Sunday, October 12, 2014

என்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்!

"ஆமா நீ எங்கே இங்கே வந்த, நித்யா!!!" ஒரே குழப்பத்துடணும் சந்தோஷத்துடணும்.

" இப்போத்தான் இங்கே வந்தேன். வந்ததும் உங்களைத் தேடி வந்துட்டேன், டார்லிங்" என்றாள் நித்யா!

"எனக்கு ஒண்ணுமே புரியலை. எப்படி இது? நீ ..இன்னும் அதே இளமையாவே.. முதன் முதலா நீ அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க? இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும்..? "

"நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க, டார்லிங்?"

"இது கனவா, நித்யா?'

"இல்லையே? என்னை கிள்ளிப்பாருங்க!"

"சரி, இங்கே எதுக்கு வந்த நீ?"

"எதுக்குனா? நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுத்தேன் இல்லையா? அதை நிறைவேற்றத்தான் உங்களைத் தேடி ஓடி வந்தேன்."

"என்ன அது? வாக்கு?"

"அதான். ஒரு நாள் என்னை உங்களுக்கு முழுசா தருவேன்னு சொன்னேன் இல்ல, டார்லிங்?"

"அதெல்லாம் எதுக்கு இப்போ, நித்யா? அதெல்லாம் ஒரு காதலில், காம வேகத்திலே சொன்னது நித்யா. அதெல்லாம் அப்பவே நான் சீரியஸா எடுத்துக்கவில்லை..மறந்துட்டேன்."

"நான் மறக்கவில்லை, டார்லிங்."

"இப்போ என்ன சொல்ல வர்ர, நித்யா? நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா? நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ?  "எக்ஸ்ட்ரா ஃபன்"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே? அதை இன்னொரு முறை சொல்லத்தான வந்த?" என்றான் ஒரு மாதிரியான கடுமையான குரலில்.

"நான் எதுவுமே சொல்லல, டார்லிங். நீங்கதான் எல்லாமே சொல்றீங்க!"

"நீ அப்படித்தான் நெனச்ச! இதை எத்தனை தடவை இதை சொல்லியிருக்க தெரியுமா? நான் அதை மறக்கவில்லை"

"நான் இப்போ உங்களோட சண்டை போட வரலை, டார்லிங்"

"ஆமா  நீ ரொம்ப உண்மையானவள். நான் முழு அயோக்கியன்! உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க? அதுக்குத்தானே, வந்திருக்க,  நித்யா?'

"நான் அதுக்காக எல்லாம் வரலை, டார்லிங்!"

"அப்போ?'

"எனக்கு இப்போ எந்த கம்மிட்மெண்ட்ஸும் இல்லை. உங்களுக்கும்தான். இப்போவாவது.."

"இப்போவாவது?'

"உங்களுக்கு நாம் பேசியதெல்லாம் ஞாபகம் இல்லையா, டார்லிங்?"

"மறந்தால்த்தானே? எது?  நீ எழுதிய லவ் லெட்டரா?"

"எந்த லெட்டெர்?'

"அதான் "ப்ளீஸ் கன்சிடர் திஸ் டார்லிங்"  லெட்டர்."

"இ-மெயில்ல அனுப்பியதா?'

"ஆமா, ஏதோ காதல் வேகத்தில்..காம ஏக்கத்தில்.. இன்னும் இருக்கு. நான் வேணா அதை தேடி எடுக்கவா? ஒரு நிமிடம்  இரு!"

"ஹா ஹா ஹா!  இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன்,  இண்டெர்னெட் எல்லாம் கெடையாது டார்லிங்" அவள் அழகாகச் சிரித்தாள்.

நித்யா அவனைக் கேலிபண்ணி சிரிக்கும்போதுகூட அவனை ஹர்ட் பண்ணாமல் மென்மையாகத்தான் சிரிப்பாள்.

