Friday, June 26, 2009

உழைக்கும் கரங்கள்! பெரிய குப்பை!

எம் ஜி ஆர் 1976 வெளியிட்ட படம் இது. அதாவது முழுக்க முழுக்க அரசியலில் இறங்கிய பிறகு. எம் ஜி ஆருக்கு வயது 60-61 இருக்கும். இளமையெல்லாம் குட் பை சொல்லிருச்சு! இதுல அவருக்கென்று ஒரு தனி "ஸ்டெயில்", ஒரு தலைப்பாகை, கையில் ஒரு தடி (இது என்ன இழவுக்கோ தெரியலை), ஒரு செருப்பு ஒண்ணு போட்டுக்கிட்டு திரிகிறார் இல்லை ஊருக்காக உழைக்கிறார் எம் ஜி ஆர்.

பொதுவாக எம் ஜி ஆர் படங்களில் பாடல்கள் நல்லா இருக்கும். ஆனா இந்தப்படத்தில் அதுவும் இல்லை. இவர் லதாவுடன் செய்யும் ஊடல் சகிக்கலை. அதுவும் ரெண்டுபேரும் ஒரு ஒத்தையடிப்பாதை பாலத்தில் எதிரெதிரா வந்து சின்னப்பிள்ளைங்க போல சண்டைபோட்டு விளையாடுவது! மாம்பழம் புடுங்கி விளையாடுவது! அப்பா ஆளை விடு!

படத்தில் என்ன ப்ளாட்? மு க வை ஒரு மாதிரியாக சாடுவதுதான். இவர் தி மு க வில் இருந்து வெளியே வந்த காரணத்தை ஜஸ்டிஃபை பண்ணுவதுபோல இருக்கு. இவரை ஆடு மாடு முதல்கொண்டு படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் நல்லவர்னு புகழுது! ஒரே சலிப்பா இருக்கு இவருக்குப் பாடும் புகழாரம்! இவர் நல்லவராம், மக்களுக்கு தொண்டு செய்ய தன் "எஜமானை" விட்டு வெளியே வந்து இருக்காராம். முழுக்க முழுக்க அரசியல் நிறைந்த ஒரு படம் இது!

படம் டைரெக்ஷன்: அடிமைப்பெண், ஆலயமணி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய அதே கே. சங்கர்!

என்ன கொடுமை இது சங்கர்? :(

"இந்தப்படத்துக்கு என்ன குறை?" என்று யாராவது சொன்னால், நிச்சயம் அவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சி! கண்மூடித்தனமான எம் ஜி ஆர் வெறியர்! அ தி மு க தொண்டர்!

நல்லவேளை அடுத்து வந்த தேர்தலில் எம் ஜி ஆர் ஜெயித்தார். அப்படியில்லாமல் தொடர்ந்து நடித்து இருந்தால் எல்லோருக்கும் கஷ்டகாலம்தான்! உழைக்கும் கரங்களை படத்தை விட்டு ஒதுங்கி இருப்பது விவேகம்- நீங்க எம் ஜி ஆரை தெய்வமாக நினைக்காத சாதாரண ரசிகர் என்றால்.

மதிப்பெண்கள் 29/100! சரியான குப்பை!

4 comments:

shabi said...

இன்று மதியம் K TV யில் படம் பார்்த்்்த் பா்த்ிப்பா

ராஜ நடராஜன் said...

உழைக்கும் கரங்கள் படம் ரிலிசாயிடுச்சா!!!உங்களுக்கு எப்படி டிக்கட் கிடைச்சது?முதல் நாள் முதல் காட்சியா:)

வருண் said...

***shabi said...

இன்று மதியம் K TV யில் படம் பார்்த்்்த் பா்த்ிப்பா!***

என்னால உங்க "கைஎழுத்தை" வாசிக்க முடியலை :)

நான் ஒரு வி சி டி யிலே பார்த்தேன்.

வருண் said...

***ராஜ நடராஜன் said...

உழைக்கும் கரங்கள் படம் ரிலிசாயிடுச்சா!!!உங்களுக்கு எப்படி டிக்கட் கிடைச்சது?முதல் நாள் முதல் காட்சியா:)***

வாங்க நடராஜன் :)))

என்ன மாதிரி பெரிய செலிப்ரிட்டிக் கெல்லாம் ஒரு "ஸ்பெஷல்" டி வி டி அனுப்பினார்கள்! :) அதுல பார்த்ததுதான் :)