Sunday, August 30, 2009

நீங்க ஒரு சரியான மக்கு! -கடலை கார்னர் (15)

“இந்தாங்க காஃபி கண்ணன்”

“தேங்க்ஸ், பிருந்தா”

“என் காஃபி எப்படி இருக்கு, கண்ணன்?”

“உன்னை மாதிரியே ரொம்ப டேஸ்ட்டா இருக்கு”

“பொய்! என்னை எப்போ நீங்க டேஸ்ட் பண்ணினீங்க, கண்ணன்?”

“எல்லாம் ஒரு யூகம்தான்!”

“நான் இனிப்பா தித்திப்பா இருக்கேனா உங்க யூகத்தின்படி?”

“ஏய்! இப்போத்தான் நீ பழைய பிருந்தாவாகி இருக்க தெரியுமா?”

“நீங்க வந்ததும் மூடு பெட்டரானது என்னவோ உண்மைதான்”

“ஐ ஆம் நாட் கோயிங் டு ஆஸ்க் வாட் பாதர்ட் யு, பிருந்தா”

“ஓ கே, தேங்க்ஸ்”

“ஏய் உன் ஃபோன் மறுபடியும் பாடுது!”

“இது அம்மா! ஒரு நிமிஷம் கண்ணன்”

*******************************************

“என்னம்மா?”

“----”

“இப்போ ஜுரம் எல்லாம் விட்டுடுத்தும்மா. சும்மா என்னையே நெனச்சு கவலைப்படாதே! நான் நன்னா ஷேமமா இருக்கேன்”

“----”

“இங்கே ஒரு ஃப்ரெண்டு என்னை நல்லா பார்த்துக்கிட்டார்”

“---”

“ஆமா. உன்னைவிட ரெண்டு மடங்கு பார்த்துக்கிட்டார்”

“----”

“ஆமா, அதனாலென்ன? பயப்படாதே! அவர் ரொம்ப நல்ல டைப்”

“----”

“நீ சொன்னதா அவர்ட்ட சொல்றேன். சரி வச்சிடவா?”

*********************************************

“கண்ணன்! அம்மா உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லச்சொன்னாங்க”

“எதுக்கு, பிருந்தா?”

“அவங்க செல்லமகளை அவளுக்கு ஃபீவர் அடிக்கும்போது ரொம்ப அக்கறையா, பொறுப்பா கவனிச்சுக்கிட்டதுக்குத்தான்”

“வேறென்ன சொன்னாங்க?”

“உங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருக்கவாம்”

“ஏன்?”

“தெரியலை, நீங்க என்னை ஏதாவது செஞ்சிடுவீங்கனு பயம் போல, கண்ணன்” அவள் சிரித்தாள்.

“ஏதாவதுனா? என்ன செஞ்சிடுவேனாம்?”

“என்னை செட்யூஸ் பண்ணி, என்னை மயக்கி ஏதாவது செஞ்சிருவீங்களோனு பயம் போல. நீங்க ரொம்ப மோசமான ஆளா, கண்ணன்?”

“தன் மகள் ஒரு பேரழகி! அவளைப்பார்த்து நான் மயங்கி ஏதாவது செய்து விடுவேன்னு பயம் போல, ஆண்ட்டிக்கு?”

“ஏன் நான் அழகா இல்லையா, கண்ணன்?”

“நீ கொள்ளை அழகுடா”

“அப்போ அம்மா பயந்தது சரிதான்”

“ஏன்?”

“நீங்க என்னை மயக்கத்தான் செய்றீங்க. இப்படியெல்லாம் பேசினால் ஏதோ வயிற்றிலிருந்து பட்டர்ஃப்ளை பறக்கிற மாதிரி இருக்கு தெரியுமா?”

“நீதான கேட்ட?”

“அதுக்காக?”

“எனக்கு தெரிந்ததை சொன்னேன்”

“அதை இப்படியா சொல்லுவாங்க?”

“எப்படி சொன்னேன்?”

“யு டோண்ட் நோ ஹவ் யு மேக் மி ஃபீல், கண்ணன்”

“ஹவ்?”

“என் மேலே ரொம்ப அன்பா இருக்காதீங்க, ப்ளீஸ்?”

