"Where is Brindha today, Stacy?"
"oh, you did not know? she is sick!"
"What is wrong?"
"She has a flu"
"Really? I will check her out"
**********************************
பிருந்தாவின் அப்பார்ட்மெண்ட்டில்!
"Hey!"
"வாங்க, கண்ணன்!"
"சரி நீ போய் படுத்துக்கோ, பிருந்தா!"
"என்ன டெம்பெரேச்சர் இருக்கு?"
"தெரியலை. அங்கே தெர்மாமீட்டர் இருக்கு பாருங்க!"
"இரு நான் உன் நெத்தியை தொட்டு பார்க்கிறேன். ரொம்ப உடம்பு சுடுது பிருந்தா! என்ன மாத்திரை சாப்பிட்ட?"
"டைலீனால்தான் எடுக்கிறேன்"
"சரி, வாயை திற, நான் டெம்ப்பரேச்சர் பார்க்கிறேன்"
"ஆ"
"ஏய் 104 டிகிரி இருக்கு!"
"போய் சேர்ந்திடுவேனா? இனிமேல் நீங்க நிம்மதியா இருக்கலாம்" அவள் சிரிக்க முயற்சித்தாள்.
"ஏய் சும்மா ஃப்ளுதான். ஒண்ணும் ஆகாது! பயப்படாதே! உன் உடம்பு கிருமிகளோட சண்டை போடுது"
"பயம் எல்லாம் இல்லை. உயிரோட இருக்கேனானு பார்க்க வந்ததுக்கு தேங்க்ஸ் கண்ணன்"
"ஸ்டெய்ஸிதான் சொன்னாள் உனக்கு காய்ச்சல்னு. நான் வந்து தொந்தரவு பண்ணீட்டேனா?"
"சே சே. வேலைக்கு போகலையா நீங்கள்? இன்னைக்கு நீங்களும் ஆஃபா?"
"ஒண்ணும் பெருசா வேலை இல்லை. அதான் ஆஃப் எடுத்துடலாம்னு பார்க்கிறேன்"
"உடம்புக்கு சரியில்லைனா ரொம்ப ஹோம் சிக்கா இருக்கு, கண்ணன்"
"அப்போ கல்யாணம் பண்ணிக்கோ! உனக்கு ஹோம் சிக்கா இருக்காது"
"பெரிய ஐடியாதான் போங்க! ஸ்டெய்ஸி எப்படி இருக்கா?'
"என்னை டெவான் ஸ்ட்ரீட்க்கு கூப்பிடுறாள். அவளுக்கு ஒரு புடவை வாங்கனுமாம்! நீ தான் அவளுக்கு இந்த புடவை வாங்கிற ஐடியா கொடுத்தியா?"
"அவளுக்கு புடவை கட்ட ஆசையா இருக்குனு சொன்னாள். சாரிஸ் டெவான் ஸ்ட்ரீட்ல கிடைக்கும்னு சொன்னேன். உங்களை கூப்பிட்டாளா செலகஷனுக்கு? அவளை வச்சுக்கிறேன்"
"நீ காய்ச்சலோட இருக்கதாலே என்னை கூப்பிட்டு இருப்பாள்"
"அதெல்லாம் இல்லை"
"வேறென்ன?"
"எப்போ டெவான் போறீங்க?'
"இந்த வெள்ளிக்கிழமை ஈவனிங்னு சொன்னாள். அவளே வந்து என்னை பிக் அப் பண்ணிக்கிறாளாம்"
"அவளுக்கு சேலை கட்டிவிடப்போறீங்களா? இல்லை சொல்லிக் கொடுக்கப்போறிங்களா?"
"நீ வேற. சேலையா? ஐ விஷ் ஐ நோ தட்! எனக்கு டை மட்டும்தான் கட்டத்தெரியும்"
"ப்ளவ்ஸ்க்கு கொக்கி மாட்டிவிட, கழட்டத்தெரியுமா?"
"உனக்கு ரொம்ப கொழுப்புடா! ஏய் என்ன காய்ச்சல் விட்டுடுச்சா?" மறுபடியும் தெர்மாமீட்டர் வச்சு செக் பண்ணினான் கண்ணன்.
