Monday, June 1, 2009

இலங்கை தமிழரில் இன்னொரு வகை!

இலங்கையில் தமிழீழப் போராட்டமும், இனப்படுகொலையும் ஒரு புறமிருக்க, ஒரு சில தமிழர்கள் இந்த சண்டை ஒரு முடிவுக்கு வந்ததைப் பார்த்து மனதாற சந்தோஷப்படுகிறார்கள்.

எனக்குத்தெரிய இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர் ஒருவர், இன்றைய நிலையை,
"Sri Lanka _ One Country One Nation" என்று தன் மனதுக்குள் கொண்டாடுகிறார். பொதுவாக இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் தமிழ் ஈழம் மலர ஆசைப்படவே இல்லை!

தமிழீழப்பிரச்சினை பற்றிய ஞானத்தில் கற்றுக்குட்டி நான். அறிந்துகொள்ள கேட்கிறேன்!

அது ஏன் இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் மட்டும், தமிழீழத்தை வரவேற்கவில்லை?

சிங்களவரோடு அவர்களால் எப்படி சேர்ந்து வாழ முடிகிறது?

இந்த இனப்படுகொலையைப் பார்த்து அவர்கள் ஏன் கண்ணீர் சிந்தவில்லை? :(

இந்த நியாயமான தமிழீழப் "போராட்டத்தை' அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை?

மதத்தால் அவர்கள் வேறுபட்டாலும் மொழியால் அவர்களும் தமிழர்கள் தானே?

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. தாய் மொழி தமிழ். தயவு செய்து இந்த கேள்வி இந்த நேரம் நான் எழுப்பியதால் வீண் தனிநபர் தாக்கு வேண்டாம். நன்றி!

19 comments:

அன்பு said...

புலிகளின் இனச் சுத்திகரிப்பு பற்றி தெரிந்து கொண்டால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணன் ஆசிப்மீரான் அவர்களின் இன்றைய இடுகையைப் போய் படியுங்கள். அவர் தந்தை அப்துல்ஜப்பார் எழுதிய கட்டுரையை வெளியிட்டு இருக்கின்றார். ஜனாப்.ஜப்பார் பல்லாண்டு காலம் இலங்கையில் வசித்தவர்.

புலிகள் இயக்கத்தில் பங்கெடுத்த இஸ்லாமியர்கள் பலருண்டு. இம்ரான் படையணி கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?? கருணாவின் சதிச்செயலால் பின்னர் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் இடையே பெரும் சுவர் எழுந்து விட்டது. தற்போது உண்மை அறிந்து அந்நிலை மாறி வருகின்றது.

ரங்குடு said...

என்னைப் பொறுத்த வரை அவர்கள் முதலில் இசுலாமியர்கள் பிறகு தான் தமிழர்கள், இந்தியர்கள், ஈழத் தமிழர்கள் என்று செயல் படுவார்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த இந்திய முஸ்லீம்களை வைத்து இந்த முடிவுக்கு வரலாம்.

Anonymous said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

எம்.எம்.அப்துல்லா said...

//பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த இந்திய முஸ்லீம்களை வைத்து இந்த முடிவுக்கு வரலாம்.

//

மிஸ்டர்.ரங்குடு,

எதிலும் இந்தியா வெல்ல வேண்டும் என்று பிராத்தனை செய்யும் என் போன்றவர்களை வைத்து எந்த முடிவிற்கு வருவீர்கள்??

இந்திய ராணுவ இரகசியத்தை பாக்கிஸ்தானுக்கும்,சி.ஐ.ஏ விற்கும் விற்ற இஸ்லாம் மதம் சாராத ராணுவ அதிகாரிகளை வைத்து எந்த முடிவிற்கு வருவீர்கள்??

வருண் said...

***அன்பு said...
புலிகளின் இனச் சுத்திகரிப்பு பற்றி தெரிந்து கொண்டால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்

1 June, 2009 9:30 AM***

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க, அன்பு! :)

வருண் said...

திரு. அப்துல்லா!

