Thursday, January 15, 2009

நடிகர் அமீர் பற்றி சில விசயங்கள்!

தமிழ் இயக்குனர் அமீர் ஒரு திறமைமிக்க இயக்குனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவர் இயக்கிய படங்கள் எனக்கு ரொம்பப்பிடிக்கும். இவருடைய படங்கள் மௌனம் பேசியதே, இராம், பருத்திவீரன் மூன்றுமே சிறப்பான தமிழ்ப்படங்கள். இவர், தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த முத்து. இப்படி ஒரு பக்கம் நாம் சந்தோஷப் பட்டாலும், சில விசயங்கள் நமக்கு இடிக்கிறது.

இவர் கொஞ்சம் அளவுக்கு அதிகம் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது. காட் ஃபாதர் படத்தில் ஒரு வசனம் உண்டு. மார்லன் பிராண்டோ சொல்வார்,

I have a sentimental weakness towards my children and I spoiled them. You see, they talk when they should listen!

அமீர் அப்படி என்ன செய்தார்னு பார்ப்போம்,

ஃ மொழி படவிழாவில், சிவாஜி படத்தைப்பற்றி எழுத்தாளர் ஞாநி மற்றும் பலர் இறக்கிப்பேசியதற்கு எதிர்த்து குரல் கொடுத்தார். ஒரு வெற்றிவிழாவில் எதற்கு இன்னொரு படத்தை இறக்கனும் என்றார்.

ஃ பிறகு, சிவாஜி படத்திற்கு ஏதோ ஒரு சின்ன "அவார்ட்" கொடுத்ததை மனதில்கொண்டு, ரஜினி மற்றும் விஜய்க்கு விசிறிகள் அதிகாமாக உள்ளதால் தகுதி இல்லாவிட்டாலும் "அவார்ட்" கொடுக்கிறார்கள் என்பதுபோல சொன்னார்.

ஃ பருத்திவீரன் ஒரு தலை சிறந்த தமிழ் படமாக அமைந்தாலும், அந்த படத்தால் சிவக்குமார் குடும்பத்துடன் பல பிரச்சினைகள் இவருக்கு. சிவக்குமார் இது நாள்வரை யாரிடமும் கெட்டபெயர் வாங்கியது இல்லை.

ஃ இது போதாதென்று ஒரு சில எழுத்தாளர்கள் அமீருடைய பருத்திவீரனையும், கமலின் விருமாண்டியையும் விமர்சித்துப்பேசி, பருத்திவீரன் விருமாண்டியைவிட நல்ல படம் என்று சொல்லி கமலுக்கும் அவர் ரசிகர்களுக்கும் எரிச்சலை கிளப்புகிறார்கள்.

இப்போ அமீர், சகநடிகர்கள் கமல், ரஜினி, சிவகுமார், விஜய், சூர்யா, கார்த்தி என்று எல்லா நடிகர்களிடமும் பல காராணங்களால் உரசிக்கொண்டது போல் இருக்கு. இது இவருக்கு தேவையா என்று தெரியவில்லை! இந்நிலையில் இவர் நடிகராக முயற்சிக்கிறார். யோகி என்கிற படத்தில் கதாநாயகனாக சுப்பிரமணியன் சிவா என்பவர் இயக்கத்தில் நடிக்கிறார்.

அமீர் போன்ற இளம் நடிகர்கள், வளர்ந்த நடிகர்கள் எல்லோரையும் பகைத்துக்கொள்வது நல்லதில்லை. இதில் நடிகர்கள் யாரும் இவரை பழிவாங்கப்போவதில்லை என்றாலும் அவர்களை வணங்கும் ரசிகர்கள்?

யோகி வெளிவந்தால்தான் தெரியும் நடிகராக அமீர் பிரகாசிப்பாரா இல்லை யோகிதான் இவருக்கு முதலும், கடைசி படமுமா என்று.

21 comments:

mvalarpirai said...

மொழி பட விழாவில் அமீர் பேசியது 100% சரி தான் ! அதில் என்ன தப்பு ?

திறமையுள்ளவர்கள் சற்று கர்வமாக தான் இருப்பார்கள் நண்பரே !

வருண் said...

mvaLarpiRai!

வாங்க! நான் அவர் பேசியது தப்புனு சொல்லலைங்க!

ஆனால் அதே அமீர் தேவையே இல்லாமல் சிவாஜி படத்துக்கு ஒரு "குப்பை அவார்ட்" கொடுத்ததை ஏதோ நேஷனல் அவர்ர்ட் கொடுக்கபபட்டது போல் தேவையே இல்லாமல் ரஜினி மற்றும் விஜய் பற்றி பேசினார் என்பது பலரின் எண்ணம்.

Venkatesh said...