"ஏன்? புரியலை"

"எனக்கென்ன தெரியும்? அப்படியே இருந்தாலும் உங்க அக்கவுண்ட் யூசர் நேம் பாஸ்வேட்லாம் ஞாபகம் இருக்கா? இருக்காது டார்லிங்"

"ஏய், ஆமா..எல்லாமே மறந்துடுச்சு."

"எனக்கும்தான், டார்லிங். ஆனால் உங்களை மட்டும் ஞாபகம் இருக்கு.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..அப்படியே.. நம்ம பேசியதெல்லாம் அப்படியே நேற்றுத்தான் பேசியதுபோல ஞாபகம் இருக்கு, டார்லிங்"

"எனக்கும் அந்த லெட்டர்ல நீ சொன்னதெல்லாம்கூட நல்லா ஞாபகம் இருக்கு, நித்யா.'

"நான் எதையும் மறக்கவில்லை! மறுக்கவும் இல்லை! அதெல்லாம் என் அடி மனதில் இருந்து வந்தவை. எனக்கு என்றுமே மறக்காது"

"என்னடி சொல்ற இப்போ?"

"இப்படி என்னை "டி" போட்டு நீங்க கூப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, டார்லிங்? எனக்கு அழுகை வருது.."

"ஏன்னு தெரியலை. இப்போ உன்னை அப்படி கூப்பிடுறது ஏனோ தப்பா தோணலை, நித்யா"

"எனக்கும்தான். இப்போ எதுவுமே தப்பு இல்லை, டார்லிங்! நான் உங்க காதலி. நான் உங்களுக்கு மட்டும்தான்!"

"எனக்கு ஒண்ணுமே புரியலை, நித்யா."

"நீங்கதான் மறுபிறவி பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்ல? எனக்குத்தான் அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை"

"அதெல்லாம் சும்மா உளறல்..இது என்ன மறுபிறவியா?'

"தெரியலை. உங்களை எனக்குத் தெரியும். நீங்க என் டார்லிங். என்னை நன்கு புரிந்து கொண்டவர். வேறென்ன தெரியணும் எனக்கு? வேறென்ன வேணும் எனக்கு?"

"இப்போ என்ன? நீ சொன்ன உன்  வாக்கை நிறைவேற்றிட்டு போயிடுவியா?"

"அது தெரியலையே, டார்லிங்"

"நீ கொடுத்த வாக்கு, எல்லாம் இருக்கட்டும்.. உன் மடியில் ஜஸ்ட் கொஞ்சம் படுத்துக்கவா நித்யா, ப்ளீஸ்?"

"என்ன டார்லிங் இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்குறீங்க.  இங்க வாங்க! ஐ அம் யுவர்ஸ்"

சத்தியமா நான் வரையல.. இணையத்தில் திருடியது


"நித்யா..உண்மையிலேயே உன் மடியில் படுத்து இருக்கேனா?"

"லெட் மி கிஸ் யு, டார்லிங்"

" யு ஸ்மெல் குட்"

"ஒண்ணு தெரியுமா? நீங்க எனக்கு முன்னால வந்து பல ஆண்டுகளாச்சு. நான் ஜஸ்ட் இப்போத்தான் வந்தேன். வந்ததும் உங்களை பார்க்க ஓடி  வந்துட்டேன்."

"ஏன்?"

"Because I loved you with all my heart, darling!"


"So did I"


-முற்றும்



************************************************************
Epilogue:

தமிழ் தெரிந்த வெள்ளைக்காரப் பொண்ணுங்க..

"இந்தக் கதை படிச்சியாடி, வித்யா?"

"எதுடி?"

"Because I loved you with all my heart!"

"Yeah"

"கதை புரிஞ்சதாடி?"

"என்ன ரெண்டு பேரு காதலிக்கிறாங்களாம், ஒண்ணு சேர முடியலையாம். பிரிஞ்சிடுறாங்க போல? அப்புறம்.."

"அப்புறம்?'

