Thursday, June 18, 2009

அம்மா மரணம்! உடனே புறப்படு!

அந்த தந்தியை பார்த்தவுடனே ராமகிருஷ்ணனுக்கு இதயமே நின்னுவிட்டது!

"Mother expired, start immediately - your brother" என்று இருந்தது அந்த செக்யூரிட்டி கொடுத்த தந்தியில்.

அருகில் இருந்த நண்பர்கள், ப்ரேம் மற்றும் கண்ணன் உடனே ராமகிருஷ்ணனுடன் புறப்பட்டார்கள். அப்பொழுதுதான் டின்னர் சாப்பிட்டுவிட்டு மூவரும் மெஸ்ல இருந்து வந்திருதிருந்தார்கள். உடனே திண்டுக்கல் போகனும்! அங்கேயிருந்துதான் ராமகிருஷ்ணன் பங்களூர் வந்து படித்துக்கொண்டு இருக்கிறான். இப்போ பங்களூரிலேயே வேலை தேடிக்கொண்டு இருக்கிறான். நாளைக்குக்கூட ராமகிருஷ்ணனுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. மூவரும் உடனே ஆட்டோ பிடித்து மெஜெஸ்டிக் போய் மதுரை பஸ்ஸை பிடித்து, எப்படியோ அந்த கண்டக்டரிடம் கெஞ்சி கூத்தாடி திண்டுக்கல்லுக்கு 3 டிக்கட் வாங்கினார்கள்.

பஸ் புறப்பட்டு போகும் வழியில், மூவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ராமகிருஷ்ணன் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அம்மா, ராஜேஸ்வரிதான் அவனுக்கு எல்லாம். அம்மாவுக்கு 52 வய்துதான் ஆகிறது! எந்தவிதமான ஹெல்த் பிரச்சினையும் இது நாள் வரை இல்லை. திண்டுக்கல் போய் சேரும் வரை மூவரும் ஒண்ணுமே பேசவில்லை.

திண்டுக்கல் வந்து சேர பல யுகங்கள் ஆனதுபோல இருந்தது! இறங்கி ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தால், வீட்டில் எந்தவிதமான அறிகுறியே இல்லாமல் அமைதியாக இருந்தது. போய் வீட்டு கதவை தட்டினாலன், ராமகிருஷ்ணன்.

"என்னடா ராமா திடீர்னு வந்திருக்க?" என்று அவன் அம்மாவே வீட்டுக்கதவை திறந்தார்கள்.

நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டார்கள்.

"இல்லம்மா, சும்மாதான் ஒரு ஃப்ரெண்ட் அப்பா தவறிட்டார். அதுக்காக மதுரை வந்தோம்" என்று சொல்லிச் சமாளித்தான் ராமகிருஷ்ணன்.

அம்மா தந்த காஃபிய குடித்துவிட்டு நண்பர்கள் ப்ரேமும், கண்ணனும் உடனே பங்அளூர் புறப்பட்டார்கள். ராமகிருஷ்ணன் இரண்டு நாள் அம்மாவுடன் இருந்துவிட்டு வருவதாக முடிவு செய்தான்.

நண்பர்களை பஸ் ஏற்றிவிட வந்த ராமகிருஷ்ணனிடம், கண்ணன் கேட்டான்.

"என்னடா ராமா? யார்டா இப்படி செஞ்சது?"

"இன்னைக்கு எனக்கு ஒரு இண்டெர்வியூ இருந்ததுடா. ஒரு ரிசேர்ச் அஸிஸ்டண்ட் பொசிஷன். நான் வரலைனா, இந்த பொசிஷனுக்கு விஷ்ணு என்கிற ஆந்திரா பையனுக்கு கிடைக்கும் என்பதுபோல இருந்தது. அவன் ரொம்ப கன்னிங்டா. அவந்தான் ஏதோ இப்படி ஒரு பொய் செய்தியை கொடுத்து இருப்பான் னு தோனுது. இப்போ அவனுக்கு இந்த வேலை கிடைத்து இருக்கும். நான் தந்தியைக்கூட சரியா எங்கே இருந்து வந்தது எதுனுகூட கவனிக்கலைடா" என்றான் ராமகிருஷ்ணன்.

"மனிதர்கள் இவ்வளவு கேவலமானவர்களா?" என்றான் கண்ணன் கசப்பாக.

"டேய் ராமா! இது மாதிரி எதிரியையெல்லாம் உன்னையே அறியாமல்கூட உருவாக்காதடா! ரொம்ப கவனமாக பழகு! முடிந்தவரைக்கும் "Be nice to anybody" என்றான் ப்ரேம்.

சேலம் பஸ்ஸில் அவர்களை ஏற்றிவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றான் ராமகிருஷ்ணன். அவன் அம்மா அவனுக்கு வித விதமாக சமையல் செய்து கொண்டிருந்தார்கள். மகன் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு இளைத்துப் போயிருக்கிறான் என்று அவனுக்கு நாலு வேளையும் சமைத்து போடுவார்கள் அவன் அம்மா, ராஜேஸ்வரி. அவர்களுக்கு தன் மகன் கடந்த 24 மணிநேரம் பட்ட நரக வேதனை எதுவுமே தெரியாது, பாவம்.

2 comments:

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

வருண் said...

நன்றி, தமிழினி :)