Wednesday, June 17, 2009

அபிக்குட்டியும் அழகான குட்டிக்குதிரையும்!

அபி என்று ஒரு குட்டிப்பெண் இருந்தாள். அவள், ஒரு நாள் தன் அப்பா அம்மாவுடன் காரில் வலம் வந்தாள். அந்த கிராமத்து வயல்ப்பகுதியில் காரில் போகும்போது வெளியே வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்தாள், அபி.

அப்போது ஒரு அழகான வெள்ளை நிறக்குட்டிக்குதிரையை அபி பார்த்தாள். அது மட்டுமன்றி, அதன் அருகில் “இந்தக் குட்டிக்குதிரை விற்பனைக்கு” என்கிற ஒரு பலகையும் போட்டிருப்பதை கவனித்தாள், அபி.

“அப்பா! எனக்கு அந்த அழகான குட்டிக்குதிரை வேணும்” என்றாள் தன் அப்பாவிடம்.

“இல்லை அபி! அந்தக்குதிரையையெல்லாம் வாங்கித்தர முடியாதும்மா, செல்லம்” என்றனர் அப்பா அம்மா இருவரும்.

“அம்மா! எனக்கு அந்தக்குட்டி குதிரை கட்டாயம் வேணும்!” என்றாள் அபிக்குட்டி அழுத்தமான குரலில்.

“இல்லைடா, அபிக்குட்டி! அந்த குதிரையை வாங்கித்தர முடியாது! வீட்டுக்கு போனவுடன் உனக்கு ஐஸ்க்ரீம் தருகிறேன். சரியா?” என்றாள் அம்மா.

“எனக்கு ஐஸ்க்ரீம் எல்லாம் வேணாம்! எனக்கு அந்தக் குட்டிக் குதிரைதான் வேணும்! எனக்குக் கட்டாயம் அந்தக்குதிரை வேணும்!” என்றாள் அபிக்குட்டி பிடிவாதமாக.

“இப்படியெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது அபிக்குட்டி! அப்பா அம்மா சொன்னால் கேக்கனும்!” என்றாள் அம்மா கொஞ்சம் கடிந்து.

உடனே அபிக்குட்டி அழ ஆரம்பித்துவிட்டாள். அழுதுகொண்டே அவள்,

“அந்த குட்டிக்குதிரை நீங்க வாங்கித்தரவில்லை என்றால் நான் செத்துப்போய்விடுவேன். எனக்கு அந்த அழகான குட்டிக்குதிரை வேண்டும்”

“குதிரை கிடைக்கவில்லையென்றால் அப்படியெல்லாம் நீ சாக மாட்டாய்! அதுபோல் யாரும் இறந்ததில்லை!” என்றார் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து.

வீட்டிற்குபோனவுடன் அபிக்குட்டி படுக்கைக்குப்போனாள், அவளால் சாப்பிடமுடியவில்லை, தூங்கமுடியவில்லை, அழுதுகொண்டே இருந்தாள், அபிக்குட்டி, அந்தக்குட்டிக்குதிரையை நினைத்து. கடைசியில் அபிக்குட்டி இறந்தே விட்டாள்- அந்தக் குட்டிக்குதிரை கிடைக்காததால்! :(

----------------

இது என்னுடைய ஒரிஜினல் சிந்தனை அல்ல! எனக்குப்பிடித்த ஒரு ஆங்கில கவிதையை உரைநடையாக தமிழில் சொல்ல முயன்றுள்ளேன். ஒரிஜினல் ஆங்கிலக்கவிதை கீழே உள்ளது! The poem is really beautiful unlike my crude translated version! :)

Little Abigail and the Beautiful Pony


There was a girl named Abigail
Who was taking a drive
Through the country
With her parents
When she spied a beautiful sad-eyed
Grey and white pony.
And next to it was a sign
That said,
FOR SALE--CHEAP
"Oh," said Abigail,
"May I have that pony?
May I please?"
And her parents said,
"No you may not."
And Abigail said,
"But I MUST have that pony."
And her parents said,
"Well, you can't have that pony,
But you can have a nice butter pecan
Ice cream cone when we get home."
And Abigail said,
"I don't want a butter pecan
Ice cream cone,
I WANT THAT PONY--
I MUST HAVE THAT PONY."
And her parents said,
"Be quiet and stopp nagging--
You're not going to get that pony."
And Abigail began to cry and said,
"If I don't get that pony, I'll die."
And her parents said, "You won't die.
No child has ever died yet from not getting a pony."
And Abigail felt so bad
That when they got home she went to bed,
And she couldn't eat,
And she couldn't sleep,
And her heart was broken,
And she DID die--
All because of a pony
That her parents wouldn't buy.

(This is a good story
To read to your folks
When they won't buy
You something you want.)

No comments: