திரு ரவி அவர்கள் தமிழ் வலைபதிவில் மூத்தவராக இருக்கலாம். உரையாடல் சிறுகதைப்போட்டி நிர்வாகம் அவர் மேல் மதிப்பு வைத்திருக்கலாம். ஏன் தமிழ்மணமும், பதிவுலகும் அவரை மதிக்கலாம். ஆனால் அவர் ஒரு நீதிபதி நிலையில் தன்னை நிறுத்தி மதிப்பெண்கள் கொடுத்து மற்றவர்களின் படைப்புகளை பகிரங்கமாக எடைபோடுவது ரசிக்கத்தக்கதாக இல்லை என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அந்தந்த வலைபூக்களில் போயி அவர் பின்னூட்டமிடலாம். ஏன் மதிப்பெண்களே கொடுக்கலாம். அதில் தவறில்லை! ஆனால் அதுபோல் செய்யாமல் இப்படி உலகமறிய மதிப்பெண்கள் கொடுத்து விமர்சிப்பதால் பலர் காயமடைந்து இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவருடைய மதிப்பெண்களால், தோல்வி பெறுமுன்பே பெற்றுவிட்ட உணர்வு ஒரு சிலரை வாட்டலாம். இவர் மதிப்பெண்கள் இதை மதிப்பிட இருக்கும் நீதிபதிகளையும் அவர்கள் முடிவுகளையும் பாதிக்க சாத்தியமிருக்கிறது.
I believe creators are sensitive and one can easily destroy their creativity and confidence by criticizing them openly especially by rating the stories by giving marks! It is okay to do it between walls and confidentially but not like this even if it is done politely and carefully!
திரு ரவி, அது தன்னுடைய உரிமை என்கலாம்!
“அவரை நாங்க கட்டுப்படுத்த முடியாது” என்கலாம் இந்தப் போட்டியை நடத்தும் நிர்வாகம்.
ஆனால் என்னைப்பொறுத்த வரையில் ரவியின் மதிப்பீடு அவசியமில்லாதது மட்டுமல்ல அது இந்த போட்டியின் தரத்தை குறைக்கிறது.
இதே கருத்தை உணர்ச்சிவசப்பட்டு இன்னொரு பதிவரின் வலைதளத்தில் அசிங்கமான ஆங்கிலத்தில் சொன்னேன். அதை அந்த வலைதள உரிமையாளர் எடுத்துவிட்டார் என்பதால் இங்கே சொல்கிறேன்.
எனக்கும் பேச்சுரிமை இருக்கு இல்லையா?
என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லையென்றால் எனக்குத் தூக்கம் வராது!
6 comments:
நீங்கள் சொல்வது சரி என்றாலும், அவரும் போட்டிக் குழுவில் இருந்தால் செய்யும் விமர்சனத்தைத் தான் பொதுவில் செய்திருக்கிறார் என்றும் கொள்ளலாமே.
அவருடைய விமர்சனத்தை போட்டி நடத்துபவர்களில் ஒருவரான பைத்தியக்காரன் வரவேற்று இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
விமர்சனம் என்பது தனிப்பட்ட ஒருவரின் பார்வை என்று புரியாமல் யாரும் எழுதுவார்கள் என்று தோன்றவில்லை.
வெறும் விமர்சனத்துக்கு பயந்து ஓடுபவர்கள் ஓடட்டும் விட்டு விடுங்கள்...
அவர்கள் இருப்பதை விட ஓடுவது நல்லது..
என்னால் உங்கள் கருத்துக்களை ஏற்க முடியவில்லை வருண்!
கோவி, மயாதி, சென்ஷி:
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இதுவும் என் தனிப்பட்ட விமர்சனம்தான். நீங்கள் உடன்பட அவசியமில்லை :)
Let us agree to disagree on this :)
Thanks :)
விமர்சிக்க கூடாது என்றால் மற்ற கதைகளை எல்லோரும் படிக்குமாறு விட்டதே தவறு.
விமர்சிப்பது அவர் உரிமை
*** ☀நான் ஆதவன்☀ said...
விமர்சிக்க கூடாது என்றால் மற்ற கதைகளை எல்லோரும் படிக்குமாறு விட்டதே தவறு.
விமர்சிப்பது அவர் உரிமை***
விமர்சிப்பது அவர் உரிமைதான். அதேபோல் அவர் மதிப்பீட்டையும் விமர்சனத்தையும் அதனால் இந்தப்போட்டியின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சிப்பது என் உரிமை. :-)
உங்கள் கருத்துக்கு நன்றி நான் ஆதவன் :)
Post a Comment