"ரெண்டு பேரும் செத்த பிறகு she goes to him and gives her completely"

"மறு பிறவியிலேயா?"

"மறுபிறவி இல்லை. ரெண்டு பேரும் இறந்த பிறகுணு நெனைக்கிறேன்."

"எங்கே சந்திக்கிறாங்க?"

"யாருக்குத் தெரியும்? நிறைவேறாத காதல் என்பதாலோ என்னவோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு வரை ஒருவர் சந்திக்கிறாங்களாம். They are in a strange world. There is NOBODY between them now! அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ! They dont have any commitments. They can do whatever they want! She goes to him and gives her as she promised. She kept her promise! இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது!"

"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"!

*****************

பின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா? ஆமா, மீள் பதிவுதான். புதுசாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க!


10 comments:

Mahesh said...

பின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா? /// muthal 2 lines padikkumpothe kandu pidichitten sir.

மீள் பதிவுதான். புதுசாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க!/// hmm athutan thodarnthu ippo milpathivaa poduringala?

திண்டுக்கல் தனபாலன் said...

நேற்று நீயா...? நானா...? (Vijay TV) பார்த்ததின் பாதிப்பா...?

Iniya said...

என்ன வருண் மீள் பதிவா....நானும் என்னவோ பக் பக் கென்னிச்சு இதெல்லாம் வருணுக்குத் தான் இப்படி நடப்பதாக எண்ணி வாசித்தேன். அடகடவுளே வெறும் கதை தானா இப்ப தான் மூச்சே வந்துது. ஆமா இது நியாயமா சொல்லுங்க மீள் பதிவை போடுவது. எனக்கு இது புதிது அதனால் எனக்கு ok தான். சும்மா சொல்லக் கூடாது கதை நல்லாவே போயிற்று.பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....!

மகிழ்நிறை said...

சாரி ! முதல் கமெண்டில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.அதனால அழிச்சுட்டேன்:(
இல்ல இப்போ தான் படிக்கிறேன்:)

கீழே அந்த பொண்ணுங்க விளக்கம் சொல்லாமலே அது எங்க நடந்துச்சுனு புரியுது:)

டாபிக்கை பார்த்தவுடன் ஓடிபோட்டலாமானு பார்த்தேன். போன பதிவின் பின்னூட்டத்தில் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது***இதுக்கு உங்க ரியாக்சன் எப்படி இருக்கும்னு யோசித்து பார்த்தேன்**:))))
so, என்னை மாதிரி ரீடர்ஸ்சையும் நினைவில் வைத்து தான் எழுதிருப்பிங்கனு தொடர்ந்தேன்.
காதலும் ஒரு பீலிங்க்ஸ், எதாவது சாதிக்கணும்னு நினைக்கிறவங்க அதை கடந்து வந்தாகணும், சாகிறவரை அதை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கிறது நம்மமேல நமக்கு இல்லாத அக்கறை இன்மையை காட்டுது. நாம மேல நமக்கே அக்கறை இல்லேன்னா இன்னொருத்தி தூக்கிபோட்டுட்டு போகத்தான் தானே செய்வா? வாழ்ந்து அவள் மிஸ் பண்ணினா வாழ்கையை நினைச்சு வருந்த வைக்கணும்>>>>ஸ்டாப் ஸ்டாப் என்ன ஒரே அட்வைஸ் மழை இது???
அது ஒன்னும் இல்ல, என் தம்பி ஒருத்தன் லவ் பெய்லியர்(!!??) என தாடி வளர்த்த போது நான் கொடுத்த கௌன்சிலிங்ல ஒரு பகுதி. இப்போ ஏரியாவில் பல குட்டி பசங்களுக்கு அவன் ரோல் மாடல். அட்வைசர்:))))

வருண் said...

***mahesh said...

பின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா? /// muthal 2 lines padikkumpothe kandu pidichitten sir.

