்படுத்தணும்!'

"அதான் எப்படினு தெரியலை. ஐ வாண்ட் டு ஃபாளோ அப் வித் யு. அடுத்த அப்பாய்ண்மெண்ட் ஒரு மாதத்தில் தர்ரீங்களா?"

"நிச்சயமா!"

"தாங்க்ஸ்"

-----------------------

4 comments:

sekar said...

நம் குறைகளைக் கண்டறிந்து அதை நிவர்த்திச் செய்தால் வாழ்க்கை ஜொலிக்கும்

நல்ல பதிவு .

Avargal Unmaigal said...

வாவ் என்று வியக்க வைக்கிறது உங்களின் இந்த எழுத்துக்கள்தான் பாராட்டுக்கள் வருண் இன்று நான் படித்த பதிவுகளில் என்னை கவர்ந்த பதிவு இது ..

உஷா அன்பரசு said...

நல்ல கருத்து.....

நாடோடி said...

கதை நல்லா வந்திருக்கு.. வாழ்த்துக்கள்!!