Tuesday, August 4, 2009

கடவுளுக்கு உணர்ச்சிகள் உண்டா? -கடலை கார்னர் (4)

"கடவுள் இருக்காரா கண்ணன்?”

“ஏன் பிருந்தா, இன்னைக்கு வேற யாரும் கிடைக்கலையா உனக்கு?”

“ஆமா, நீங்கதான் மாட்டினீங்க! சொல்லுங்க!”

“என்னைக்கேட்டா இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கைதான்னு சொல்லுவேன். கடவுள் அவர் பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும். விடு அவரை பாவம். எனக்கு எதிலுமே நம்பிக்கை இல்லை”

“எதுலையுமேவா?”

“எதுலையுமே”

“உங்க மேலே?”

“அதையும் சேர்த்துத்தான்”

“சரியா போச்சு! சரியான லூசா நீங்க? சரி, கடவுள் நம்பிக்கை தப்பா, கண்ணன்?”

“நம்ம யாரு இன்னொருவர் நம்பிக்கையை சரி, தப்புனு சொல்ல? It is very personal. It does not help me much. But it does help some people a lot. So, I cant say, it is right or wrong. As long as someone does not come and tell me to believe or not to believe, I care less”

“நம்பனும்னு சொன்னால்?”

“அது தப்புதான். மனிதர்கள் ஒவ்வொரு மாதிரி. அவர்கள் மனதும் வேற வேற மாதிரி”

“சரி, உங்கம்மா உங்களை நம்பனும்னு சொல்ல மாட்டாங்களா?”

“நம்பிக்கை இருக்கனும்னு நினைப்பாங்க. ஆனால் ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க!”

“They never preached you religion!!!”

“இல்லையே, பிருந்தா”

“நீங்க ப்ராமினா, கண்ணன்?”

“ஏன் கேக்கிற?”

“சும்மா சொல்லுங்க. நீங்க ப்ராமினா?”

“இந்தக்காலத்தில் அதெல்லாம் எதுக்கு? அதெல்லாம் சொல்ல மாட்டேன். நீ ப்ராமின் தான் எனக்குத்தெரியும், பிருந்தா”

“எப்படி?”

“தெரியும்!”

“எப்படி? நான் நான்வெஜ் எல்லாம் சாப்பிடுவேனே?”

“அப்போ நீ ஒருவேளை பெங்காளி ப்ராமினோ?”

“ஹா ஹா ஹா! நான் சுத்தமான தமிழச்சிதான், கண்ணன்”

“அப்போ உங்க ஆத்துல உனக்கு ரிலிஜன் ப்ரீச் பண்ணினாளா?”

“பொதுவா ப்ராமின்ஸ்ல அப்படித்தானே? ஹிந்துக்களிலேயே ப்ராமின்ஸ்தான் ரிலிஜன் ரிலிஜன் நு கட்டி அழறா, இல்லையா? ஹிந்துயிஸத்தில் உள்ள எல்லா கண்றாவி, நான்சென்ஸ் எல்லாத்தையும் டிஃபெண்ட் பண்ணுறது பொதுவா ப்ராமின்ஸ்தான். எனக்கு ரிலிஜன் டீச் பண்ணாம விடுவாளா? பண்ணினா.”

“ஆனால் நீ அப்படியெல்லாம் ஒண்ணும் ரிலிஜியஸா ஆகலையே, பிருந்தா. அதெப்படி?”

“அதென்னவோ ரிலிஜன் மேலே எல்லாம் ஒண்ணும் பெரிய பற்று வரலை, கண்ணன். நான் அதையெல்லாம் இந்தக்காதில் வாங்கி இந்தக்காதில் விட்டாச்சு. சரி, என்னைப்பற்றி பேசுவதை கொஞ்சம் விட்டுறலாமா, ப்ளீஸ்?”

“எந்தக்காதில் வாங்கின?”

“இந்தக்காதில்!"

" எங்கே காட்டு பார்க்கலாம்?”

“இந்தக் காதில்தான்”

“உன் காது மடல்கள் அழகா இருக்கு”

“ஆரம்பிச்சுட்டீங்களா?”

