Thursday, August 6, 2009

நீங்க ஒரு செக்ஸிஸ்ட் தெரியுமா? -கடலை கார்னர் (5)

"அவளுக்கு ஒண்ணுமில்லை. அவளைப்பத்தி ஒரு விசயம்"

"அதான் என்னனு கேட்டேன்"

"அப்படியா?"

"சரியான ட்யூப் லைட் நீங்க, கண்ணன்"

"நீ மட்டும் என்ன? சோடியம் வேப்பர் லாம்ப்"

"அப்படினா?"

"அப்படித்தான். நான் என்ன சொன்னாலும் தப்பா புரிஞ்சுக்கவ. இப்போ அவ என்னிடம்தான் வொர்க் பண்ணுறா. தெரியுமா?”

“நல்லாவே தெரியும். அவதான் டெய்லி வந்து கம்ப்ளய்ன் பண்ணுறாளே”

“என்ன சொன்னாள்?”

“நீங்க ஒரு மோசமான பாஸுன்னு. சரி சரி சொல்லுங்க ஸ்டெய்ஸிக்கு என்ன? ஒழுங்கா வேலை செய்றாளா? ரொம்ப விரட்டுறீங்களா அவளை? இப்போ வந்தாலும் வருவா இங்கே"

"ஆமா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாட்டாலும் ஈகோ மட்டும் உங்க "பட்" டைவிட பெருசா இருக்கும். அது ஏன்?"

"எனக்கா?! என்ன கொழுப்பா? நான் என்றுமே என் ஈகோவை காட்டியதில்லை. காட்டினால் நீங்க தாங்கமாட்டீங்க! பாவம் நீங்கனு அட்ஜஸ்ட் பண்ணிப் போறேன்"

"ஆமா, அப்பபோ உன்னை நீயே உன் புகழ் பாடிக்குவ? அதெப்படி?"

"நானா? நீங்கதான் தற்பெருமை பாடுவதில் மன்னன்"

"நான் உங்களுக்குனு பொதுவாத்தானே சொன்னேன்? உன்னையா சொன்னேன், ட்யூப் லைட்?"

"பொதுவனா? நான் இல்லையா அதிலே?"

"உன்னைப் பத்தி உன்னிடமே குறை சொல்லுவேனா? நீ ரொம்ப நல்ல பொண்ணு இல்லையா?"

"சொன்னா கோவிச்சுக்காதீங்க! நீங்க ஒரு செக்ஸிஸ்ட் தெரியுமா? அதிலேயும் ரொம்ப மோசமான கேஸ்"

"செக்ஸிஸ்ட்டா? அப்படித்தான் தோனுது. நம்ம கல்ச்சர்ல இருந்து வந்து செக்ஸிஸ்ட்டா இருப்பதுதான் நார்மல். அப்போ நான் நார்மலாத்தான் இருக்கேன் போல"

"ஆனா நீங்க கொஞ்சம் லூசாச்சே! அதுவும் நம்ம கல்ச்சர்ல நார்மல்தானோ?!"

"உனக்கு உண்மையிலேயே கொழுப்பு அதிகம்தான்"

"என்ன என்ன?"

"கொழுப்பு அதிகம்னேன்"

"அது சரி, எங்கேயோ பார்த்துண்டு சொன்னீங்களே அதான் கேட்டேன்"

"நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கோ. அதுக்கு நானா பொறுப்பு?”

“சரி சரி சண்டையை விடுங்க. ஐ நோ யு ஆர் எ க்ரூக்”

“ என்ன வேணா சொல்லிக்கோ, நெனச்சுக்கோ போ! சரி உன் ஃப்ரெண்டு பத்தி கேளு. போன வாரம் ஒரு ரீக்ரிஸ்டலைசேஷன் பண்ணினாள். ஈதர் வச்சு. ஹீட் கன் வச்சு பண்ணுறா”

“ஹாட் ஏர் ப்ளோவர் வச்சா?”

“ஆமா. அவகிட்ட நான் போய் மெனக்கட்டுச் சொன்னேன். “Stacy! Please don't heat using heat gun. Ether is highly inflammable! It has a very low flash point. It will catch fire. Use hot water for crystallization” நு பொறுமையா சொன்னேன்".

“உங்களுக்கு ஏன் அத்தனை அக்கறை?”

“அப்புறம் எல்லோரும் ஒண்ணாப் போய் சேர்ந்துடுவோம்! சொல்றதக் கேளு. அதுக்கு அவ சொன்னா, “No, Dr.kannAn. This heat gun is specially designed and it is not that dangerous blah blah” னு ஆர்க்யூ பண்ணுறா! “சரி, என்னனு தொலைடி” நு சொல்லீட்டு நான் போயிட்டேன். ஷி ஹாஸ் எ பிக் ஈகோ”

“அவகிட்ட எதுக்கு தேவையே இல்லாமல் ஜொள்ளு? நல்லா வாங்கி கட்டி இருக்கீங்க! நல்ல மூக்கு உடை!”

“சத்தியமா இது ஜொள்ளு இல்லை. இட் இஸ் டேஞ்சரஸ், பிருந்தா!”

