Saturday, June 13, 2009

“ராமனை” சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுங்கள்!

சங்கராஜிக்கு பெரிய தொந்தரவா வந்து சேர்ந்துவிட்டான் இந்த ராமன். “குருஜி சிற்றின்பத்துக்கு ஆசைப்படுகிறான்!" "இதுபோல் சபலப்புத்தி உள்ளவனை எல்லாம் குருஜியா இருக்க தகுதி இல்லாதவன்!” என்கிறான் நேத்து வந்த இந்தப்பாவி ராமன்.

நான் எவ்வளவு பெரிய ஆள்? என்னையே இப்படிப் பேசுறான்! என்று கோபம் வந்தது குரு சங்கராஜீ க்கு!

ஆனால் ராமன் சொல்வதுபோல இப்போலாம் தன் உணர்வுகளை/உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை உணர்ந்தார் குரு சங்கரா. காமத்தை ஏன் இன்பம் என்கிறார்கள் என்பது விளங்கியது அவருக்கு. புகழ்ச்சி ரொம்பப் பிடித்தது. இந்த வயதிலும் பெண்களைப்பார்த்தாலே ஒரு மாதிரியாக இருந்தது, குரு சங்கராவுக்கு. அவர்களை நிர்வாணமாக கற்பனை பண்ண ஆரம்பித்துவிட்டார், குருஜி. தப்பு தப்பு என்று உள் மனது சொன்னாலும், பெண் என்னும்இன்பத்தை அனுபவிக்காமலே எப்படி சாவது? ஏன் இப்படி என் மனது இந்த வயதில் இப்படி அலையுது? என்று யோசித்தார். அவரால் தன் உணர்வுகளை சுத்தமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது என் குற்றமா? எல்லாம் அந்த பகவானின் செயல்! என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டார்.

சங்கரா ஜி யோசித்தார். முதலில் இந்த ராமனை ஒரு வழி பண்ணனும்! அப்போத்தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்! நம்ம கடவுளிடம் வேண்டி தண்டிக்கச் சொல்வோமா? கடவுள் ரொம்ப பிஸியா இல்ல இருப்பார். நம்ம சொல்றதை அவர் கேட்பதற்கு முன்னால் நம்மளே போய் சேர்ந்துவிடுவோம். மேலும் நம்ம காம உணர்ச்சிகளும், ஆசைகளும் கடவுளுக்குத் தெரியும். எதுக்கு வம்பு?

அப்போ என்ன செய்யலாம்? இவன் இருக்கிறவரை நம்ம வாழ்க்கையை ஓட்டமுடியாது. பேசாமல் இந்தப்பதவியை விட்டு ஓடிவிட்டால்? அதெல்லாம் முடியாது! “இந்த ராமனை என்ன செய்வது? ரொம்ப நல்லவனா வேற இருக்கான். பேசாமல் இவனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்!” என்று முடிவுக்கு வந்தார் குருஜி.

எப்படி இந்த ராமனை அனுப்பலாம்? கொலை செய்வதெல்லாம் நம்மால் முடியுமா? அது பாவம் இல்லையா? உடனே தோன்றியது அவருக்கு! “இருக்கவே இருக்கானுகள் திராவிட கைக்கூலிகள்”! சும்மாவே நம்மள சாமி சாமினு கும்பிடுவானுகள்! நம்ம கொஞ்சம் பணத்தை அள்ளி எறிந்தால், “முடிச்சிருவோம் சாமி” என்று ராமனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இப்படித்தானே நம்ம காலங்காலமா பிழைப்பு நடத்துறோம்?

பொன்னையா, மாடசாமி, மற்றும் முனியாண்டியை கூப்பிட்டு காதும் காதும் வைத்ததுபோலப் பேசினார், குருஜி.

“என்ன சாமி?”

“இந்த ராமன் ரொம்ப நல்லவனா இருக்கான்! அவனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுங்கள்! இது பாவிகள் வாழும் உலகம்! நல்லவர்கள் எல்லாம் சொர்க்கத்தில் கடவுளுடன் இருக்கனும்” என்றார் குருஜி.

“சரி சாமி, இது தப்பு இல்லைங்களா, சாமி?” என்றான் முனியாண்டி.

“சாமி, தப்பு செய்யச் சொல்லுவேனா? ராமன் இறந்ததும் எங்கே போவார்? கடவுளிடம்! அதுவும் சொர்க்கத்துக்குப் போவார். அவரை கடவுள் நல்லாப் பார்த்துக்குவார்!'

“இருந்தாலும் அவரை கொல்லுவது..”

“உனக்கு வயிற்றில் ஒரு கட்டி இருக்கு. வலியால் உயிரே போகுது. அதை எடுக்க ஒரு ஒரு ஆப்பரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லுறார். அப்படிப் பண்ணும்போது வலிக்கும் இல்லையா?”

“ஆமா”

“ஆப்பரேசன் செய்து கட்டியை எடுத்த பிறகு?”

“கொஞ்சநாளில் நல்லா ஆயிடும் சாமி. அப்புறம் வலியே இருக்காது சாமி”

“அது மாதிரித்தான் இது. ராமனை கடவுள் நல்லா பார்த்துக்குவார். அனுப்பிவிடுங்கள்” என்றார் குருஜி.

குருஜியின் கட்டளைப்படி, கைக்கூலிகள் ராமனை கவனமாக் சொர்க்கத்துக்கு அனுப்பிவைத்தார்கள்! ஆனால் பாவம், குருஜி மாட்டிக் கொண்டார்! இப்போ என்ன செய்வது? என்று யோசித்தார் குருஜி. ஒரு வழி தோன்றியது அவருக்கு! பேசாமல் இந்த கேசை வாய்தா போட்டு ஒரு 20 வருசம் இழுத்தால் என்ன? அதுக்குள்ள நம்மளும் சொர்க்கத்துக்குப் போய் சேர்ந்து விடுவோம்! குருஜி முகத்தில் புன்னகை வந்தது.

2 comments:

வால்பையன் said...

குருஜிக்கு மேல போற வயசு அதனால ஒகே!

குப்பனும், சுப்பனும் மாட்டுனாங்களே அவுங்க!

வருண் said...

இங்கே பிர்ச்சினை சங்கராவுக்கும் ராமனுக்கும்! குப்பனும் சுப்பனும் வெறும் "அறிவில்லாத ஆயுத கைக்கூலிகள்!"

குருஜி சங்கரா காரித்தை சாதிச்சுட்டு ஜெயிலுக்குப்போகாமல் சொர்க்கத்துக்கு போயிடுவார்!

இந்த திராவிடக் கைக்கூலிகள் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டு நரகத்துக்கு போகும்!

அதுதான் காலங்காலமா நடக்குது!