Wednesday, August 26, 2009
விக்ரமின் கந்தசாமியும் ஃப்ளாப்பா!!
அந்நியனுக்கு அப்புறம் விக்ரம் இன்னும் வெற்றியை தேடி அலைகிறார். அந்நியனுக்கு அப்புறம் வந்த "மஜா" படம் காமெடி, பாட்டெல்லாம் ஓரளவுக்கு நல்லாயிருந்தும் கமர்ஷியல்லா ஃப்ளாப் ஆனது.
அதுக்கப்புறம், ஒரு ரெண்டு வருசமா இழு இழுனு இழுத்து கடைசியில் திரிஷாவுடன் வெளிய வந்த அந்த பீமா, என்ன ஆச்சு? அதுவும் ஃப்ளாப் ஆச்சு. அதோட அந்த லிங்குசாமிக்கும் அழிவுகாலம் ஆரம்பிச்சுடுச்சு
இப்போ நம்ம கந்தசாமியும் ஃப்ளாப்! அதென்னவோ தெரியலை சிவாஜிக்கப்புறம் ஸ்ரேயா யாரோட நடிச்சாலும் அந்தப் படம் ஃப்ளாப் ஆயிடுது.
மணிரதனம் படத்தில் நடிக்கிறார், ஏதோ ராவணனோ என்னவோனு சொல்றீங்களா? மணிரத்னம் தமிழ்ல ஹிட் கொடுத்து ரொம்ப நாளாச்சு. மணிரத்னம் படமும் ஃப்ளாப் ஆக வாய்ப்பில்லைனு சொல்ல முடியாது.
விக்ரம்க்கு நெனைப்பு அதிகமாகி பெரிய ஹாலிவுட் ஹீரோனு தன்னை நினைத்துக்கொள்கிறாரானு என்னனு தெரிய்லை.
இப்போ ரெண்டு வருசத்துக்கு ஒரு படம் வருது அதுவும் தவறாமல் ஃப்ளாப் ஆயிடுது! இப்படிப்போனா எங்கே தேற?
நம்ம விமர்சகர்கள் ஒரு சில ந்டிகர்களை பெரிய ஆளுனு ஏத்திவிட்டே கவிழ்த்தி, மண்ணைக்கவ்வ வைத்ததுல விக்ரம் ரெண்டாவது ஆள்! முதல் ஆளு யாருனு நான் சொல்லபோவதில்லை!
விக்ரம் அவர்களே!
* கொஞ்சம் இளமையா இருக்கும்போதுதான் ஹீரோவாக எல்லாம் நடிக்க முடியும். வயசாயிடுச்சுனா, வில்லனா நடிக்கிறயானு உங்களைக் கேப்பார்கள்!
* உங்களை ஒரு சாதாரண நடிகன் என்று விளங்கிக்கொண்டு, புரிந்துகொண்டு, கொஞ்சம் கீழே இறங்கி வாங்க!
* ஒரு 40, 50 லட்சமோ, அல்லது கொடுக்கிறதை வாங்கிகிட்டு ஒரு வருசத்துக்கு 2 படமாவது வெளியே விடவும்!
அதை விட்டுவிட்டு நான் பெரிய இவன், தமிழ் சினிமாவைக் கிழிக்கப் போறேன் னு இப்படியே போச்சுனா, சீக்கிரம் உங்களுக்கு வில்லனாக நடிக்கத்தான் வாய்ப்பு கிடைக்கும்.
இப்போ எல்லாம் நம்ம ஸ்டார்கள் மின்னுவதுக்கு ஆரம்பிக்க முன்பே, மங்க ஆரம்பிச்சுறாங்க!
விஷால், விக்ரம் இப்படியே போகுது இந்த மின்னாத ஸ்டார்கள்!
ஆமா, நம்ம சத்யராஜின் அடுத்த படம் என்ன?
Labels:
அனுபவம்,
கந்தசாமி,
சமூகம்,
திரைப்படம்,
விக்ரம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நீங்கள் சொல்வது மிக சரியான ஒன்று...
இனிமே விக்ரம் மேல வருவது மிக கடினம்.
//சிவாஜிக்கப்புறம் ஸ்ரேயா யாரோட நடிச்சாலும் //
சிவாஜிக்கு முன்னாலும் அப்படித்தான்
//வயசாயிடுச்சுனா, வில்லனா நடிக்கிறயானு உங்களைக் கேப்பார்கள்!
//
கண்டிப்பாக..,
//ஆமா, நம்ம சத்யராஜின் அடுத்த படம் என்ன? //
உங்க டச், நச்.
ஹா ஹா ஹா..நல்லா இருக்குங்க உங்க அலசல்..
***ஜெட்லி said...
நீங்கள் சொல்வது மிக சரியான ஒன்று...
இனிமே விக்ரம் மேல வருவது மிக கடினம்.***
எனக்கு ஏன் இவ்வளவு கேப் விடனும்னு தெரியலைங்க.
சாதிச்சவங்கதான் நிதானமா இருக்கனும்.
இவர் அப்படி எதுவும் பெருசா இன்னும் சாதிச்சு முடிச்சுட்டதா தெரியலை.
***SUREஷ் (பழனியிலிருந்து) said...
//சிவாஜிக்கப்புறம் ஸ்ரேயா யாரோட நடிச்சாலும் //
சிவாஜிக்கு முன்னாலும் அப்படித்தான்
26 August, 2009 7:46 PM***
மழை ஹிட் தாங்க இல்லையா?
அப்புறம் திருவிளையாடல் ஆரம்பம் ஒரு விதிவிலக்கு :-)))
***குறை ஒன்றும் இல்லை !!! said...
ஹா ஹா ஹா..நல்லா இருக்குங்க உங்க அலசல்..***
நீங்கள் விக்ரம் ரசிகரா இல்லாத வரைக்கும் பிரச்சினை இல்லைங்க :-)))
Post a Comment