Friday, February 4, 2011

மாணவி தற்கொலையில் வினவின் தலைப்பு நியாயமானதா?

ஏழை மாணவி திவ்யா ஆசிரியர்களால் அளவுக்குமீறி, மிருகத்தனமாக பரிசோதனைக்கு உள்ளக்கப்பட்டதால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து இறந்துவிட்டார் என்பது மிகவும் வருத்தமான செய்தி.

அவர் ஏழை என்பதால் அவரை அவமானப்படுத்தப் பட்டது என்று கண்கூடாகத் தெரிகிறது. அவரை சோதித்த, சித்ரவதை செய்த, அவமானப்படுத்திவர்கள்தான் அவளை தற்கொலை செய்ய தூண்டியவர்கள் என்று குற்றம் சாட்டலாம். இதுபோல் ஒரு மாணவியிடம் பொறுப்போடு நடக்காத ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட அலுவலகர்கள் மற்றும் அந்தக்கல்லூரி நிர்வாகிகள் எல்லோருக்குமே சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்கனும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை!

ஆனால், வினவு, மிருகத்தனமாக அவமானபப்டுத்தப் பட்ட மாணவி திவ்யாவின் தற்கொலை மரணத்தை எப்படி பச்சைப் படுகொலை என்று சொல்லலாம் என்று எனக்கு விளங்கவில்லை?

என் பார்வையில் இதுபோல் "பச்சைப் படுகொலை" என்று எழுதுவது தவறான வார்த்தை! நாம் இதுபோல் கிரிமினல் குற்றவார்த்தை பயன்படுத்துவதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். எனக்கு இது சமம்ந்தப்பட்ட எந்தவிதமான விசயங்களும் சரியாகவோ, டீட்டயிலாகத் தெரியாதுதான்.

நிச்சயம் திவ்யாவை தற்கொலை செய்ய தெரிந்தோ தெரியாமலோ தூண்டிய்வர்களை, அவமானப்படுத்திவர்களை சட்டப்படி அனுகி தண்டனை வாங்கிக்கொடுக்கனும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதுக்காக வினவு இதை எப்படி "பச்சைப் படுகொலை" என்று சொல்லலாம்? வினவு கவனமாக வார்த்தை பிரயோகம் செய்தால் அவர்களுக்கு நல்லது!

11 comments:

ராமலக்ஷ்மி said...

பச்சைப் படுகொலை என்றால் என்ன என்று நீங்கள்தான் சொல்லுங்களேன். பொதுவாக மனசாட்சியற்ற முறையில் பட்டவர்த்தனமாக நடக்கின்ற கொலைகளை அப்படி அழைப்பார்கள் என்பது என் புரிதல். இந்த நிகழ்வும் அதற்கு நிகரானதே என்பதாலும், பிரச்சனையின் ஆழத்தை வெளிப்படுத்த தரப்பட்ட தலைப்பு என்ற வகையிலும் தவறாகப் படவில்லை எனக்கு.

எல் கே said...

வருண் அதில் எந்தத் தவறும் இல்லை. சரியாதான் சொல்லி இருக்காங்க.

Unknown said...

சரியான,குற்றத்திற்க்கு நிகரான வார்த்தையைதான் பயன்படித்து இருக்கிறார்கள்..இதிலென்ன ச்ந்தேகம்

ராம்ஜி_யாஹூ said...

varun, noting wrong in Vinavu's title

J.P Josephine Baba said...

ஒரு இளம் பெண்ணை இப்படி கொடுமையாக தற்கொலை செய்ய தூண்டிய பேரிசியைகள் செய்தது பச்சை கொலை தானே?

ராவணன் said...

வினவு கும்பலுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. கொடுத்த காசிற்கு கூவுவார்கள்.

சிவப்புப் படுகொலைகளை செய்த மாவோ என்பவர் அவர்களின் தலைவனாம்.
பச்சைப் படுகொலைகளைப் பேசும் பச்சோந்திகளுக்கு உள்ளே ஏதும் உள்ளதா?

வருண் said...

தங்கள் மாற்றுக்கருத்துக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி, எல் கே, நந்தா ஆண்டாள்மகன், ராம்ஜி யாஹூ, ஜெ பி ஜோஷெஃபின் பாபா!

--------------
@ராவணன்

இது ரொம்ப சென்ஸிடிவான சீரியஸ் மேட்டர்ங்க! ஏன் இப்படி நீங்அ? :(

Anonymous said...

She was subjected to body search by making her nude, not only because she was from a poor background; but also, because she was from a low caste.

It is a general observation mostly in our schools to treat the lower castes unfairly.

The title given by Vinavu should not be read as it appears; but as it says more than appears.

It is not a simple suicide of a girl out of her inability to face society after being disrobed for search.

It is a social issue of how our lower castes women and girls are treated in our society.

We are discriminating against our lower castes, more so, if they are perpetually poor and lack powerful social voices to protect their honour

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒரு மனித உயிர் ,தற்கொலை செய்யுமளவுக்குத் தொல்லை கொடுத்தோரை என்ன? எனக் கூறலாம்.

வருண் said...

***Blogger Jo Amalan Rayen Fernando said...

She was subjected to body search by making her nude, not only because she was from a poor background; but also, because she was from a low caste.

It is a general observation mostly in our schools to treat the lower castes unfairly.

The title given by Vinavu should not be read as it appears; but as it says more than appears.

It is not a simple suicide of a girl out of her inability to face society after being disrobed for search.

It is a social issue of how our lower castes women and girls are treated in our society.

We are discriminating against our lower castes, more so, if they are perpetually poor and lack powerful social voices to protect their honour

5 February 2011 7:39 AM***

What they did to her is brutal and punishable by law.

I wish she lives now and takes them to court and put them away behind bars for what they did to her.

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒரு மனித உயிர் ,தற்கொலை செய்யுமளவுக்குத் தொல்லை கொடுத்தோரை என்ன? எனக் கூறலாம்.

6 February 2011 2:02 PM***

அவங்க செஞ்சது மிருகத்தனம், அவங்க மனிதாபிமானம் இல்லாதவங்க, அவங்களை பிடிச்சு உள்ளே போடனும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!