"என்ன சாப்பிட்ட, பிருந்தா?"
"காய்ச்சல் அடிப்பதாலே ரொம்ப பசிக்கலை, கண்ணன். அப்பப்போ கொஞ்சம் ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சேன்"
"கீப் ட்ரின்க்கிங் சம் வாட்டர் அல்லது கேட்டரேட். இல்லைனா டீஹைட்ரேட் ஆயிடும் பிருந்தா"
"சரிங்க சார்"
"உனக்கு எதுவும் கடையில் போய் வாங்கிட்டு வரவா?"
"ஒண்ணும் வேணாம்"
"அப்புறம் ஏதாவது வேணும்னா ஃபோன்ல கூப்பிடு, சரியா?"
"ஏதாவது வேணும்னு கூப்பிட்டுக்கேட்டால் கிடைக்குமா?" அவள் ஒரு மாதிரியாக பார்த்தாள்.
"ஆமா, என்ன பண்றது? காய்ச்சல்க்காரியா இருக்க இல்லையா?. கேக்கிறதை செய்யத்தான் செய்யனும் பாவம்"
"என் மேலே ஒரு பரிதாபத்தினாலயா?"
"அதனாலயும்தான்"
"வேற என்ன?'
"நம்ம பிருந்தாவாச்சேனு ஒரு அன்புதான்"
"உங்க பிருந்தாவா நான்?"
"ஏன் உனக்கு யாரும் ஆத்துக்காரர் இருக்காரா என்ன? என்னோட சண்டைக்கு வர?"
"என்ன கொழுப்பா?"
"நீங்கதான் வம்பு இழுத்தது மஹாராணி"
"நீங்க அதுக்குள்ள புறப்படுறீங்களா, கண்ணன்?"
"அதுக்குள்ளவா? வொர்க்ப்ளேஸ் போய் ஒண்ணு செக் பண்ணிட்டு வீட்டுக்கு போகனும். ஏன் உன் கூடவே நைட் படுத்துக்கவா?"
"பெரிய பெட் தானே? நல்ல பிள்ளையா இருக்கிறதுனா பக்கத்தில் படுத்துக்கோங்க கண்ணன்"
"உன் காய்ச்சலை எப்படியாவது ஒட்டிவிடலாம்னு ஆசையா?"
"அதில்ல. நீங்க இருந்தா நல்லாயிருக்கும்னு பார்த்தேன்"
"பக்கத்தில் தெரிஞ்சவங்க இருக்காங்களா?"
"இருக்காங்க, தமிழ்க்காரிகளே இருக்காங்க"
"என்ன ரொம்ப சலிச்சுக்கிற?"
"ரொம்ப க்ளோஸ்லாம் இல்லை, கண்ணன். I don't know, we came to this country, we sort of lost our family back home. It is very hard to find very good friends here too. I wonder what have we achieved?"
"அப்படியெல்லாம் ரொம்ப யோசிக்காதே, Just live!"
"ஏன்?"
"ஜஸ்ட் ட்ரஸ்ட் ஒன்லி யுவர்செல்ஃப். நோபடி எல்ஸ்"
"உங்களைக்கூடவா?"
"லைஃப் இஸ் காம்ப்ளீக்கேட்டெட். People change. It is not their fault. Of course including me"
"Why?"
"I dont know, but they do"
"என்ன சொல்ல வர்றீங்க?"
"ரெஸ்ட் எடுத்துக்கோடா. இன்னொரு நாள் பேசுவோம்"
"நீங்க போகனுமா, இப்போ?"
"இங்கே இருக்க ஆசையாத்தான் இருக்கு. ஆனால் போகனுமே"
"பொய்"
"எது பொய்?"
"இங்கே என்னோட இருக்க ஆசையா இருக்குனு சொன்னது"
"ஏன் நீ கடிச்சு தின்றுடுவனு எனக்கு பயமா என்ன?"
"உங்களை திண்ணுட்டா எனக்கு ஒரு நல்ல கம்பெணி இல்லாமல் போயிடுமே? அதனால உங்களை உயிரோட விடுறேன்"
"செத்துட்டா நிம்மதியா போயிடலாம், பிருந்தா! ஏன் வாழனும்னு துடிக்கிறோம்னு தெரியலை. அதே மக்கள், அதே வாழக்கை, எல்லோரும் கேவலம் நானும் சாதாரண மனுஷந்தான்னு ஒரு நாள் இல்லை இன்னொரு நாள் காட்டிடுவாங்க"
"ஒவ்வொரு சமயம் அப்படித்தான் தோனும்"
"எனக்கு ரெண்டு மனசு இருக்கு தெரியுமா?"
"ரெண்டு இதயமா? எங்கே திருடினீங்க இன்னொன்னு?"
"இதயம் இல்லை! மனசு. ரெண்டும் வேற வேற"
"ரெண்டா?"
"ஆமா"
"எப்படித்தெரியும்?"
"இங்கே பாரு! ஒரே விசயத்தை, ஒரு தரப்பார்க்கும்போது எதுவுமே தப்பாவே தோன மாட்டேன்கிது. எல்லாமே ரீசனபுளாத்தான் தோனுது. அதே விசயத்தை இன்னொரு சமயம் பார்க்கும்போது எல்லாமே தப்பா தோனுது"
"ஆனா ஒரே மனசுதான அப்படி வேற வேற மாதிரி யோசிக்கிது"
"இல்லை ரெண்டு வேற வேற மனசு"
"உங்களுக்கு ரெண்டு மனசா?" அவள் சிரித்தாள்.
"என்ன சிரிப்பு?"
"நீங்க உளறினாலும் அதில் ஏதோ அர்த்தம் இருக்க மாதிரி இருக்கு"
"ஆமா, நீ தெளிவா பேசுவதும் பின்னால ஒரு நாள் பார்த்தால் உளறல் மாதிரி தெரியும்"
"சரி சரி, இன்னொரு டீ போட்டுத்தாங்க! அப்புறம் புறப்படலாம்"
-தொடரும்
No comments:
Post a Comment