//மொழி பட விழாவில் அமீர் பேசியது 100% சரி தான் ! அதில் என்ன தப்பு ? //

இதையும் படியுங்கள்.
----------------------
தனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே கிடையாது என்றும் தான் இதற்கு முன் புத்தகங்கள் படித்ததே இல்லை என்றும் , அந்த எழுத்தாளரையையே அவரது தனது படத்தின் விமர்சனம் மூலமாகத்தான் தெரியும் என்றும் பேசுகிறார். தன்னை இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னால் , தன்னை அழைத்து இந்த புத்தகத்தை அந்த ஆசிரியர் கொடுத்தார் நானும் படிக்க முற்பட்டு படிக்க இயலாமல் போய்விட்டதென்றும் பெருமையாய் பேசுகிறார்

மேலும் வாசிக்க
http://www.athishaonline.com/2009/01/blog-post_08.html

KarthigaVasudevan said...

//இதையும் படியுங்கள்.
----------------------
தனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே கிடையாது என்றும் தான் இதற்கு முன் புத்தகங்கள் படித்ததே இல்லை என்றும் , அந்த எழுத்தாளரையையே அவரது தனது படத்தின் விமர்சனம் மூலமாகத்தான் தெரியும் என்றும் பேசுகிறார். தன்னை இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னால் , தன்னை அழைத்து இந்த புத்தகத்தை அந்த ஆசிரியர் கொடுத்தார் நானும் படிக்க முற்பட்டு படிக்க இயலாமல் போய்விட்டதென்றும் பெருமையாய் பேசுகிறார்

மேலும் வாசிக்க
http://www.athishaonline.com/2009/01/blog-post_08.html//

அது அமீர் தானென்று நினைத்தேன்...சரியாகத் தான் இருக்கு.இப்படிப் பேசியது ரசிக்கத் தக்கது அல்ல தான்.

வருண் said...

வருகைக்கு நன்றி, திரட்டி.காம்! நீங்கள் கொடுத்த சுட்டியை வாசித்து மேலும் அறிந்துகொள்கிறேன். :)

வருண் said...

***மிஸஸ்.டவுட் said...

அது அமீர் தானென்று நினைத்தேன்...சரியாகத் தான் இருக்கு.இப்படிப் பேசியது ரசிக்கத் தக்கது அல்ல தான்.

15 January, 2009 7:14 PM***

வாங்க மிஸஸ் டவுட்!

அவர் அளவுக்கதிகமாக ஹானஸ்ட்டா இருக்காரோ என்னவோ?

அளவுக்கு மிஞ்சினால்...

Anonymous said...

Who knows what is in what pot? Yes, Ameer speaks openly. He had bad experiences with Sivakumar family. Without knowing the full details, we can't judge. As far as Ameer was concerned, his hard work was ripped off by Surya and family(production side was being exchanged back and forth between Surya's cousin and Ameer). Ameer sold after much persuasion. Yet, he was not given the right share after the film became such a blockbuster. Ameer was the man who pursued Karthi to act. He made a remarkable film. His name was blighted, his hardwork unrecognized in marketing, and finally, the pains of labour not recognized with the proper payment. Rough exteriors might hide a genuine man and soft exteriors might correctly conceal ulterior motives. We won't know.

To be outspoken is not a problem. To speak out of turn, to speak for the need of speaking is. There are enough men who hide behind curtains, not speaking and trying to live off the sacrifices of others. Ameer may be an exceptance. The few that there are, who speak openly.

It is the media's fault if they equate Paruthiveeran to Virumandi. And if Kamal's so-called fans got angry, what is that? The same fans get angry at the mention of Rajni's name. Ithu enna nyaayam?

Frankly, I think the average Tamil movie goer started disliking Vijay after that doctorate fiasco. Both Rajni and Vijay have fixed an image to the audience through films. You can't expect a person involved with the industry to not know more, or have an opinion that is more accurate.

Frankly, I find the idea that speaking out is so condemned in our society. One must gulp everything, and go on with their way. Why? As long as the persons thoughts are justifiable, let them speak.

If speaking out was a crime, then why herald Bharathi as a great poet? What blasphemy was he away from, at that social time? But today, he is the great Bharathiar. Potri paadiginranar palar. Ithu thaan, vazhkaiyin visithiram:-)

Just my thoughts...

-kajan

என்.இனியவன் said...

//பருத்திவீரன் விருமாண்டியைவிட நல்ல படம் என்று சொல்லி கமலுக்கும் அவர் ரசிகர்களுக்கும் எரிச்சலை கிளப்புகிறார்கள்.//

அதற்கு அமீர் என்ன செய்வார்?

//ஒரு வெற்றிவிழாவில் எதற்கு இன்னொரு படத்தை இறக்கனும் என்றார்.
ரஜினி மற்றும் விஜய்க்கு விசிறிகள் அதிகாமாக உள்ளதால் தகுதி இல்லாவிட்டாலும் "அவார்ட்" கொடுக்கிறார்கள் என்பதுபோல சொன்னார்.//

அதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.

பாலு மணிமாறன் said...

Many things mentioned here about Ameer are wrong.

I have brought him to Singapore as a cheif guest for a book launch. My experinece about him made me say that he is a GENTLE MAN.

Will write about those experiences in my blog soon.

பாரதிய நவீன இளவரசன் said...

அமீரை பற்றி பிறர் கூறும் கருத்துகளில் (பத்திரிகைகள் உட்பட) எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று சொல்லமுடியும்?

மணிகண்டன் said...

