“அந்த புதுசா குடிவந்துள்ள பொம்பளை சாந்தா என்னை பார்த்தால் ஏதோ எதிரியை பார்ப்பது போல பார்க்கிறாங்க!” என்று ஆரம்பித்தாள் அவனுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்த அவன் மனைவி கலா.
“ஆரம்பிச்சுட்டியா? ஏன்டி இப்படி இருக்க? அவளுக்கு உன்னைப்பிடிக்கலைனா நீ ஒதுங்கி இரு” என்றான் பாண்டி எரிச்சலாக.
“இல்லைங்க, நம்ம அந்த காசிக்கு சொந்தக்காரங்கனு அவளுக்குத் தெரியும் போல. அதான் ரொம்ப திருப்புறா!” நு அதன் காரணத்தையும் சொன்னாள் கலா.
“அதிலென்ன தப்பு? அந்த ஆளு, உன் அருமைத்தம்பி, கல்யாணம் ஆகி, குழந்தையுடன் இருக்கும் இந்தம்மாட்ட கேவலமா நடந்து இருக்கான்! அதனால் கோபம் வந்து வெளக்கமாத்தை வச்சு அடிச்சு இருக்காள் உன் ஒண்ணுவிட்ட தம்பியை! உடனே அந்தத்தெருவில் உள்ள பெரிய மனுஷனுங்க எல்லாம் பஞ்சாயத்து வச்சு இந்த அம்மா மேலே ஏதோ தப்புங்கிற மாதிரி இவங்களை காலி பண்ண வச்சிருக்காங்க! யாரு பஞ்சாயத்து வச்சது? உன் தம்பிபோல உள்ள இன்னும் நாலு பொறுக்கிகள்! அவனுகதானே தெருத்தலைவரா இருக்கானுக இப்போ?”
“என்ன இருந்தாலும் ஒரு பொம்பளை வெளக்கமாத்த வச்சு அடிக்கலாமா, ஒரு ஆம்பளைய?”
“அந்த அளவுக்கு நடந்து இருக்கான் உன் அருமைத்தம்பி! மானம் போகுதுடி! இந்த மாதிரி மிருகத்தை எல்லாம் சொந்தம்னு வெளியே சொல்லிக்காதே!” என்று தலையில் அடிச்சுக் கொண்டான் பாண்டி.
“அவன் அப்படியெல்லாம் பெருசா தப்பு பண்ணி இருக்க மாட்டான்!” என்றாள் கலா வாய்க்குள்ளேயே, தன் ஒண்ணுவிட்ட தம்பியை விட்டுக்கொடுக்காமல்.
“ஏண்டி! நீயும் ஒரு பொம்பளைதானே? ஒரு தாய் ஒரு ஆம்பளையை வெளக்கமாத்தை வச்சு அடிக்கிறானா, அந்த ஆளு எவ்வளவு கேவலமா நடந்து இருப்பான்? கொஞ்சமாவது யோசிக்கனும்டி!”
“என்னவோ, உண்மையிலேயே என்ன நடந்ததுனு எனக்கு என்ன தெரியும்?” என்றாள் விடாமல்.
“அப்போ பேசாமல் வாயை மூடிக்கிட்டு இரு! இனிமேலாவது அவன் ஊரில் உள்ளவளிடம் எல்லாம் தப்பா நடக்காம இருக்கட்டும்! இவனுக்கும் ஒரு பொண்டாட்டி இருக்கா இல்லை? ஏன் இப்படி நாய் மாதிரி அலையிறான் பொறுக்கிப்பய!”
“என் சொந்தக்காரர்களை திட்டுவதுனா உங்களுக்கு அல்வா திங்கிற மாதிரி!”
“பெண்களுக்கு எதிரி உன்னை மாதிரி அறிவுகெட்ட பெண்கள்தான்!”
“உங்ககிட்ட வந்து இதை சொல்ல வந்தேன் பாருங்க” என்று கோபமாக சமையல்கட்டுக்குப் போனாள் கலா.
“திருத்த முடியாதுடி! உங்களை திருத்தவே முடியாது!”
6 comments:
//“திருத்த முடியாதுடி! உங்களை திருத்தவே முடியாது//
அதெல்லாம் இருக்கட்டும்...உங்க இடுகைக்கு நீங்க முதல்ல சொந்த ஓட்டு போடுகணும்... அது தெரியுமோ?
வாங்க,பழமைபேசி! :-)
நான் பெரும்பாலும் எனக்கே ஓட்டுப்போடுவதுண்டுங்க. இந்த இடுகைக்கு போடலை. சரி, நீங்க சொல்லீட்டீங்கள்ல இப்போ போட்டுறேன். :-)
கதை நல்லா இருக்கு.... வோட்டும் போட்டாச்சு.....
உண்மைதான் !!! பெண்களுக்கு சில இடங்களில் பெண்களே எதிரி ஆவதுண்டு !!!
உங்க கதை ரொம்ப நல்ல இருக்கு ...
***இவன் said...
கதை நல்லா இருக்கு.... வோட்டும் போட்டாச்சு.....***
ரொம்ப நன்றி, இவன் :)
***Aazhi Mazhai said...
உண்மைதான் !!! பெண்களுக்கு சில இடங்களில் பெண்களே எதிரி ஆவதுண்டு !!!
உங்க கதை ரொம்ப நல்ல இருக்கு ...***
நன்றி, Aazhi Mazhai :-)
Post a Comment