இங்கே ஆசிமீரான் பதிவிலிருந்து சிலவற்றை க்வோட் பண்ணுகிறேன்.

***கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் செய்தார் என்பதை வாதத்துக்காக அல்ல உண்மை என்றே கூட ஒப்புக்கொள்ளத் தயார் ஒரே ஒரு கேள்வியுடன் – அதனால் ஈழத்தமிழர்களுக்கு இம்மியளவேனும் நன்மை விளைந்ததா? - அவருக்கு நன்கு பரிச்சயமான கடிதத்திலோ அல்லது கவிதையிலோ கூட பதில் சொல்லலாம்.***

கலைஞரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை நான் மறுக்கவில்லை! ரொம்ப சாதரண ஒரு அரசியல்வாதிபோல் நடந்துகொண்டார்.
சரித்திரத்தில் அவரு பெயர் நாறும்!

***ஓர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உளம் நொந்து - வெந்து சொன்ன ஒரு வாக்கு: “ ஐயா நாங்கள் வயிற்றுக்குச் சோறு கேட்டோம். ஆனால் நீங்கள் வாய்க்கு அரிசி போட்டிருக்கிறீர்கள்” நம்மைச் சுடுகிறது ஐயா, சுள்ளென்று உரைக்கிறது. உதவத் தவறி விட்டோமோ என்று உள்ளம் கிடந்து குமைகிறது.***

இது நம் அரசியல்வாதிகளுக்கு தகும். ஆனால் சாதாரண தமிழ்நாட்டுத் தமிழன் என்ன செய்ய முடியும்? அவன் வாய்க்கரிசி போட்டதாக சொல்வதெல்லாம் சரி அல்ல என்று நான் நினைக்கிறேன்>

வருண் said...

***எம்.எம்.அப்துல்லா said...
புலிகள் இயக்கத்தில் பங்கெடுத்த இஸ்லாமியர்கள் பலருண்டு. இம்ரான் படையணி கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?? கருணாவின் சதிச்செயலால் பின்னர் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் இடையே பெரும் சுவர் எழுந்து விட்டது. தற்போது உண்மை அறிந்து அந்நிலை மாறி வருகின்றது.

1 June, 2009 9:33 AM***

இல்லைங்க, மெஜாரிட்டி இஸ்லாமியத்தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என்பதே உண்மைனு நினைக்கிறேன்.

அது சரி, தவறென்று நான் சொல்லவில்லை!

வருண் said...

***ரங்குடு said...
என்னைப் பொறுத்த வரை அவர்கள் முதலில் இசுலாமியர்கள் பிறகு தான் தமிழர்கள், இந்தியர்கள், ஈழத் தமிழர்கள் என்று செயல் படுவார்கள்.

1 June, 2009 10:07 AM***

திரு. ரங்குடு

***"Sri Lanka _ One Country One Nation" என்று தன் மனதுக்குள் கொண்டாடுகிறார்.***

இதில் எங்கே இஸ்லாம் இருக்குங்க???

வருண் said...

***தமிழர்ஸ் - Tamilers said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

1 June, 2009 10:08 AM***

நன்றிங்க தமிழர்ஸ் :)

Chandran said...

//தமிழீழப்பிரச்சினை பற்றிய ஞானத்தில் கற்றுக்குட்டி நான். அறிந்துகொள்ள கேட்கிறேன்!//

இலங்கை பிரச்சனையில் நீங்கள் அறிய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதை உங்கள் பதிவில் இருந்து அறிய முடிகிறது. அன்பு கூறியதும் சரி.

//அது ஏன் இலங்கையில் வாழும் இஸ்லாமியத்தமிழர்கள் மட்டும், தமிழீழத்தை வரவேற்கவில்லை?//

இஸ்லாமியத்தமிழர்கள் மட்டும் அல்ல இந்து தமிழர்களிலும் தமிழீழத்தை விரும்பாதவர்கள் நிறையவே இருக்கிறார்கள். தமிழ் பதிவுகளில் வருபவை பெரும்பாலும் LTTE Propaganda தான். அதனால் தான் இந்த குழப்ப நிலை.