**** யோகி வெளிவந்தால்தான் தெரியும் நடிகராக அமீர் பிரகாசிப்பாரா இல்லை யோகிதான் இவருக்கு முதலும், கடைசி படமுமா என்று ****

ரொம்ப முக்கியம் !

ராஜ நடராஜன் said...

வர வர பொடி நிறைய போடுறீங்க:)

வருண் said...

Kajan:

***Who knows what is in what pot? Yes, Ameer speaks openly. He had bad experiences with Sivakumar family. Without knowing the full details, we can't judge. As far as Ameer was concerned, his hard work was ripped off by Surya and family(production side was being exchanged back and forth between Surya's cousin and Ameer). Ameer sold after much persuasion. Yet, he was not given the right share after the film became such a blockbuster. Ameer was the man who pursued Karthi to act. He made a remarkable film. His name was blighted, his hardwork unrecognized in marketing, and finally, the pains of labour not recognized with the proper payment. Rough exteriors might hide a genuine man and soft exteriors might correctly conceal ulterior motives. We won't know.***

I agree. Nobody knows the truth here. You know nobody can judge here unless we know the details.

The bottomline is Ameer burnt the briges with Sivakumar family!

But he is a growing director. I think it will aaffect his career! I wish I am wrong!

வருண் said...

***To be outspoken is not a problem. To speak out of turn, to speak for the need of speaking is. There are enough men who hide behind curtains, not speaking and trying to live off the sacrifices of others. Ameer may be an exceptance. The few that there are, who speak openly. ***

I like that quality but trust me such people hardly ever succeed in our society. I am worried about his sucess as he is TALENTED and we need him for out tamil film industry to shine!

வருண் said...

***Frankly, I think the average Tamil movie goer started disliking Vijay after that doctorate fiasco. Both Rajni and Vijay have fixed an image to the audience through films. You can't expect a person involved with the industry to not know more, or have an opinion that is more accurate. ***

I beg to disagree here. The point is There is absolutely no need to comment on Rajni or Vijay here.

They were not given national awards.

Why does he has to talk about them mentioning their name that LOUDLY?

It is unnecessary.

வருண் said...

***If speaking out was a crime, then why herald Bharathi as a great poet? What blasphemy was he away from, at that social time? But today, he is the great Bharathiar. Potri paadiginranar palar. Ithu thaan, vazhkaiyin visithiram:-)

Just my thoughts...

-kajan***

It is not a crime. I am sure he feels relieved speaking out of his heart. But, I am afraid he might face lots of unnecessary hurdles in his path of success!

I wish he overcomes them!

Thanks, Kajan, for your thoughts!

வருண் said...

***என்.இனியவன் said...
//பருத்திவீரன் விருமாண்டியைவிட நல்ல படம் என்று சொல்லி கமலுக்கும் அவர் ரசிகர்களுக்கும் எரிச்சலை கிளப்புகிறார்கள்.//

அதற்கு அமீர் என்ன செய்வார்?

//ஒரு வெற்றிவிழாவில் எதற்கு இன்னொரு படத்தை இறக்கனும் என்றார்.
ரஜினி மற்றும் விஜய்க்கு விசிறிகள் அதிகாமாக உள்ளதால் தகுதி இல்லாவிட்டாலும் "அவார்ட்" கொடுக்கிறார்கள் என்பதுபோல சொன்னார்.//

அதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.

15 January, 2009 8:44 PM***

வாங்க இனியவன்! :-)

உங்கள் கருத்துக்கு நன்றி! :)

வருண் said...

***மணிகண்டன் said...
**** யோகி வெளிவந்தால்தான் தெரியும் நடிகராக அமீர் பிரகாசிப்பாரா இல்லை யோகிதான் இவருக்கு முதலும், கடைசி படமுமா என்று ****

ரொம்ப முக்கியம் !

16 January, 2009 3:09 AM***

ஏன் முக்கியமில்லை?

I am afraid a fiasco as an actor can destroy his directing abilities! :(

வருண் said...

***பாலு மணிமாறன் said...
Many things mentioned here about Ameer are wrong.

I have brought him to Singapore as a cheif guest for a book launch. My experinece about him made me say that he is a GENTLE MAN.

Will write about those experiences in my blog soon.

15 January, 2009 10:45 PM**

Really?

Looking forward to seeing your post in your blog!

Thanks, Balu maNimaaRan!

வருண் said...

***பாரதிய நவீன இளவரசன் said...
அமீரை பற்றி பிறர் கூறும் கருத்துகளில் (பத்திரிகைகள் உட்பட) எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று சொல்லமுடியும்?

15 January, 2009 11:26 PM***

உண்மைதான், இளவரசன்! ஆனால் பத்திர்க்கை சொல்வது எல்லாமே பொய் இல்லை :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...
வர வர பொடி நிறைய போடுறீங்க:)

16 January, 2009 4:35 AM***

வாங்க நடராஜன். :) :) :)

ஓரளவுக்கு நீங்கள் சொல்வது உண்மைதான் :-)

நானும் அமீர் மாதிரி ரொம்ப ஹானஸ்ட்டா சொல்லிட்டேன் :) :)