சாதாரண மனிதர்கள் கோழையாக இருப்பது இயற்கை! கோழைகளை பல நேரங்களில் நாம் துரோகிப் பட்டம் கொடுத்து கீழே அமர்த்திவிடுகிறோம். கோழைகள் பலவகை! நம்மில் பல கோழைகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுடந்தான். இன்றும், இப்பொழுதும்தான்!
1) ஒரு வியாபாரியிடம் வந்து ஒரு ரெளடி நல்ல வியாபரம் நடந்துக் னொண்டிருக்கும்போது மிரட்டுகிறான். எனக்கு இப்போ தண்ணியடிக்க 200 ரூபாய் கொடு என்று. இவன் கலாட்டாவால் கடைக்கு வந்த கஸ்டமர் எல்லாம் பயந்து நடுங்குகிறார்கள்.
* அந்த கடைக்காரன் போலிஸை கூப்பிட்டு அவர்களுக்கு ஒரு ரூ 500 லஞ்சம் கொடுத்து, ரெளடியை ஜெயிலில் தள்ளலாம். ஆனால் அதோடு இது முடியாது.
* அதைவிடுத்து, அந்தக்கடைக்காரர் இன்னொரு ரெளடி கும்பளை ரூ 300 செலவழித்து "ஹயர்" பண்ணி அவனை சமாளிக்கலாம். ஆனால் அதுவும் அதோட முடியாது.
* ஆனால் அதையும் விடுத்து, நான் ஒரு வியாபாரி. ஏன் என் பொழைப்புல மண்ணள்ளி போடற என்று அவனிடம் கெஞ்சும் தொணியில் பேசி 100 அல்லது 200 ரூபாய் கொடுத்து அனுப்பி விடுவது படு கோழைத்தனம்தான். அந்த ரெளடி திரும்பவும் நாளை வரலாம். ஆனால் அதைத்தான் பொதுவாக செய்கிறான் ஒரு வியாபாரி. இதுவும் இதோட முடிவதில்லை. பொதுவாக பல வியாபாரிகள் கோழையாக்த்தான் வாழ்கிறார்கள்.
2) அதுபோல் தமிழ் ஈழத்திற்காக புலிப்படை போராடுவது நியாயம்தான். ஆனால் போராட்டம்னு வந்தால் உயிர் சேதம் வரும். என் மனைவி மகள் மற்றும் தங்கைகள் கற்பு சூரையாடப்படலாம். நான் ஒரு கோழை! என்னால் அதுபோல் விளைவுகளை தாங்க முடியாது. இலங்கையில் சிங்களவர்கள் செய்யும் அநியாயத்திற்கு கடவுள் இவர்களை தண்டிப்பான். கடவுள் நிச்சயம் இருக்கான். அநியாயம் செய்பவர்களை அவன் இன்று அல்லது நின்று கேட்பான் என்று போராடாமல், புலிகள் கொள்கைக்கு ஆதரவு கொடுக்காமல் பயந்து திரியும் கோழைத் தமிழர்களும் நிச்சயம் உண்டு. மனதைரியம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
* அதுபோல் பயந்து கோழையாக இருக்கும் தமிழர்களுக்கு, துரோகிப்பட்டம் சூட்டுவது சரியா?
* இதுபோல் கோழைகள் பரிதாபத்துக்கு உரியவர்கள் இல்லையா?
* இல்லை இதுபோல் கோழைகளும் துரோகிகள்தானா?
3) ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதாற காதலிக்கிறான். ஆனால் அந்தக் காதலில் பல சிக்கல்கள். அவனுடைய சந்தர்ப்ப சூழ்நிலையில் இது நிச்சயம் சரிப்பட்டு வராது என்று தெளிவாகத் தெரியுது. ஆனால் அவனால் காதலிக்காமலும் இருக்க முடியவில்லை. அவள் அவனை அன்பால் குளிப்பாட்டுகிறாள். He could not resist. The emotions take over. நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. ஒரு முடிவுக்கு வந்தே ஆகனும்னு நிலைமை வரும்போது, அவன், உலகம் சந்தர்ப்ப சூழ்நிலை இவைகளுக்கு பயந்து ஒரு கோழையாகிறான். இதுபோல் கோழைகள் சினிமாவில் மட்டுமல்ல, நமது கலாச்சாரத்தில் பல லட்சம், பல கோடிகள் இன்றும் வாழ்கிறார்கள்.
அதனால் கோழை என்பவன் மனிதர்களில் அசாதாரணம் அல்ல என்பதை நாம் உணருகிறோமா? அதை நாம் ஏற்றுக்கொள்ளனும்! கோழைகளுக்கு எல்லாம் தூரோகிப்பட்டம் சூட்டுவது தவறு இல்லையா?
No comments:
Post a Comment