“சரி உன்னை கண்டுக்காமல் ஒதுங்கிப்போயிடவா?”

“அதெல்லாம் உங்களால முடியாது”

“எப்படி சொல்ற?”

“உங்களால முடியாது!”

“சரி ட்ரைப் பண்ணியாவது பார்க்கிறேன்”

“ஏன் நான் போர் அடிச்சுட்டேனா உங்களுக்கு, கண்ணன்?”

“சே சே அப்படியெல்லாம் இல்லடா”

“கண்ணன்!”

“என்ன?”

“நீங்க வீட்டுக்குப் போகனுமா?”

“இது என்ன கேள்வி?”

“இல்ல. இங்கேயே இன்னைக்கு தங்கிட்டு போங்களேன்?”

“நாளைக்கு வேலைக்குப் போகனும்”

“ஏன் இங்கே இருந்தே போங்களேன்?”

“உன் சல்வார் காமிஸ் போட்டுக்கிட்டா?”

“ஓ நீங்க ட்ரெஸ் எடுத்து வரலையோ?”

“உன் மனசு சரியில்லைனு அதை சரி பண்ணத்தான் வந்தேன்”

“ஆமா இப்போ இன்னொரு எக்ஸ்ட்ரீம்க்கு கொண்டு போய் விட்டுட்டுப் போறீங்க. இட் வாஸ் பெட்டர் தான் ஹவ் இட் இஸ் நவ். நீங்க ஒண்ணும் பெருசா உதவலை”

“அட் லீஸ்ட் இப்போ அழுமூஞ்சா இல்லாமல் இருக்க இல்ல?”

“இதுபோல் இனம் புரியாமல் சந்தோஷமா இருக்கிறதைவிட அழுவது பெட்டர்”

“என்ன ஆச்சு உனக்கு? என்னதான் சொல்ல வர்ற இப்போ, பிருந்தா?”

“நீங்க ஒரு சரியான மக்கு, கண்ணன்!”

“அறிவை வளர்த்துக்கத்தான் உன்ன மாதிரி அறிவாளியோட வலுக்கட்டாயமாக பழகுறேன்”

“என்னையும் மக்காக்கிடாதீங்க!”

“ஏய் இங்கே வா!”

"வந்துட்டேன்"

"இன்னும் பக்கத்தில்"

“இத்தனை பக்கத்திலேயா?”

“சரி, கண்ணை மூடிக்கோ”

“ம்ம்”

-தொடரும்

10 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க ஒரு ஹை ஃபை யா போகுது கத!!!!

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said... என்னங்க ஒரு ஹை ஃபை யா போகுது கத!!!!

30 August, 2009 12:28 PM***

அப்படியா?

உண்மையிலேயே எழுதுறவங்களுக்கு தெரியாதுங்க. உங்களைப்போல் வாசிக்கிறவங்களுக்குத் தான் தெரியும்.

நீங்க தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி! கொஞ்சம் லோ ஃபையா மாற்றப்பார்க்கிறேன் :-)))

லதானந்த் said...

ஆஹா! என்ன வேகம்! என்ன விறுவிறுப்பு? ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கே! அட்டகாசம். இப்படியே தொடர்ந்து எழுதுங்கள்

DHANA said...

:-);-);-);-)

DHANA said...

:-);-);-);-)

DHANA said...

:-);-);-);-)

வருண் said...

***லதானந்த் said...

ஆஹா! என்ன வேகம்! என்ன விறுவிறுப்பு? ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கே! அட்டகாசம். இப்படியே தொடர்ந்து எழுதுங்கள்

30 August, 2009 8:24 PM***

ரொம்ப நன்றிங்க, லதானந்த் சார் :)

வருண் said...

**Blogger DHANA said...

:-);-);-);-)

31 August, 2009 1:35 AM**

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி, தனா :)

nila said...

eagerly waiting for ur next post in kadalai corner.......

வருண் said...

I am working on it, nila. :-))))

When folks like you are expecting like this, it makes the author so nervous, I suppose! :-))))

When I started this series I wanted to avoid a "love story", wanted to share some useful information in a casual manner but now I got carried away! :)))