Friday, April 25, 2014

எக்ஸிட் போல்! அஇஅதிமுக 41 தொகுதிகளிலும் வெல்லும்!

உங்களுக்கும் எனக்கும் யாரைப் பிடிக்கிது? யாரு ஆட்சிக்கு வந்தால் நல்லதுனு நான் நினைக்கிறேன்?  நீங்க என்ன நெனைக்கிறீங்க? இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். பெருவாரியான மக்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பதை,  அதில் ஒரு சிலரிடம் விசாரித்து, எடைபோட்டு  வெளியிடுறாங்க. அதான்  இந்த ஒப்பீனியன்/ எக்ஸிட் போல் ரிசல்ட்ஸ்!


இந்த தேர்தலில் exit poll படி இப்படி சேகரித்து எடுக்கப்பட்ட முடிவு எப்படி இருக்கும்? என்று நான் மக்களிடம் கேட்காமலே, ஓட்டுப் போடாமலே சொல்ல முடியும்! எப்படி? எனக்கு  அதற்காக "ஸ்பெஷல் பவர்" பகவான் அருளியுள்ளார்! இதை நான் சொன்னால் நம்ப மாட்டீங்க.  இருந்தாலும் நானே அந்த உண்மையை உங்களிடம்  சொல்றேன்.
 மாநிலத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் என்ற முடிவுக்கும் நம் மக்கள் வந்தது, 2 ஜி ஊழல் சம்மந்தமாக ஊதப்பட்டதுதான். அதே 2 ஜி அலை இன்னும் வீசுகிறது. அதே இந்த தேர்தல் வெற்றியையும் நிர்னயம் செய்யுது. யார் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் காசு கொடுத்தெல்லாம் எல்லா ஓட்டையும் வாங்க முடியாது. இப்போ இருக்கிற சூழலில் ரெண்டு பெரிய கட்சிகளுமே பணபலம் படைத்ததுதான். இவன் 100 ஓட்டை வாங்கினால் அவனும் 100 ஓட்டை வாங்கிவிடுவான். இந்த சூழலில் இது இரண்டும் அடிபட்டுப் போகும்.

நான் விசாரித்தவரைக்கும், மக்களுக்கு இன்னும் 2ஜி ஸ்கேம் தான் மனதில் நிற்கிறது என்பதுதான் உண்மை. தமிழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இருண்ட தமிழகத்தில் தடவித் தடவி ஜெயலலிதா எதுவும் பெருசாக சாதிக்கவில்லை என்றாலும் திமுக தன்னை உயர்த்திக்கொள்ள திமுக விற்கு பெரிய வாய்ப்பெதுவும்  கொடுக்கவில்லை என்பது ஒருபுறம். திமுக அடிதடிகள், அதாவது அழகிரி வெளியேற்றம் போன்றவை திமுக மேல்  மக்களுக்கு மேலும் நம்பிக்கை இழக்க வைத்துள்ளது. அதனால் இந்தேர்தல் முடிவு திமுகவுக்கு பாதகமாகத்தான் அமையும். இது திமுக வின் சரிவுகாலம் என்றுதான் தோன்றுகிறது.

நான் விசாரித்தவரைக்கும் ஜெயலலிதாவை தலைமையாகக் கொண்டு போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் குறைந்தது 30 தொகுதிகளிலாவது அமோக வெற்றியடைவார்கள். அதுவும் 70 விழுக்காடுகளுக்கு மேல் வாக்குப் பதிவு நடந்துள்ளது என்பதால் நிச்சயம் முடிவு  அ இஅதிமுகவுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என தோணுது. 41 தொகுதிகளிலும் அஇஅதிமுக வே வெல்லும் என்பதே நான் கேட்டறிந்த உண்மை!

அப்புறம் ஒண்ணு... சொல்ல மறந்துட்டேன். எலக்சன் முடிந்த பிறகுதான் இந்தமாதிரி பதிவெல்லாம் எழுதணும். அதுக்கு முன்னால் எழுதினால், இவன் பதிவுதான் நம்முடைய இந்த நிலைக்குக் காரணம்னு அரசியல்வாதிகள் எல்லாம் காண்டுடன் பொலம்புவார்கள்!  அப்படி எதுவும் பொலம்ப வேண்டாமே னு ஒரு நல்லெண்ணத்தில்தான்  இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்துவிட்டு இப்போ இந்த ஜோஸியம் சொல்றேன். :)

ஒருவேளை என்னுடைய ப்ரிடிக்ஷன் தவறானதென்று ஆகிவிட்டால்? ஒரு வேளை அப்படி  எதுவும் ஆகிவிட்டால்..என்னைத் திட்டாதீங்கப்பா! எல்லாம் பகவான் செயல். அவன்தான் வருணை இப்படி யோசிக்கச்சொல்லி வருண் பதிவு போட வைத்தான்னு என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும். இல்லையா?!

என்ன முறைப்பு?  "பகவான் இல்லை"னு நான் சொன்னால் முறைப்பீங்கனு இப்படி "பகவான் இருக்கிறார்"னு நம்பி,  பகதன் நான், அவர் மேல்  என் பாரத்தை போட்டாலும் நீங்க முறைக்கிறது நல்லாயில்லை, சொல்லிப்புட்டேன்! :)

10 comments:

வருண் said...

BTW, நீங்களும் உங்க "போல்ட் ப்ரிடிக்சனை" என்னைப்போல் இங்கேயே பின்னூட்டங்களில் சொல்லலாம். சும்மா இழுக்காமல், 30, 9, 2னு (ஒரு உதாரணத்துக்குத்தான் இது) தெளிவா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு சொல்லணும்.

சொல்லங்களேன்!

யாரு செயிக்கிறாங்கணு பார்ப்போம். நீங்களா இல்லை நானா?னு! சரியா? :)

Peppin said...

23 admk; 14 DMK; 2 bjp+: 0. Cong

drogba said...

ராசா என்ற மாணிக்கத்தை(?????) பற்றி யார் தப்பா சொன்னது?? எனக்கு இன்னும் சிலரை புரிந்து கொள்ள முடியவில்லை. இதை படியுங்கள்..

http://abiappa.blogspot.sg/2014/04/2g.html?m=1

Bagawanjee KA said...

புதுவையையும் சேர்த்தே நாற்பது தொகுதிகள்தானே ,எப்படி வந்தது 41?

புதிய கோணங்கி ! said...

ADMK 21, DMK 12, BJP 6 - Tamilnadu
Congress 1 - Puthuchery

ராவணன் said...

அதிமுக 48 தொகுதிகளில் வெல்லும் என்று நினைத்தேன். அப்படியென்றால் 7 தொகுதிகள் அவுட்டா....?

Manickam sattanathan said...

41 ????? :))

வருண் said...

peppin, pudhiya kONangki:

பார்க்கலாம். :)

-------------

பகவான் ஜி, ராவணன், மாணிக்கம்:

என் அரசியல் கணக்கு எவ்ளோ மட்டமா இருக்கு பாருங்க! :)

_________

சுனா: உனக்கு ஏண்டா எதுக்கெடுத்தாலும் கோபம் வருது? :)))

வருண் said...

ட்ரோக்பா:

அபி அப்பா ஒரு "டிப்பிக்கல்" அல்லது பக்கா திமுக காரர். அவங்க அப்படித்தான். :))))

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்