பதிவுலகில் சில பிரபலங்கள் இருக்காங்களாம்! நான் யாரு பேரையும் சொல்லவில்லை! எல்லோரும் நம்மல பிரபலம்னு நெனச்சுக்கோங்க! இவர்கள் எழுதும் காரசாரமான பதிவுகள், தரமான பதிவுகள் மற்றும் பல குப்பைகள் எல்லாமே உடனே சூடாகிவிடும். உண்மையிலேயே பதிவுகளை சூடாக்குவதில் தான் இவர்கள் பிரபலம்னு சொல்லலாம்!
ஆனால் வாசகர் பரிந்துரையில் இவர்கள் சூடான "பிரபலப்பதிவுகள்" அவ்வளவாக இடம் பெறுவதில்லை! அது ஏன்? என்கிற கேள்வி எழுகிறது.
இதற்கு நான் பதில் தேடுகிறேன்!
* நான் என்ன நினைக்கிறேன் என்றால் "இந்த பிரபலங்கள்" மேலே பலருக்கு வெறுப்பு!
வெறுப்பா? ஏன்? காரணம்?
வேறென்ன? பொறாமைதான்!
ஏன் பொறாமை?
இவர்கள் எழுதுற சில குப்பைகளும் சூடாகுது ஆனால் அதே நேரத்தில் பதிவாகிய என்னுடைய நல்ல தரமான பதிவுகள் கூட சூடாகலைனு பலருக்கும் வெறுப்பு, எரிச்சல்!
அதனால?
நான் என்ன நெனைக்கிறேன் என்றால்...
* வாசகர் பரிந்துரையில் ஒரு சில பொறாமைக்காரகள் சென்று இவர்களுக்கு தவறாமல் நெகடிவ் மதிப்பெண்கள் போட்டுவிடுகிறார்கள்! இவர்கள் பதிவுகளை படிப்பதெல்லாம் இல்லை! போயி நெகடிவ் மதிப்பெண் போட்டுவிட்டு இடத்தை காலி செய்துவிடுகிறார்கள்!
இப்போ 50 பேர் பரிந்துரை செய்கிறார்கள், பொறாமையில் 50 பேர் நெகட்டிவ் பரிந்துரை செய்றாங்கனு வச்சுக்குவோம். மொத்த மதிப்பெண் 0 இல்லையா? எங்கே இது தேற? பேசாமல் சூடோட நிக்கும்!
வேற ஏதாவது காரணம் இருக்காதா?
* அல்லது, இவர்களுக்கு வரும் "சூடான வாசகர்களுக்கு" பரிந்துரை செய்வது எல்லாம் பிடிக்காது! அதெல்லாம் எதுக்கு வெட்டி வேலை னு நெனைக்கிறாங்க போல!
* அல்லது பொதுவாக இவர்களுடைய பெரும்பாலான பதிவுகள் பரிந்துரை செய்யப்படும் அளவுக்கு ஒண்ணும் பெருசா விசயமோ தரமோ இருப்பது இல்லை போல! சும்மா சூடா வாசிச்சுட்டு மக்கள் போயிட்டே இருக்காங்க போல!
எனக்கு அவ்வளவுதான் தெரியுது. வேற யாராவது தெரிந்தால் விளக்கலாம்!
சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் பரிந்துரையில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?
அனேகமாக "-ve 100"! LOL!
WHY???
Nobody likes this kind of analysis, I believe, but I just have to do it! :))
6 comments:
தல நான் பிரபல பதிவரெல்லாம் கிடையாது. எப்போதுமே ஏழிலிருந்து பத்து ஓட்டுதான் தமிழ்மணத்தில் விழும். புதிய முறையில் அதில் மூன்று, நான்கு ஓட்டுக்கள் எதிர் ஓட்டுக்களாக விழுகின்றன.
சுரேஷ்!
நீங்க ஒரு தரமான பதிவர் மற்றும் பிரபலம்தான்.
உங்களுக்கு ஏன் எதிர் ஓட்டுப் போடுறாங்க? என்னைக்கேட்டால் பிடிக்காத பதிவை ஓட்டுப்போடாமல் விட்டுட்டு போயிடலாம்.
என்னை மாதிரி ஆளுக்குத்தான் எதிர் ஓட்டு அள்ளி எறிவார்கள்! :)))
//சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் பரிந்துரையில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?
அனேகமாக "-ve 100"! LOL! //
அப்ப நீங்க பரிட்சையில பாஸ் ஆகிடுவீங்க :))
ஆனா நீங்களும் பிரபல பதிவர்தானே?!
தமிழ்மணம் மகுடத்திற்கும், வாசகர் பரிந்துரைக்கும் ஒரு இடுகையைத் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் சில மாற்றங்களை தமிழ்மணம் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது அதிக வாக்குகளைப் பெறும் இடுகைகளே தமிழ்மணம் மகுடத்தில் இடம்பெறுகிறது. இந்த முறை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய Algorithm ஒரு இடுகைக்கு எவ்வாறு ஓட்டளிக்கப்படுகிறது (Weightage of Votes, Negative votes, frequency of same openid voting for a blog) என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்மணம் மகுடத்திற்கு இடுகையை தேர்ந்தெடுக்கிறது. இவை தவிர முகப்பில் இடம் பெறும் இடுகைகளும் அவை பெறும் வாக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவை பெறும் வாக்குகள் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொண்டே இயங்கும். இந்தப் புதிய நிரலி(Program) தற்பொழுது சோதனையில் உள்ளது.
இந்த Algorithm தமிழ்மணத்தில் வாசகர்கள் வழங்கும் வாக்குகளை அலசி தேவைக்கேற்ப மாற்றப்படும்.
தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பக்கம் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படுகிறது.
http://tamilmanam.net/readers/choice
நிர்வாகம்,
தமிழ்மணம்//.............
:-)))
தமிழ்மணத்தின் புதிய அறிவிப்பு
***சென்ஷி said...
//சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் பரிந்துரையில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?
அனேகமாக "-ve 100"! LOL! //
அப்ப நீங்க பரிட்சையில பாஸ் ஆகிடுவீங்க :))
ஆனா நீங்களும் பிரபல பதிவர்தானே?!***
பிரபலமா?!!! நீங்க வேற! :-)))
ஆமா, நான் அதிகமா நெகட்டிவ் மதிப்பெண்கள் பெருவதில் ரொம்பப் பிரபலம்
:-))
***சென்ஷி said...
தமிழ்மணத்தின் புதிய அறிவிப்பு***
கவனிச்சேன் சென்ஷி. அதை என் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி, சென்ஷி :-)))
Post a Comment