நாத்திகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரியல்ல! கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்திகர்களைப் பொறுத்தமட்டில் பொதுவாக "கடவுள் கடவுள்" னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்திகர்களைத்தான் பிடிக்காது! மற்றபடி நாத்திகர்களுக்கும் கடவுளுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்திகர்களுக்கு எதிரி அல்ல!
இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார்னு வச்சுக்குவோம். அவன் அவன் அவரிடம் போயி எனக்கு இதைக் கொடு, அதைக் கொடுணு கொல்லுறாணுக. பாவம் எல்லாரும் போட்டு இந்தாளு உயிரை வாங்குறாணுகளே, எதுக்கு நாமும் தொந்தரவு பண்ணனும்? நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் உதவி கேட்டு சிலர் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர், இவர்கள்ஏன் தன்னிடம் உதவி கேட்கவில்லைனு கோவிச்சுக்குவாரா என்ன? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?
கடவுளுக்கு நாத்திகர்களைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கணும். :) ஏன்? ஏன்னா..கடவுள், நாத்திகர்கள், தன்னை பயன்படுத்தாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுதே! என்று எண்ணி அவர்களை மனதாறப் பாராட்டுவார். பரவாயில்லையே, என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமலும், தங்களையே ஏமாற்றாமலும் வாழ்கிறார்களே இவர்கள்! னு ரொம்ப சந்தோஷப்படுவார், கடவுள்!
அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் தனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு, கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல் போகிறது என்பதை உணருங்கள்!
பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைத்து, மனிதாபிமானத்தோட நற்பண்புடன் வாழ்ந்தாலே போதும்! அவர்கள் நாத்திகர்களாகக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்னும் உண்மையை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்திகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
நாத்திகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! நம்ப முடியாத ஒரு விசயத்தை அவர்களால் நம்புவதுபோல் நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!
நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்திகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் நாத்திகர்களின் தரத்தைக் குறைக்காது என்பதை ஆத்திகர்கள் உணர்வது நல்லது!
***************************
என்ன பார்க்குறீங்க?
ஆமா, இதுவும் மீள்பதிவுதான்! நீங்கள் எல்லாம் படிக்கலைனுதான் இன்னொரு பதிப்பு இப்போ வெளிவருது! :)
6 comments:
நாத்திகர்களைப் பொறுத்தமட்டில் பொதுவாக "கடவுள் கடவுள்" னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்திகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! மற்றபடி நாத்திகர்களுக்கும் கடவுளுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது!/// இந்த இந்த வரிதான் எதார்த்தமான லைன் சார்!
தன்னம்பிக்கை மிக்கவர்கல்தான் சார் நாத்திகர்கல்.
சுயமாக்அ யோசித்து முடிவு எடுப்பவர்தான் சார் நாத்திகர்கல்.
எதையும் எதிர்பார்க்காமல் செய்பவர்கல்தான் சார் நாத்திகர்கல்.
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
***நாத்திகர்களைப் பொறுத்தமட்டில் பொதுவாக "கடவுள் கடவுள்" னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்திகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! மற்றபடி நாத்திகர்களுக்கும் கடவுளுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது!/// இந்த இந்த வரிதான் எதார்த்தமான லைன் சார்!
தன்னம்பிக்கை மிக்கவர்கல்தான் சார் நாத்திகர்கல்.
சுயமாக்அ யோசித்து முடிவு எடுப்பவர்தான் சார் நாத்திகர்கல்.
எதையும் எதிர்பார்க்காமல் செய்பவர்கல்தான் சார் நாத்திகர்கல்***
வாங்க மஹேஷ்! :-))
*** Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்888
வாங்க, யாழ் பாவணன்! நன்றி. :)
இதை பற்றி இங்கு கருத்து இட மனமில்லை, நேரமும் இல்லை. என்றாவது ஓர் நாள் எங்க ஊருக்கு வருவீர்கள் அல்லவா? அன்று "Golf" ஆடி கொண்டே பேசலாம்.
Have a great day!
வாங்க விசு!
நான் ரஜினி ரொம்ப மோசம்னா, நீங்க கமல் அதைவிட மோசம்னு சொல்றீங்க.
நான் நாத்திகன்னா நீங்க் ஆத்திகர்னு சொல்லாமல் சொல்லுறீங்க
நான் டென்னிஸ் ஆடலாம்னா நீங்க கால்ஃப் ஆடுவோம்னு சொல்றீங்க!
கால்ஃபும் ஆடித்தான் பாத்துருவோமே! :)))
Post a Comment