வருண் said...

உங்கள் கருத்துக்கு நன்றி சந்திரன்!

திருமூர்த்தி said...

புலிகள் பற்றி இவ்வளவு வெளிப்படையான கருத்து கூறும் ஒருவர் இருப்பதே மகிழ்ச்சி அளிக்கிறது.

உண்மை நிலையும் அதுவே

Meenmahal said...

Just check the link below, then you can come to a conclusion not only the Muslim Tamils... but also lots of Hindu and Christian Tamils don't support LTTE.
Take Toronto as an example there are 300,000 SL Tamils are living here but only around 10,000(maximum) attend the protests. Why is this!!?? Do you think that they hate tamils and their rights???!!!!No never!!!, everybody know that we need certain rights to live back home but, we are not ready to governed by LTTE. Because we KNOW them.

http://live.athirady.org/?p=41571

Sorry Arun (you know the reason) i am easily getting disturbed when i read some articles. Because my family badly affected by them (LTTE). We moved from our home because of them.... there are 100 of thousands tamils like me all over the world.

IGNORE THE TYPOS

வருண் said...

***Meenmahal said...
Just check the link below, then you can come to a conclusion not only the Muslim Tamils... but also lots of Hindu and Christian Tamils don't support LTTE.
Take Toronto as an example there are 300,000 SL Tamils are living here but only around 10,000(maximum) attend the protests. Why is this!!?? Do you think that they hate tamils and their rights???!!!!No never!!!, everybody know that we need certain rights to live back home but, we are not ready to governed by LTTE. Because we KNOW them.

http://live.athirady.org/?p=41571***
Meenmahal:

Thank you very much for educating me and speaking up what you feel in your heart. It is very har to find such people around here!

***Sorry Arun (you know the reason) i am easily getting disturbed when i read some articles. Because my family badly affected by them (LTTE). We moved from our home because of them.... there are 100 of thousands tamils like me all over the world.***

Who is Arun? I guess this is for someone else. :-)))

**IGNORE THE TYPOS***

OK :-)))

Thanks for expressing yourself! :)

வருண் said...

***திருமூர்த்தி said...
புலிகள் பற்றி இவ்வளவு வெளிப்படையான கருத்து கூறும் ஒருவர் இருப்பதே மகிழ்ச்சி அளிக்கிறது.

உண்மை நிலையும் அதுவே***

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. திருமூர்த்தி :)

பிருந்தன் said...

இஸ்லாமியர் தங்களை தமிழர் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை,தமிழர்கள் எப்படி இலங்கைக்கு விசுவாசமாக இல்லாது இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்தார்களோ, அதே மனநிலையில்தான் இஸ்லாமியர் தமிழரையும் இந்தியாவையும் வெறுத்து பாகிஸ்தானுக்கு விசுவாசமாக் இருந்தனர். தமிழரின் நண்பர்கள் அவர்களுக்கு எதிரிகள், எதிரிகள் நண்பர்கள், இந்தியா எதிரி ,இலங்கை நண்பர்கள் ஆயினர். இது பெரும்பான்மை இஸ்லாமியரின் மனநிலை, இப்போது அம்பாறை இஸ்லாமிய கிராமங்கள் சிங்களத்திடம் பறிபோவது அறிந்து பதறிபோய் இருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

வருண் said...

***இப்போது அம்பாறை இஸ்லாமிய கிராமங்கள் சிங்களத்திடம் பறிபோவது அறிந்து பதறிபோய் இருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

4 June, 2009 1:36 AM***

"பிறற்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்"

Anonymous said...

இந்த மீன்மகள் சொறதெல்லாம் அப்பட்டமான பொய்யி. மூனு லச்சம் தமிழங்க கானடாலே இல்லே. சிட்டிசன்சிப் கெடைச்சவுங்கல பாதிப்பேரு கானடா ஆளுங்களா மாறிட்டானுங்க. அவனுங்களுக்கு யாரு செத்தாலும் பிரச்சினை இல்லே. அது தான் பிரச்சினை.