“சரி, இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேனே, ப்ளீஸ்?”

“சொல்லித்தொலைங்க”

“நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க, பிருந்தா”

“ஏன், நேத்து அழகா இல்லையா?”

“நேத்து சண்டே இல்லையா? உன்னை பார்க்கலை. என்ன ட்ரெஸ் போட்டு இருந்த?”

“அதெல்லாம் எதுக்கு?”

“ஏன் வீட்டில் ரொம்ப அரைகுறையா இருந்தியா?”

“நீங்க ரொம்ப மோசம் கண்ணன். பெரிய மனோதத்துவ ஞானினு நெனப்பு உங்களுக்கு! இப்போ எதுக்கு இந்த ஐஸ்?”

“ஏய்! நாந்தான் அழகா இல்லை. அழகா உள்ளவர்களை கொஞ்சம் காம்ப்ளிமெண்ட் பண்ணுவதும் தப்பா?”

“நான் தப்புனு சொல்லலையே”

“மோசம் னா என்ன அர்த்தம்?”

“சும்மா தேவையே இல்லாமல் ஐஸ் வைக்கிறது. சரி, அதைவிட்டுட்டு வாங்க! இப்போ கடவுளை கொஞ்சம் கவனிப்போம்”

“சரி, நான் கேக்கிறேன். கடவுளுக்கு உணர்ச்சிகள் உண்டா, பிருந்தா?”

“அப்படினா?”

“அவருக்கு சிரிப்பு, அழுகை, கோபம், எரிச்சல், நகைப்பு இதுபோல் உணர்ச்சிகள் வருமா?”

“தெரியலையே. அதெல்லாம் வராதுனு நினைக்கிறேன்”

“அப்போ காமம், காதல் போன்ற கெட்ட பழக்கம்லாம்”

“அதெல்லாம் கெட்ட பழக்கமா?”

“இல்லையா பின்னே?”

“சரி, தெரியலை. அதெல்லாம் சிற்றின்பம், இல்லையா? அதெல்லாம் வராதுனு நெனைக்கிறேன்”

“அப்போ கடவுள் என்ன உணர்ச்சியே இல்லாத ஒரு ஜடமா?”

“என்னைக் கேட்டால்? நானா டெய்லி எனக்கு அதைக்கொடு இதைக்கொடுனு கேக்கிறேன்?”

“உனக்கு என்னதான் நல்லாத் தெரியும்? நல்லா மேக் அப் போடுவியா?”

“ஏன் மேக் அப் போட்டா என்ன? அதுவும் தப்பா?”

“ஒண்ணுமில்லை”

“ஏன் அப்படி ஒரு மாதிரியா பார்க்குறீங்க?”

“எப்படி பார்த்தேன்?”

“---”

“ஏய், உன் ஃப்ரெண்டு ஸ்டெய்ஸி இருக்கா இல்லை?”

“ஆமா, இருக்கா.. அவளுக்கென்ன இப்போ?”

-தொடரும்

6 comments:

கோவி.கண்ணன் said...

ரொம்ப நன்னா எழுதி இருக்கேள்

லதானந்த் said...

ரண்டு பேர் ”ஸ்டைல்லயும்” எழுதுறது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.

வருண் said...

***கோவி.கண்ணன் said...
ரொம்ப நன்னா எழுதி இருக்கேள்

4 August, 2009 6:23 PM***

நன்றி, கோவி! :-))))

வருண் said...

***லதானந்த் said...
ரண்டு பேர் ”ஸ்டைல்லயும்” எழுதுறது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.

4 August, 2009 7:20 PM***

என்ன பண்ணுறது, லதானந்த் சார்?

எல்லாம் என் தலைஎழுத்துனு போக வேண்டியதுதான்!

உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி :-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ங்க இது திடீர்னு பிரேக்??? நல்லாதானே போயிட்டு இருக்கு ??

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ங்க இது திடீர்னு பிரேக்??? நல்லாதானே போயிட்டு இருக்கு ??***

வாங்க குறை ஒன்றுமில்லை! கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டதால் இந்த "ப்ரேக்" :)