“சரி சொல்லுங்க”

“ஒரு 30 மினுட்ஸ் இருக்கும், திடீர்னு அவ பக்கம் இருந்து ஒரு சத்தம் கேட்டுச்சு. அங்கே போய் பார்த்தா, அவ ஃப்ளாஸ்க் தீப்பிடிச்சு எரியுது! ஓ மை காட்! னு கத்துறா. தீயை அணைக்கவும் தெரியலை. அப்படியே ஷாக் ஆகி முழிக்கிறா. அப்புறம் நான் போய் ஒரு டவளை தூக்கிப் போட்டு தீயை அணைச்சேன்”

“அவ என்ன பண்ணுறானு பார்த்துண்டே இருப்பீங்களா, கண்ணன், பின்னால இருந்து?”

“yeah I watch her butt!”

“Did you? Really?”

“நீ சும்மா வம்பு பேசாமல் இருக்க மாட்டியா? சொல்றதைக் கேளு! தீயை அணைச்சப்பிறகு சொல்லுறா “You warned me, Kannan. I should have listened to you! I am sorry” நு வழிஞ்சா”

“பாவம்”

“என்ன பாவம்? Experienced people சொன்னா கேக்கனும். எதுக்கு இந்த விதண்டாவாதம்?”

“நீங்க சும்மா ஜொள்ளுவிட சொன்னீங்கனு அவள் நெனச்சிருக்கலாம்”

“எங்களுக்கு வேற வேலையே இல்லை பாரு! Anyway, I just said, “please use hot water at least next time” னு நொல்லீட்டு வந்துட்டேன்.

“Why cant you just do your business, Kannan. Why do you watch her from behind?”

“That is my business. I need to watch her ass. It is my responsibility to watch the inexperienced coworkers so that they don't screw up anything badly. That is part of my job, madame”

“Does it have to be a beautiful girl with a sexy butt?”

“Ha ha ha. I did not think she is beautiful until now. இஸ் ஷி பியூட்டிஃபுல்?”

“ரியல்லி? சரி அப்போ நான் அவ கிட்ட சொல்லுறேன்”

“என்ன சொல்லப்போற?”

“அவ ரொம்ப சுமாரா இருக்காள்னு நீங்க சொன்னதா?”

“I don't think she would care what I think of her. But why do you have to do that?”

“Just to cause some trouble to you”

“Well, she will get a wrong message”

“What message?”

“That you have a crush on me?”

“உங்களுக்கு நெனப்புத்தான்”

“சரி ஆஃபிஸ் ஸ்பேஸ் பார்த்தியா?”

“சொல்ல மறந்துட்டேனே. நான் உங்களுக்கு லன்ச் வாங்கி தந்துடுறேன்”

“படம் பிடிச்சதா?”

“நல்லா இருந்துச்சு, கண்ணன். கொஞ்சம் அடல்ட் content லாம் இருந்தாலும் பரவாயில்லை”

“Anyway, nothing like a free lunch! But I earned it this time”

“எங்கே, எப்போனு யோசிச்சு சொல்லுங்க, போகலாம்”

“ஏய் உன் ஃப்ரெண்டு ஸ்டெய்ஸி வர்ரா”

“Hi Stacy!”

“Hi Bridndaa! Hi Dr. KannAn”

“How is it going, Stacy?”

“It is a hectic day, Brindha. I am working my ass off to finish this project”

“Sounds like somebody is having a case of Monday” Kannan laughed at her.

“That is from Office space! You watched “Office Space” ? That is a hilarious movie”

“He also suggested me to watch it. I watched it too past weekend, Stacy”

“Stacy! You should not wear shorts in the lab”

“Kannan! You are not her boss in the canteen”

“Don't be mean to him, Brindaa! I know, Kannan. I just changed it now, and I will go back with jeans when I go to the lab and setting up the lab in fire!”

“Ha ha ha. You are not messing with ether anymore! You are a quick learner, Stacy”

“Thanks”

“OK Kannan. See you later. We girls have some girls stuff to talk”

“You want me to get lost? Now that you have got a better company, huh?”

“Yeah. Could you please?”

“உன்னை கவனிச்சுக்கிறேன் இரு, பிருந்தா! See you later Stacy”

-தொடரும்

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

தை
கதை
தொடர் கதை!!!
நல்ல தொடர் கதை!!!

வருண் said...

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, குறை ஒன்றும் இல்லை! :)

லதானந்த் said...

நான் அதையும் படிக்கிறேன்.

துபாய் ராஜா said...

//தை
கதை
தொடர் கதை!!!
நல்ல தொடர் கதை!!!//

ரிப்பீட்டேஏஏஏஏஏ !!

வருண் said...

***லதானந்த் said...
நான் அதையும் படிக்கிறேன்.

8 August, 2009 3:46 AM***

ரொம்ப சந்தோஷம் லதானந்த் சார் :-)

வருண் said...

***துபாய் ராஜா said...
//தை
கதை
தொடர் கதை!!!
நல்ல தொடர் கதை!!!//

ரிப்பீட்டேஏஏஏஏஏ !!***

உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றிங்க, துபாய் ராஜா :-)