"இப்போ 100 தான் இருக்கு. இது நிச்ச்சயம் ஏதோ வைரஸ்தான் கவலைப்படாதே'
" நீங்க வந்ததும் உடம்பு குளிர்ந்துவிட்டது போல இருக்கு! எனக்கு ஏதாவது குடிக்க சூடா வேணுமே?'
"காபி அல்லது டீ குடிக்கிறயா? நான் போட்டு தரேன்"
"சரி போட்டுத் தாங்க"
கண்ணன் மைக்ரோவேவ்ல ஹாட் வாட்டர் சுட வச்சு, அதில் ரெண்டு ஃப்ளோ த்ரு Earl Grey, டீ bags போட்டு கொண்டுவந்தான்.
"சர்க்கரை எவ்வளவு போடனும்?"
"ஒரு அரை ஸ்பூன் போதும். உங்களுக்கு டீ?'
"எனக்கு இதே மாதிரி இன்னொண்ணு போட்டுக்கொண்டு வரேன்"
"OK"
"இந்தா பிருந்தா டீ! நீ எழுந்து கொஞ்சம் உட்காரு. அப்படியே பில்லோவை அங்கே வச்சு பெட் ஃப்ரேம்ல சாஞ்சிக்கோ"
"காய்ச்சல் ஒட்டிக்கப்போகுது உங்களுக்கும்"
"நான் ஃப்ளூ ஷாட் எடுத்து இருக்கேன். அதனால் ஒட்டாது"
"பரவாயில்லை, என்னை நல்லா கவனிச்சுக்கிறீங்களே கண்ணன்?" அவள் ஒரு மாதிரியாக அன்பா பார்த்தாள் பிருந்தா.
"கவலைப் படாதே! பின்னாலே நமக்குள்ள சண்டை வரும்போது நல்லாச் சொல்லிக் காட்டுவேன். அதானே நம்ம கலாச்சாரம்?"
"எப்படியோ என்னோட வந்து சண்டைபோட்டா சரிதான். நானும் நல்லா நாலு கொடுப்பேன். சரி, எனக்கு இப்போ சுடுதானு பாருங்க, கண்ணன்"
"மறுபடியுமா? தெர்மாமிட்டர் எடுத்துட்டு வரேன்"
"இல்லை நெத்தியிலே உங்க கை வச்சு பாருங்க! அப்படிப் பார்த்தால்தான் நீங்க எனக்காக கேர் பண்ணுற மாதிரி இருக்கு"
"சரிடா"
"கண்ணன்"
"என்ன சொல்லு?"
"இல்லை ஒண்ணுமில்லை"
"சும்மா சொல்லு"
"காய்ச்சல் கொண்டுவந்து கொடுத்த வைரஸுக்கு தேங்க்ஸ்"
"எதுக்கு?"
"அதனால்தானே உங்க கரிசனம் கிடச்சது எனக்கு"
"சரி, படுத்துக்கோ!"
"உங்க கையை தாங்க இங்கே! என் கைல வைங்க"
"சரி நான் இங்கேதான் இருக்கேன் நீ தூங்கு. இன்னும் ரெண்டு டைலினால் வேணா போட்டுக்கிறியா?"
"சரி"
"தூங்குடா"
"தூக்கம் வரலை"
"சரி, சைக்ளோப் அமைன் பத்தி பேசுவோமா?"
"ஐயோ வேணாம்"
"சரி சரி, சும்மா ஜோக்தான். படுத்துக்கோ!"
-தொடரும்
2 comments:
என்ன சார்.... இன்னிக்கு கொஞ்சம் போல ரொமாண்டிக்கா இருக்கு... எப்போதும் கடலைதான் இருக்கும்...
பரவாயில்ல ... இதுகூட அழகா இருக்கு...
***nila said...
என்ன சார்.... இன்னிக்கு கொஞ்சம் போல ரொமாண்டிக்கா இருக்கு... எப்போதும் கடலைதான் இருக்கும்...
பரவாயில்ல ... இதுகூட அழகா இருக்கு...***
வாங்க, நிலா! :)
ஆமாங்க ஒரே அறிவியலா எழுதி போர் அடிச்சது அதான் கொஞ்சம் ரொமாண்ஸை கலந்துவிட்டேன் :)
நீங்க சொன்னதும்தான் அது ரசிக்கத்தக்க இருந்ததென்று புரிந்தது.
நன்றி :)
Post a Comment