மீள் பதிவுதான். புதுசாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க!/// hmm athutan thodarnthu ippo milpathivaa poduringala?***

வாங்க மஹேஷ்! திடீர்னு லைஃப் பிஸி ஆயிடுச்சு..பளாக்கை ஆக்டிவா வைத்திருக்கணும்னா இதுபோல் எதையாவது மீள்பதிவு செய்ய வேண்டியிருக்கு.. :)

வருண் said...

**** திண்டுக்கல் தனபாலன் said...

நேற்று நீயா...? நானா...? (Vijay TV) பார்த்ததின் பாதிப்பா...? ***

வாங்க தனபாலன்.. அந்த நீயா நானா பார்க்கலையே..அப்புறம் நான் இந்தக்கதை எழுதி ஒரு வருடத்திற்கு மேலாகுது.. ஒரு வேளை பார்த்திபனுக்கு என் கதை படிச்ச பாதிப்பாக இருக்கலாம்.. :)))

வருண் said...

வாங்க இனியா! :)

***அடகடவுளே வெறும் கதை தானா இப்ப தான் மூச்சே வந்துது. **

நீங்க தேவகோட்டைக் காரர் உண்மைக் கவிதையைப் படிச்சுட்டு இதையும் அப்படி நெனச்சுட்டீங்கனு நெனைக்கிறேன்.. :)

***ஆமா இது நியாயமா சொல்லுங்க மீள் பதிவை போடுவது. எனக்கு இது புதிது அதனால் எனக்கு ok தான்.***

எல்லாருக்கும் இது மீள்பதிவு இல்லைதானே, இனியா? உங்களுக்கெல்லாம் புத்தம் புதிய பதிப்புத்தானே? :)

***சும்மா சொல்லக் கூடாது கதை நல்லாவே போயிற்று.***

:-)

***பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....! ***

உங்க விமர்சந்த்துக்கு நன்றி, இனியா!

வருண் said...

வாங்க, மைதிலி. :)

***சாகிறவரை அதை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கிறது நம்மமேல நமக்கு இல்லாத அக்கறை இன்மையை காட்டுது. ***

"அதை சாதாரணமாக கடந்து போய்விடுவது..அந்தக் காதலை இழிவுபடுத்தியதாக ஆகிவிடாதா?" னு ஒரு சிலர் கேட்பார்கள். :) கெளன்சிலர்தான் பதில் சொல்லணும்!

உண்மையான காதலைக்கூட நம் வசதிக்கு "இன்ஃபாச்சுவேஷன்"னு சொல்லி சமாளிக்கலாம் தான்.ஆனால் அதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கிறதுதான். இல்லையா? கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம்னு சொல்லுகிறோம். ஆனால் எல்லா நிகழ்காலமும் நாளைய கடந்தகாலம்தானே, மைதிலி? இல்லையா? அப்போ நிகழ்காலத்துக்கு (நாளைய கடந்தகாலத்துக்கு) முக்கியத்துவம் கொடுப்பதும் லாங் ரன்ல பார்த்தால் அர்த்தமற்றதாகி விடுகிறது. சரியா? :))

------------

***ஸ்டாப் ஸ்டாப் என்ன ஒரே அட்வைஸ் மழை இது???
அது ஒன்னும் இல்ல, என் தம்பி ஒருத்தன் லவ் பெய்லியர்(!!??) என தாடி வளர்த்த போது நான் கொடுத்த கௌன்சிலிங்ல ஒரு பகுதி. இப்போ ஏரியாவில் பல குட்டி பசங்களுக்கு அவன் ரோல் மாடல். அட்வைசர்:***

ஆக, இப்போ அக்காவும் தம்பியும் கெளனசிலராகிட்டீங்க!!! :)

எப்படியோ உங்க அருகில் வாழும் "இளவரசன்களை" நல் வழிப்படுத்தினால் நல்லதுதான். :)

மகிழ்நிறை said...

