Friday, August 14, 2009

ஒற்றைக்கண் செம்மரி ஆடு- கடலை கார்னர் (8)

"பிறவிக்குறைகள் எல்லாம் கடவுள் செய்ற அநியாயமா, கண்ணன்?"

"இங்கே கடவுளை விட்டுருவோம் பிருந்தா! உனக்கு சைக்ளாப்ஸ் ஆடு, அதாவது ஒற்றைக்கண ஆடு பற்றி தெரியுமா? இது பழைய கதைதான். படிச்சிருக்கியா?"

"இல்லையே கண்ணன். அதுவும் பிறவிக்குறையா?"

"யு எஸ் ல ஐடஹோ (Idaho) என்கிற மாநிலத்திலே சுமார் ஒரு 60 வருடம் முன்னால நெறையவே ஒற்றைக்கண் ஆடு பிறந்து இருக்கு, பிருந்தா"

"எப்படி இருக்கும் அந்த ஒற்றைக்கண் ஆடு, கண்ணன் ?"

"இங்கே கீழே ஒரு படம் இருக்கு பாரு. இது ஆடு இல்லை. இது ஒரு kitten, இது மாதிரி இருக்கும்"




"ஏன் ஒற்றைக்கண ஆடு படம் கிடைக்கலையா, உங்களுக்கு?"

"காப்பி ரைட் பிரச்சினை ஏதாவது இருக்குமானு பயம். அதான் இந்த பூனைப் படம்"

"ஏன் சைக்ளாப்னு சொல்றாங்களாம், கண்ணன் ?"

"சைக்ளாப் ஒரு க்ரேக்க மித்தாலஜி கேரக்டர். இங்கே ஒரு படம் தரேன் பாரு! ஒரு கண்தான் இருக்கும் இந்த கேரக்டருக்கும், நெற்றி நடுவிலே! அதான் சைக்ளாப் ஷீப்னு சொன்னாங்க! இந்த ஆடு இப்படிப்பிறப்பதற்கு என்ன காரணம்? இல்லை கடவுள் தப்பா? னு ஒரு 10-15 ஆராய்ச்சி பண்ணி, அதுக்கு காரணம் என்ன? யாரு அந்த "கல்ப்ரிட்" னு கண்டுபிடிச்சு இருக்காங்க!"



"ஆமா, கண்ணன், They called that as "Cyclops Sheep" right? I have heard of that morning sickness medication which gave some serious birth defects"

"Yeah, scientists screwed up there. Not God, at least in தலிடோமிட் case"

"what went wrong there, Kannnan? மார்னிங் சிக்னெஸ்க்கு மருந்து சாப்பிட்டு, பிறவிக்குறையுடன் குழந்தை பெறுவது ரொம்ப சோகம் இல்லை, கண்ணன்?"

"ரொம்பக் கொடுமை. அதுவும் அந்தக்காலத்தில் இந்த ultrasound scanning எல்லாம் வேற கிடையாது, பிருந்தா. let us discuss that later. Now we get back to this cyclops sheep"

"ஆமா, எப்படி இந்த சைக்ளாப்ஸ் ஆடு பிறந்ததுனு சொல்றீங்க? யார் அந்த "கல்ப்ரிட்"?"

"அது மேயும்போது, "சைக்ளாப்-அமைன்" என்கிற ஒரு தாவிர அல்க்களாயிடை (ஒரு வேதிப்பொருள்) உள்ள தாவரத்தை சாப்பிட்டு இருக்கு. அந்த "அமைன்"தான் அந்த ஆட்டின் குட்டிகளுக்கு ஒரு கண் வருவதற்கு காரணமாம். இப்போ அதே "சைக்ளாப் அமைனை" வச்சு கேன்சர் மருந்து தயாரிக்கிறாங்க"

""சைக்ளாப் அமைன்" தான் இந்த ஒற்றைக்கண் உண்டானதற்கு காரணம்னு நிச்சயமா கண்டுபிடிச்சுட்டாங்களா?'

"சந்தேகமே இல்லை, பிருந்தா!"


-தொடரும்

4 comments:

Nathanjagk said...

வாவ்! சுவாரஸியமான பதிவு! ப்ரபஞ்சப்ப்ரியன் என்ற ​பெயரில் ஒருவர் இதே போன்று (http://prabanjapriyan.blogspot.com) அறிவியல் தகவல்களை ​சொல்லிவருகிறார்.

வருண் said...

***ஜெகநாதன் said...
வாவ்! சுவாரஸியமான பதிவு! ப்ரபஞ்சப்ப்ரியன் என்ற ​பெயரில் ஒருவர் இதே போன்று (http://prabanjapriyan.blogspot.com) அறிவியல் தகவல்களை ​சொல்லிவருகிறார்.

14 August, 2009 12:34 PM***

நன்றிங்க ஜெகநாதன்!

அந்த ப்ளாக் போய் பார்த்தேன். ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் பத்தி நெறைய எழுதி இருக்கார்.

உங்கள் வருகைக்கும், லின்க் க்கும் நன்றி :-)

லதானந்த் said...

கற்பு தான் ஒங்களோட ஸ்பெஷாலிடி! அதப் பத்தி எழுதுங்க. படிச்சு நெம்ப நாளாச்சு “வருண்”

வருண் said...

***லதானந்த் said...

கற்பு தான் ஒங்களோட ஸ்பெஷாலிடி! அதப் பத்தி எழுதுங்க. படிச்சு நெம்ப நாளாச்சு “வருண்”***

கற்பு சீரீஸ் நான் இல்லைங்க!
கயல்தான் எழுதுறது. நான் 1000 தர சொன்னால்க்கூட உங்களுக்கு இந்தக் குழப்பம் தீரப்போவதில்லை! :-)))