இதெல்லாம் நமக்குப் புதிதல்ல! புராணங்களிலும், இதிகாசங்களிலும்கூட இவைகள் இருக்கலாம்தான். இருந்தாலும் இப்பாடத்தை நான் திரும்பத் திரும்ப படிக்கத்தான் செய்கிறோம். கெளரவம் சினிமாவில்கூட வளர்ப்பு மகன் "கண்ணன்", "பாரிஸ்டர் ரஜினிகாந்த் " நட்பிலிருந்து விலகி அவரின் எதிரியாகும்போது பச்சை துரோகியாகிறான். ரஜினிகாந்தை எளிதில் வீழ்த்தக் கூடிய சகதியுள்ள மிகப்பெரிய பலசாலியாகவும் ஆகிறான்.
கெளரவம் பெரியப்பா ரஜினிகாந்த், வளர்ப்புமகன் கண்ணன் |
பாசமான பெரியம்மா, பாரிஸ்டர் பெரியப்பா (கெளரவம்) |
இதேபோல், ஈழவிடுதலைப் புலிகள் தளபதியாக இருந்த கர்ணா என்பவர், புலிகள் தலைவரான பிரபாபாகரனிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் இருந்த நட்பை உடைத்துக்கொண்டு வெளியேறியதால் ஏற்பட்ட விளைவுகள் நம் அனைவருக்கும் தெரியும். கர்ணாவை தமிழர்கள் அனைவருமே துரோகி என்றுதான் கூசாமல் சொல்கிறோம். ஆனால் கர்ணா தன்தரப்பில் உள்ள "நியாத்தையும்" எடுத்து வைத்து "நியாயப்படுத்த" முயலத்தான் செய்தார். கர்ணாவின் "கதைகளில்" உண்மையே ஓரளவுக்கு இருந்தாலும் அவர் செய்த இச்செயலால் ஏற்பட்ட அகோர விளைவுகளால், அவரை தமிழின துரோகி என்றுதான் வரலாறு சொல்லப்போகிறது.
So, why do you respect your friend? (நண்பனை ஏன் மதிக்கணும்?)
Why do you have to respect "friendship"? (நட்பு ஏன் உயர்தரமானது?).
If you rationally analyze this, it is not sentiments as people claim, It is strictly business! Because you are a dead meat when your close friend becomes your enemy! So, treat him fairly ALWAYS!
அதாவது உன் நண்பன் துரோகியானால்/எதிரியானால் அவன் உன்னைவிட பலமடங்கு சக்திவாய்ந்தவானகிவிடுவாதால் உன் கதி அதோ கதிதான்! தயவு செய்து நட்பு பாராட்டுங்கள்- இது உங்களுக்கு நீங்களே செய்யும் சுயநலச் சேவை. வேறொன்றும் இல்லை! :-)
No comments:
Post a Comment