அந்த காதலை சிறப்பிக்கமட்டும் தான் நாம் பிறந்தோமா? என்பது தான் என் கேள்வி:)
** கடந்து போய்விடுவது..அந்தக் காதலை இழிவுபடுத்தியதாக ஆகிவிடாதா?" னு ஒரு சிலர் கேட்பார்கள். :) ** போன பின்னூட்டத்தில் வந்த நடுவர்கள் தானே அவங்க:) அவங்க கிட்ட ஆர்க்யூ பண்ணுறத பத்தி எனக்கு தயக்கம் இல்லை, ஆனா ஏற்கனவே ஒரு முன் முடிவோடு நடத்தப்படும் விவாதங்கள் காலப் பாழ் :))
எப்பவும் அவள் நினைவை துடைத்துவிடவில்லை அவன். அவள் பெயர் கேட்டால், அவளுக்கு பிடித்தவற்றை பார்த்தால் சட்டென உடைந்து, ஆனால் வேகமாக தன்னை மீட்டுகொள்கிறான்:) ஆனா மேடம் என்ன செஞ்சாங்க தெரியமா? தம்பி நம்பர் மாத்தினது தெரியாமல் அவன் வாட்ஸ் அப்பில் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு அவனுக்கு ஒரு காலத்தில் அனுப்பிய ஒரு டச்சிங்கான sms ஐ தன் செல்ல கணவனுக்கு டெடிகேட் செய்திருக்கிறாள்!! அந்த காதலை கௌரவப்படுத்த அவன் கடைசிவரை தேவதாசாக திரியவேண்டுமா? அவன் படித்த படிப்பு பாழாகட்டும், அவன் அம்மா அப்பா கடைசிவரை துணையற்ற தனிமரமாய் அவன் நிற்பதை பார்த்துப்பார்த்து பரவசபடட்டும். ஆனால் என்ன அவன் புனிதமான காதலுக்கு முன் மற்றெல்லாம் தூசுதனே?( ஆமா !! ஏன் நான் இந்த வருனிடம் மட்டும் பிரச்சனைக்குரிய கம்மெண்டுகளை இடுவதே பிழைப்பாக வைத்திருக்கிறேன்???

வருண் said...

****எப்பவும் அவள் நினைவை துடைத்துவிடவில்லை அவன். அவள் பெயர் கேட்டால், அவளுக்கு பிடித்தவற்றை பார்த்தால் சட்டென உடைந்து, ஆனால் வேகமாக தன்னை மீட்டுகொள்கிறான்:) ஆனா மேடம் என்ன செஞ்சாங்க தெரியமா? தம்பி நம்பர் மாத்தினது தெரியாமல் அவன் வாட்ஸ் அப்பில் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு அவனுக்கு ஒரு காலத்தில் அனுப்பிய ஒரு டச்சிங்கான sms ஐ தன் செல்ல கணவனுக்கு டெடிகேட் செய்திருக்கிறாள்!! அந்த காதலை கௌரவப்படுத்த அவன் கடைசிவரை தேவதாசாக திரியவேண்டுமா? ***

ஹும்ம்ம்.. இதில் யாரைப் பார்த்துப் பரிதாப்படுவதென்று தெரியவில்லை. கணவனையா? இல்லைனா, பழைய காதலனையா? இல்லனா இப்படி தரத்தில் "கீழிறங்கிவிட்ட"அந்தப் பெண்ணைப் பார்த்தா?

***ஆமா !! ஏன் நான் இந்த வருனிடம் மட்டும் பிரச்சனைக்குரிய கம்மெண்டுகளை இடுவதே பிழைப்பாக வைத்திருக்கிறேன்???***

இதிலென்ன இருக்கு? ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதனால்தான் opinion difference வருகிறது. உங்களுடைய வேறு விதமான அனுபவத்தை நீங்க சொல்றீங்க! சொல்ல வேண்டிய சூழலில் இருப்பதால். :( நன்றி மைதிலி. I am learning. :)